என் மலர்
நீங்கள் தேடியது "வைக்கோல் தீ வைத்த மர்மநபர்கள்"
- தீ மளமளவென பரவியது. காவலுக்கு இருந்தவர் சத்தம்போட்டார். இதை பார்த்ததும் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
- தீயணைப்பு த்துறையினரின் துரித நடவடிக்கையால் அருகில் இருந்த மற்றொரு வைக்கோல் படப்புக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் அருகே சுக்காங்கா ல்பட்டியை சேர்ந்தவர் ராஜா, கருநாக்கமுத்த ன்பட்டியை சேர்ந்த அழகேசன். இவர்கள் வைக்கோல் புற்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றனர். தற்போது கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 2-ம் போக நெல்அறுவடை பணி முடிந்துள்ளது. இதனால் வைக்கோல் சேகரித்து கூடலூர், தாமரைக்குளம் பகுதியில் 3 வைக்கோல் படப்புகள் வைத்து பராமரித்து வரு கின்றனர்.
நேற்று இரவு இதற்கு காவலுக்கு ராஜா இருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் திடீரென பெட்ரோல் ஊற்றி வைக்கோல் படப்புக்கு தீ வைத்தனர். சிறிதுநேரத்தில் தீ மளமளவென பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜா சத்தம்போட்டார். இதை பார்த்ததும் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தீயணைப்பு த்துறை யின ருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நிலைய அலுவலர் ராஜலட்சுமி தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை போராடி அணை த்தனர். இருந்தபோதும் ராஜா மற்றும் அழகேசனுக்கு சொந்தமான தலா ஒரு வைக்கோல்படப்பு எரிந்து நாசமானது. தீயணைப்பு த்துறையினரின் துரித நடவடிக்கையால் அருகில் இருந்த மற்றொரு வைக்கோல் படப்புக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து கூடலூர் தெற்கு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். அப்பகுதியில் உள்ள அரசு விதைப்பண்ணையில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராவின் பதிவுகளை கொண்டு சம்பவ நேரத்தில் அவ்வழி யாக சென்ற நபர்கள் குறித்து விசாரித்து வரு கின்றனர்.






