என் மலர்
சிவகங்கை
சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையில் இருந்த 33 பேர் பூரண குணமடைந்ததையொட்டி வீடு திரும்பினர்.
சிவகங்கை:
சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 180 பேர் சிகிச்சைப் பெற்று வந்தனர். இவர்களில் 33 பேர் பூரண குணமடைந்ததையொட்டி வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவர்களை மருத்துவ கல்லூரி டீன் ரெத்தினவேல், மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிலைய மருத்துவர் மீனாள், ஒருங்கிணைப்பாளர் சூரியநாராயணன், உதவி நிலைய அலுவலக மருத்துவர்கள் முகமதுரபீ, மிதுன் மற்றும் டாக்டர்கள் வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.

சிவகங்கை அருகே குறிஞ்சி நகரில் வசித்து வந்த தாய் தனது மகள் மற்றும் மகளுக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலை செய்து கொண்டார்.
சிவகங்கை:
சிவகங்கை அருகே குறிஞ்சி நகரில் வசித்து வருபவர் காளிஸ்வரி. இவருக்கு மகன் அபிஷேக் (9), மகள் மங்கையர் திலகம் (14) என்ற குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் வீட்டில் வசித்து வந்த காளிஸ்வரி தனது பிள்ளைகளுடன் தற்கொலை செய்து கொண்டார். தகவல்அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அதில் தாய் காளிஸ்வரி, தனது மகன் அபிஷேக் (9), மகள் மங்கையர் திலகம் (14), ஆகியோரை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. மேலும் கொலைக்கான காரணமாக தான் வசித்து வந்த வீட்டிற்கான காலக்கெடு முடிந்த நிலையில் பணத்தை வீட்டின் உரிமையாளர் தர மறுத்ததால் தாய் இந்த விபரிதச் செயலில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்த்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காளையார்கோவில் அருகே மாமியார், மருமகளை கொன்ற கும்பலை பிடிக்க 5 சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
காளையார்கோவில்:
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள முடுக்கூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தியாகு. இவர் முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி ராஜகுமாரி(வயது60), மருமகள் சினேகா(30) ஆகியோரை மர்மநபர்கள் கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிப்பதற்காக போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) வருண்குமார் கூறியதாவது:-
காளையார்கோவில் அருகே மாமியார், மருமகளை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் கொள்ளையர்கள் சிக்குவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் இந்த இரட்டைக்கொலைக்கு முன்பாக காளையார்கோவில் அருகே மறவமங்கலம் பகுதியில் உள்ள ஒரு கடையில் திருட்டு நடைபெற்றுள்ளது. எனவே அந்த கடையில் திருடியவர்களுக்கு, இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என்றும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சினேகாவின் கணவரான ராணுவ வீரர் ஸ்டீபனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அங்கிருந்து வந்து கொண்டிருக்கிறார். அவர் வந்தவுடன் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள மாமியார், மருமகள் உடல்களை ஒப்படைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

பிரசவ தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே கர்ப்பிணிகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று சுகாதாரத்துறை துணை இயக்குனர் யசோதாமணி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட சுகாதாரப்பணிகள் மற்றும் சுகாதாரத்துறை துணை இயக்குனர் யசோதாமணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் சுகாதாரத்துறை சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேவையான மருந்து, மாத்திரைகளை கிராம சுகாதார செவிலியர் மற்றும் மருத்துவர் மூலம் பெற்று டாக்டர்களின் தகுந்த அறிவுரையின்படி சாப்பிட வேண்டும். அனைத்து கர்ப்பிணிகளும் பிரசவ தேதியின் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே அரசு மருத்துவமனைகளில் உள் நோயாளிகளாக சேர்ந்து பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
கர்ப்பிணிகளுக்கு சளி, காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டால் உடனடியாக கிராம சுகாதார செவிலியர் அல்லது அரசு ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலரை தொடர்பு கொண்டு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் போன்றோர் வெளியில் செல்வதை கூடிய வரையில் தவிர்க்க வேண்டும். இதன் மூலம் கொரோனா தொற்று வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். தொற்று அறிகுறி இருந்தால் உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மற்றும் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். மேலும் இது சம்பந்தமாக மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை 93464 67903, 94999 33860 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு மருத்துவ ஆலோசனை மற்றும் உரிய விளக்கத்தை பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

சிவகங்கை அருகே ராணுவ வீரரின் மனைவி, தாயை கொலை செய்த மர்மநபர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே ராணுவ வீரரின் மனைவி, தாயை கொலை செய்த மர்மநபர்கள், வீட்டில் இருந்து 40 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிவகங்கை மாவட்டத்தில் 17 ஆயிரத்து 813 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட சுகாதாரப்பணிகள், துணை இயக்குனர் யசோதாமணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் 14 சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு சுகாதாரத்துறை, காவல்துறை மற்றும் மருத்துவக்குழு மூலம் கண்காணிக்கப்பட்டு வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் உள்ள 12 மருத்துவக்குழு மூலம் கொரோனா நோயாளிகள், கண்காணிப்பு நோயாளிகளின் தொடர்புடைய நபர்களின் விவரங்கள் சேகரிப்பு, கர்ப்பிணிகள், குழந்தைகள் ஆகியவற்றின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் உள்ள நடமாடும் மருத்துவக்குழு 5 வட்டாரங்களில் இருந்து கொரோனா தடுப்பு பணி, மாற்றுப்பணிக்காக சென்னையில் பணிபுரிந்து வருகிறார்கள். ஒவ்வொரு வட்டாரத்தில் ஆய்வக உதவியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், செவிலியர் அடங்கிய குழு மூலம் கொரோனா பரிசோதனைக்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு தினந்தோறும் சிவகங்கை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இதுவரை 17ஆயிரத்து 813 பேருக்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு 877 கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். போலீசார் 388 பேருக்கும், சுகாதார களப்பணியாளர்கள் 426 பேருக்கும் , கர்ப்பிணிகள் 1,720 பேருக்கும், சென்னையில் இருந்து வந்தவர்கள் 4,746 பேருக்கும், வெளிமாநிலத்தினர் 1,657 பேருக்கும், வெளிநாட்டினர் 634 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கொரோனா நோயாளி சிகிச்சைக்கு 1083 படுக்கை வசதிகள் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் தயார் செய்யப்பட்டு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் எந்த அறிகுறியும் இல்லாத கொரோனா நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை அளிக்க ஏதுவாக 999 படுக்கை வசதியுடன் உள்ள கோவிட் கேர் சென்டர் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 85 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காரைக்குடி நகராட்சி மற்றும் சாக்கோட்டை வட்டார பகுதியில் உள்ள கிராமங்களுக்கு நேரடியாக சென்று கொரோனா பரிசோதனை சளி மாதிரிகள் எடுக்க நடமாடும் கொரோனா பரிசோதனை ஆம்புலன்ஸ் வடிவமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மாவட்ட அளவில் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை மற்றும் துணை இயக்குனர் அலுவலகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை 24 மணிநேரமும் செயல்பட்டு கொரோனா தொடர்பாக பொதுமக்களிடம் புகார்களை பெறவும் மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்க மருத்துவக்குழுவின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

சிங்கம்புணரியில் உள்ள ரேசன் கடையில் தரமற்ற பொருட்களை விற்பனை செய்வதாக அப்பகுதி பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சிங்கம்புணரி:
சிங்கம்புணரி தபால் நிலையம் அருகில் ரேசன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. தற்போது கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் பொதுமக்களுக்கு விலையில்லா பொருட்களை ரேசன் கடைகளில் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இந்த கடையில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் பொருட்கள் வாங்க வந்தனர். அரிசியை தவிர கூடுதலாக வழங்கும் டீத் தூள், சோப்பு, சேமியா பாக்கெட் உள்ளிட்ட பொருட்கள் மிகவும் தரமற்ற நிலையில் உள்ளது.
இதை அந்த ரேசன்கடையில் உள்ள ஊழியர்கள் அரிசி வாங்க வரும் பொதுமக்களை கட்டாயப்படுத்தி வாங்க வைக்க முயற்சி செய்வதாக கூறி அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் ரேசன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து சிங்கம்புணரி வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்க பொதுமேலாளர் குமரகுருபரன் கூறியதாவது:- சிவகங்கை மாவட்ட கூட்டுறவு பண்டக சாலையில் இருந்து வரும் டீத்தூள், சேமியா மற்றும் உப்பு போன்ற பொருட்கள் குறைந்த விலையில் தரமான பொருட்களாக அரசால் பரிந்துரை செய்யப்பட்டு பின்னர் தான் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் வாடிக்கையாளருக்கு அரசு அறிவுறுத்தலின் படி அவர்களுக்கு தரமான பொருட்கள் தற்போது ஊரடங்கு காலத்தில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் யாரையும் கட்டாயப்படுத்தி பொருட்களை வாங்க வைப்பது இல்லை. தற்போது பொதுமக்கள் கூறும் புகார் குறித்து விசாரணை நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

சிவகங்கை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் 200 படுக்கைகளுடன் கொரோனா தடுப்பு சிறப்பு சிகிச்சை பிரிவை அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார்.
சிவகங்கை:
சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது இங்கு கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருபவர்களுக்கு தேவையான இடவசதி கிடைக்காமல் உள்ளது. எனவே கொரோனா தொற்றுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிவகங்கையில் ஏற்கனவே செயல்பட்ட பழைய மருத்துவமனையை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் புதிய படுக்கை வசதிகளுடன் சீரமைக்கப்பட்டு உள்ளது.
மேலும் இந்த வளாகத்தில் கூடுதலாக 3 கட்டிடங்கள் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு அதில் 200 படுக்கைகள் கொண்ட சிகிச்சை பிரிவு மையத்தை கொரோனா நோயாளிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுஉள்ளது. இதுதவிர சிவகங்கை அருகே உள்ள ஒரு கல்லூரியிலும் கொரோனா சிகிச்சை பிரிவு வார்டு தற்காலிகமாக தொடங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ரத்தினவேல், இணை இயக்குனர் (மருத்துவம்) இளங்கோ மகேசுவரன், மருத்துவக் கல்லூரி மருத்துவ அலுவலர் மீனா, பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் யசோதாமணி, குடும்ப நல துணை இயக்குனர் யோகவதி, டாக்டர் சூரியநாராயணன், உதவி நிலைய அலுவலக மருத்துவர்கள் முகமதுரபீ, மிதுன், கண்காணிப்பு மருத்துவர்கள் சையதுமுகமது, பிரகாஷ், சமூக ஆர்வலர் அயோத்தி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த புதிய சிகிச்சை பிரிவு மைய திறப்பு விழா மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன் முன்னிலை வகித்தார். அமைச்சர் பாஸ்கரன் கொரோனா தடுப்பு சிறப்பு சிகிச்சை பிரிவு மையத்தை திறந்து வைத்து கூறியதாவது:-
சிவகங்கை பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ஏற்கனவே 52 படுக்கைகள் கொண்ட கட்டிடம் சீரமைக்கப்பட்டு தற்போது கொரோனா தடுப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் இந்த வளாகத்தில் கூடுதலாக 3 கட்டிடங்கள் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு அதில் 200 படுக்கைகள் கொண்ட சிகிச்சை பிரிவு மையத்தை கொரோனா நோயாளிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுஉள்ளது. இதுதவிர சிவகங்கை அருகே உள்ள ஒரு கல்லூரியிலும் கொரோனா சிகிச்சை பிரிவு வார்டு தற்காலிகமாக தொடங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ரத்தினவேல், இணை இயக்குனர் (மருத்துவம்) இளங்கோ மகேசுவரன், மருத்துவக் கல்லூரி மருத்துவ அலுவலர் மீனா, பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் யசோதாமணி, குடும்ப நல துணை இயக்குனர் யோகவதி, டாக்டர் சூரியநாராயணன், உதவி நிலைய அலுவலக மருத்துவர்கள் முகமதுரபீ, மிதுன், கண்காணிப்பு மருத்துவர்கள் சையதுமுகமது, பிரகாஷ், சமூக ஆர்வலர் அயோத்தி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 26 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.
சிவகங்கை:
சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 143 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 26 பேர் பூரண குணமடைந்ததையடுத்து அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவர்களை அமைச்சர் பஸ்கரன், மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன், மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன், மருத்துவ கல்லூரி முதல்வர் ரெத்தினவேல், மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிலைய மருத்துவர் மீனாள், ஒருங்கிணைப்பாளர் சூரியநாராயணன், உதவி நிலைய அலுவலக டாக்டர்கள் முகமதுரபீ, மிதுன், சமூக ஆர்வலர் அயோத்தி மற்றும் டாக்டர்கள் வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.
மத்திய அரசின் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் திருப்புவனம் மற்றும் சிங்கம்புணரி பகுதியில் கொப்பரை தேங்காய் நேரடி கொள்முதல் செய்யப்பட உள்ளது என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாட்டில் தற்போது தேங்காய் கொப்பரைகளின் விலை குறைந்துள்ளதால் தென்னை விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசின் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் நேரடியாக கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை விற்பனைக்குழுவிற்கு உட்பட்ட திருப்புவனம் மற்றும் சிங்கம்புணரி பகுதியில் ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக சுமார் 400 மெட்ரிக் டன் வீதம் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதற்கான விலை அரவை கொப்பரைக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.99.60 எனவும், பந்து கொப்பரைக்கு ரூ.103 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான தர நிர்ணயமாக அரவை கொப்பரையின் ஈரப்பதம் 6 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வைக்கோல், தூசு, நார் போன்ற அயல்பொருட்கள் அதிகபட்சமாக 1 சதவீதம் மட்டும் அனுமதிக்கப்படும்.
பூஞ்சாணம் மற்றும் கருமை நிறம் கொண்ட கொப்பரை, சுருக்கம் கொண்ட கொப்பரை மற்றும் சில்லு கொப்பரை ஆகியவை அதிகபட்சம் 10 சதவீதம் மட்டுமே இருக்கலாம். பந்து கொப்பரையின் ஈரப்பதம் அதிகபட்சமாக 7 சதவீதம் இருக்கலாம். இவற்றின் சுற்றளவு குறைந்தபட்சம் 75 மில்லி மீட்டர் இருக்க வேண்டும். விவசாயிகள் முதலில் தங்களது சிட்டா, பயிர் சாகுபடி அடங்கல், ஆதார் நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தக விவர நகல்களுடன் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் பதிவு செய்து தங்களது கொப்பரையை ஒப்படைக்கலாம்.
மேலும் அலுவலர்கள் மூலம் தர ஆய்வு செய்து தேர்வு செய்யப்பட்ட கொப்பரை எடையிடப்பட்டு அதற்கான விலை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இக்கொள்முதல் பணி வருகிற டிசம்பர் மாதம் 23-ந் தேதி வரை மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே சிவகங்கை மாவட்ட தென்னை சாகுபடி விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களிடம் உள்ள கொப்பரையினை திருப்புவனம் மற்றும் சிங்கம்புணரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு உரிய ஆவணங்களுடன் சென்று விற்று பயனடையலாம்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

திருப்புவனம் அருகே பயங்கர ஆயுதங்களுடன் 8 பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்கள் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை கொல்ல சதித்திட்டம் தீட்டியது விசாரணையில் தெரிய வந்தது.
திருப்புவனம்:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட மாங்குடி கிராமம் அருகே உள்ள புதுக்குளம் கண்மாய் பகுதியில் சிலர் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாகவும். கிலோ கணக்கில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாகவும், மானாமதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள மணல் குவாரிகளுக்கு சென்று மிரட்டி பணம் பறித்து வருவதாகவும் தனிப்படை போலீசார் சவுந்திரராஜன், மலைச்சாமி, ராஜா ஆகியோருக்கு ரகசியல் தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அந்த கும்பலை பிடிக்க மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் தலைமையில் மானாமதுரை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், ராஜ்குமார், மாரிமுத்து மற்றும் மானாமதுரை உட்கோட்டத்தை சேர்ந்த போலீசார் அடங்கிய 3 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் நேற்று அதிகாலை 5 மணி அளவில் வெவ்வேறு திசைகளில் இருந்து வந்து திருப்புவனம் அருகே புதுக்குளம் கண்மாய்க்கு சென்று அங்கு பதுங்கி இருந்த 7 பேர் கும்பலை பிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், மதுரை திருநகரை சேர்ந்த ராஜேஷ்கண்ணன் (வயது 32), வினேஷ்(19), திருப்பாசேத்தி அருகே ஆவாரங்காட்டைச் சேர்ந்த குட்டை முருகன் (38) மற்றும் அஜய்தேவன்(20), காளையார்கோவில் காளீஸ்வரன்(23), வேம்பத்தூர் அருகே மிக்கேல்பட்டிணம் ரவி என்ற முகிலன் (21), மதுரை சிம்மக்கல் நவீன் நாகராஜ்(22) ஆகியோர் என்பது தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து சுமார் ரூ.8 லட்சம் மதிப்பிலான 23 கிலோ கஞ்சா மற்றும் 7 பெரிய வாள்கள், 3 வீச்சரிவாள், 6 செல்போன்கள், 8 மோட்டார் சைக்கிள், ஒரு சூரிகத்தி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர். 7 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் காளீஸ்வரி(27) என்ற பெண்ணையும் போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) வருண்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
கைதான 7 பேரும் முன் விரோதம் காரணமாக எதிர் தரப்பை சேர்ந்த விருதுநகர் மாவட்டம் கட்டனூர் கிராமத்தை சேர்ந்த ஒருவரை கொலை செய்ய பயங்கர ஆயுதங்களுடன் சதி திட்டம் தீட்டியுள்ளனர். இந்த கொலைக்காக இந்த பகுதியில் பதுங்கி இருந்து பணம் சேர்க்கும் முயற்சியில் மிரட்டி பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களை தனிப்படை போலீசார் பிடித்ததால் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் கொலை தவிர்க்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இவர்களில் சிலர் மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன. மேலும் 2 பேர் கச்சநத்தம் பகுதியில் நடந்த கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளனர். இவர்கள் மேலராங்கியம் கிராமத்தைச் சேர்ந்த லோடுமுருகன் என்பவரின் மனைவி காளீஸ்வரி மற்றும் நாகப்பன் ஆகியோர் தலைமையில் செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. காளீஸ்வரி கைது செய்யப்பட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தற்போது அங்குள்ள அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் 200 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு செல்ல யாரும் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் சென்னையை சேர்ந்தவரான, சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் ராஜகோபால் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்துகொண்டார்.
இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு வந்து உடல் பரிசோதனை செய்து கொண்டார். பின்னர் டாக்டர்கள் அவரை, வீட்டில் முகாம் அலுவலகத்தில் தங்கி சிகிச்சை பெற பரிந்துரை செய்தனர். இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன், வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.