ஹைவேவிஸ் மலைப்பகுதியில் வேன் கவிழ்ந்து பயங்கர விபத்து-6 பேர் படுகாயம்

ஹைவேவிஸ் பகுதியில் மலைச்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் வேனில் வந்த 22 பேர் காயம் அடைந்தனர்.6 பேர் பலத்த காயம் அடைந்ததால் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மலைச்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான வேன்.
மலைச்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான வேன்.
Published on

சின்னமனூர்:

சின்னமனூர் அருகே மேற்கு மலைத் தொடர்ச்சியில் உள்ள ஹைவேவிஸ் பகுதியில் மேகமலை, மணலாறு, வெண்ணியார், மகாராஜன் மெட்டு, இரவங்கலாறு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது. இங்கு சுற்றுலா வந்தவர்கள் இயற்கை அழகை கண்டு ரசித்து விட்டு திரும்பி கொண்டிருந்தனர். மலைச்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் வேனில் வந்த 22 பேர் காயம் அடைந்தனர்.

அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நித்தியா (வயது34), திவ்யா (28), சத்யா (38), விஜய்கிருஷ்ணா (10), மகேஷ்வரன் (40) ஜெயப்பிரியா(32) உள்ளிட்ட 6 பேர் பலத்த காயம் அடைந்ததால் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மற்ற 16 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். விசாரணையில் மதுரை காமராஜர் பல் கலைக்கழகம் அருகில் உள்ள புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த தங்கையா (48) என்பவர் உறவினர்களை தனது சொந்த வேனில் அழைத்துக் கொண்டு சுற்றுலா வந்தது தெரிய வந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com