என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
திறந்தவெளி பாராக மாறிய மூலவைகையாறு
- இரவு நேரத்தில் மது பாட்டில்களுடன் கூட்டம் கூட்டமாக கிராமங்களை ஒட்டிய ஆற்றுப்பகுதிக்குள் முகாமிடுகின்றனர்.
- இப்பகுதியில் குற்ற ச்சம்பவங்கள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வருசநாடு:
தேனி மாவட்டம் வருசநாடு மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் அரசரடி , இந்திராநகர், வெள்ளிமலை, புலிக்காட்டுஓடை, பொம்மு ராஜபுரம், காந்திகிராமம், வாலிப்பாறை, தும்மக்குண்டு உள்ளிட்ட ஏராளமான வனகிராமங்கள் உள்ளன.
இப்பகுதியில் பொழியும் மழைநீர் சிற்றாறுகளாக மாறி மூலவைகையாக உருவெடுக்கிறது. மழை ஊற்று நீரை பொருத்தே மூலவைகையாற்றில் நீர்வரத்து காணப்படும். இதனால் ஆண்டின் பல மாதங்கள் மூலவைகை வறண்டே கிடக்கும். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை இந்த ஆற்றில் நீர்வரத்து இருந்தது. அதன்பிறகு மழையின்றி படிப்படியாக நீர்வரத்து குறைந்தது.
சில வாரங்களாக மணல்வெளியாக ஆறு காட்சியளிக்கிறது. இந்த ஆறு வாலிப்பாறை, மயிலாடும்பாறை, கடமலை க்குண்டு, அய்யனார்புரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வழியாக செல்கிறது. தற்போது நீர்வரத்து இன்றி இருக்கும் ஆற்றின் மணல்வெளியில் சிலர் திறந்தவெளி பாராக பயன்படுத்தி வருகின்றனர். இரவு நேரத்தில் மது பாட்டில்களுடன் கூட்டம் கூட்டமாக கிராமங்களை ஒட்டிய ஆற்றுப்பகுதிக்குள் முகாமிடுகின்றனர். போதிய கண்காணிப்பு இல்லாத பகுதியில் அமர்ந்து மது அருந்துகின்றனர். சில நேரங்களில் போதையில் அவர்களுக்குள் தகராறு ஏற்படுகிறது.
காலி மதுபாட்டில்களை ஆற்று மணல்வெளியில் உடைத்து வீசி செல்கின்றனர். இதுகுறித்து அய்யனார்பு ரத்தை சேர்ந்த சிலர் கூறுகையில், சாலைக்கு மிக அருகில் ஆறு உள்ளதால் இவ்வழியாக வருவோர் இரவில் எளிதாக அங்கு சென்று விடுகின்றனர். போதையில் சில நேரங்களில் ஒருவரையொருவர் தாக்கி கொள்கின்றனர். இதனால் இப்பகுதியில் குற்ற ச்சம்பவங்கள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியை கண்காணித்து சம்பந்த ப்பட்டவர்கள் மீது காவல்து றையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.






