என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • தப்பியோடியவரை போலீசார் விரட்டி பிடித்தனர்
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பாலாற்றில் திருப்பத்தூர் ஏ.ஆர். துணை போலீஸ் சூப்பிரண்டு விநாயகம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    போலீசாரை கண்டதும் கடத்தல் காரார்கள் தப்பியோடினர்.

    அப்போது போலீசார் விரட்டி சென்று பெரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த விஜய் (வயது 26) என்பவரை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • நண்பர்களுடன் சுற்றுலா சென்றபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஏலகிரி மலைக்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பலியானார். 2 பேர் காயமடைந்தனர்.

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த பெத்தகல்லுப்பள்ளி ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட புத்துக்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் மோகன் குமார் (வயது 17), வாணியம்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அதேப் பகுதியை சேர்ந்தவர்கள் சேகர் என்பவரின் தினேஷ் (19) மற்றும் சவுந்தர். இவர்களும் அதே கல்லூரியில் படித்து வருகின்றனர்.

    இவர்கள் 3 பேரும் நேற்று ஏலகிரி மலைக்கு சென்று ஏலகிரி மலையில் உள்ள பல்வேறு இடங்களை பார்த்து விட்டு 3 பேரும் ஒரே பைக்கில் வீட்டிற்கு திரும்பினர்.

    14-வது கொண்டை ஊசி வளைவில் உள்ள முத்தனாவூர் அருகே சென்றபோது பைக் நிலை தடுமாறி சாலையில் விழுந்தது. இதில் மோகன்குமார் உள்பட 3 பேரும் படுகாயமடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஏலகிரி மலை போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மோகன்குமார் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த மோகன்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஏலகிரி மலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
    • நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், புதூர்நாடு மலைப்பகுதியில் உள்ள நெல்லிவாசல் ஊராட்சி, புலியூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி அன்று பள்ளியில் உணவு உண்ணும் போது அதே பகுதியை சேர்ந்த 2-ம் வகுப்பு படிக்கும் மாணவி வாட்டர் பாட்டிலில் குடிப்பதற்காக தண்ணீர் வைத்துள்ளார்.

    அப்போது ஆசிரியர் ஒருவர் அந்த மாணவியிடம் எதற்காக வாட்டர் பாட்டிலில் தண்ணீர் வைத்துள்ளாய் எனக்கேட்டு மாணவி கன்னத்தில் பிரம்பால் அடித்துள்ளார்.

    பள்ளி முடிந்த பின்பு மாணவி மாலை வீட்டிற்கு சென்றார்.

    அப்போது அந்த மாணவியின் கன்னத்தில் காயம் இருப்பதை பார்த்த பெற்றோர் இது குறித்து விசாரித்தனர்.

    அப்போது மாணவி பள்ளியில் நடந்ததை கூறினார். இதைத் தொடர்ந்து அந்த சிறுமியை, அவரது பெற்றோர் புதூர்நாடு பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.

    இதேபோல் அந்த ஆசிரியர் மற்ற மாணவர்களையும் அடிப்பதாக கூறப்படுகிறது. எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தினர்.

    • தாசில்தார் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கு பதிவு
    • நீதிபதி உத்தரவு

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்துள்ள பெரிய குடும்ப தெரு பகுதியை சேர்ந்தவர் பவானி சங்கர் இவரது மனைவி கமலா 57 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது.

    இவர்களுக்கு குழந்தை இல்லாததால் பவானி சங்கர் முதல் மனைவிக்கு தெரியாமல் அதே பகுதியை சேர்ந்த இந்திராணி என்வருடன் தொடர்பு வைத்தார்.

    அவர்களுக்கு பாலாஜி பேபி என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் பவானி சங்கர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலகுறைவால் இறந்துவிட்டார்.

    பவானிசங்கருக்கு இந்திராணி மற்றும் அவருடைய மகன் பாலாஜி இருவர் மட்டுமே வாரிசு என்று வருவாய் துறையிடம் பொய்யான வாரிசு சான்றிதழ் தயார் செய்து கமலாவின் கணவர் பவானி சங்கர் பேரில் இருந்த 2 ஏக்கர் 35 சென்ட் நிலத்தை இந்திராணி மற்றும் பாலாஜி ஆகியோரின் பெயருக்கு வாணியம்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்து பட்டா ,சிட்டா ஆகியவற்றை பெற்று கொண்டனர்.

    இதற்கு ஆலங்காயம் புலவர்பள்ளி பகுதியை சேர்ந்த ராம்கி,விஜிலாபுரம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோர் சாட்சிகளாக கையெழுத்து போட்டுள்ளனர்.

    இது குறித்து பத்திரபதிவு தடை செய்ய வேண்டும் என்று கமலா தடை மனுவை சார்பதிவாளர் அலுவல கத்தில் அளித்துள்ளார். இதை சார்பதிவாளர் கார்த்திகேயன் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பொய்யான வாரிசு சான்றிதழ் பெற்று நிலத்தை பத்திர பதிவு செய்த மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாணியம்பாடி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இந்த வழக்கில் விசாரணை நடத்திய குற்றவியல் நீதித்துறை நடுவர் போலியாக வாரிசு சான்றிதழ் பெற்று நிலத்தை பத்திரப்பதிவு செய்த இந்திராணி, இந்திராணியின் மகன் பாலாஜி, வாரிசு சான்றிதழ் வழங்கும் போது பணியில் இருந்த தாசில்தார் கீதாராணி,துணை தாசில்தார் ஓய்வு பெற்ற ரகுராம கிருஷ்ணன், பத்திர பதிவு செய்த சார்பதிவாளர் கார்த்திகேயன்,பொய்யான வாரிசு சான்றிதழ் பெற உதவியாக இருந்த மற்றும் சாட்சி கையெழுத்து போட்ட நபர்கள் என 13 பேர் மீது வழக்கு பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    அதன் பேரில் 13 பேர் மீது வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

    • இலவச மாக காண அழைப்பு
    • மத்திய அரசு நடவடிக்கை

    ஜோலார்பேட்டை:

    இஸ்ரோவில் இருந்து' ஸ்பேஸ் ஆன் வீல்ஸ் மொபைல்' என்ற அறிவியல் மாதிரிகளை உள்ளடக்கிய கண்காட்சி பஸ் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் மாவட்ட வாரியாக கொண்டு செல்ல மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    திருப்பத்தூர் மாவட்டத்தில், ஜோலார்பேட்டையில் உள்ள யூனிவர்சல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வருகிற 14 மற்றும் 15-ந் தேதி 2 நாட்கள் 'ஸ்பேஸ் ஆன் வீல்ஸ் மொபைல்' பஸ் கண்காட்சி வாகனம் நிறுத்தப்படுகிறது

    இந்த வாகனத்தில் பல்வேறு செயற்கைக் கோள் மாதிரிகள், ராக்கெட் மாதிரிகள், சந்திரயான் - 3 மாதிரிகள் என அனைத்தும் காட்சிப்படுத்தப்படும்

    "ஸ்பேஸ் ஆன் வீல்ஸ் மொபைல்' பஸ் கண்காட்சி வாகனத்தின் மூலம் மாணவர்களின் அறிவியல் திறனை வளர்க்க இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் எனக் கூறப்படுகிறது.

    திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாண வர்கள், பெற்றோ ர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் 'ஸ்பேஸ் ஆன் வீல்ஸ் மொபைல்' பஸ் கண்காட்சியை இலவச மாக காண அழைப்பு விடுத்துள்ளனார்.

    2 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை காண காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • முன் விரோதம் காரணமாக விபரீதம்
    • சிறையில் அடைத்தனர்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அனீஸ் நகரை சேர்ந்தவர் ரயீஸ் அகமது (வயது 30).

    இவருக்கும் புதுமனையை சேர்ந்த அருணாசலம் (23) என்பவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று இரவு இவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்ப டுகிறது.

    ஆத்திர மடைந்த அருணாச லம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரயீஸ் அகமதுவை குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அருணாசலத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • வழக்குப் பதிவு செய்து விசாரணை
    • வேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை

    ஜோலார்பேட்டை:

    காட்பாடி அடுத்த லத்தேரி- காவனூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் காட்பாடி- ஜோலார்பேட்டை நோக்கி சென்ற ஏதோ ஒரு ரெயிலில் இருந்து தவறி விழந்து இறந்து கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த ரெட்டியூர் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் மாணவி கடந்த 6-ந்தேதி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகளை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து பெற்றோர் ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேதுக் கரசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்
    • பணியை தடுத்து நிறுத்திய பின்னர் கலைந்து சென்றனர்

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி டவுன் பகுதியில் உள்ள முஸ்லீம்பூர் கே.கே தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் புதியதாக செல்போன் டவர் அமைக்கும் பணி நடைப்பெற்றது.

    இதனை அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாணியம்பாடி டவுன் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, செல்போன் டவர் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய பின்னர் பொது மக்கள் கலைந்து சென்றனர்.

    • 3 மாத காலமாக குடிநீர் விநியோகம் செய்ய படவில்லை
    • 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த பந்தரபள்ளி ஊராட்சி நல்லகிந்தனபள்ளி கிராமத்தில் சுமார் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

    இந்த பகுதி மக்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பதிக்க பொக்லைன் எந்திரம் மூலம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பள்ளம் தோண்ட ப்பட்டது.

    இதுவரை அந்த பள்ளத்தை மூடாத காரணத்தால் அப்பகுதி சிறுவர்கள் பள்ளத்தில் விழுந்து அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேலும் 3 மாத காலமாக குடிநீரும் சரிவர விநியோகம் செய்ய படவில்லை. இது குறித்து பலமுறை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயாசரவண னிடம் புகார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் பச்சூர்- குப்பம் செல்லும் சாலையில் காலிகுடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    மேலும் அந்த வழியாக வந்த அரசு பஸ்சையும் சிறைப்பிடித்தனர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் நீடித்ததால் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது.

    காலை நேரத்தில் பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்தி ற்கு விரைந்து சென்று போராட்டக்கா ரர்களிடம் சமரசம் பேசினர். இதனை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • ரோந்து பணியில் சிக்கினார்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தினேஷ் மற்றும் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆம்பூர் டவுன் பழைய வாணியம்பாடி ரோட்டில் உள்ள பெட்டி கடையில், முகமது நபிஸ் (வயது 42) என்பவர் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து, ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    • வீடு திரும்பிய போது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆம்பூர்:

    வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த கமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 36) கூலி தொழிலாளி. இவர் தனது பைக்கில் அதே பகுதியை சேர்ந்த சரண் (27) என்பவரை ஏற்றிக்கொண்டு ஆம்பூருக்கு சென்றார்.

    பின்னர் மீண்டும் வீடு திரும்பிய போது சின்ன கொமெஸ்வரம் வீர கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து ஓசூர் சென்ற அரசு பஸ், பைக் மீது மோதியது. இதில் வெங்கடேசன் மற்றும் சரண் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார், விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×