என் மலர்
திருப்பத்தூர்
- எந்த பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வல்ல
- திருப்பத்தூர் கலெக்டர் பேச்சு
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் தெ.பாஸ்கரபாண்டியன் தலைமை வகித்து மாணவிகள் மத்தியில் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கல்வி பயின்ற காலகட்டங்களில் காதலிப்பது மகிழ்ச்சியாக இருக்கும், புரிந்து கொண்ட பிறகு ஏன் நாம் இதை செய்தோம் என்று இருக்கும். அதன் பிறகு அதில் இருந்து வெளியே வருவது மிகவும் பிரச்சினைக்குரியது.
இதிலிருந்து வெளியே வர நமது பெற்றோர்களிடம் தெரிவித்து அந்தப் பிரச்சினையில் இருந்து வெளிவர முயல வேண்டும். மேலும் வாழ்வில் எந்த ஒரு பிரச்சனைகளாக இருந்தாலும் சரி அதனை பகிர்ந்து கொள்வதில் மிக முக்கியமானவர்கள் நமது பெற்றோர். பெற்றோர்களிடம் மனம் விட்டு பேசுகின்ற பொழுது அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியும்.
கண்ணாடி முன்பு நம்மை நாம் ரசிப்பது மட்டுமல்ல நமது தன்னம்பிக்கையையும் உணர முடியும். அனைவரும் அழகாக உடை அணிவதற்கு முக்கிய காரணம் நம்மை நாம் நம்பிக்கையாக வைத்துக் கொள்ள முடியும். வாழ்க்கையில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருப்பவர்தான் தற்கொலை செய்து கொள்வதில்லை.
தற்கொலை செய்து கொள்பவர் தற்கொலை செய்து கொள்வதன் மூலம் அடுத்த நபருக்கு தண்டனை கொடுப்பதாக நினைக்கிறார்கள், அது அப்படி அல்ல அந்த நபர் பிரச்சனை இத்துடன் முடிந்து விட்டது என்று அடுத்த வேலையை பார்த்து கொண்டு செல்வார்கள்.
எனவே இதற்கான தீர்வு தாய், தந்தையர் மற்றும் நண்பர்கள் மூலமாக தீர்வு காணலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, குப்புசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள நாயக்கனேரி அடுத்த மேலூரை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 60). இவர் நாயக்கனேரி ஊராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார்.
இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். குப்புசாமி தனது 3 மகன்களுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் குப்புசாமி நேற்று மாலை தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது.
இதனை கேட்டு பதறிப்போன அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது குப்புசாமி நாட்டு துப்பாக்கியால் தனக்கு தானே கழுத்தில் சுட்டுக்கொண்டு, தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. ரத்த வெள்ளத்தில் அவர் பிணமாக கிடந்தார்.
இது குறித்து அந்த பகுதி மக்கள் ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, குப்புசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து, நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். துப்பாக்கி எப்படி அவருக்கு கிடைத்தது என விசாரணை நடத்தினர்.
தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- நிலாவூரிலிருந்து திருப்பத்தூருக்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது
- பஸ்சை உடனடியாக நிறுத்தி சாலையில் கிடந்த மரக்கிளைகளை அகற்றினர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டத்தில் நாட்டறம்பள்ளி,ஜோலார்பேட்டை, ஏலகிரி மலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இன்று காலை 5 மணிக்கு நிலாவூரிலிருந்து திருப்பத்தூருக்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.
அப்போது நரியனேரி கூட்டு ரோடு பகுதியில் சாலையில் மரம் சாய்ந்து கிடந்தது.
இதனைக் கண்ட அரசு பஸ் டிரைவர் பஸ்சை உடனடியாக நிறுத்தி சாலையில் கிடந்த மரக்கிளைகளை அகற்றினார். பின்னர் நெடுஞ்சாலைத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து திருப்பத்தூர் நெடுஞ்சாலை துறை ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையிலான அதிகாரிகள் வேரோடு சாய்ந்த மரத்தை முற்றிலுமாக அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.
- பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை
- போலீஸ் நிலையத்தில் புகார்
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா சின்னபள்ளிகுப்பத்தில் இலங்கை தமிழ் வாழ் மக்கள் குடியிருப்பு பகுதி உள்ளது.
இங்குள்ள கூலி தொழிலாளியின் 14 வயதுடைய மகள் அதே பகுதியில் 10- வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் மாணவி நேற்று காலை சைக்கிளில் பள்ளிக்கு சென்றார்.
நீண்ட நேரம் ஆகியும் மாணவி வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். அவர் கிடைக்காததால் உமராபாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பள்ளி மாணவியை தேடி வருகின்றனர்.
- சாலையில் பேசிக்கொண்டே நடந்து சென்றார்
- விநாயகர் ஊர்வலத்தில் பரிதாபம்
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பள்ளி தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 25). தொழிலாளி. இவர் நேற்று மாலை நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில் கலந்து கொண்டார். சாலையில் பேசிக்கொண்டே தங்கராஜ் நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக தங்கராஜ் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.
அங்கு நின்றவர்கள் படுகாயம் அடைந்த வாலிபரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை தங்கராஜ் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து உமராபாத் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தங்கராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அனுப்பி வைத்தனர்.
இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்
- பஸ்சையும், காரையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்
ஆம்பூர்:
திருப்பதி செல்வதற்காக தருமபுரியில் இருந்து காரில் சக்தி, கிருபாகரன், மோகன், அறிவழகன் ஆகியோர் சென்று கொண்டிருந்தனர். காரை மனோஜ் குமார் என்பவர் ஓட்டினார். தர்மபுரியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி அரசு பஸ் காரின் பின்னால் வந்து கொண்டிருந்தது.
வேலூர் - ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் வரும்போது முன்னால் சென்று கொண்டிருந்த கார் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் கார் டிரைவர், பஸ் டிரைவர் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து அந்த வழியாக சென்றவர்கள் ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பஸ்சையும், காரையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
படுகாயம் அடைந்தவர்களை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் விபத்து சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தீயணைப்பு துறையினர் மீட்டனர்
- போலீசார் விசாரணை
ஆலங்காயம்:
நாட்டறம்பள்ளி தாயப்பன் தெருவை சேர்ந்தவர் முரளி (வயது 24). இவர் நேற்று மதியம் 2 மணி அளவில் தனது நண் பர்களுடன் வாணியம்பாடி அருகே உள்ள புல்லூர் தடுப்பணையில் விநாயகர் சிலையை கரைத்துள்ளார்.
பின்னர் நண்பர்களுடன் அணையின் ஆழமான பகுதிக்கு குளிக்க சென்றார்.அப்போது அவர் நீரில் மூழ்கினார். அதேபோன்று ஜோலார் பேட்டையை அடுத்த கோனேரிக்குப்பம் கிரா மத்தை சேர்ந்த பூவரசன் (22) என்பவரும் தனது உறவினர்கள், நண்பர்களுடன் அதே அணைப்பகுதியில் விநாயகர் சிலையை கரைத்து விட்டு கரையின் மீது சென்று கொண் டிருந்தார்.
அப்போது அணையில் தவறி விழுந்து நீரில் மூழ்கினார்.
இதனை கண்ட அங்கிருந்த வர்கள், நீரில் மூழ்கிய இருவ ரையும் காப்பாற்ற முயன்றனர். பூவரசனை மட்டுமே பிணமாக மீட்டனர்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நீரில் மூழ்கிய முரளியை இரவு 7 மணி வரை தேடியும் மீட்க முடியவில்லை. இதனால் தேடும் பணி கைவிடப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்புத் துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரம் தேடலுக்கு பின்பு முரளியை பிணமாக மீட்டனர்.
இதுகுறித்து ஆந்திர மாநிலம், குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 22-ந்தேதி முதல் நடக்கிறது
- கலெக்டர் தகவல்
திருப்பத்தூர்:
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின்கீழ் பள்ளிக்கு வர இயலாமல் உள்ள இயலாமையுடைய சிறப்பு குழந்தைகள், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாம் வருகிற 22-ந்தேதி (வெள் ளிக்கிழமை) திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள் ளியிலும், 23-ந் தேதி ஆலங்காயம் அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளியிலும், 25-ந் தேதி ஆம்பூர் ஐ.இ.எல்.சி. காதுகே ளாதோர் நிதியுதவி மேல்நிலைப்பள்ளியிலும், 26-ந் தேதி நாட்டறம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 29-ந் தேதி ஜோலார்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 30-ந் தேதி கந்திலி கெஜல்நாயக்கன்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடக்கிறது.
முகாமில் தகுதியான பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இந்த முகாமில் 3 புகைப்படங்கள், ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
- 1000 மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கினர்
- பொதுமக்கள் எராளமானோர் கலந்து கொண்டனர்
ஆலங்காயம்:
வாணியம்பாடி அம்பூர்பேட்டையில் ஸ்ரீ அரசமர விநாயகர் சதுர்த்தி விழாக்குழு அறக்கட்டளை சார்பில் 26-ம் ஆண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அதன் தலைவர் கே.மோகன் தலைமையில் நடைபெற்றது.இதில் உறுப்பினர்கள் வி.எஸ்.சரவணன், ஏ.ஐய்ப்பன், செயலாளர் எம்.விஜய்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் ஸ்ரீ பொன்னியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் எம். நாகேந்திர குமார், நகரமன்ற உறுப்பினர்கள் பா.சாந்தி பாபு, மா.பா சாரதி, சித்ரா சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக நகர கூட்டுறவு வங்கி தலைவரும் நகர திமுக செயலாளருமான வி.எஸ்.சாரதி குமார் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளி ஒருவருக்கு 3 சக்கர சைக்கிள், ஏழை பெண்கள் 5 பேருக்கு தையல் இயந்திரங்கள், 1000 மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் சிவப்பிர காசம், ஆர்.டி.கிரி, தி.மு.க. மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ஆர்.சிரஞ்சீவி, விழாக்குழு பொருளாளர் எஸ்.கணேசன், துணை தலைவர் ஆர். ரவிச்சந்திரன், உறுப்பினர்கள் நரேஷ், ஜோதீஸ்வரன், ஆர்.வி. கெளசிகரம், ஜி. தீனு மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் விழாக்குழு பொருளாளர் ஏ.பாலமுருகன் நன்றி கூறினார்.
- வட்டார மருத்துவ அலுவலர் ஆய்வு
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் ஆலங்காயம் பகுதிகளை சுற்றியுள்ள அங்கன்வாடி மையங்களில் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் நேற்று தொடங்கியது.
முகாம் தொடங்கிய முதல் நாளான நேற்று ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி பெருமாள்பேட்டை, கொத்தக் கோட்டை, நிம்மியம்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் முகாமினை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது மாவட்ட தொற்று நோயியலாளர், மாவட்ட உதவி திட்ட மேலாளர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் சுகாதார பணியாளர்கள் உடன் இருந்தனர்.
- தூக்கில் பிணமாக கிடந்தார்
- சப்- கலெக்டர் பிரேமலதா விசாரணை நடத்த பரிந்துரை
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் ராமர் கோவில் தெரு சேர்ந்தவர் சுந்தர். ஆம்பூர் தாலுகா அலுவலகம் அருகே கம்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார்.
இவரது மனைவி தரணி (வயது 23) திருமணமாகி 9 மாதங்கள் ஆகிறது. இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் தரணி மர்மமான முறையில் தூக்கில் பிணமாக கிடந்தார்.
இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து விசாரணையில் கணவன் மனைவி இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
வாணியம்பாடி சப்- கலெக்டர் பிரேமலதா விசாரணை நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நாய் குறுக்கே வந்ததால் பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்;
ஆம்பூர் அடுத்த கென்னடிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் அர விந்தன் (வயது 35). இவர் தனியார் தோல் தொழிற்சாலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது உறவினர் திருமணத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு பெரியாங்குப்பம் பகுதி அருகே சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு நாய் குறுக்கே வந்தது.
இதில் நிலை தடுமாறி அருகே உள்ள கால் வாய் தடுப்புச்சுவரில் மோதி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அப்பகுதி மக்கள் அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






