என் மலர்
நீங்கள் தேடியது "leaning tree"
- நிலாவூரிலிருந்து திருப்பத்தூருக்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது
- பஸ்சை உடனடியாக நிறுத்தி சாலையில் கிடந்த மரக்கிளைகளை அகற்றினர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டத்தில் நாட்டறம்பள்ளி,ஜோலார்பேட்டை, ஏலகிரி மலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இன்று காலை 5 மணிக்கு நிலாவூரிலிருந்து திருப்பத்தூருக்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.
அப்போது நரியனேரி கூட்டு ரோடு பகுதியில் சாலையில் மரம் சாய்ந்து கிடந்தது.
இதனைக் கண்ட அரசு பஸ் டிரைவர் பஸ்சை உடனடியாக நிறுத்தி சாலையில் கிடந்த மரக்கிளைகளை அகற்றினார். பின்னர் நெடுஞ்சாலைத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து திருப்பத்தூர் நெடுஞ்சாலை துறை ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையிலான அதிகாரிகள் வேரோடு சாய்ந்த மரத்தை முற்றிலுமாக அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.






