என் மலர்tooltip icon

    திருச்சிராப்பள்ளி

    • கர்நாடகத்தில் உள்ள நடிகர்கள் நிர்பந்தத்திற்காக போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
    • மக்களின் வேதனைகளை புரிந்து கொண்டு அரசு செயல்பட வேண்டும்.

    கே.கே.நகர்:

    சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி பிரச்சனையை தீர்க்க மத்திய அரசு வலுவாக இருந்து ஒரு முடிவை எடுக்க வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் என கூறும் நேரத்தில் ஒரே நாட்டிற்குள் இருக்கும் காவிரி பிரச்சனையை தீர்க்க முடியாமல் இருப்பது வேடிக்கையானது.

    காவிரி விவகாரத்தில் அதிகமான தண்ணீர் இருக்கும்போது கர்நாடகா அரசு திறந்து விட்டு விடுகிறார்கள். ஆனால் முறைப்படி தண்ணீர் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மற்றும் மத்திய அரசு கூறினால் வழங்க மறுத்து வருகிறார்கள்.

    நடிகர்கள் தற்போது எல்லாம் மாநிலங்களுக்கும் சென்று நடித்து வருகிறார்கள். எனவே அவர்கள் தான் இந்த விவகாரத்திற்கு குரல் கொடுக்க வேண்டும் என்று இல்லை. காவிரி பிரச்சனையை சரி செய்ய வேண்டியது அரசு தான்.

    கர்நாடகத்தில் உள்ள நடிகர்கள் நிர்பந்தத்திற்காக போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். ஆனால் எல்லோரும் அப்படி போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று இல்லை.

    இங்கிருக்கும் ஆட்சியாளர்களுக்கு சாதகமான அரசு கர்நாடகத்தில் இருந்தாலும் அவர்கள் தண்ணீர் கொடுப்பதாக இல்லை.

    2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி தான் நாங்கள் அதிகம் பயணிக்கிறோம். அதற்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல் குறித்து வருகிற டிசம்பர் 9-ந்தேதி நடைபெறும் கூட்டத்தில் எங்களுடைய கட்சியை சேர்ந்த பிரதிநிதிகள் சேர்ந்து முடிவை அறிவிப்போம்.

    தேர்தல் சூடு பிடிக்க இன்னும் ஒன்று அல்லது 2 மாதங்கள் ஆகலாம் எனவே பொறுத்து இருந்து தான் பார்க்க முடியும்.

    பாராளுமன்ற தேர்தல் பண நாயகமாக தான் இருக்கும். எம்.பி. தேர்தலில் நின்றால் ரூ.100 கோடி வேண்டும் என்கிறார்கள். சட்டசபை தேர்தல் என்றால் ரூ.25 கோடி வேண்டும் என்கிறார்கள். இதுதான் ஜனநாயகமா என தெரியவில்லை.

    5 சதவீத வாகனங்களுக்கான வரியை உயர்த்தி இருப்பது வருத்தம் அளிக்கின்றது. மக்களின் வேதனைகளை புரிந்து கொண்டு அரசு செயல்பட வேண்டும்.

    தேர்தலில் தி.மு.க.விற்கும் பா.ஜ.க.விற்கும் தான் போட்டி என அண்ணாமலை கூறி இருப்பது அவருடைய கருத்து. அதற்கு நான் பதில் அளிக்க வேண்டியதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மேய்ச்சலுக்கு சென்ற 3 பசுக்கள் மின்சாரம் தாக்கி செத்தன
    • பசுக்கள் இறந்ததை கண்டு விவசாயிகள் கண்ணீர் வடித்தனர்

    திருவெறும்பூர்,

    திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் கூத்தைப்பாரை சேர்ந்த விவசாயி சேகர் ( வயது 53 ). இவர் சொந்தமாக பால் கறந்து வீடு வீடாக விற்பனை செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான 2 சீமை கறவை மாடுகளும் அதே பகுதியை சேர்ந்த ஆனந்த மூர்த்தி என்பவருக்கு சொந்தமான கறவைமாடும் மேய்ச்சலுக்கு சென்றன.இந்த நிலையில் மாலையில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மழையில் அந்த பகுதியில் இருந்த மின்சார கம்பிகள் கீழே அறுந்து கிடப்பது தெரியாமல் 3 கறவை மாடுகளும் கம்பியில் உரசின. இதில் சம்பவ இடத்திலேயே 3 மாடுகளும் பரிதாபமாக உயிரிழந்தன.இன்று காலை மாட்டை தேடி மாட்டின் உரிமையாளர்கள் சென்று பார்த்த பொழுது தான் மாடுகள் மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பது தெரியவந்தது. இறந்த மாடுகளை பார்த்து அதன் உரிமையாளர்கள் கண்ணீர் விட்டனர். உடனடியாக அப்பகுதியில் உள்ள மின்சாரத்தை துண்டிப்பதற்கு மின்வாரிய அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மின் இணைப்பை துண்டிக்கப்பட்டது.

    அந்த பகுதியில் சம்பா ஒருபோக நடவு பயிருக்காக நாற்றங்கால்கள் உளவு ஒட்டி உள்ளனர். மேலும் அந்த பகுதியில் தற்போது விவசாயப் பணிகள் தொடங்கி உள்ள நிலையில் விவசாயிகள் சென்று வரும் வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக இந்த மின்கம்பி அருந்து விழுந்ததில் விவசாயிகள் எந்தவித அசம்பாவிதமும் தப்பி உள்ளனர். இறந்து போன கறவை மாடு தலா75 ஆயிரம் மதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது. 

    • பாலக்கரையில் பா.ஜ.க. பிரமுகருக்கு கத்திக்குத்து விழுந்தது
    • பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து 3 பேரை தேடி வருகின்றனர்

    திருச்சி,

    திருச்சி பாலக்கரை எடத் தெரு நெய்க்கார தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 43). கேஸ் சிலிண்டர் சப்ளை செய்பவரான இவர் அப்பகுதி 33-வது வார்டு பா.ஜ.க. தலைவராக உள்ளார்.கண்ணன் அங்குள்ள ஒரு வீட்டின் தரைதளத்தில் வசித்து வருகிறார். முதல் தளத்தில் அருண்குமார் என்பவர் வசிக்கிறார். இந்த நிலையில் மேல்மாடிக்கு கண்ணனின் தாயார் சென்றபோது அருண்குமார் தடுத்து நிறுத்தி கேள்வி எழுப்பினார்.இதை கண்ணன் தட்டி கேட்டார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அருண்குமார் மற்றும் நண்பர்கள் 2 பேர் சேர்ந்து கண்ணனை கத்தியால் குத்தினர்.இதில் கண்ணனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதை யடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து கண்ணன் பாலக்கரை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அருண்குமார் உள்ளிட்ட 3 பேரையும் தேடி வருகிறார்கள்.

    • துறையூர் அருகே கோழிப்பண்ணையில் வேலை செய்த வட மாநில வாலிபர் மர்ம சாவு
    • வழக்கு பதிவு செய்த துறையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    துறையூர்,

    திருச்சி மாவட்டம் துறையூர் தியாகி சிங்காரவேலர் தெருவை சேர்ந்தவர் மதன் (45). இவர் விசாலாட்சி அம்மாள் சமுத்திரம் கிராமத்தில் சொந்தமாக கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இந்த கோழி பண்ணையில் ஒரிசா மாநிலத்தை ஹேமராஜ் தருவா (43) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று இரவு இவர் வேலை முடிந்து தன்னுடைய அறைக்கு சென்றுள்ளார். அப்பொழுது அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அங்கு பணிபுரியும் பணியாளர்கள், உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். இத்தகவலின் பேரில் அங்கு சென்ற ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஹேமராஜ் தருவாவை பரிசோதித்துவிட்டு ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதை அறிந்த துறையூர் போலீசார், சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று, பிணத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த துறையூர் போலீசார் ஹேமராஜ் தருவா வலிப்பு நோயின் காரணமாக இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    துறையூர் அருகே கோழி பண்ணையில் பணிபுரிந்த வட மாநில இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருச்சி மாநகராட்சியில் பாதாள சாக்கடை கழிவுகளை அகற்ற நவீன எந்திரம் வாங்கப்பட்டு உள்ளது
    • மேயர் அன்பழகன் முன்னிலையில் கோர்ட்டு அருகில் உள்ள பாதாள சாக்கடையில் உள்ள குப்பை மற்றும் மண் கழிவுகள் அகற்றப்பட்டது

    திருச்சி, 

    திருச்சி மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. அதன்படி மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகள். சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்காமல் இருக்க மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களிலும் உள்ள மழைநீர் கால்வாய்களில் தேங்கி நிற்கும் குப்பை கழிவுகள் மாநகராட்சி ஊழி யர்களால் அகற்றப்பட்டு வருகிறது.

    மேலும், பாதாள சாக் கடையில் உள்ள குப்பை மற்றும் மண் கழிவுகளை அகற்றுவதற்காக நவீன நீர் உறிஞ்சும் எந்திரம் திருச்சி மாநகராட்சிக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த எந்திரம் பாதாள சாக்கடையில் உள்ள குப்பை மற்றும் மண் கழிவு களை மொத்தமாக உறிஞ்சி எடுத்து, பின்னர் குப்பை மற்றும் மண் கழிவுகளை மட்டும் தனியாக சேகரித் துக்கொண்டு மீண்டும் தண்ணீரை மட்டும் பாதாள சாக்கடையில் விட்டுவிடும்.

    இவ்வாறு செய்வதன் மூலம் பாதாள சாக்க டைகளில் அடைப்புகள் இல்லாமல் மழைக்காலங் களில் தண்ணீர் செல்வதுடன் குடியிருப்பு பகுதி மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்படாமல் இருப்ப துடன் பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகாமல் இருப்பார்கள்.

    நவீன நீர் உறிஞ்சும் எந்திரம் மூலம் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் முன்னிலையில் கோர்ட்டு அருகில் உள்ள பாதாள சாக்கடையில் உள்ள குப்பை மற்றும் மண் கழிவுகளை அகற்றினர்.

    அவருடன் நகரப் பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர் துர்கா தேவி, செயற்பொறியாளர் கே. எஸ். பாலசுப்பிரமணியன், உதவி ஆணையர் சண்முகம், இளநிலை பொறியாளர் பாவா பக்ருதீன், கவுன்சிலர் கலைச்செல்வி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்
    • 8 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி உயிரிழந்தார்.

    திருச்சி,

    திருச்சி மணச்சநல்லூர் கீழூர் மூவரையன் பாளை யம் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி.இவரது மகன் ஹரிகிரு ஷ்ணன் (வயது 23). இவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர்.அதைத் தொடர்ந்து பெண் பார்க்கும் படலம் தொடங்கியது. ஆனால் ஹரிகிருஷ்ணன் திருமணம் செய்து கொள்ள விரும்ப வில்லை.இருப்பினும் பெற்றோர் பெண் தேடி வந்ததால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானார். பின்னர் வீட் டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்து எடுத்து குடித்து மயங்கி விழுந்தார்.

    பெற்றோர்கள் அவரை மீட்டு மணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த னர். பின்னர் மேல் சிகிச்சை க்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .கடந்த 8 தினங்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது இருந்த போதிலும் சிகிச்சை பலன் அளிக்காமல் ஹரி கிரு ஷ்ணன் பரிதாபமாக இற ந்தார்.இது குறித்து அவரது தந்தை ரங்கசாமி மணச்சந ல்லூர் போலீசில் புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மணப்பாறையில் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர் தற்கொலை
    • மனைவியின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பரிதாபம்

    திருச்சி,

    திருச்சி மணப்பாறை அருகே உள்ள மலையாடிப்ப ட்டி ராயம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ சேகர். இவரது மனைவி ஹஸ்பர் மேரி. கணவன்- மனைவி இருவரும் இணை பிரியாத ஜோடியாக வாழ்ந்து வந்தனர்.இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கஷ்ப்பர் மேரி உடல் நலக்கு றைவால் திடீரென இறந்து விட்டார். இது ஸ்டீபன் ராஜ சேகருக்கு மிகுந்த மனவே தனையை ஏற்படுத்தியது.மனைவியின் பிரிவு பிரிவு அவரை நிலைகுலைய செய்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வீட்டில் உள்ள யாரிடமும் சரியாக பேசாமல் அமைதி யாக இருந்தார்.பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஸ்டீபன் ராஜசேகர் திடீரென மனைவி சேலையில் தூக்கு மாட்டி தொங்கினார்.இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் அவரை மீட்டு 108 ஆம்புல ன்ஸ் மூலமாக அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு டாக்டர்கள் பரிசோ தித்து விட்டு ஸ்டீபன் ராஜ சேகர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து அவரது தந்தை தாமஸ் பீட்டர் மணப்பாறை போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்சி பாலக்கரை பகுதியில் வட மாநில வாலிபர்கள் மீது தாக்குதல் நடைபெற்று உள்ளது
    • மனைவியுடன் பேசியதால் கணவர் வெறிச்செயல்

    திருச்சி,

    பீகார் மாநிலம் சேபுரா மாவட்டம் பதேபூர் பகுதியைச் சேர்ந்தவர் பப்பு குமார் (வயது 33).இவரது சகோதரர் பப்லு (33).இவர்கள் இருவரும் திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் அண்ணா நகர் ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் சோப்பு கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர். இந்த கம்பெனியில் சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த பரணிதரன் (26) மனைவி தாமரைச்செல்வியும் பணியாற்றி வருகிறார்.இந்த கம்பெனியில் மேஸ்திரியாக செயல்படும் பப்பு குமார் தாமரைச்செல்வி இடம் வேலை விஷயமாக பேசுவது வழக்கமானது. இது கணவர் பரணிதரனுக்கு பிடிக்கவில்லை. அதைத்தொடர்ந்து பரணிதரன் தனது நண்பர் பாண்டியராஜன் உடன் அங்குள்ள ஒரு டீக்கடைக்கு சென்றார். பின்னர் செல்போன் மூலம் பப்பு குமாரை அங்கு தனது மனைவியுடன் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறி அவரது கழுத்தில் கத்தியால் கீறி உள்ளனர். இதை அறிந்த அவரது சகோதரர் பப்லு அங்கு சென்றார்.பின்னர் அவரையும் பரணிதரன் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பப்பு குமார் பாலக்கரை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாண்டியராஜனை கைது செய்தனர்.தப்பி ஓடிய பரணிதத்தை தேடி வருகின்றனர். விசாரணையில் பரணிதரன் மனைவியுடன் கருத்து வேறுபாட்டில் இருந்ததும், மனைவி வேலைக்கு செல்வதை நிறுத்த பப்பு குமாரை கத்தியால் குத்தியதும் தெரியவந்துள்ளது.

    • திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் பிணத்தின் மீது அமர்ந்து அகோரிகள் நடத்திய வினோத பூஜை நடைபெற்றது
    • திகிலூட்டும் ஆன்ம சாந்தி பூஜையால் பரபரப்பு

    திருவெறும்பூர்,

    திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பூவாளூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 60). டீ மாஸ்டரான இவர் நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த நிலையில் அவரது உறவினர்கள் திருச்சி ஓயாமரி சுடுகாட்டிற்கு உடலை எரியூட்ட வந்தனர்.இதனிடையே இறந்த பாலசுப்பிரமணியனின் உடலுக்கு அகோரி முறைப்படி ஆன்மா சாந்தி பூஜை செய்து தகனம் செய்ய வேண்டும் என அவரது உறவினரான சரவணன் என்பவர் திருச்சி அரியமங்கலத்தில் உள்ள அகோரி மணிகண்டனிடம் கேட்டுக் கொண்டார்.அதன்படி காசியில் பயிற்சி பெற்ற அகோரி மணிகண்டன் தன் சீடர்களுடன் உடல் முழுவதும் திருநீறு அணிந்து கொண்டு ஓயாமரி சுடுகாட்டிற்கு வந்தார். அப்போது இறந்த பாலசுப்பிரமணியனின் உறவினர்கள் தங்களது வழக்கமான இறுதி சடங்குகளை முடித்தனர்.அதன் பிறகு அகோரி மணிகண்டன் தகன மேடையில் உள்ள பாலசுப்ரமணியனின் சடலத்தின் மீது ஏறி அமர்ந்து அகோர மந்திரங்கள் ஓதி பூஜை செய்தார். அப்போது சக அகோரிகள் டம்ரா மேளம் அடித்தும், சங்கு ஒலி எழுப்பியும் ஹர ஹர மகாதேவா என முழக்கமிட்டனர்.பின்னர் பாலசுப்பிரமணியனின் உடலுக்கு தீபாரதனை காண்பித்து பூஜை நிறைவு செய்யப்பட்டது. காசியில் நடைபெறக்கூடிய இந்த ஆன்ம சாந்தி பூஜையானது , திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் அரங்கேறிய சம்பவம் சற்று திகிலூட்டும் விதமாக இருந்தது.மேலும் அகோரி மணிகண்டன் சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி அரியமங்கலத்தில் உள்ள சுடுகாட்டில் தன் தாயார் சடலத்தின் மீது அமர்ந்து ஆன்ம சாந்தி பூஜை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • திருவெறும்பூர் அருகே துப்பாக்கியுடன் ரவுடி கைது செய்யப்பட்டு உள்ளார்
    • துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்

    திருவெறும்பூர்,

    திருவெறும்பூர் அருகே உள்ள காருண்யா நகர் பகுதியில் திருவெறும்பூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது அந்த பகுதியில் சந்தேக படும்படியாக நின்றுகொண்டு இருந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர்.விசாரணையில் அவர், திருவெறும்பூர் அருகே உள்ள கிழக்குறிச்சி அண்ணாநகரை சேர்ந்த பொந்துளி மகன் முருகானந்தம் (எ) மூல முருகானந்தம் ( வயது 28) என்பது தெரிய வந்தது. அவரை சோதனையிட்ட போது அவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கி கைப்பற்ற பட்டது.இந்த நாட்டுத்துப்பாக்கிக்கு அவர் உரிய வகையில் லைசன்ஸ் பெறவில்லை என்பதும் தெரிய வந்தது. மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் முருகானந்தத்தின் மீது திருவெறும்பூர், பொன்மலை, நவல்பட்டு, புதுக்கோட்டை உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ள ரவுடி என்பதும் தெரியவந்தது.இதனை தொடர்ந்து இதனை தொடர்ந்து ரவுடி முருகானந்தத்தை கைது செய்த, திருவெறும்பூர் போலீசார், அவரிடம் இருந்த நாட்டு துப்பாக்கியும் பறிமுதல் செய்து, வழக்கு பதிந்து, திருச்சி 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சியில் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • திருச்சியில் இருந்து மும்பைக்கு நேரடி விமான சேவை தொடங்கப்பட உள்ளது
    • அடுத்த மாதம் 4-ந்தேதி முதல் இயக்கப்படும் என அறிவிப்பு

    கே.கே.நகர்,

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை, அபுதாபி, பகரின் உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானங்களை மலிந்தோ ஏர் ஏசியா ஸ்கூல், இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் இயக்கி வருகின்றன.இதே போன்று திருச்சியில் இருந்து உள்நாட்டு விமான சேவைகளாக ஹைதராபாத், சென்னை, புதுடெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவற்றை இண்டிகோ நிறுவனம் இயக்கி வருகிறது.திருச்சியில் இருந்து நாள்தோறும் 7 உள்நாட்டு சேவைகள், 11 வெளி நாட்டு விமான சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அடுத்த மாதம் 2-ந் தேதி முதல் வியட்நாமிற்கு புதிய விமான சேவையை வியட் ஜெட் நிறுவனம் தொடங்க உள்ளது.அதேபோன்று 4-ந் தேதி முதல் திருச்சியில் இருந்து மும்பைக்கு தினசரி விமான சேவை இயக்கப்பட உள்ளது. இந்த விமானம் மும்பையில் இருந்து மதியம் 1.10 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.55 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடையும்.மறு மார்க்கத்தில் இந்த விமானம் திருச்சி விமான நிலையத்தில் இருந்து மதியம் 3.50 மணிக்கு புறப்பட்டு மாலை 5.40 மணிக்கு மும்பை சென்றடையும் என இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் பாதித்த 47 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
    • காய்ச்சல் பாதிப்பால் சிறப்பு வார்டில் நோயாளிகள் குவிந்து வருகின்றனர்

    திருச்சி, 

    திருச்சி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து உள்ளதாக புகார் எழுந்துள்ளது.இதனால் இங்குள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.திருச்சியில் ஒரே நாளில் சிறுவன் கர்ப்பிணி உட்பட 7 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.இதனால் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் 4 இடங்களில் அமைக்கப்பட்ட டெங்கு காய்ச்சலுக்கான சிறப்பு வார்டுகள் நிரம்பியதாக நோயாளிகள் தெரிவித்தனர்.இதனால் போதிய படுக்கை வசதி இல்லாமல் ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்கள் டிசார்ஜ் ஆகி செல்லும் வரை புதிதாக வரும் நோயாளிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.டெங்கு காய்ச்சல் அதிகரிப்பால் தனி வார்டில் படுக்கைகள் நிரம்பி காய்ச்சல் காரணமாக மருத்துவமனைக்கு வருபவர்கள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஆனால் இதை திருச்சி அரசு மருத்துவமனை டீன் நேரு மறுத்துள்ளார்.மேலும் அவர் கூறும் போது, திருச்சி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு என அமைக்கப்பட்ட தனி வார்டுகளில் சுழற்சி முறையில் 3 ஷிப்டுகளில் தலா ஒரு முதுநிலை மருத்துவர், 2 பயிற்சி மருத்துவர்கள், 2 செவிலியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது பெரியவர்கள் 28, குழந்தைகள் 14, கர்ப்பிணிகள் 5 என மொத்தம் 47 பேர் டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுக்கை பற்றாக்குறை எதுவும் இல்லை. டெங்கு காய்ச்சல் நோயாளிகள் அதிகரிக்கும் பட்சத்தில் தேவைக்கு ஏற்ப படுக்கை வசதிகள் அதிகரிக்கப்படும் என்றார்.

    ×