போடியில் கல்லூரி மாணவர் தற்கொலை

கல்லூரிக்கு சரிவர செல்லாமல் தலைமுடியை அலங்கோலமாக வெட்டி இருந்துள்ளார். வீட்டில் தனிமையில் இருந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

மேலசொக்கநாதபுரம்:

போடி குண்டாளீஸ்வரி கோவில் அருகே வசித்து வருபவர் சுரேஷ். இவரது மகன் தரணீஸ்வரன் (வயது18). டி.சிந்தலைச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரிக்கு சரிவர செல்லாமல் தலைமுடியை அலங்கோலமாக வெட்டி இருந்துள்ளார்.

இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் கடந்த 2 நாட்களாக பெற்ேறாருடன் பேசாமல் தரணீஸ்வரன் தனிமையில் இருந்தார். நேற்று வீட்டில் தனிமையில் இருந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் போடி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com