என் மலர்
சிவகங்கை
ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மின் ஊழியர் மத்திய அமைப்பு மாவட்ட மாநாடு நடந்தது.
இதில் ஒய்வுபெற்ற நல அமைப்பு மாவட்ட செயலாளர் விநாயகமூர்த்தி கொடியேற்றினார். மாநில துணைத் தலைவர் குருவேல் தொடங்கி வைத்தார். மாநில செயலாளர் வண்ணமுத்து சிறப்புரையாற்றினார். வரவேற்பு குழு செயலாளர் கணேசன் வரவேற்றார்.
சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் சேதுராமன், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார், வரவேற்பு குழுத் தலைவர் ராமன் ஆகியோர் பேசினர்.
மாவட்ட தலைவராக உமாநாத், மாவட்ட செயலாளராக கருணாநிதி, பொருளாளராக மோக னசுந்தரம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் தொழி லாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். தொழி லாளர்களுக்கு தினந்தோறும் கூலி ரூ.380 வழங்க வேண்டும். பகுதிநேர தொழிலாளர்களை முழு நேர பணியாளராக்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மின் மீட்டர்களை கணக்கீடு செய்யும் மதிப்பீட்டாளர் காலிபணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி, பூவந்தி ஆகிய மின்வாரிய அலுவ லகங்களை புதிதாக கட்டு வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அலுவலகங்களில் உள்ள காலாவதியான கணினியை மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பழைய பென்சன் திட்டத்தை முதல்வர் செயல்படுத்துவார் என அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் பேட்டி அளித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் பழைய பென்சன் திட்டத்தை நிறைவேற்றுதல், அகவிலைப்படி உயர்வு, சரண்விடுப்பு, உள்ளிட்ட கொரோனா காலத்தில் பறிக்கப்பட்ட சலுகைகளை உடனே வழங்குதல், காலிபணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடந்தது.
இதில் மாநில பொதுச் செயலாளர் செல்வம் தலைமையில் ஏராளமானோர் பங்கேற்றனர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பழைய பென்சன் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் அமல்படுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது. போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அழைத்து பேச வேண்டும்.
பழைய பென்சன் திட்டத்தை செயல்படுத்துவதில் தற்சமயம் சிக்கல் இருப்பதாக நிதித்துறை அமைச்சர் தெரிவித்தாலும் முதல்வர் அதனை நிறைவேற்றுவார் என்கிற நம்பிக்கை உள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுவருபவர்களிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். கடந்த முறை நடந்த கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின்படி தெருமுனை பிரசாரம் மற்றும் ஆய்வு கூட்டங்கள் நடத்தி எதிர்ப்பை அரசுக்கு தெரிவிப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.
தர்ணா போராட்டத்தில் ஏராளமான உறுப்பினர்கள் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
முதல் தலைமுறை இளைஞர்கள் சேவை சார்ந்த தொழில்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு ஒவ்வொரு இளைஞரையும் தொழில் முனைவோராக உருவாக்குவதற்கு புதிய தொழில் துவங்க முதல் தலைமுறை இளைஞர்களுக்கான புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தினை மாவட்டத் தொழில் மையம் மூலமாக செயல்படுத்தி வருகிறது .
இந்த திட்டத்தின் மூலம் தொழில் தொடங்க ரூ .10 லட்சம் முதல் 5 கோடி வரை வங்கிகள் மூலம் கடனுதவி பெறவும் தமிழக அரசின் மானியமாக திட்ட மதிப்பீட்டில்
25 % அல்லது அதிக பட்ச மானியம் ரூ.75 லட்சமாக உயர்த்தி வழங்கவும் மேலும் மாற்றுத்திறனாளிகள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கூடுதலாக 10% மானியம் வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
மேலும் வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தில் 3% வட்டி மானியமாகவும் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், வரையறுக்கப்பட்ட வங்கிகள், தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு
வங்கி, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு கிராம வங்கிகள் மூலமாகவும் கடனுதவி வழங்கப்படுகிறது.
மகளிர்களுக்கு 50% ஒதுக்கீடும் , ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு சிறப்பு ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் கடனுதவி பெற முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருக்க வேண்டும். தற்போது குறைந்தபட்ச கல்வி தகுதியாக 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது . 21 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் 35 வயதுக்குள்ளும் பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஏற்கனவே மத்திய- மாநில அரசு திட்டங்களின் கீழ் மானியத்துடன் கடன் பெற்றவர்கள் கடனுதவி பெற இயலாது . விவசாயம், வாகனம் மற்றும் மாசினை ஏற்படுத்தும் தொழில்கள் தவிர்த்து ஏனைய உற்பத்தி மற்றும் சேவை சார்த்த தொழில்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
எனவே தகுதியுள்ள முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியில் தங்களது விபரங்களை பூர்த்தி செய்து அதன் நகல் மற்றும் சான்றிதழ்களுடன் பொதுமேலாளர் , மாவட்டத் தொழில் மையம் , மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் சிவகங்கை 630 562 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு சிவகங்கை மாவட்ட தொழில்மைய பொது மேலாளரை நேரிலோ அல்லது அலுவலர்களை 8925533991 , 8925533990 மற்றும் 8925533989 என்ற செல்லிடபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.
சிவகங்கை அருகே திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற நுங்கு வண்டி போட்டியில் சிறுவர்-சிறுமிகள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
சிவகங்கை:
தமிழகத்தில் பாரம்பரிய விளையாட்டுக்களில் நுங்கு வண்டி பந்தயமும் ஒன்று. இது கிராம சிறுவர்-சிறுமிகளின் முக்கிய விளையாட்டாக இருந்து வந்தது. காலப்போக்கில் நுங்கு வண்டிகள் தயார் செய்வது நின்று போய்விட்டது.
தற்போது மறைந்து போன பாரம்பரிய விளையாட்டுக்களை மீட்டெடுக்கும் வகையில் சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே பனங்குடி கிராமத்தில் நடைபெற்ற புனித வியாகுல அன்னை ஆலய திருவிழாவில் நுங்கு வண்டி பந்தயம் இடம் பெற்றது பலரை வியப்பில் ஆழ்த்தியது.
திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற நுங்கு வண்டி போட்டியில் சிறுவர்-சிறுமிகள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
நுங்கு வண்டி மற்றும் டயர் வண்டி பந்தயத்தில் ஆண்கள் பிரிவில் 100 மீட்டர் பந்தய எல்லையாகவும், பெண்கள் பிரிவிற்கு 50 மீட்டா் பந்தயம் எல்லையாகவும் நிர்ணயிக்கப்பட்டது. ஆண்கள் பிரிவில் 11 சிறுவர்களும், பெண்கள் பிரிவில் 10 சிறுமிகளும் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து கொண்ட சிறுவர் மற்றும் சிறுமிகளை பெற்றோர்களும், உறவினர்களும், நண்பர்கள்களும் கை தட்டி உற்சாகப்படுத்தினார்கள்.
இதில் முதல் 3 இடங்களை பெற்ற சிறுவர்கள் மற்றும் சிறுமியர்களுக்கு தலா ரூ.1000, ரூ.500 மற்றும் ரூ.300 பரிசு தொகையாக வழங்கப்பட்டது.
சிவகங்கை அருகே உலக சைக்கிள் தின பேரணியை போலீஸ் துணை சூப்பிரண்டு கார்த்திகேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சிவகங்கை
சிவகங்கை அருகே இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் நேரு யுவ கேந்திரா சார்பில் இன்று 75-வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா உலக சைக்கிள் தின பேரணி நடந்தது.
கல்லல் ஒன்றியத்தில் உள்ள செவரக்கோட்டை விலக்கில் இந்த பேரணி தொடங்கியது.இதில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இளையோர் மன்றங்களை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
ராஜேஸ்வரி வரவேற்றார். மாவட்ட இளையோர் அலுவலர் பிரவீன் குமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்ததுடன் அதில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
இதில் கல்லல் ஒன்றியகுழு தலைவர் சொர்ணம் அசோகன், காவல் ஆய்வாளர் பாஸ்கரன், மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் (ஒய்வு) ஜவகர், மாவட்ட சிறப்பு அலுவலர் (திறன் வளர்ச்சி அலகு) சுதர்சன், காரைக்குடி அழகப்பா கலைக்கல்லூரி முனைவர் சித்ரா, ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த பேரணி 7.50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மருதுபாண்டியர் கோட்டை அரண்மனை சிறுவயலில் நிறைவடைந்தது.
திருப்பத்தூர் அருகே மதுரைவீரன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ மதுரை வீரன் கோவில் மகா கும்பாபிஷேக விழா சின்னக்கருப்பன் அம்பலம் வகையறா தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக மதுரைவீரன், வெள்ளையம்மாள், பொம்மியம்மாள், சின்ன கருப்பு, பெரிய கருப்பு ஆகிய தெய்வங்களுக்கான சிலைகள் வைக்கப்பட்டு அருகே யாகசாலை அமைத்து புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்களை பிரதிஷ்டை பூஜையுடன் யாக பூஜைகள் தொடங்கியது.
பின்னர் ஹோம குண்டத்தில் 108 மூலிகைப் பொருட்கள் பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பித்து மஹா பூர்ணாஜுதி பூஜை நடந்தது. இதனையடுத்து மங்கள வாத்தியங்களுடன் கடம் புறப்பாடு நடைபெற்று கோவிலை சுற்றி வலம் வந்து ராஜகோபுர கலசங்கள் மற்றும் மூலவர் விமானம் கலசங்களுக்கு வேத மந்திரங்கள் முழங்க கும்பகலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கபட்டன.
பின்னர் மதுரை வீரனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன.
இக்கும்பாபிஷேக விழாவில் சிறப்பு விருந்தினராக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திருப்பத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் சண்முகவடிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.விழாவுக்கான ஏற்பாடுகளை நாட்டார்மங்கலம் சின்ன கருப்பு அம்பலம் வகையறா பங்காளிகள் செய்திருந்தனர்.
விழாவில் ஊர் முக்கியஸ்தர்கள் கட்சி பிரமுகர்கள் கிராம பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். கோவில் நிர்வாகத்தின் சார்பில் அனைவருக்கும் அன்னதானமும், பிரசாதம் வழங்கப்பட்டது
கானாடுகாத்தானை குப்பை இல்லாத பேரூராட்சியாக மாற்றுவோம் என தலைவர் ராதிகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கானாடுகாத்தான் பேரூராட்சி தமிழ்நாட்டின் முன்மாதிரி பேரூராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதையொட்டி கானாடுகாத்தான் பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் குப்பைத் தொட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி தலைவர் ராதிகா ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது.
செயல் அலுவலர் ரமேஷ் பாபு முன்னிலை வகித்தார். இதில் வணிக நிறுவனங்களுக்கு குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டு மட்கும் குப்பை, மட்கா குப்பை என பிரித்து வழங்கும்படி கேட்டுக்கொண்டனர்.பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் குப்பைகளை பிரித்து வழங்கவும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவுறுத்தினர்.
கானாடுகாத்தான் பேரூராட்சியை குப்பைகள் இல்லாத பேரூராட்சியாக மாற்றுவோம் என தலைவர் ராதிகா ராமச்சந்திரன் கூறினார்.
இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் அன்புக்கரசி, வசந்தி, சுரேகா, பாண்டிச்செல்வம், கருப்பையா உள்பட பேருராட்சி அலுவலர்கள், துப்புறவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இளையான்குடி புதிய பஸ் நிலைய விவகாரத்திற்காக பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வருகின்ற 31-ந் தேதி போராட்டம் நடக்கிறது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் பொது மக்களின் எதிர்ப்பை மீறி ஊருக்கு வெளியே 3 கி.மீ தொலைவில் புதிய பஸ் நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இளையான்குடியில் ஊருக்குள் உள்ள தற்போதைய பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியும் அரசியல் கட்சியினர், ஜமாத்தார்கள், வணிகர்கள், பொது நல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை உள்ளடக்கிய மக்கள் நல கூட்டமைப்பு தொடங்கப்பட்டு அதன் சார்பில் இளையான்குடியில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து கடையடைப்பு போராட்டம், வீடுகளில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம், முதல்வருக்கு 5 ஆயிரம் தபால்கள் அனுப்பும் இயக்கம் என தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து அமைச்சர் கே. என். நேரு பஸ் நிலையம் அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்படும் என போராட்டக் குழுவினரிடம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இளையான்குடியில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன்றன.
புதிய பஸ் நிலையத்தை ஊருக்கு வெளியே அமைக்கப்படுவதைக் கண்டித்தும், தற்போதைய இளையான்குடி பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரியும் மக்கள் நலக் கூட்டமைப்பு சார்பில் வருகிற 31-ந் தேதி (செவ்வாய்கிழமை) இளையான்குடி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இளையான்குடியில்இந்தகூட்டமைப்பினர்,பொதுமக்கள் பங்கேற்ற கூட்டத்தில் போராட்டத்திற்கான ஆயத்தப் பணிகள் குறித்து அனைத்து தரப்பினரின் கருத்துக்கள் கேட்கப்பட்டன. கூட்டமைப்பின் நிர்வாகிகள் துருக்கி ரபீக் ராஜா,ஜபிபுல்லா, கார்த்திமற்றும் முன்னாள் பேரூராட்சி தலைவர்,துணை தலைவர், வணிகர்சங்க நிர்வாகிகள் நகருக்கு வெளியே பஸ்நிலையம் அமைக்ககூடாது என வலியுறுத்தி பேசினர்.
சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தெருநாடகம் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், சிவகங்கை பஸ் நிலையத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து தெருநாடகம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதை முதன்மை மாவட்ட நீதிபதி சுமதிசாய்பிரியா தொடங்கி வைத்தார்.
நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் பக்தவச்சலு, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர்/ சார்புநீதிபதி பரமேஸ்வரி. நேரு இளைஞர்மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர், பிரவீன்குமார், வழக்கறிஞர் சங்கத்தலைவர் நாகேஸ்வரன் ஆகியோர் நேரு இளைஞர் மையத்தின் சார்பில் கலைநிகழ்ச்சிகள் மூலம் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாவட்டகுழந்தை பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட சமூக அலுவலகம், சைல்டுலைன் ஆகிய துறை சார்ந்த அலுவலர்கள் சட்டம் பணி ஆணைக்குழு பணியாளர்கள் சட்டம் சார்ந்த தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
காரைக்குடியில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்குடி
பெட்ரோல், டீசல் மீதான தமிழக அரசின் வரியை குறைக்கக் கோரி காரைக்குடி அண்ணா சிலை அருகே பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகர தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் நாகராஜன் முன்னிலை வகித்தார்.
மாநில விவசாய பிரிவு துணை தலைவர் எஸ்.ஆர்.தேவர், மாவட்ட துணை தலைவர் நாராயணன், மாநில தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி வேலங்குடி பாண்டித்துரை, முன்னாள் மாவட்ட தலைவர் சிதம்பரம், இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் அக்னி பாலா, பேரூராட்சி கவுன்சிலர் செல்வா, நகர செயலாளர்கள் மலைக்குமார், பழனிக்குமார், நகர துணை தலைவர்கள் கண்ணன், முனியசாமி பாண்டியன், சுப்பையா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தேவகோட்டை பஸ் நிறுத்தத்தில் நிற்காத பஸ்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர் பகுதியில் சமீபகாலமாக விபத்துகள் அதிகம் ஏற்பட்டு உயிர்பலிகள் அதிகரித்து வருகிறது.
நகரில் போக்குவரத்தை சரி செய்ய முதல் ஏற்பாடாக ராம்நகர் பகுதி தேவகோட்டை, காரைக்குடி, எழுவன்கோட்டை, கண்டதேவி சாலைகள் என 4 முனை சந்திப்பாக உள்ள இடத்தில் பஸ்களை நிறுத்தி வந்ததாலும், 100 மீட்டர் தொலைவில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே நிறுத்தாமல் சென்றதாலும் போக்கு வரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது.
இதுபற்றி பலமுறை காவல்துறையினர் ஓட்டுனர்களுக்கு தெரிவித்தும் அவர்கள் வழக்கம் போல் பஸ்களை நிறுத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து போக்கு வரத்து இன்ஸ்க்டபெக்டர் சரவணன் தலைமையில் காவல்துறையினர் விபத்தை தடுக்கும் வகையில் பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சாலையில் நின்ற பஸ்களுக்கு அபராதம் விதித்தனர்.
மேலும் அனைத்து பஸ்களும் பஸ் நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல கண்டக்டர் மற்றும் டிரைவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
வெவ்வேறு விபத்துக்களில் தந்தை-மகன்கள் உள்பட 6 பேர் காயமடைந்தனர்.
சிவகங்கை
சிவகங்கை நகர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் குருசாமி மகன் பழனிவேல். இவர் தனது இரு மகன்களுடன் இருசக்கர வாகனத்தில் வெளியே புறப்பட்டார். அப்போது மதுரையைச் சேர்ந்த கண்ணன் என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் ைசக்கிள் மீது மோதியது.
இதில் இரு சிறுவர்கள் உட்பட 3 பேர் காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.விபத்து குறித்து சிவகங்கை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூரை சேர்ந்தவர் பூமி. லாரி டிரைவரான இவர் இளையான்குடி பகுதியில் லாரியை ஓட்டிச்சென்ற போது எதிரே மானகிரியை சேர்ந்த ரபீல் என்பவர் ஓட்டி வந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் பூமி உட்பட அவரது லாரியில் பயணம் செய்த 3 பேர் காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்






