மனைவி திட்டியதால் கணவர் தற்கொலை

குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்ப ட்டது.மனமுடைந்தவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

உத்தமபாளையம்:

தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டி 6-வது வார்டு அம்பலகாரர்தெருவை சேர்ந்தவர் பிரபாகரன்(29). காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு ஜெய சுருதி என்ற மனைவியும், 10 மாத கைகுழந்தையும் உள்ளது.

குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்ப ட்டது. சம்பவத்தன்று மனைவி மற்றும் குழந்தை யைமாமனார் வீட்டில் இறக்கிவிட்டு சென்ற பிரபாகரன் மீண்டும் குடித்துவிட்டு வந்தார். இதனால் அவரது மனைவி வீட்டிற்கு வரமாட்டேன் என கூறினார். மனமுடைந்த பிரபாகரன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com