என் மலர்
தேனி
- அவர் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த பணம், செல்போன், மற்றும் ஒரு கன்று, தோப்பில் இருந்த பைப் உள்ளிட்ட விவசாய பொருட்கள் திருடு போனது.
- போலீசர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேவதானப்பட்டி:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஏ.வாடிப்பட்டி இந்திரா காலனியை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது62). இவரது சமுதாயத்திற்கு ட்பட்ட வடகத்தி மாரியமன் கோவில் பொம்மி நாயக்கன்பட்டி ரோட்டில் உள்ள ஒண்டிவீரன்சாமி மற்றும் வீரகத்தி சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சம்பவத்தன்று அவரது மகன் முத்து ப்பாண்டி மின் விளக்கை போட்டு விட்டு சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தார்.
அப்போது அம்மன் சிலையில் இருந்த 4 கிராம் மதிப்பிலான மாங்கல்யம், விளக்கு, சூலம், உண்டியல் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து ஜெயமங்கலம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
ஏ.வாடிப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமபிரசாத் (25). இவர் சம்பவத்தன்று தனது ஆட்டு கொட்டகையில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பாண்டியராஜன் (32) என்பவர் அவர் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த பணம், செல்போன் ஆகிய வற்றை திருடிக்கொண்டு சென்றார். இது குறித்து ஜெயமங்கலம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பாண்டியராஜனை கைது செய்தனர்.
பெரியகுளம் அருகில் உள்ள சருத்துப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (36). இவர் தனக்கு சொந்தமான கொட்டகையில் கிடாரி கன்றுகளை கட்டி வைத்திருந்தார். அதில் ஒரு கன்று திருடு போனது. இது குறித்து தென்கரை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியகுளம் அருகில் உள்ள காந்திநகர் பாம்பார் மஸ்தான் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (32). இவர் வடகரை கும்பக்கரை பிரிவு அருகில் தென்ன ந்ேதாப்பை குத்தகைக்கு எடுத்து பராமரித்து வருகிறார். சம்பவத்தன்று தோப்பில் இருந்த பைப் உள்ளிட்ட விவசாய பொருட்களை அனுமார் கோவில் தெருவை சேர்ந்த ரஞ்சித்குமார் (27) என்பவர் திருடிச் சென்றார். அவரை கையும் களவுமாக பிடித்து பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் ஒப்படை த்தனர்.
போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தியதால் அரிசி கொம்பன் யானையை பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- தேக்கடியில் இருந்து மேகமலை வரை 120 பேர் கொண்ட புலிகள் காப்பக குழுவினர் யானை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் பகுதியில் அரிசி கொம்பன் காட்டு யானை 8க்கும் மேற்பட்டோரை உயிர் பலி வாங்கியது. மேலும் அப்பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் புகுந்து அரிசியை தின்று அட்டகாசம் செய்தது. மேலும் குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தியதால் அரிசி கொம்பன் யானையை பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி கேரள வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி போராடி யானையை பிடித்து பெரியாறு புலிகள் காப்பக பகுதியில் விட்டனர். யானை கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தி நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். பெரியாறில் புலிகள் காப்பகத்தில் விடப்பட்ட அரிசி கொம்பன் யானை மறு நாள் தமிழக வனப்பகுதிக்குள் புகுந்தது.
இது குறித்து வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். தேக்கடியில் இருந்து மேகமலை வரை 120 பேர் கொண்ட புலிகள் காப்பக குழுவினர் யானை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் தொழிலாளி ஜோசப் என்பவர் வீட்டு ஜன்னல் வழியாக அரிசி மற்றும் கோதுமையை எடுத்து தின்றுள்ளது. மேலும் தற்போது பொம்முராஜபுரம் செல்லும் பகுதியில் யானை முகாமிட்டுள்ளது.
எனவே இரவங்கலாறு, மணலாறு பகுதிகளில் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாம் என எச்சரித்துள்ளனர். சின்னமனூரில் இருந்து ஹைவேவிஸ், மணலாறு, இரவங்கலாறு வரை சுற்றுலா வாகனங்களுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேகமலை பகுதியில் உலாவி வரும் யானையால் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே இது குறித்து தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த் மற்றும் வனத்துறையினர் அவசர ஆலோசனை நடத்தினர். யானையை கேரள வனப்பகுதிக்கள் விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- வேலை இல்லாமல், மனஉளைச்சலுக்கு ஆளானவர் மற்றும் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதாலும் தற்கொலை செய்துகொண்டனர்.
தேனி:
தேனி என்.ஆர்.டி.நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் ராஜராஜன். இவர் எம்.இ., படித்துவிட்டு வேலை தேடி கொண்டிருந்தார். சரியான வேலை அமையவில்லை. இதனால் தனக்கு திருமணம் நடைபெறவில்லை என மனஉளைச்சலில் இருந்த அவர் வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தேனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கம்பத்தை சேர்ந்தவர் ரமேஷ்(25). இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். கூலித்தொழி லாளியான அவர் தனது மனைவியுடன் தகராறு ஏற்பட்டதால் தனியாக வசித்து வந்தார். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அவர் அரளிவிதையை அரைத்து குடித்து மயங்கினார். அக்கம்பக்கத்தினர் மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு செல்லும் வழியிலேயே ரமேஷ் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கூடலூர் அருகே சுக்காங்கால்பட்டியை சேர்ந்தவர் வனராஜா(47). மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அவர் விஷமருந்தி மயங்கினார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கூடலூர் தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- கால்வாயில் பக்கவாட்டு சுவர்கள் பல இடங்களில் சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் இருந்தது.
- வரும் ஜூன் மாதத்தில் வைகை அணையில் இருந்து முதல் போக சாகுபடிக்கு கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணையில் இருந்து திறந்து விடப்படும் நீர் பிக்கப் அணையை அடைந்து அங்கு இருந்து தண்ணீரை பிரித்து பாசன கால்வாய் வழியாகவும், ஆற்றின் வழியாகவும் செல்ல வழி அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை, திண்டுக்கல் மாவட்டத்துக்கு செல்லும் நீர் விரயமாகாமல் விரைந்து செல்ல பல ஆண்டுகளுக்கு முன் வைகை அணை அருகே பேரணை மெயின் கால்வாய் அமைக்கப்பட்டது. தற்பொழுது தண்ணீர் செல்லும் கால்வாய் பல இடங்களில் சேதம் அடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து நீர் வளத்துறை மூலம் ரூ.23 கோடியே 98 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு புனரமைப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
வைகை அணை அருகே பிக்கப் அணையில் தொடங்கி சங்கரமூர்த்தி பட்டி, அணைக்கரைப்பட்டி, மூணாண்டிப்பட்டி, தர்மத்துப்பட்டி, விராலிப்பட்டி, விருவீடு ஆகிய ஊர்களை கடந்து பேரணையில் சேர்கிறது. கால்வாயில் பக்கவாட்டு சுவர்கள் பல இடங்களில் சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் இருந்தது.
எனவே சேதம் அதிகமாக உள்ள இடங்களில் கால்வாய் அகலப்படுத்தப்பட்டு வருகிறது. வரும் ஜூன் மாதத்தில் வைகை அணையில் இருந்து முதல் போக சாகுபடிக்கு கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும். அதற்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் பணிகள் முடியவில்லை என்றால் நீர் திறப்பு காலத்திற்கு மீண்டும் நடைபெறும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- கிராமிய பெண் நடனக் கலைஞர்கள், அகோரிகள், அரக்கர்கள், தவ முனிவர்கள் உள்பட பல்வேறு வேடமிட்டு பக்தர்கள் ஊர்வலமாக வந்தது அனைவரையும் கவர்ந்தது.
- இளம் சிறுமிகள் கோலாட்டம் ஆடி வந்ததும் இளைஞர்கள் ஒயிலாட்டம் ஆடி வந்ததும் பொதுமக்களை மிகவும் கவர்ந்தது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே அமைந்துள்ளது பத்திரகாளி புரம். இங்கு மிகவும் பழமையும் பிரசித்தி பெற்ற பத்திரகாளி அம்மன் கோவில் அமைந்துள்ளது. போடிநாயக்கனூரைச் சுற்றியுள்ள பழமையான கோவில்களில் ஒன்றாக கருதப்படும் இந்தக் கோவிலின் பெயரிலேயே பத்திரகாளிபுரம் என்று ஊர் பெயரும் அழைக்கப்பட்டு வருகிறது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சுமார் 7 நாட்கள் கொண்டாடப்படும் இந்த திருவிழாவை முன்னிட்டு விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக பல்வேறு வேடமிட்டு பத்திரகாளிபுரம் கோவிலில் இருந்து போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆறு வரை சுமார் 8 கி.மீ தொலைவிற்கு பக்தர்கள் நடனமாடி வந்தனர்.
கிராமிய பெண் நடனக் கலைஞர்கள், அகோரிகள், அரக்கர்கள், தவ முனிவர்கள் உள்பட பல்வேறு வேடமிட்டு பக்தர்கள் ஊர்வலமாக வந்தது அனைவரையும் கவர்ந்தது. மேலும் இளம் சிறுமிகள் கோலாட்டம் ஆடி வந்ததும் இளைஞர்கள் ஒயிலாட்டம் ஆடி வந்ததும் பொதுமக்களை மிகவும் கவர்ந்தது. பழமையான விளையாட்டு கட்டைக்காலுடன் இளைஞர்கள் நடந்து சென்றனர்.
குரங்கு போல் வேடமிட்ட ஒரு முதியவர் அனைவரையும் கவர்ந்தார். பல ஆண்டுகளாக இந்த நடைமுறையை பின்பற்றி வருகிறோம். இதன்மூலம் அமைதி நிலவி ஒற்றுமை வளர்வதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
- கல்லூரிக்கு சரிவர செல்லாமல் தலைமுடியை அலங்கோலமாக வெட்டி இருந்துள்ளார்.
- வீட்டில் தனிமையில் இருந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மேலசொக்கநாதபுரம்:
போடி குண்டாளீஸ்வரி கோவில் அருகே வசித்து வருபவர் சுரேஷ். இவரது மகன் தரணீஸ்வரன் (வயது18). டி.சிந்தலைச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரிக்கு சரிவர செல்லாமல் தலைமுடியை அலங்கோலமாக வெட்டி இருந்துள்ளார்.
இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் கடந்த 2 நாட்களாக பெற்ேறாருடன் பேசாமல் தரணீஸ்வரன் தனிமையில் இருந்தார். நேற்று வீட்டில் தனிமையில் இருந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் போடி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சொத்து பிரிக்கும்போது இருகுடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டது.
- பெண்ணை தாக்கி அவரது செல்போனை உடைத்தனர்.
தேனி:
தேனி அருகே சுருளிதோட்டத்தை சேர்ந்தவர் திருமுருகன். இவருக்கு முதல் மனைவி மூலம் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவர்களை திருமுருகனின் அண்ணன் வளர்த்த வருகிறார். இந்த நிலையில் பரமேஸ்வரி என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். சொத்து பிரிக்கும்போது இருகுடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த திருமுருகனின் அண்ணன் திருமேனி, அவரது மனைவி வானதி, சுரேந்தர், சுபாஷினி ஆகியோர் பரமேஸ்வரியை தாக்கி அவரது செல்போனை உடைத்தனர். இதனைதொடர்ந்து அவரது கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரமேஸ்வரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் அளித்தபுகாரி ன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 117.20 அடியாக உள்ளது. 204 கனஅடிநீர் வருகிறது. 100 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.20 அடியாக உள்ளது. 30 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் மொத்த கொள்ளளவு 71 அடியாகும். இந்த அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் தேனி, மதுரை மாவட்ட குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. கோடைமழை ஓரளவு கைகொடுத்ததால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்தது.
மதுரை சித்திரை திருவிழாவிற்காக வருடந்தோறும் மே மாதத்தில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். அதன்படி கடந்த வாரம் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. முதல்நாள் 750 கனஅடி நீர் திறக்கப்பட்டு படிப்படியாக குறைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் 500 கனஅடி, 822 கனஅடிநீர் என உயர்த்தப்பட்டது. கூடுதல் தண்ணீர் திறப்பால் ஒரு வாரத்தில் அணையின் நீர்மட்டம் 5 அடி குறைந்துள்ளது.
கடந்தவாரம் 57 அடியாக இருந்த நீர்மட்டம் இன்றுகாலை 52.46 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு 125 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 117.20 அடியாக உள்ளது. 204 கனஅடிநீர் வருகிறது. 100 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.20 அடியாக உள்ளது. 30 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 86.59 அடியாக உள்ளது. 12 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. தேக்கடியில் 0.2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.
- தொழிலாளர்களை பழிவாங்கும் நோக்குடன் செயல்பட்டு வருவதாக புகார் கூறி பணிமனை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிறகு பஸ்கள் இயக்கப்பட்டது.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் டிரைவராக கருப்பணன், நடத்துனராக தமிழ்ச்செல்வன் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் வழித்தடம் மாற்றி அரசு பஸ்சை இயக்கியதாக புகார் எழுந்தது.
இதனைதொடர்ந்து கிளை மேலாளர் அவர்கள் 2 பேரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார். தொழிலாளர்களை பழிவாங்கும் நோக்குடன் செயல்பட்டு வருவதாக புகார் கூறி அம்பேத்கர் தொழிற்சங்க நிர்வாகிகள் பஸ்களை இயக்க மறுத்து பணிமனை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பஸ்கள் இயக்கப்படாமல் பொதுமக்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டது. இதனைதொடர்ந்து ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் சுமார் 2 மணிநேரம் தாமதமாக பஸ்கள் இயக்கப்பட்டது.
ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டியில் அ.தி.மு.க. சார்பில் தேர்தல் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் லோகி ராஜன் தலைமையில் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைப்பு செயலாளர் ஜக்கையன் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக பேசினார்.
19 பேர் கொண்ட பூத் கமிட்டியில் கட்சி சார்பில் 7 பேர், மகளிர் குழு சார்பில் 5 பேர், இளைஞர் இளம் பெண்கள் பாசறை சார்பில் 5 பேர், தகவல் தொழில்நுட்ப பிரிவிலிருந்து 2 பேரை உறுப்பினர்களாக சேர்க்கஅறிவுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. பார்த்திபன், முன்னாள் எம்.எல்.ஏ. கணேசன், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் முருக்கோடை ராமர், ஒன்றிய அவைத்தலைவர் பன்னீர்செல்வம், மாவட்ட பிரதிநிதி கவிராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன், பேரூர் செயலாளர் அருண்மதி கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- நகைகளை நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைத்து சோதனை செய்தனர்.
- அந்த நகைகள் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகள் என தெரிய வந்தது.
தேனி:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூர் பாறைப்பட்டியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் 2 முறை மொத்தம் 86.5 கிராம் எடையுள்ள தங்க நகைகளை அடகு வைத்து ரூ.2.77 லட்சம் கடன் பெற்றார்.
இந்த நகைகளை நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைத்து சோதனை செய்தனர். அப்போது அந்த நகைகள் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகள் என தெரிய வந்தது.
இது குறித்து நிதி நிறுவனத்தின் கிளை மேலாளர் மேத்யூ தேனி மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேயிடம் புகார் அளித்தார். எஸ்.பி. உத்தரவின் பேரில் தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயக்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஹால்டிக்கெட்டை தரவிரக்கம் செய்து தேர்வு நடைபெறும் மையமான முத்துதேவன்பட்டி வேலம்மாள் பள்ளிக்கு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- மதியம் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.
தேனி:
மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு நீட் நாளை நாடு முழுவதும் ஒரே நாளில் நடைபெறுகிறது. தேனி மாவட்டத்தில் இந்த தேர்வு எழுத 790 மாணவ-மாணவிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவர்கள் தேசிய தேர்வு முகமை வழிகாட்டுதலின்படி தங்கள் ஹால்டிக்கெட்டை தரவிரக்கம் செய்து தேர்வு நடைபெறும் மையமான முத்துதேவன்பட்டி வேலம்மாள் பள்ளிக்கு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதியம் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. தேர்வுக்கு வரும் மாணவ-மாணவிகள் எவ்வித எலக்ட்ரானிக் சாதனங்கள் கொண்டு வரக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.






