என் மலர்
நீங்கள் தேடியது "6 பேர் படுகாயம்"
- அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்
- பஸ்சையும், காரையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்
ஆம்பூர்:
திருப்பதி செல்வதற்காக தருமபுரியில் இருந்து காரில் சக்தி, கிருபாகரன், மோகன், அறிவழகன் ஆகியோர் சென்று கொண்டிருந்தனர். காரை மனோஜ் குமார் என்பவர் ஓட்டினார். தர்மபுரியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி அரசு பஸ் காரின் பின்னால் வந்து கொண்டிருந்தது.
வேலூர் - ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் வரும்போது முன்னால் சென்று கொண்டிருந்த கார் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் கார் டிரைவர், பஸ் டிரைவர் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து அந்த வழியாக சென்றவர்கள் ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பஸ்சையும், காரையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
படுகாயம் அடைந்தவர்களை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் விபத்து சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஹைவேவிஸ் பகுதியில் மலைச்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் வேனில் வந்த 22 பேர் காயம் அடைந்தனர்.
- 6 பேர் பலத்த காயம் அடைந்ததால் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சின்னமனூர்:
சின்னமனூர் அருகே மேற்கு மலைத் தொடர்ச்சியில் உள்ள ஹைவேவிஸ் பகுதியில் மேகமலை, மணலாறு, வெண்ணியார், மகாராஜன் மெட்டு, இரவங்கலாறு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது. இங்கு சுற்றுலா வந்தவர்கள் இயற்கை அழகை கண்டு ரசித்து விட்டு திரும்பி கொண்டிருந்தனர். மலைச்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் வேனில் வந்த 22 பேர் காயம் அடைந்தனர்.
அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நித்தியா (வயது34), திவ்யா (28), சத்யா (38), விஜய்கிருஷ்ணா (10), மகேஷ்வரன் (40) ஜெயப்பிரியா(32) உள்ளிட்ட 6 பேர் பலத்த காயம் அடைந்ததால் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மற்ற 16 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். விசாரணையில் மதுரை காமராஜர் பல் கலைக்கழகம் அருகில் உள்ள புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த தங்கையா (48) என்பவர் உறவினர்களை தனது சொந்த வேனில் அழைத்துக் கொண்டு சுற்றுலா வந்தது தெரிய வந்தது.






