search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போடி பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
    X

    பாலம் கட்டும் பணிகளை கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    போடி பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

    • போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மஞ்சிநாயக்க ன்பட்டி ஊராட்சிப்பகுதியில் கனிமவள நிதியின் கீழ் ரூ.5.20 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டது.
    • போடி-வலசதுரை சாலை முதல் அத்தியூத்து இடையே யான உயர்மட்ட பாலம் கட்டுமானப்பணி ஆகிய பணிகளை பார்வை யிட்டு ஆய்வு செய்தனர்.

    தேனி:

    போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு ட்பட்ட மஞ்சிநாயக்க ன்பட்டி, அணைக்கரை ப்பட்டி ஆகிய ஊராட்சி ப்பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி த்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மஞ்சிநாயக்க ன்பட்டி ஊராட்சிப்பகுதியில் கனிமவள நிதியின் கீழ் ரூ.5.20 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிமெண்ட் சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்தி ட்டத்தின் கீழ் ரூ.14.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாய கழிப்பறை அமைக்கும் பணி, 15-வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டுமானப்பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.3.11 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை, சிறு பாலம், வடிகால் அமைக்கும் பணி, வலையபட்டி கிராமத்தில் இருந்து வரும் கழிவு நீரினை வடிகால் மூலம் கிடைமட்ட உறிஞ்சு குழி அமைக்கப்பட்டு வரும் இடம்.

    அணைக்கரைப்பட்டி ஊராட்சி ப்பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட த்தின் கீழ் ரூ.22.65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டுமானப்பணி, நபார்டு வங்கியின் மூலம் போடி-வலசதுரை சாலை முதல் அத்தியூத்து இடையே யான உயர்மட்ட பாலம் கட்டுமானப்பணி ஆகிய பணிகளை பார்வை யிட்டு, ஆய்வு மேற்கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறு த்தினார்.

    முன்னதாக மஞ்சி நாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

    Next Story
    ×