திருமணமாகி 9 மாதத்தில் இளம்பெண் மர்ம சாவு

தூக்கில் பிணமாக கிடந்தார் சப்- கலெக்டர் பிரேமலதா விசாரணை நடத்த பரிந்துரை
திருமணமாகி 9 மாதத்தில் இளம்பெண் மர்ம சாவு
Published on

ஆம்பூர்:

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் ராமர் கோவில் தெரு சேர்ந்தவர் சுந்தர். ஆம்பூர் தாலுகா அலுவலகம் அருகே கம்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார்.

இவரது மனைவி தரணி (வயது 23) திருமணமாகி 9 மாதங்கள் ஆகிறது. இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் தரணி மர்மமான முறையில் தூக்கில் பிணமாக கிடந்தார்.

இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து விசாரணையில் கணவன் மனைவி இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.

வாணியம்பாடி சப்- கலெக்டர் பிரேமலதா விசாரணை நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com