search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தேவகோட்டை ராம்நகரில் போலீசாரின் உத்தரவின் பேரில்  பஸ் நிறுத்தத்தில் நின்று செல்லும் பஸ்சை படத்தில் காணலாம்.
    X
    தேவகோட்டை ராம்நகரில் போலீசாரின் உத்தரவின் பேரில் பஸ் நிறுத்தத்தில் நின்று செல்லும் பஸ்சை படத்தில் காணலாம்.

    பஸ் நிறுத்தத்தில் நிற்காத பஸ்களுக்கு அபராதம்

    தேவகோட்டை பஸ் நிறுத்தத்தில் நிற்காத பஸ்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர் பகுதியில் சமீபகாலமாக விபத்துகள் அதிகம் ஏற்பட்டு உயிர்பலிகள் அதிகரித்து வருகிறது. 

    நகரில் போக்குவரத்தை சரி செய்ய முதல் ஏற்பாடாக ராம்நகர் பகுதி தேவகோட்டை, காரைக்குடி, எழுவன்கோட்டை, கண்டதேவி சாலைகள் என 4 முனை சந்திப்பாக உள்ள இடத்தில் பஸ்களை நிறுத்தி வந்ததாலும், 100 மீட்டர் தொலைவில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே நிறுத்தாமல் சென்றதாலும் போக்கு வரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது. 

    இதுபற்றி பலமுறை காவல்துறையினர் ஓட்டுனர்களுக்கு தெரிவித்தும் அவர்கள்  வழக்கம் போல் பஸ்களை நிறுத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து போக்கு வரத்து இன்ஸ்க்டபெக்டர் சரவணன் தலைமையில் காவல்துறையினர் விபத்தை  தடுக்கும் வகையில் பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சாலையில் நின்ற பஸ்களுக்கு அபராதம் விதித்தனர். 

    மேலும் அனைத்து பஸ்களும் பஸ் நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல கண்டக்டர் மற்றும் டிரைவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
    Next Story
    ×