என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
தேனி அருகே நெல்கொள்முதல் நிலையத்தில் முறைகேடு - 3 பணியாளர்கள் சஸ்பெண்டு
- நெல்லுக்கு கூடுதலாக பணம் வசூலிப்பதாகவும், பணியாளர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதாகவும் புகார் எழுந்தது.
- கொள்முதல் நிலையத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 3 பணியாளர்களை சஸ்பெண்டு செய்து மண்டல மேலாளர் உத்தரவிட்டார்.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூரில் செயல்பட்டு வரும் அரசு நெல்கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு கூடுதலாக பணம் வசூலிப்பதாகவும், பணியாளர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதாகவும் புகார் எழுந்தது. இதனையடுத்து நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் செந்தில்குமார், தர கட்டுப்பாட்டு அலுவலர் முத்துசெல்வம் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் தலைமையில் மண்டல மேலாளர் செந்தில்குமார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது விவசாயிகளிடம் கூடுதலாக பெற்ற தொகையை 2 நாட்களுக்குள் திருப்பி செலுத்தி விடுவதாகவும் விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல் மூடையில் கூடுதலாக எடை இருந்தால் அதற்கான தொகையை சம்மந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் செலுத்தி விடுவதாகவும் தெரிவித்தனர்.
இதனையடுத்து கொள்முதல் நிலையத்தில் பணியாற்றிய கணக்காளர் கார்த்திக் குமார், உதவியாளர் ஜெயசிம்மன், காவலாளி நாகேந்திரன் ஆகிய 3 பேரையும் சஸ்பெண்டு செய்து மண்டல மேலாளர் உத்தரவிட்டார்.






