என் மலர்
தேனி
- தொடர் மழையால் மூல வைகை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
- கும்பக்கரை அருவியில் சீரான அளவு தண்ணீர் வருவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. அக்னி நட்சத்திர காலத்தில் பெய்து வரும் இந்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அணைகளுக்கு தண்ணீர் வருவதாலும், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதாலும் விவசாயிகளுக்கு ஆறுதலை தந்துள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 117.15 அடியாக உள்ளது. வரத்து 204 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 2114 மி.கன அடி. வைகை அணையின் நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழை மற்றும் மூல வைகை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 57.49 அடியாக உள்ளது. வரத்து 113 கன அடி. திறப்பு 822 கன அடி. இருப்பு 2336 மி.கன அடி.
மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவுக்காக 750 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று அது நிறுத்தப்படும் என தெரிகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 40 அடி. வரத்து 47 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 85.77 அடி. வரத்து 24 கன அடி. திறப்பு 3 கன அடி.
பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இன்று காலை முதல் சீரான அளவு தண்ணீர் வருவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
பெரியாறு 0.6, கூடலூர் 2.2, சண்முகாநதி அணை 1.6, உத்தமபாளையம் 2.4, போடி 0.6, சோத்துப்பாறை 3 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
- கேரள வனத்துறையால் மயக்கஊசி செலுத்தி அரிசி கொம்பன் பிடிக்கப்பட்டு காலர்ஐடி பொருத்தி பின்னர் தேக்கடி, பெரியாறு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் விடப்ப ட்டது.
- தற்போது அந்த யானை மேகமலை, ஹைவேவிஸ், இரவங்கலாறு உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
உத்தமபாளையம்:
கேரளமாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்காணல், சாந்தம்பாறை மற்றும் அதனைசுற்றியுள்ள கிரா மங்களில் அரிசிகொம்பன் என்ற யானை கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்களை பீதியடைய வைத்துள்ளது. இதுவரை 10 பேரை அந்த யானை மிதித்து கொன்றுள்ளதுடன் விவசாய நிலங்களையும் சேதப்படுத்தி வருகிறது.
இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள வனத்துறையால் மயக்கஊசி செலுத்தி அரிசி கொம்பன் பிடிக்கப்பட்டது. பின்னர் அந்த யானை தேக்கடி, பெரியாறு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் விடப்ப ட்டது.
அதன் கழுத்தில் அலைவரிசை கொண்ட காலர்ஐடி பொருத்தப்பட்டு அதன்இருப்பிடத்தை அறிந்துகொள்ளும் வகையில் வனத்துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிலையில் தற்போது அந்த யானை மேகமலை, ஹைவேவிஸ், இரவங்கலாறு உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டுள்ளது. மற்ற காட்டு யானைகளுடன் சேராமல் தனியாக செல்லும் இந்த யானை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் சென்று வருகிறது.
குடியிருப்பில் இருந்த நாய்கள் குரைத்துகொண்டே இருந்ததையடுத்து தொழிலாளர்கள் வெளியே வந்து பார்த்த போது ஆக்ரோசமாக சுற்றிய அரிசிகொம்பனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். கருப்பசாமி என்ற தொழிலாளியின் வீட்டை உடைத்து வீட்டில் இருந்த உணவு பொருள் மற்றும் அரிசியை சேதப்படுத்திவிட்டு பின்வாசல் வழியாக வெளியே சென்றது. அதிக சத்தத்துடன் ஆக்ரோசமாக சுற்றி வருவதால் அதன் அருகில் செல்லவும் தொழி லாளர்கள் அச்சமடை ந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து யானையின் நடமாட்டம் இருந்த பகுதியை ஆய்வு செய்தனர்.
இரவு நேரங்களில் யாரும் வெளியே வரவேண்டாம் எனவும், யானையை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தனர். அடிக்கடி தனது இருப்பி டத்தை மாற்றிக்கொண்டே மாலை மற்றும் இரவு நேரங்களில் மட்டும் குடி யிருப்புகளில் அரிசி கொம்பன் நடமாடி வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
- இந்த கோவிலில் சித்ராபவுர்ணமி தினத்தன்று வருடத்தில் ஒருநாள் மட்டும் திருவிழா நடத்தப்படுகிறது.
- அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பளியன்குடி மலை உச்சியில் மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சேரன் செங்குட்டுவனால் கட்டப்பட்ட இந்த கோவில் தொல்லியல்துறை கட்டுப்பாட்டிலும் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்ராபவுர்ணமி தினத்தன்று வருடத்தில் ஒருநாள் மட்டும் திருவிழா நடத்தப்படுகிறது. அதன்படி மங்கலதேவி கண்ணகி கோவிலில் இந்த ஆண்டு சித்ராபவுர்ணமி திருவிழா இன்று நடைபெற்றது.
கோவிலுக்கு வருகை தருவதற்கு ஏதுவாக இடுக்கி, தேனி மாவட்ட கலெக்டர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி பக்தர்கள் நடந்து செல்லும் பாதையில் இருந்த முட்செடிகள் அகற்றப்பட்டு பாதை சீரமைக்கப்பட்டது. சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு அதிகாலை முதல் கோவிலுக்கு பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வரத் தொடங்கினர்.
கோவில் வாசலில் வாழை, மா இலை தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தது. மங்கல தேவி கண்ணகிக்கு பச்சை பட்டு உடுத்தி சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அதிகாலை 6 மணிக்கு பள்ளி உணர்த்துதலுடன் விழா தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மலர் வழிபாடு, மங்கல இசை, பொங்கல் வைத்தல், பக்தர்களுக்கு அமுதசுரபியின் அவல் பிரசாதம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் கண்ணகி தேவியை வழிபட்டனர். விழாவுக்கு வந்த பக்தர்கள் மஞ்சள் மற்றும் பச்சை நிறத்திலான ஆடைகள் அணிந்து வந்தனர். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இரு மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து தரப்பட்டு இருந்தது. மாலையில் பூமாரியுடன் விழா நிறைவு பெறுகிறது.
தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட கலெக்டர் ஷீபா ஜார்ஜ் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சென்னை, காவேரி பட்டினம், பூம்புகார், பாண்டிச்சேரி உட்பட தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபாடு செய்தனர். பக்தர்களின் வசதிக்காக கோவில் வளாகத்தில் கம்புகள் கட்டப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டு இருந்தது. பெண்களுக்கு வளையல் மற்றும் மஞ்சள் கயிறு, குங்குமம் உள்ளிட்ட பொருள்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
மேலும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் உள்ள இடம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் தமிழக-கேரள வனத்துறையினர் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கோவிலுக்கு பக்தர்களை ஏற்றி வந்த ஜீப்புகளின் பதிவு எண்களை வனத்துறையினர் பதிவேட்டில் பதிவு செய்து கொண்டனர். கோவிலுக்கு வந்த பக்தர்களை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டு அனுப்பி வைத்தனர்.
கம்பம் பகுதியிலிருந்து குமுளி மற்றும் பளியன்குடி வரை அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ்களில் சென்ற பக்தர்கள் பளியன்குடியில் இருந்து 6 கி.மீ தூரம் நடந்து கோயிலுக்கு சென்றனர். இதேபோல் கேரள மாநிலம் குமுளியிலிருந்து ஏராளமானவர்கள் மலை பாதையில் நடந்து சென்றும், ஜீப்களிலும் சென்றும் கண்ணகி தேவியை வழிபட்டனர்.
- தொழிலாளி தனது மனைவியின் கள்ளக்காதல் குறித்து அறிந்ததும் 2 பேரையும் கண்டித்துள்ளார்.
- மனைவி கள்ளக்காதலனுடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தார். ஆத்திரமடைந்த கணவர் 2 பேரையும் சரமாரியாக வெட்டியதில் கள்ளக்காதலன் உயிரிழந்தார்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கோம்பைத்தொழு கிராமத்தைச் சேர்ந்தவர் தீபாவளி (வயது 40). கூலித் தொழிலாளியான இவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சங்கீதா (27) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளார். சங்கீதாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் (40) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. ஈஸ்வரனுக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
இதனால் தனது மனைவியின் கள்ளக்காதல் குறித்து அறிந்ததும் தீபாவளி 2 ேபரையும் கண்டித்துள்ளார். ஆனால் அவர்களது கள்ளத்தொடர்பு நீடித்து வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தீபாவளி தனது மனைவியை கொலை செய்து விடுவதாக மிரட்டி வந்துள்ளார்.
இதனையடுத்து சங்கீதாவும், ஈஸ்வரனும் மயிலாடும்பாறை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். போலீசார் அவர்களை ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து தீர்வு பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளனர். இதனால் சங்கீதாவும், ஈஸ்வரனும் ஆண்டிபட்டி பஸ் நிலையத்துக்கு வந்தனர்.
அப்போது அங்கு ஏற்கனவே காத்திருந்த தீபாவளி அரிவாளால் அவர்கள் 2 பேரையும் மாறி மாறி வெட்டினார். ரத்த வெள்ளத்துடன் உயிருக்கு பயந்த சங்கீதா மற்றும் ஈஸ்வரன் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்தனர்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்களை தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே ஈஸ்வரன் இறந்து விட்டார். சங்கீதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளக்காதலனை வெட்டிய தீபாவளி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நெல்லுக்கு கூடுதலாக பணம் வசூலிப்பதாகவும், பணியாளர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதாகவும் புகார் எழுந்தது.
- கொள்முதல் நிலையத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 3 பணியாளர்களை சஸ்பெண்டு செய்து மண்டல மேலாளர் உத்தரவிட்டார்.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூரில் செயல்பட்டு வரும் அரசு நெல்கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு கூடுதலாக பணம் வசூலிப்பதாகவும், பணியாளர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதாகவும் புகார் எழுந்தது. இதனையடுத்து நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் செந்தில்குமார், தர கட்டுப்பாட்டு அலுவலர் முத்துசெல்வம் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் தலைமையில் மண்டல மேலாளர் செந்தில்குமார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது விவசாயிகளிடம் கூடுதலாக பெற்ற தொகையை 2 நாட்களுக்குள் திருப்பி செலுத்தி விடுவதாகவும் விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல் மூடையில் கூடுதலாக எடை இருந்தால் அதற்கான தொகையை சம்மந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் செலுத்தி விடுவதாகவும் தெரிவித்தனர்.
இதனையடுத்து கொள்முதல் நிலையத்தில் பணியாற்றிய கணக்காளர் கார்த்திக் குமார், உதவியாளர் ஜெயசிம்மன், காவலாளி நாகேந்திரன் ஆகிய 3 பேரையும் சஸ்பெண்டு செய்து மண்டல மேலாளர் உத்தரவிட்டார்.
தேவதானப்பட்டி:
ஜெயமங்கலம் அருகே உள்ள பள்ளிவாசல் வடக்குத் தெருவை சேர்ந்தவர் லிசானுல்ஹசன் (வயது 25). இவர் மதுரையில் ஏ.சி. மெக்கானிக் படிப்பை படித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று நண்பரை பார்க்க செல்வதாக கூறிச்சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
அக்கம் பக்கம் விசாரித்தும் தகவல் கிடைக்காததால் தந்தை ஜாகீர் உசேன் (55). ஜெயமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்ப டையில் ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான வாலி பரை தேடி வருகின்றனர்.
- பெருங்கனிமங்களான நிலக்கரி, சுண்ணாம்புக்கல், தங்கம், பிளாட்டினம், சாதாரண கற்கள், மண், கிராவல் மண் உள்பட கனிம வளங்களை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்கின்றனர்.
- நிலக்கரி, உலோகம் ஆகியவற்றை கண்டு பிடிக்க டிரில்லிங் முறை பயன்படுத்தப்படுகிறது.
கம்பம்:
கம்பம் அருகே கம்பம் மெட்டு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதிகளில் இந்திய புவியியல் ஆய்வு மையம் மத்திய சுரங்க அமைச்சகத்தின் கீழ் உள்ள அமைப்பு சார்பாக நிலக்கரி, எக்கு, உலோகம், கனிமம் குறித்து ஆய்வு நடத்த முடிவு செய்தனர். இந்த அமைப்பு பல்வேறு பகுதிகளில் உள்ள கனிம வளங்களை ஆய்வு செய்து அரசுக்கு வழங்கி வருகிறது. மேலும் புவியியல் சிறப்பு வரைபடங்கள் மற்றும் மண்டல வரைபடங்கள் தயாரிப்பது நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளை கண்டறிந்து தெரிவித்து வருகிறது.
டெல்லி, ஐதராபாத், கொல்கத்தா உள்ளிட்ட ஆய்வு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ள ப்பட்டு வருகின்றன. பெருங்கனிமங்களான நிலக்கரி, சுண்ணாம்புக்கல், தங்கம், பிளாட்டினம், சாதாரண கற்கள், மண், கிராவல் மண் உள்பட கனிம வளங்களை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்கின்ற னர். தற்போது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியான கம்பம் மெட்டு பகுதியில் அதிர்வு இல்லாத ஆழ்துளை எந்திரங்கள் மூலம் மண், கற்கள், பாறை ஆகியவை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணி 3 நாட்களாக நடைபெறுகிறது. 20 முதல் 200 அடி வரை தோண்டப்பட்டு (கோர்) மாதிரி சேகரிக்கப்படுகிறது. பின்னர் இந்த மாதிரிகள் தனிப்பெட்டிகளில் அடை க்கப்பட்டு ஐதராபாத்தில் உள்ள ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்த பணிகளில் கொல்கத்தா, கேரளா, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள கனிம வளங்களை ஆய்வு செய்து வருகிறோம். நிலக்கரி, உலோகம் ஆகியவற்றை கண்டு பிடிக்க டிரில்லிங் முறை பயன்படு த்தப்படுகிறது. கோர் மாதிரி எடுத்து அனுப்புவது எங்கள் குழுவின் பணியாகும்.
தமிழகத்தில் ஏற்கனவே சேலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதே போல் கோர் மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு ள்ளது. தற்போது தேனி மாவட்டத்தில் கம்பம் பகுதியில் இந்த பணி நடைபெற்று வருகிறது. இதன் மாதிரிகளை ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம். அதனைத் தொடர்ந்து அடுத்த கட்ட பணி நடைபெறும் என்றனர்.
- அருகில் இருந்த கிணற்று கரையில் நின்றிருந்தவர் திடீரென நிலை தடுமாறி கிணற்றுக்குள் விழுந்தார்.
- தண்ணீரில் மூழ்கிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து உயிரிழந்தார்.
ஆண்டிபட்டி:
கோவை வடவள்ளியை சேர்ந்தவர் கருப்பையா மகன் ராஜகோபால் (வயது 29). இவர் ஆட்டோ ஓட்டிவந்தார். இவரது உறவினர் செல்வகுமார் ரத்தினபுரியில் வசித்து வருகிறார். செல்வகுமாரின் சொந்தஊர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள டி.வி.ரெங்கநாதபுரம் ஆகும்.
அங்கு தனது குழந்தைகளின் காதணி விழா நடத்தினார். இதற்கு ராஜகோபால் சென்றிருந்தார். அப்போது அருகில் இருந்த கிணற்று கரையில் நின்றிருந்தவர் திடீரென நிலை தடுமாறி கிணற்றுக்குள் விழுந்தார். சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ராஜகோபால் இறந்துவிட்டார் என தெரிவித்தனர். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- தமிழக நிதி அமைச்சர் ஆடியோ விவகாரத்தை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.
- தேனி மாவட்டத்தில் சனாதன இந்து எழுச்சி மாநாடு, பேரணி, பொது கூட்டம் வரும் ஜூலை மாதம் நடைபெறகிறது.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி இந்து மக்கள் கட்சி சார்பில் அன்னதானம், மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அன்னதானத்தை தொடங்கி வைத்த பின்னர் கட்சியின் தலைவர் அர்ஜூன்சம்பத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பெரியகுளத்தில் அம்பேத்கார் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போலீசார், போலீஸ் நிலையத்தை தாக்கினர்.
எனவே அந்த கட்சியை தடை செய்து தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும். தமிழக நிதி அமைச்சர் ஆடியோ விவகாரத்தை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.
தேனி மாவட்டத்தில் சனாதன இந்து எழுச்சி மாநாடு, பேரணி, பொது கூட்டம் வரும் ஜூலை மாதம் நடைபெறகிறது. இதில் அனைத்து இந்து அமைப்புகளும் பங்கேற்கின்றன. தமிழக-கேரள எல்லையில் கனிம வளங்கள் கடத்தல், வி.ஏ.ஓ. கொலை தொடர்பாக நடவடிக்கை கோரி சட்டப்பேரவை தொகுதி வாரியாக ஒலி எழுப்பும் போராட்டம் அரசின் கவனத்தை ஈர்க்க நடைபெற உள்ளது. தமிழக இந்து அறநிலையத்துறையிடம் மங்கலதேவி கண்ணகி கோவிலை கேரள அரசு ஒப்படைக்க வேண்டும்.
அங்கு பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரவேண்டும். பா.ஜனதா பட்டியல் இன பொறுப்பாளர் கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது என்றார்.
- தீ மளமளவென பரவியது. காவலுக்கு இருந்தவர் சத்தம்போட்டார். இதை பார்த்ததும் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
- தீயணைப்பு த்துறையினரின் துரித நடவடிக்கையால் அருகில் இருந்த மற்றொரு வைக்கோல் படப்புக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் அருகே சுக்காங்கா ல்பட்டியை சேர்ந்தவர் ராஜா, கருநாக்கமுத்த ன்பட்டியை சேர்ந்த அழகேசன். இவர்கள் வைக்கோல் புற்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றனர். தற்போது கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 2-ம் போக நெல்அறுவடை பணி முடிந்துள்ளது. இதனால் வைக்கோல் சேகரித்து கூடலூர், தாமரைக்குளம் பகுதியில் 3 வைக்கோல் படப்புகள் வைத்து பராமரித்து வரு கின்றனர்.
நேற்று இரவு இதற்கு காவலுக்கு ராஜா இருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் திடீரென பெட்ரோல் ஊற்றி வைக்கோல் படப்புக்கு தீ வைத்தனர். சிறிதுநேரத்தில் தீ மளமளவென பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜா சத்தம்போட்டார். இதை பார்த்ததும் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தீயணைப்பு த்துறை யின ருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நிலைய அலுவலர் ராஜலட்சுமி தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை போராடி அணை த்தனர். இருந்தபோதும் ராஜா மற்றும் அழகேசனுக்கு சொந்தமான தலா ஒரு வைக்கோல்படப்பு எரிந்து நாசமானது. தீயணைப்பு த்துறையினரின் துரித நடவடிக்கையால் அருகில் இருந்த மற்றொரு வைக்கோல் படப்புக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து கூடலூர் தெற்கு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். அப்பகுதியில் உள்ள அரசு விதைப்பண்ணையில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராவின் பதிவுகளை கொண்டு சம்பவ நேரத்தில் அவ்வழி யாக சென்ற நபர்கள் குறித்து விசாரித்து வரு கின்றனர்.
- போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மஞ்சிநாயக்க ன்பட்டி ஊராட்சிப்பகுதியில் கனிமவள நிதியின் கீழ் ரூ.5.20 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டது.
- போடி-வலசதுரை சாலை முதல் அத்தியூத்து இடையே யான உயர்மட்ட பாலம் கட்டுமானப்பணி ஆகிய பணிகளை பார்வை யிட்டு ஆய்வு செய்தனர்.
தேனி:
போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு ட்பட்ட மஞ்சிநாயக்க ன்பட்டி, அணைக்கரை ப்பட்டி ஆகிய ஊராட்சி ப்பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி த்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மஞ்சிநாயக்க ன்பட்டி ஊராட்சிப்பகுதியில் கனிமவள நிதியின் கீழ் ரூ.5.20 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிமெண்ட் சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்தி ட்டத்தின் கீழ் ரூ.14.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாய கழிப்பறை அமைக்கும் பணி, 15-வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டுமானப்பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.3.11 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை, சிறு பாலம், வடிகால் அமைக்கும் பணி, வலையபட்டி கிராமத்தில் இருந்து வரும் கழிவு நீரினை வடிகால் மூலம் கிடைமட்ட உறிஞ்சு குழி அமைக்கப்பட்டு வரும் இடம்.
அணைக்கரைப்பட்டி ஊராட்சி ப்பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட த்தின் கீழ் ரூ.22.65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டுமானப்பணி, நபார்டு வங்கியின் மூலம் போடி-வலசதுரை சாலை முதல் அத்தியூத்து இடையே யான உயர்மட்ட பாலம் கட்டுமானப்பணி ஆகிய பணிகளை பார்வை யிட்டு, ஆய்வு மேற்கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறு த்தினார்.
முன்னதாக மஞ்சி நாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
- சம்பவத்தன்று இங்கிருந்த வெள்ளாடு ஒன்று, செம்மறிஆடு ஒன்று ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
தேனி:
தேனி அருகே கருவேல்நா யக்கன்பட்டியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவர் வடபுதுபட்டி ஜோதிநகர் பகுதியில் ஆட்டு பட்டி அமைத்து ஆடுகள் வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று இங்கிருந்த வெள்ளாடு ஒன்று, செம்மறிஆடு ஒன்று ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இது குறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்துள்ளார். அதில் காசிமாயன், செல்வம், ராஜபாண்டி மற்றும் சிலர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். எஸ்.பி. உத்தரவின்பேரில் அல்லிநகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






