தேனி அருகே மோசடி வழக்கை வாபஸ்பெறக்கோரி முதியவருக்கு மிரட்டல்

கொடுக்கல், வாங்கல் சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டது. பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

தேனி:

சின்னமனூர் அருகே எரசக்கநாயக்கனூரை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன்(51). இவருக்கும் தேனி அருகே குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த போஸ், அவரது மனைவி பாப்பாத்தி ஆகியோருக்கு இடையே கொடுக்கல், வாங்கல் சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டது. இதுதொடர்பாக தேனி குற்றவியல் விரைவு நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்தநிலையில் ஜெயசந்திரனை வழக்கை வாபஸ் பெறக்கோரி போஸ் மற்றும் அவரது மனைவி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து டி.எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அவரது உத்தரவின்பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com