என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலி நகைகளை"

    • நகைகளை நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைத்து சோதனை செய்தனர்.
    • அந்த நகைகள் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகள் என தெரிய வந்தது.

    தேனி:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூர் பாறைப்பட்டியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் 2 முறை மொத்தம் 86.5 கிராம் எடையுள்ள தங்க நகைகளை அடகு வைத்து ரூ.2.77 லட்சம் கடன் பெற்றார்.

    இந்த நகைகளை நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைத்து சோதனை செய்தனர். அப்போது அந்த நகைகள் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகள் என தெரிய வந்தது.

    இது குறித்து நிதி நிறுவனத்தின் கிளை மேலாளர் மேத்யூ தேனி மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேயிடம் புகார் அளித்தார். எஸ்.பி. உத்தரவின் பேரில் தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயக்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×