என் மலர்
நீங்கள் தேடியது "காதலிப்பது மகிழ்ச்சியாக இருக்கும்"
- எந்த பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வல்ல
- திருப்பத்தூர் கலெக்டர் பேச்சு
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் தெ.பாஸ்கரபாண்டியன் தலைமை வகித்து மாணவிகள் மத்தியில் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கல்வி பயின்ற காலகட்டங்களில் காதலிப்பது மகிழ்ச்சியாக இருக்கும், புரிந்து கொண்ட பிறகு ஏன் நாம் இதை செய்தோம் என்று இருக்கும். அதன் பிறகு அதில் இருந்து வெளியே வருவது மிகவும் பிரச்சினைக்குரியது.
இதிலிருந்து வெளியே வர நமது பெற்றோர்களிடம் தெரிவித்து அந்தப் பிரச்சினையில் இருந்து வெளிவர முயல வேண்டும். மேலும் வாழ்வில் எந்த ஒரு பிரச்சனைகளாக இருந்தாலும் சரி அதனை பகிர்ந்து கொள்வதில் மிக முக்கியமானவர்கள் நமது பெற்றோர். பெற்றோர்களிடம் மனம் விட்டு பேசுகின்ற பொழுது அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியும்.
கண்ணாடி முன்பு நம்மை நாம் ரசிப்பது மட்டுமல்ல நமது தன்னம்பிக்கையையும் உணர முடியும். அனைவரும் அழகாக உடை அணிவதற்கு முக்கிய காரணம் நம்மை நாம் நம்பிக்கையாக வைத்துக் கொள்ள முடியும். வாழ்க்கையில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருப்பவர்தான் தற்கொலை செய்து கொள்வதில்லை.
தற்கொலை செய்து கொள்பவர் தற்கொலை செய்து கொள்வதன் மூலம் அடுத்த நபருக்கு தண்டனை கொடுப்பதாக நினைக்கிறார்கள், அது அப்படி அல்ல அந்த நபர் பிரச்சனை இத்துடன் முடிந்து விட்டது என்று அடுத்த வேலையை பார்த்து கொண்டு செல்வார்கள்.
எனவே இதற்கான தீர்வு தாய், தந்தையர் மற்றும் நண்பர்கள் மூலமாக தீர்வு காணலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.






