என் மலர்
திருப்பத்தூர்
- 14 கொண்டை ஊசி வளைவுகளில் இயற்கை காட்சிகளையும் ரசித்து கொண்டு சுற்றுலா பயணிகள் செல்கின்றனர்
- படகுகள் காலியாக உள்ளன
ஜோலார்பேட்டை:
ஏலகிரி மலையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் எப்பொழுதும் ஒரே சம சீதோசன நிலையில் ஏற்படுவதால் தமிழக மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளி நாட்டினர் இருந்து சுற்றுலா பயணி அதிக அளவில் கவர்ந்து வருகின்றன.
மேலும் மா, பலா, வாழை விளையும் முக்கனிகளில் விளையும் இடமாகவும் ஏலகிரி மலை உள்ளது பொன்னேரி மலையடிவாரத்தில் இருந்து ஏலகிரி மலைக்கு செல்ல 14 கொண்டை ஊசி வளைவுகளில் இயற்கை காட்சிகளையும் ரசித்து கொண்டு சுற்றுலா பயணிகள் செல்கின்றனர்.
மேலும் ஏலகிரி மலையில் படகு சவாரி, செயற்கை நீர்வீழ்ச்சி, பூங்கா, முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்களை கண்டு களித்து செல்கின்றனர் ஏலகிரி மலையில் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான படகு சவாரி இல்லம் ஏலகிரி மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் படகு சவாரி செய்து மகிழ்ந்து செல்கின்றன.
கோடை விடுமுறை முடிந்து மற்றும் வார விடுமுறையான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பயணிகள் அதிகளவில் வரும் என எதிர்பார்த்த நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது.
மேலும் சனிக்கிழமை அன்று வந்த சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை விட நேற்று ஞாயிற்றுக்கிழமை சற்று குறைவாகவே சுற்றுலா பயணிகள் காணப்பட்டனர்.
இதனால் படகு சவாரி செய்யும் இல்லத்தில் சுற்றுலா பயணிகள் குறைவாக இருந்தனர் படகுகள் காலியாக உள்ளனர்.
- ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
திருப்பத்தூர்:
நாட்றம்பள்ளி அடுத்த திரியாலம் ஊராட்சி டிவி துரைசாமி நகரில் உள்ள ஸ்ரீ பச்சையம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் மூலஸ்தானத்தில் பச்சையம்மன் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பச்சையம்மன் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ. டி.கே. ராஜா எம்.எல்.ஏ.க்கள் தேவராஜ், நல்லதம்பி, உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.
- தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தான்
- போலீசார் விசாரணை
வாணியம்பாடி:
வாணியம்பாடி காதர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பைசல்.
இவரது மகன் அம்தான் (வயது 6). இவன் நேற்று மாலை வீட்டின் மாடி படிக்கட்டில் ஏறிஇறங்கி விளையாடிக்கொண் டிருந்தான். அப்போது படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே வீட்டில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு வாணியம்பாடி அரசு மருத் துவமனையில் சேர்த்தனர்.
பிறகு மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட் டான். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக இறந்தான்.
இது குறித்து டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சீட்டு பணம் தகராறில் விபரீதம்
- 2 பேரையும் ஜெயிலில் அடைத்தனர்
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கீழ்மிட்டாளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் ( வயது 22).
இவர் தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெய்பிரகாஷை, மர்ம கும்பல் சிலர் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
தகவல் அறிந்த உமராபாத் போலீசார் விரைந்து வந்து, ஜெயபிரகாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை சம்பந்தமாக தந்தை - மகன் உள்பட 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் பெரியவரிகம் பகுதியைச் சேர்ந்த ஷூ கம்பெனி தொழிலாளி மாணிக்கம் (21) மற்றும் அவரது தந்தை ராஜ்குமார் (44) ஆகியோர் சீட்டு பணம் தகராறு காரணமாக ஜெயபிரகாஷை கொலை செய்தது தெரிய வந்தது.
இதனை அடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து, வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
- வைகாசி மாத பிரமோற்சவம் முன்னிட்டு நடந்தது
- பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம்
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் துத்திப்பட்டு ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள பிந்துமாதவர் ஆலய வைகாசி மாத பிரமோற்சவம் முன்னிட்டு இன்று காலை கருட சேவை ஊர்வலம் உற்சவம் நடந்தது.
இந்த விழாவில் வாணியம்பாடி ஆம்பூர் திருப்பத்தூர் மாவட்டம் பகுதியில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கீழ் மிட்டாளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 22). இவர் தனியார் ஷூ கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு ஜெயபிரகாசை அதே பகுதியில் மர்ம கும்பல் சிலர் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்று விட்டனர்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக உமராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெயபிரகாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் கொலை சம்பந்தமாக தந்தை- மகன் உள்பட 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி நடந்தது
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி வட்டம் கொத்தூர் கிராமம் சேர்ந்தவர் முருகன் இவரது மகன் வீரமணி (வயது32) இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
இவருக்கும் வாணியம்பாடி அடுத்த ஒரு கிராமத்தில் வசித்து வரும் 14 வயதுடைய சிறுமிக்கும் கடந்த 31-ந் தேதி குழந்தை திருமணம் நடைபெறுவதாக தகவல் வந்தது.
நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் தலைமையில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பாலு, வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி கிராம நிர்வாக அலுவலர் சரவணன் மற்றும் நாட்டறம்பள்ளி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் ஆகியோ ர்களுடன் இணைந்து மணமகன் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி சிறுமி திருமணம் நடந்தது.
இதனையடுத்து வருவாய் துறையினர் மணமகன் வீரமணி மற்றும் அவரது பெற்றோர்களை நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முன் விரோதம் காரணமாக விபரீதம்
- வாலிபரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்
ஆம்பூர்:
ஆம்பூர் டவுன் சான்றோர் குப்பம் அன்னை மேரி தெரு பகுதியை சேர்ந்த வால்டர் மகன் விஜய் (வயது 27). அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணி மகன் கார்த்தி (33) என்பவருக்கு முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் கார்த்தி, விஜய்யை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். பொதுமக்கள் விஜயை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்தியை கைது செய்தனர். பின்னர் அவரை ஜெயிலில் அடைத்தனர்.
- ஏரி அருகே பெண்ணின் கிழிந்த புடவையும் மற்றும் சிறிய எலும்பு துண்டு கிடந்தது
- துர்நாற்றம் வீசாததால் பிணம் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என உறுதி செய்தனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அருகே டி.வீரப்பள்ளி பகுதியில் உள்ள ஏரி அருகே பெண் பிணம் இருப்பதாக அதே பகுதியை சேர்ந்த வாலிபர் திருவண்ணாமலையில் இருந்து கொண்டு ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு போன் மூலம் தகவல் கொடுத்தார்.தகவலின் பெயரில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி சப் இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர்.
சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதி முழுவதும் தேடி பார்த்தும் எங்கும் பிணம் இருப்பதற்கான அறிகுறி இல்லை துர் நாற்றம் வீசவில்லை இதனால் பிணம் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என போலீசார் உறுதி செய்தனர்.
அதன் பிறகு ஏரி அருகே பெண்ணின் கிழிந்த புடவையும் மற்றும் சிறிய எலும்பு துண்டு கிடந்தது அது மனிதனின் எலும்பு துண்டு இல்லை என தெரிய வந்தது.
இதனால் போலீசார் சுமார் 1 மணி நேரமாக அப்பகுதி முழுவதும் தேடி பார்த்து எங்கும் பிணம் இல்லாததால் திரும்பிச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- அன்னம், ஆடு, மயில், நாகம் ஆகிய வாகனங்களில் சாமி வீதி உலா
- பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் டவுன் முத்துக்குமாரசாமி கோவிலில் 17-ம் ஆண்டு வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து விநா யகர் பூஜை, வாஸ்து சாந்தி நடைபெற்றது. அன்னம், ஆடு, மயில், நாகம் ஆகிய வாகனங்களில் வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமார சாமி வீதி உலா நடைபெற்றது. திருக்கல்யாணமும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நடந்தது. கே.எம்.சுப்பிரமணியம், டாக்டர் லீலா சுப்பிரமணியம், ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் எம்.நவீந்திரன், அரசு ஆசிரியர் எஸ். மகேஸ்வரி ரவீந்திரன் ஆகியோர் தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
இதில் என்.வி.எஸ். சங்க தலைவர் எஸ்.ராஜா, துணைத் தலைவர் டி.கே.எஸ். ஐயப்பன் உள்பட ஏராளமான பொதுமக் கள் கலந்து கொண்டு தேர் இழுத்தனர்.
- 4 பேர் படுகாயம்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை :
நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் சாம கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரமேஷ் மனைவி வளர்மதி (வயது 40), கோவிந்தராஜ் (34), குணசேகரன் (28), அசோக் மனைவி பிரியா (23) ஆகியோர் பச்சூர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்கின்றனர்.
நேற்று செங்கல்கள் ஏற்றிக் கொண்டு வெலக்கல்நத்தம் பகுதிக்கு டிராக்டரில் சென்றார். வண்டியை அதே பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் என்பவர் ஓட்டி ெசன்றார்.
செங்கலை இறக்கிவிட்டு வீடு திரும்பிய போது சுண்ணாம்புகுட்டை கிராமம் அருகே சென்ற போது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் டிராக்டரில் பயணித்த 4 பேரும் உயிர் தப்பினர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சை க்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து நாட்டறம்பள்ளி போலிசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய தப்பி ஓடிய கண்டெய்னர் லாரி டிரைவர் தேடி வருகின்றனர்.
- சம்பவம் இடத்திலேயே இறந்தார்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் பழையபேட்டை சேர்ந்தவர் லிங்கப்பன் இவரது மகன் சதீஷ் சர்மா (வயது 30).
இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார்.
இதில் தனது திருமணம் ஏற்பாடுகளை செய்வதற்காக சதீஷ்சர்மா கடந்த 15 நாட்கள் முன்பு, விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு சதீஷ் சர்மா தனது பைக்கில் பச்சூர் ரெயில்வே கேட் அருகே உள்ள சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது குப்பம் பகுதியில் இருந்து காய்கறிகள் ஏற்றிவந்த மினி லாரி பைக் மீது மோதியது.
படுகாயமடைந்த அவர் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்துபோலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய ஆந்திரா மாநிலம் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் இவரது மகன் வெங்கடேஷ் (வயது 31) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






