என் மலர்tooltip icon

    தேனி

    • கொடுக்கல், வாங்கல் சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டது.
    • பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    சின்னமனூர் அருகே எரசக்கநாயக்கனூரை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன்(51). இவருக்கும் தேனி அருகே குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த போஸ், அவரது மனைவி பாப்பாத்தி ஆகியோருக்கு இடையே கொடுக்கல், வாங்கல் சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டது. இதுதொடர்பாக தேனி குற்றவியல் விரைவு நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது.

    இந்தநிலையில் ஜெயசந்திரனை வழக்கை வாபஸ் பெறக்கோரி போஸ் மற்றும் அவரது மனைவி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து டி.எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அவரது உத்தரவின்பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அணையின் நீர்மட்டம் 116.85 அடியாக உள்ளது. வரத்து 517கனஅடி, நீர்திறப்பு 100 கனஅடி, இருப்பு 2060 மி.கனஅடி.
    • வைகை அணையில் இருந்து மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக கடந்த 2 நாட்களாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    கூடலூர்:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாகவே தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் கேரளாமாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதனால் முல்லை பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 116.85 அடியாக உள்ளது. வரத்து 517கனஅடி, நீர்திறப்பு 100 கனஅடி, இருப்பு 2060 மி.கனஅடி.

    வைகை அணையில் இருந்து மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக கடந்த 2 நாட்களாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் இன்று காலை முதல் வைகை அணையில் இருந்து மதுரைக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. நேற்று வரை 872 கனஅடிதண்ணீர் திறக்கப்பட்டது. இன்று காலை முதல் வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 372 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. நீர்மட்டம் 53.04 அடியாக உள்ளது. இருப்பு 2416 மி.கனஅடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 38.80 அடி, வரத்து 57 கனஅடி, சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 77.90 அடி, வரத்து 96 கனஅடி, திறப்பு 3 கனஅடி.

    இந்த அணையின் நீர்மட்டம் தொடர் மழையால் ஒரேநாளில் 10 அடி வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    பெரியாறு 8.4, தேக்கடி 6.4, கூடலூர் 14.2, சண்முகாநதி அணை 22.4, உத்தமபாளையம் 10.6, போடி 14.2, வைகை அணை 2, சோத்துப்பாறை 12, மஞ்சளாறு 2, பெரியகுளம் 3.4, வீரபாண்டி 12.4, அரண்மனைப்புதூர் 4.6, ஆண்டிபட்டி 2.6 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்ப ட்டது.
    • மனமுடைந்தவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டி 6-வது வார்டு அம்பலகாரர்தெருவை சேர்ந்தவர் பிரபாகரன்(29). காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு ஜெய சுருதி என்ற மனைவியும், 10 மாத கைகுழந்தையும் உள்ளது.

    குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்ப ட்டது. சம்பவத்தன்று மனைவி மற்றும் குழந்தை யைமாமனார் வீட்டில் இறக்கிவிட்டு சென்ற பிரபாகரன் மீண்டும் குடித்துவிட்டு வந்தார். இதனால் அவரது மனைவி வீட்டிற்கு வரமாட்டேன் என கூறினார். மனமுடைந்த பிரபாகரன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.




    • இரவு நேரத்தில் மது பாட்டில்களுடன் கூட்டம் கூட்டமாக கிராமங்களை ஒட்டிய ஆற்றுப்பகுதிக்குள் முகாமிடுகின்றனர்.
    • இப்பகுதியில் குற்ற ச்சம்பவங்கள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் அரசரடி , இந்திராநகர், வெள்ளிமலை, புலிக்காட்டுஓடை, பொம்மு ராஜபுரம், காந்திகிராமம், வாலிப்பாறை, தும்மக்குண்டு உள்ளிட்ட ஏராளமான வனகிராமங்கள் உள்ளன.

    இப்பகுதியில் பொழியும் மழைநீர் சிற்றாறுகளாக மாறி மூலவைகையாக உருவெடுக்கிறது. மழை ஊற்று நீரை பொருத்தே மூலவைகையாற்றில் நீர்வரத்து காணப்படும். இதனால் ஆண்டின் பல மாதங்கள் மூலவைகை வறண்டே கிடக்கும். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை இந்த ஆற்றில் நீர்வரத்து இருந்தது. அதன்பிறகு மழையின்றி படிப்படியாக நீர்வரத்து குறைந்தது.

    சில வாரங்களாக மணல்வெளியாக ஆறு காட்சியளிக்கிறது. இந்த ஆறு வாலிப்பாறை, மயிலாடும்பாறை, கடமலை க்குண்டு, அய்யனார்புரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வழியாக செல்கிறது. தற்போது நீர்வரத்து இன்றி இருக்கும் ஆற்றின் மணல்வெளியில் சிலர் திறந்தவெளி பாராக பயன்படுத்தி வருகின்றனர். இரவு நேரத்தில் மது பாட்டில்களுடன் கூட்டம் கூட்டமாக கிராமங்களை ஒட்டிய ஆற்றுப்பகுதிக்குள் முகாமிடுகின்றனர். போதிய கண்காணிப்பு இல்லாத பகுதியில் அமர்ந்து மது அருந்துகின்றனர். சில நேரங்களில் போதையில் அவர்களுக்குள் தகராறு ஏற்படுகிறது.

    காலி மதுபாட்டில்களை ஆற்று மணல்வெளியில் உடைத்து வீசி செல்கின்றனர். இதுகுறித்து அய்யனார்பு ரத்தை சேர்ந்த சிலர் கூறுகையில், சாலைக்கு மிக அருகில் ஆறு உள்ளதால் இவ்வழியாக வருவோர் இரவில் எளிதாக அங்கு சென்று விடுகின்றனர். போதையில் சில நேரங்களில் ஒருவரையொருவர் தாக்கி கொள்கின்றனர். இதனால் இப்பகுதியில் குற்ற ச்சம்பவங்கள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியை கண்காணித்து சம்பந்த ப்பட்டவர்கள் மீது காவல்து றையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

    • குமுளி பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ் 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மதுரைக்கு புறப்பட்டது.
    • ஏற்றமான சாலையில் பஸ் சென்று கொண்டு இருந்ததால் பிரேக் பிடிக்காமல் பஸ் பின்னோக்கி சென்றது.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் இருந்து ஏராளமான பஸ்கள் குமுளி மலைச்சாலை, லோயர் கேம்ப், மேகமலை, ஹைவேவிஸ் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் பெரும்பாலான பஸ்கள் தரமற்ற முறையில் இருப்பதால் மலைச்சாலையில் விபத்தில் சிக்கி நடுவழியில் நின்று விடுவது வாடிக்கையாக உள்ளது.

    மேலும் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசம் என்பதால் அளவுக்கு அதிகமான பயணிகள் மலைச்சாலையில் ஏற்றிச் செல்லப்படுகின்றனர். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் ஒரு அரசு பஸ்சில் 100 பயணிகள் வரை செல்லும் நிலை உள்ளது. இதனால் அடிக்கடி பிரேக் பழுது உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில் குமுளி பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ் 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மதுரைக்கு புறப்பட்டது. லோயர் கேம்ப் மலைச்சாலையில் மாதா கோவில் அருகே சென்றபோது பஸ்சில் பிரேக் பழுதானது. டிரைவர் மகாராஜன் இது குறித்து கண்டக்டர் சுதாகரிடம் தெரிவித்தார். ஏற்றமான சாலையில் பஸ் சென்று கொண்டு இருந்ததால் பிரேக் பிடிக்காமல் பஸ் பின்னோக்கி சென்றது. பஸ்சில் பிரேக் பிடிக்காதது குறித்து பயணிகளுக்கு தெரிவிக்கவே அவர்கள் அலறியடித்தவாறு பஸ்சில் இருந்து குதிக்கத் தொடங்கினர். ஆண்களும், பெண்களும் குழந்தைகளுடன் பஸ்சில் இருந்து குதித்து வெளியேறினர்.

    அதன் பிறகு சக்கரத்தின் அடியில் பெரிய கற்களைப் போட்டு நிறுத்தினர்.

    டிரைவர் உரிய நேரத்தில் பஸ்சில் ஏற்பட்ட பழுதை தெரிவித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மலைச்சாலைகளில் இயக்கப்படும் அரசு பஸ்களை தரமான முறையில் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சிறுவனுக்கு முகம், கை, கால், வயிறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
    • போலீசார் விசாரணையில் போதை வாலிபர் அதிவேகத்தில் சென்ற போது இந்த விபத்து நடந்திருக்கலாம் என சந்தேகித்துள்ளனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி டி.வி.கே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா. இவர்களது மகன் அபியுல்லா (வயது 6). இன்று காலை அதே பகுதியில் உள்ள சாலையில் விளையாடிக் கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் சிறுவன் மீது மோதியது. இதில் சிறுவனின் சட்டை பைக்கில் இருந்த கம்பியில் சிக்கிக் கொண்டது. இதனால் சிறுவன் கூச்சலிட்டு கத்தினான்.

    இருந்தபோதும் அவனை விடுவிக்க மனமில்லாமல் தரதரவென பைக்கில் வந்த வாலிபர் பைக்கை நிறுத்தாமல் இழுத்துச் சென்றுள்ளார். அதன் பின்னர் சிறுவன் அடிபட்டதை பொதுமக்கள் பார்த்தால் தன்னை அடித்து விடுவார்கள் என்று பயந்த அந்த வாலிபர் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பைக்கை நிறுத்தி சிறுவனைப் பார்த்தார்.

    அப்போது சிறுவனுக்கு முகம், கை, கால், வயிறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அப்போது கூட இரக்கம் இல்லாமல் சிறுவனை காப்பாற்ற அந்த வாலிபர் நினைக்கவில்லை. யாரும் பார்த்து விடக்கூடாது என்பதற்காக முட்புதர் அருகே இருந்த குப்பையில் சிறுவனை தூக்கி வீசி விட்டு சென்று விட்டார். அதன் பிறகு புதருக்குள் இருந்து முனகல் சத்தம் கேட்கவே அப்பகுதி பொதுமக்கள் பதறியடித்தவாறு அபியுல்லாவை வெளியே கொண்டு வந்தனர். அதன் பிறகு அவனது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் விரைந்து வந்து சிறுவனை மீட்டு போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அதன் பிறகு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணையில் போதை வாலிபர் அதிவேகத்தில் சென்ற போது இந்த விபத்து நடந்திருக்கலாம் என சந்தேகித்துள்ளனர்.

    மது மற்றும் கஞ்சா விற்பனை 24 மணி நேரமும் நடக்கிறது. இதனை பயன்படுத்தும் வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் செல்வதால் சாலையில் விளையாடிக் கொண்டு இருக்கும் சிறுவர்கள் விபத்தில் சிக்கி விடுகின்றனர். மேலும் முதியவர்களும் விபத்தில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர். எனவே போதைப் பொருட்கள் விற்பனையை தடுப்பதுடன் மின்னல் வேகத்தில் வாகனங்களை இயக்கும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குடிபோதையில் வீட்டுக்கு வந்த ராஜா மனைவி ஜெயாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
    • ஜெயா அரிவாளால் தனது கணவரை சரமாரியாக வெட்டினார்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு அருகே உள்ள மாகாளிபாறையைச் சேர்ந்தவர் ராஜா (வயது 44). விவசாயி. இவரது மனைவி ஜெயா (35). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்கள் மதுரையில் தங்கி இருந்து 8 மற்றும் 6ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

    தற்போது விடுமுறை என்பதால் இவர்களும் வீட்டில் இருந்தனர். ராஜா குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். அடிக்கடி குடித்து விட்டு வந்து தனது மனைவியிடம் தகராறு செய்ததுடன் அவரை அடித்து மிரட்டி வந்துள்ளார். நேற்று இரவும் குடிபோதையில் வீட்டுக்கு வந்த ராஜா மனைவி ஜெயாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த ஜெயா அரிவாளால் தனது கணவரை சரமாரியாக வெட்டினார். பலத்த காயமடைந்த அவர் மயங்கி விழுந்தார். அப்போது பதறிப்போன ஜெயா அருகில் இருந்த தனது உறவினரான ஆட்டோ டிரைவர் தருண்கோபியை வரவழைத்து ராஜாவை க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளார்.

    ஆனால் வழியிலேயே அவர் இறந்து விடவே மீண்டும் வீட்டுக்கு கொண்டு வந்தார். அதன் பிறகு உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் வந்து விடவே ராஜா குடிபோதையில் தன்னை வெட்ட வந்ததாகவும், தான் தடுத்ததால் தனக்குத்தானே அரிவாளால் வெட்டிக் கொண்டதாகவும் கூறினார்.

    ஆனால் அவரது பேச்சில் சந்தேகம் ஏற்பட்டதால் ராஜாவின் தாய் அன்னத்தாய் கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரிடமும் அதே போல் தெரிவித்த நிலையில் அதன் பின்னர் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் தான் கொலை செய்ததை ஒத்துக் கொண்டார். இதனையடுத்து கடமலைக்குண்டு போலீசார் அவரை கைது செய்தனர்.

    கொலையும் செய்வாள் பத்தினி என்பதற்கு ஏற்ப கணவரையே மனைவி வெட்டிக் கொன்ற சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தனது மகளை காணாமல் பல இடங்களில் தேடி, போடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • தனது மகளை கொண்டு வந்து ஒப்படைக்காவிட்டால் கொலை செய்து விடுவதாக கத்தியை காட்டி மிரட்டினார்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி ஜே.கே.பட்டி கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் காமராஜ் (வயது47). இவரது மகன் கோகுல் என்பவரும் போடி முதலியார் காலனியை சேர்ந்த ராஜா மகள் மோனிகா என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

    சம்பவத்தன்று காதலர்கள் 2 பேரும் வீட்டை விட்டு மாயமாகினர். தனது மகளை காணாமல் பல இடங்களில் தேடி பார்த்த ராஜா இது குறித்து போடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று ராஜா குடும்பத்தினர் போடி டவுன் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அப்போது போலீசார் காமராஜ் மற்றும் அவரது குடும்பத்தினரை வரவழைத்து விசாரணை நடத்தினர்.

    அப்போது ராஜா தனது மகளை கொண்டு வந்து ஒப்படைக்காவிட்டால் கொலை செய்து விடுவதாக காமராஜை கத்தியை காட்டி மிரட்டினார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். மேலும் தலை மறைவான காதலர்களை தேடி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் பைபாஸ் சாலையில் சென்றபோது அவ்வழியாக வேகமாக வந்த கார்மோதி படுகாயமடைந்தார்.
    • தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    தேனி:

    தேனி அருகே அல்லிநகரத்தை சேர்ந்தவர் சுதாகர் மகன் ஸ்ரீராம்(15). இவர் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் பைபாஸ் சாலை வீரப்பஅய்யனார் கோவில் சந்திப்பு பகுதியில் சென்றபோது அவ்வழியாக வேகமாக வந்த கார்மோதி படுகாயமடைந்தார்.

    தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அல்லிநகரம் போலீசார் வழக்குபதிவு செய்து கார் டிரைவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த ரிவார்டு நர்சாரியிடம் விசாரித்து வருகின்றனர்.

    • படகு சவாரிக்கு டிக்கெட் கட்டணம் ரூ.385 ஆகவும், நுழைவு கட்டணம் ரூ.70ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பார்த்து ஆரவாரம் செய்கின்றனர்.

    கூடலூர்:

    சர்வதேச சுற்றுலா தலமான கேரள மாநிலம் தேக்கடிக்கு இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். தேக்கடியில் யானை சவாரி, டைகர் வியூ, மூங்கில் படகு சவாரி என பல பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்தாலும் படகு சவாரியின்போது நீர்நிலைகளுக்கு வரும் யானைகள் , மான்கள், காட்டு யானைகள், காட்டு எருமை கூட்டங்கள் மற்றும் பல்வேறு வகையான பறவை இனங்களையும் காணவே சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர்.

    அதனால் இங்குள்ள சுற்றுலா இடங்களில் படகு சவாரியே முதலிடம் வகிக்கிறது. இங்கு படகு சவாரிக்கு டிக்கெட் கட்டணம் ரூ.385 ஆகவும், நுழைவு கட்டணம் ரூ.70ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளதால் தேக்கடி ஏரியில் தண்ணீர் குறைந்து காணப்படுகிறது. இதனால் வனப்பகுதியில் இருந்து யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் தண்ணீர் குடிக்க ஏரியின் கரை பகுதிக்கு வருகின்றன. இதனை படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பார்த்து ஆரவாரம் செய்கின்றனர்.

    இந்நிலையில் நேற்று தேக்கடி ஏரி மனக்கவலை பகுதியில் குட்டியுடன் கூடிய யானைக்கூட்டம் தண்ணீர் குடிக்க ஏரிக்கரை பகுதிக்கு வந்தது. அப்போது சுற்றுலா பயணிகள் படகை நிறுத்தி நீண்டநேரம் இக்காட்சியை கண்டு ரசித்தனர்.

    • நேற்று தேக்கடி ஏரி மனக்கவலை பகுதியில் குட்டியுடன் கூடிய யானைக்கூட்டம் தண்ணீர் குடிக்க ஏரிக்கரை பகுதிக்கு வந்தது.
    • சுற்றுலா பயணிகள் படகை நிறுத்தி நீண்டநேரம் இக்காட்சியை கண்டு ரசித்தனர்.

    கூடலூர்:

    சர்வதேச சுற்றுலா தலமான கேரள மாநிலம் தேக்கடிக்கு இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். தேக்கடியில் யானைசவாரி, டைகர் வியூ, மூங்கில் படகு சவாரி என பல பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்தாலும் படகு சவாரியின் போது நீர்நிலைகளுக்கு வரும் யானைகள் , மான்கள், காட்டு யானைகள், காட்டு எருமை கூட்டங்கள் மற்றும் பல்வேறு வகையான பறவை இனங்களையும் காணவே சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர்.

    அதனால் இங்குள்ள சுற்றுலா இடங்களில் படகுசவாரியே முதலிடம் வகிக்கிறது. இங்கு படகு சவாரிக்கு டிக்கெட் கட்டணம் ரூ.385 ஆகவும், நுழைவு கட்டணம் ரூ.70ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளதால் தேக்கடி ஏரியில் தண்ணீர் குறைந்து காணப்படுகிறது. இதனால் வனப்பகுதியில் இருந்து யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் தண்ணீர் குடிக்க ஏரியின் கரை பகுதிக்கு வருகின்றன. இதனை படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பார்த்து ஆரவாரம் செய்கின்றனர்.

    இந்நிலையில் நேற்று தேக்கடி ஏரி மனக்கவலை பகுதியில் குட்டியுடன் கூடிய யானைக்கூட்டம் தண்ணீர் குடிக்க ஏரிக்கரை பகுதிக்கு வந்தது. அப்போது சுற்றுலா பயணிகள் படகை நிறுத்தி நீண்டநேரம் இக்காட்சியை கண்டு ரசித்தனர்.

    • இவர் தனது குடும்பத்துடன் வராகநதி அருகே கூட்டுகுடிநீர் திட்டத்தில் தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார்.
    • வராக நதியில் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தேனி:

    தேனி அருகே கன்னிசேர்வைபட்டியை சேர்ந்தவர் எழில் மனைவி ரஞ்சனி(24). இவர்கள் மகன் பிரனித்ராஜ்(6). எழில் பெங்களூரில் என்ஜீயனராக பணிபுரிந்து வருகிறார். தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் ரஞ்சனி தனது குழந்தையுடன் சொந்தஊருக்கு வந்தார். அவரை அருகில் இருந்து கவனித்து வந்தநிலையில் மகனுடன் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் சின்னமனூர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து 2 பேரையும் தேடி வருகின்றனர்.

    மேற்கு வங்காளம் மாநிலம் பரதமன் மாவட்டம் பரகாச்சியை சேர்ந்தவர் ஸ்ரீபாஸ்தாஸ். இவர் தனது குடும்பத்துடன் தேனி மாவட்டம் குள்ளப்புரம் பகுதியில் உள்ள வராகநதி அருகே கூட்டுகுடிநீர் திட்டத்தில் தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். சம்பவத்தன்று ஆற்றங்கரையோரம் விளையாடிக்கொண்டிருந்த ஸ்ரீபாஸ்தாசின் மகள் ஸ்ரேயாதாஸ் திடீரென மாயமானார். அவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டாரா என தெரியவில்லை. இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் தீயணைப்புத்துறையி னருக்கும் தகவல் தெரிவித்து அவர்கள் வராக நதியில் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×