என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
    • காப்பு காட்டில் விடப்பட்டது

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அருகே வீட்டிற்கு நுழைய முயன்ற 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    நாட்டறம்பள்ளி அருகே வேட்டப்பட்டு பகுதியில் வசித்து வரும் பெருமாள் இவரது மகன் ஆனந்த் என்பவரது வீட்டிற்குள் பாம்பு நுழைய முயன்றது ஆனந்த் உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீயணைப்பு துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அப்போது வீட்டின் வரண்டாவில் 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு இருப்பதை கண்டனர். பாம்பு பிடிக்கும் கருவி மூலம் 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பு உயிருடன் பிடித்தனர். திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர் வனத்துறையினர் அருகில் உள்ள காப்பு காட்டில் விட்டனர்.

    • விவசாய நிலத்திற்கு சென்ற போது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி அடுத்த சுண்ணாம்புகாளை வட்டம், வடக்குப்பாட்டு பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 35), விவசாயி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் முரளி இன்று காலை அதே பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்திற்கு சென்றார். அப்போது நிலத்தில் படுத்திருந்த கண்ணாடி விரியன் பாம்பு, முரளியை கடித்தது. வலி தாங்க முடியாமல் அவர் கூச்சலிட்டார்.

    அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் முரளி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்
    • உரிய நடவடிக்கை எடுப்பதாக பொது மக்களிடம் அதிகாரிகள் உறுதி

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சான்றோர்குப்பம் - சோலூர் இடையே அமைந்துள்ள 2 தடுப்பணைகளில் மண்ணை கொட்டி, மரங்களை வெட்டி அகற்றிவிட்டு, நீர்வழிப்பாதையை மூடி, அப்பகுதி வழியாக கல்குவாரிக்கு வாகனங்கள் செல்வதற்காக மண் சாலை அமைக்கப்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

    மேலும் மண்சாலை அமைத்த தனிநபரை அப்பகுதி பொதுமக்கள் சிறைபிடித்து போராட்ட த்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்பூர் தாசில்தார் குமாரி நீர்வழிப்பாதை யையும், 2 தடுப்பணை களையும் மண் போட்டு மூடி சாலை அமைக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் தடுப்பணைகளில் கொட்ட ப்பட்ட மண்ணையும், நீர்வழி ப்பாதையை மூடி சாலை அமைக்கப்பட்டுள்ளதையும் அகற்ற உத்தரவிட்டார். மேலும் சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக பொது மக்களிடம் உறுதி அளித்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்
    • நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கப்பட்டது

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள ஆலங்காயம் மேற்கு ஒன்றியம் பகுதியில் எம்.எல்.ஏ செந்தில்குமார் தலைமையிலும், கிழக்கு ஒன்றியம் பகுதியில் முன்னாள் எம்.எல். ஏ கோவி. செந்தில்குமார் தலைமையிலும், உதயேந்திரம் பேரூராட்சியில் பேரூராட்சி செயலாளர் சரவணன் தலைமையிலும் அதிமுக நிர்வாகிகள் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இதில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் பணியாற்றுவது குறித்து பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

    இந்த கூட்டத்தில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கோபால், மேற்கு ஒன்றிய துணை செயலாளர் பாரதிதாசன், மாவட்ட மகளிரணி செயலாளர் மஞ்சுளாகந்தன், கோவிந்தசாமி, சங்கர் உட்பட அ.தி.மு.க. நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சென்னம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் ஓ.பி.எஸ். தரப்பு நகர செயலாளர் கோபி சங்கர் தலைமையில் உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக ஓ.பி.எஸ். தரப்பு மாவட்ட செயலாளர் சுரேஷ்பாபு கலந்துகொண்டனர். இதில் பல்வேறு மாற்று கட்சிகளில் இருந்து விலகி 100 பேர் ஓ.பி.எஸ். அணியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

    இதில் நகர அவை தலைவர் சாஜாத் உசேன், சிறுபான்மை நகர செயலாளர் ஆதில் அஹமத், சிறுபான்மை அவைத் தலைவர் அத்தாவுல்லா, சிறுபான்மை துணை செயலாளர் நாசிர் அஹமத், மாவட்ட பிரதிநிதி சலீம் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

    • நடன நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வலியுறுத்தினர்
    • மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதி வழங்கப்பட்டது

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி ஊராட்சி, ஏரியூர் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, இன்று மாலை ஆடல், பாடல் நடன நிகழ்ச்சி நடத்த அனுமதி கேட்டு அப்பகுதி மக்கள் போலீஸ் அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

    அதன்படி ஏரியூர் கிராமத்தில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடன நிகழ்ச்சி நடத்திக் கொள்ள தமிழ்நாடு போலீஸ்துறை இயக்குனரின் சுற்றறிக்கை படி வாணியம்பாடி டி.எஸ்.பி. விஜயகுமார் அனுமதி வழங்கினர்.

    நடன நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை கிராம மக்கள் ஒன்று கூடி விறுவிறுப்பாக செய்தனர்.

    இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர் நடன நாட்டிய நிகழ்ச்சி நடத்த கூடாது என நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    இதனையடுத்து போலீசார் ஆடல், பாடல் நடன நிகழ்ச்சி நடத்த தடை செய்யப் போவதாக அறிவித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்று கூடி நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் திரண்டனர். மேலும் ஆடல் பாடல் நடன நிகழ்ச்சியை நிறுத்தக்கூடாது. தொடர்ந்து நடத்த அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பொதுமக்களிடம் சமரசம் பேசின ர். மேலும் உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசனை செய்து நடன நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • 15 நாட்கள் நடக்கிறது
    • திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரத்தில் பிரீடம் பவுண்டேஷன் தொண்டு நிறுவனம் சார்பில் நபார்டு வங்கி நிதி உதவியோடு திருப்பத்தூர் பிரீடம் உழவர் உற்பத்தியாளர் நிறுவன பெண் விவசாயிகளுக்கு பாரம்பரிய தின்பண்டம் செய்வது குறித்து பயிற்சி வகுப்பு தொடங்கியது.

    15 நாட்கள் நடக்கும் இந்த பயிற்சி வகுப்பை திருப்பத்தூர் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பாஸ்கரன், வெங்களாபுரம் இந்தியன் வங்கி கிளை மேலாளர் கணேசன், திருப்பத்தூர் பிரீடம் உழவர் உற்பத்தியாளர் நிறுவன முதன்மை அலுவலர் எழிலரசி ஆகியோர் மானிய திட்டங்கள் குறித்து பற்றி விளக்கி பேசினார்.

    முடிவில் பிரீடம் பவுண்டேஷன் இயக்குனர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

    • 9-ம் வகுப்பு படித்து வந்த மாணவியை விடுதி வசதியுடன் கூடிய மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்க்க கலெக்டர் உத்தரவிட்டார்.
    • மாணவிகளுக்கு தேவையான பொருட்கள், சான்றிதழ்கள் வழங்க வருவாய்த்துறையினருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள மாடப்பள்ளி அண்ணாநகரை சேர்ந்த கணவன், மனைவி கூலி தொழில் செய்து வருகின்றனர். தம்பதிக்கு 3 மகள் மற்றும் ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.

    மூத்த மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. 2-வது மகள் திருப்பத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். 3-வது மகள் அங்குள்ள தொடக்கப்பள்ளியில் படித்து வந்தார். இந்த நிலையில் கணவன்- மனைவி இருவரும் மது போதைக்கு அடிமையானார்கள்.

    வீட்டில் குழந்தைகளுக்கு சரியாக சாப்பாடு கூட கிடைக்கவில்லை. மேலும் பிள்ளைகளுக்கு பள்ளி செல்வதற்கான சீருடை கூட இல்லை. இதனால் பள்ளிக்குச் செல்லாமல் மாணவிகள் வீட்டில் முடங்கினர்.

    இதுகுறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு புகார் வந்தது. இதையடுத்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மாடபள்ளி அண்ணாநகரில் உள்ள தம்பதியின் வீட்டிற்கு சென்றார். கலெக்டர் வந்தபோது வழக்கம் போல கணவன், மனைவி இருவரும் போதையில் இருந்தனர்.

    அவர்களுக்கு கலெக்டர் அறிவுரைகளை வழங்கினார். மேலும் 9-ம் வகுப்பு படித்து வந்த மாணவியை விடுதி வசதியுடன் கூடிய மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்க்க கலெக்டர் உத்தரவிட்டார்.

    அதன்படி மாணவி அந்த பள்ளியில் சேர்க்கப்பட்டார். மேலும் அவரது தங்கையை அங்குள்ள தொடக்கப் பள்ளியில் மீண்டும் கலெக்டர் சேர்த்தார். இரு மாணவிகளும் பள்ளிக்கு புறப்பட்டு சென்றனர்.

    அவர்களுக்கு தேவையான பொருட்கள், சான்றிதழ்கள் வழங்க வருவாய்த்துறையினருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். போதையில் அடிமையான தம்பதியினருக்கு கடன் உதவி செய்யப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

    அவர்கள் முதல் கட்டமாக குடிப்பழக்கத்தை மறக்க மறுவாழ்வு மையத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெற்றோரின் போதையால் வீட்டில் முடங்கிய இரண்டு மாணவிகளை பள்ளியில் சேர்த்த கலெக்டருக்கு அந்த பகுதி மக்கள் பாராட்டு மற்றும் நன்றி தெரிவித்தனர்.

    இதுகுறித்து பள்ளி விடுதியில் சேர்க்கப்பட்ட மாணவி கூறுகையில்:-

    எனது பெற்றோர் கூலி வேலை செய்து வந்தனர். நாளடைவில் அவர்களுக்கு மது குடிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    இதனால் வீட்டில் எங்களுக்கு உணவு கூட கிடைக்கவில்லை. மேலும் பள்ளி செல்வதற்கான சீருடை இல்லை. இதுவரை எங்களுக்கு ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ் ஆகியவை இல்லை. அதனால் பள்ளிக்கு செல்லாமல் நானும் எனது தங்கையும் வீட்டிலேயே முடங்கினோம்.

    கலெக்டர் நடவடிக்கையால் தற்போது மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளோம். இது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களது பெற்றோர் மீண்டும் நல்வழிக்கு திரும்புவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு
    • பூச்சி மருந்தை குடித்தார்

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி அடுத்த ஊசிதோப்பை சேர்ந்தவர் சண்முகம் (வயது 45). விவசாயி. மனைவி திலகவதி. இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் கணவனை பிரிந்து 2 ஆண்டுகளாக திலகவதி தனியாக வாழ்ந்து வந்தார்.

    இதனால் சண்முகம் மன உளச்சலில் காணப்பட்டார். மனைவி பிரிந்த விரக்தியில் இருந்த சண்முகம் கடந்த 18-ந் தேதி பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். இதனைக் கண்ட உறவினர்கள் மயங்கி கிடந்த வரை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சண்முகம் பரிதாபமாக இறந்தார்.

    • போலீசார் விசாரணை
    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் ஏ.கஸ்பா, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 36), லாரி டிரைவர். இவரது மகள் கீதாபிரியா (16). இவர் தேவலாபுரம் ஊராட்சி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    இந்த நிலையில் கீதாபிரியா நேற்று மாலை அவரது வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக கிடந்தார். இது குறித்து அந்த பகுதி மக்கள் ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிலைகளுக்கு சிறப்பு பூஜை
    • ஏரியில் பலத்த பாதுகாப்புடன் கரைக்கப்பட்டது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியையொட்டி கடந்த 15-ந் தேதி இந்து முன்னணி, பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகள், இளைஞர்கள் சார்பில் 686 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த சிலைகள் கரைப்பதற்கான ஊர்வலம் நேற்று திலகர் இந்து இளைஞர் மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு விழா குழு தலைவர் பா.ஜ.க. மாவட்ட துணை தலைவர் வி .அன்பழகன் தலைமை தாங்கினார். நகரத் தலைவர் ஆர்.சண்முகம் முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட செயலாளர் சரவணன்கொடி அசைத்து அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் பா.ஜ.க. செயற்குழு உறுப்பினர் எம். தீபா, பொதுச் செயலாளர் கவியரசு, அருள்மொழி,, பா.ஜ.க. நகர துணைத் தலைவர் ஆர். ரவி, வர்த்தக அணி நகர தலைவர் பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ஊர்வலகமாக எடுத்து செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் ஏரியில் பலத்த பாதுகாப்புடன் கரைக்கப்பட்டது.

    அதேபோல் ஆம்பூர் கிருஷ்ணாபுரம், கஸ்பா, பைபாஸ் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து முக்கிய சாலைகள் வீதியாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் அறை மடுகு பகுதிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஏரியில் கரைக்கப்பட்டது.

    • கியாஸ் அடுப்பை பற்ற வைத்தபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கோனாமேடு பகுதியை நகரை சேர்ந்தவர் விமலா (வயது 45) அதே பகுதியில் வீட்டில் சமைத்து எடுத்து சென்று அருகில் ஓட்டல் கடை வைத்து விற்பனை செய்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி சமையல் செய்வதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது தீப்பற்றி படுகாயம் அமைந்தார்.

    உடனடியாக அவரை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று விமலா பரிதாபமாக இறந்தார்.

    ×