என் மலர்
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா வைரசை தடுக்க கிருமி நாசினி தெளிக்கும் பணியை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்
திருப்புவனம்:
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா வைரசை தடுக்க தமிழக அரசின் சார்பில் புதிதாக வழங்கப்பட்ட ரூ.12 லட்சம் மதிப்பிலான டிராக்டர் வாகனத்தின் மூலம் கிருமிநாசினி தெளிப்பு எந்திரம், மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.13½லட்சம் மதிப்பில் டெங்கு ஒழிப்பிற்கான புகை அடிக்கும் எந்திரம் ஆகியவற்றின் தொடக்க விழா திருப்புவனத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன், சுகாதார பணிகளின் மாவட்ட துணை இயக்குனர் டாக்டர் யசோதாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் புதிய வாகனங்களை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ராஜா, செயல் அலுவலர் சந்திரகலா, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சேதுராமு, மாவட்ட பூச்சியியல் வல்லுனர் ரமேஷ், தாசில்தார் மூர்த்தி, ஒன்றிய செயலாளர் சோனைரவி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மாநிலம் முழுவதும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிவகங்கை:
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் உதயகுமார், செயலாளர் சரவணன், பொருளாளர் ராதாகிருஷ்ணன், போராட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசாமி ஆகியோர் கூறியதாவது:-
உறுப்பினர்களுக்கு சங்கங்களே நேரடியாக கடன் வழங்க அனுமதிக்கவேண்டும். வருமான வரித்துறையின் 2 சதவீத டி.டி.எஸ். வரியை ரத்து செய்யவேண்டும். அங்காடி பணியாளர்களுக்கு புதிய ஊதியம் வழங்கவேண்டும். நகை ஏல குறைவு தொகையை நஷ்டக்கணக்கில் தாக்கல் செய்யவேண்டும். கூட்டுறவு நிறுவனங்களில் புதிதாக மேலாண்மை இயக்குனர் பணியிடம் உருவாக்கும் முயற்சியை கைவிடவேண்டும். ஊதிய உயர்வு அனைத்து பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டதை உறுதி செய்யவேண்டும். சம்பளம் வழங்க இயலாத சங்கங்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். செயலாளர் பொது மாறுதலினை ரத்து செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஏற்கனவே பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.இந்நிலையில் 24-ந்தேதி முதல் மாநிலம் முழுவதும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தினர் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் 125 சங்கங்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே 2 மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர்:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பூலாங்குறிச்சியை சேர்ந்தவர் திவ்யஸ்ரீ. இவர் 12-ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சியும் பெற்றுள்ளார். இந்நிலையில் அவர் டாக்டராக வேண்டி நீட் தேர்விற்கு படித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டில் இருந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பூலான்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் திருப்பத்தூர் அருகே உள்ள மணக்குடி பகுதியை சேர்ந்த செல்வம் மகள் ஜெயப்பிரியா(வயது 19). இவர் ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. 3-வது ஆண்டு படித்து வருகிறார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து கண்டவராயன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டு வாசலில் நின்றிருந்த வாலிபர் மீது அவருடைய நண்பர்கள் 3 பேர் நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள தாணிச்சாவூரணியை சேர்ந்தவர் ராஜபாண்டி(வயது 26). இவருடைய நண்பர்கள் அதே கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் விஜய்(23), பனங்காட்டான் வயல் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் முத்துராமன்(28), அமராவதிபுதூரை சேர்ந்த சங்கரன் மகன் மதிபாலா(22).
இந்தநிலையில் ராஜபாண்டிக்கும் மற்ற நண்பர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு ஆகி முன்விரோதம் இருந்தது. ராஜபாண்டி மலேசியாவிற்கு சென்றுவிட்டு சமீபத்தில் தாணிச்சாவூரணி கிராமத்திற்கு திரும்பி வந்து வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு ராஜபாண்டி தனது வீட்டின் முன்பு நின்றிருந்தார். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 வாலிபர்கள் அவர் மீது நாட்டு வெடிகுண்டு வீசினர். இதை கவனித்த ராஜபாண்டி சுதாரித்து, அங்கிருந்து ஓடி உயிர் தப்பினார். நாட்டு வெடிகுண்டு பலத்த சத்தத்துடன் வெடித்ததில் ராஜபாண்டியின் தாயார் அதிர்ச்சியில் விழுந்து காயம் அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆறாவயல் போலீசார் விசாரணை நடத்தி நாட்டு வெடிகுண்டு வீசியதாக விஜய், முத்துராமன், மதிபாலா ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
இதில் தொடர்புடைய வாலிபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள், தர்மபுரி என்ற பெயரில் அச்சடிக்கப்பட்ட பையில் வைத்து வெடிகுண்டை கொண்டு வந்து வீசியது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கீழடியில் அகழாய்வு பணியின்போது புதிய குழி தோண்டியபோது சுமார் 5 அடி ஆழத்தில் புதிதாக ஒரு செங்கல் சுவர் இருப்பது தெரிய வந்தது.
திருப்புவனம்:
இந்நிலையில் மேலும் குழிகள் தோண்டி ஆராய்ச்சி பணிகள் நடைபெற்றபோது அதில் அகலமான செங்கல் சுவர் அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று புதிய குழி தோண்டி ஆராய்ச்சி நடைபெற்றபோது அதில் சுமார் 5 அடி ஆழத்தில் புதிதாக ஒரு செங்கல் சுவர் இருப்பது தெரிய வந்தது. மேலும் அதை தோண்டி ஆராய்ச்சி செய்தால் அதன் விரிவாக்கம் தெரிய வரும். இதுதவிர கூடுதல் குழிகள் தோண்டப்பட்டு வருகிறது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடி, மணலூர், கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளில் 6-வது கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. கீழடியில் ஏற்கனவே 8-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு ஆராய்ச்சி பணிகள் நடைபெற்றபோது அதில் சிறிய, பெரிய பானைகள், விலங்கின எலும்புக் கூடு, பலவரிசைகள் கொண்ட செங்கல் சுவர், வாய்க்கால் பகுதி போன்ற அமைப்பு, கருங்கல்லினால் ஆன 4 எடைகற்கள், கண்ணாடி மூலப்பொருட்கள், இரும்பு உலை கண்டுபிடிக்கப்பட்டன.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே இரட்டை கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை கிணறுகளில் தனிப்படை போலீசார் தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் தேடினர்.
காளையார்கோவில்:
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ளது நடுக்கூரணி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஸ்டீபனின் தாய் ராஜகுமாரி(வயது60), மனைவி சினேகா (30) ஆகியோரை கொள்ளையர்கள் கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து தப்பிச்சென்றனர். இதையடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்களை பிடிக்க மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
இந்நிலையில் தனிப்படை போலீசார் மற்றும் சிவகங்கை தீயணைப்பு படை நிலைய அதிகாரி ராதாகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் இணைந்து அந்த பகுதியில் உள்ள 90 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் 45 அடி ஆழத்தில் இருந்த தண்ணீரை 2 நீர் மூழ்கி மோட்டார் மூலம் இரவு முழுவதும் வெளியேற்றினர். அதன்பின்னர் நேற்று அதிகாலை 2 தீயணைப்பு படை வீரர்கள் இந்த கிணற்றில் இறங்கி கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் உள்ளே கிடக்கிறதா? என்று விடிய விடிய தேடினர்.
இதேபோல் மற்றொரு நபருக்கு சொந்தமான 50 அடி ஆழ கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றியும் தீயணைப்பு படை வீரர்கள் உள்ளே இறங்கி தேடினர். தீயணைப்பு படை வீரர்கள், போலீசார் தேடியபோது, கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் அங்கு இரவு முழுவதும் காத்திருந்தனர்.

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. அந்தந்த பகுதிகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு நோய் தொற்று உள்ளதா என்றும் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா சிகிச்சையில் இருந்த காரைக்குடியை சேர்ந்த 64 வயது ஆண்கள் 2 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

சிட்டுக்குருவிகள் கூடு கட்டினால் ஊருக்கு நன்மை பெருகும் என்ற நம்பிக்கையில், மின் இணைப்பு பெட்டியில், கட்டப்பட்டிருந்த கூட்டை களைக்காமல், இருளில் வாழ்ந்து வருகிறது ஒரு கிராமம்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் அருகே உள்ளது பொத்தகுடி கிராமம். இங்குள்ள மின்கம்பத்தில் தெருவிளக்கு இணைப்பு பெட்டியில் குருவிக்கூடு கட்டி, முட்டையிட்டு அடைகாத்து வந்தது. இதையறிந்த கிராமத்து வாலிபர்கள், அதை பாதுகாக்க தொடங்கினர்.
தெருவிளக்குகள் எரிய மொத்த கன்ட்ரோல் ஸ்விட்ச்சும், குருவி கூடு கட்டிய மின் இணைப்பு பெட்டியில் இருப்பதால், சுவிட்சை ஆன் செய்யக்கூட முடியவில்லை. சுவிட்ச் போட்டால், குருவி பறந்து விடும் என்பதால், கடந்த 30 நாட்களுக்கும் மேலாக தெரு விளக்குகள் எரியாமல் இருளில் வாழ்ந்து வருகிறார்கள் பொத்தகுடி கிராமமக்கள்.
சின்னஞ்சிறிய குருவிகள் கூடு கட்டினால் நல்ல சகுனம் என்றும், ஊருக்கும் மக்களுக்கும், நன்மை அதிகரித்து, அதிர்ஷ்டம் பிறக்கும் என்று கூறுகின்றனர் அக்கிராம மக்கள்.
மின் கதிர்கள், செல்போன் கோபுரங்களால் சிட்டுக்குருவி இனம் அழிந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தேடி வந்த சிட்டுக்குருவி இனத்தை, மனிதேயத்தோடு பாதுகாத்து பொத்தகுடி கிராமமக்கள் எடுத்துகாட்டாக விளங்குகின்றனர்.

காரைக்குடியில் நவீனமுறையில் பால் குளிரூட்டும் மையம் கட்டும் பணியை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.
காரைக்குடி:
காரைக்குடி ஆவின் நிர்வாகம் சார்பில் தேசிய ரூர்பன் திட்டத்தின் கீழ் நவீன பால் குளிரூட்டும் நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். ஆவின் தலைவர் அசோகன் முன்னிலை வகித்தார். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி வரவேற்றார். விழாவில் அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டு புதிய பால் குளிர்விக்கும் மையம் மற்றும் நவீன பாலகம் கட்டுவதற்கான பூமிபூஜையை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
ஆவின் நிர்வாகம் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய காரைக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த துறை மூலம் காரைக்குடியில் நாள்தோறும் 50 ஆயிரம் லிட்டர் பால் பதனிடும் தொழிற்சாலையும், சிவகங்கையில் 10 ஆயிரம் லிட்டர் கையாளும் திறன் உடைய பால் குளிரூட்டும் நிலையம் என இரு இடங்களிலும் சேர்த்து 11 இடங்களில் நாள் ஒன்றிக்கு 5 ஆயிரம் லிட்டர் கையாளும் திறன் உடைய பால் குளிரூட்டும் மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 73 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்து நவீனமுறையில் பதப்படுத்தி பால் நுகர்வோருக்கு நாள் ஒன்றுக்கு 55 ஆயிரம் லிட்டர் விற்பனை செய்து வருவதுடன் எஞ்சிய பாலானது பால் உபபொருள்களுக்காக மாற்றம் செய்யப்படுகிறது.
மேலும் கோரிக்கையை ஏற்று சக்கந்தி ஊராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் 5 ஆயிரம் லிட்டர் பால் குளிரூட்டும் நிலையம் கட்டுவதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வளாகத்தில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் பால் உபபொருட்கள் மாற்றம் செய்வதற்கான எந்திரங்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் 26 கிராம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சுய உதவி குழுக்கள் மூலம் பால் கொள்முதல் செய்யப்படும். இதனால் 780 பால் உற்பத்தியாளர்கள் பயன் பெறுவதுடன் பால் உபபொருட்கள் தயாரிக்கவும் இந்த மையம் பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதை தொடர்ந்து காரைக்குடி என்.ஜி.ஓ. காலனி அருகே ஆவின் நிர்வாகம் மூலம் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நவீன பாலகம் கட்டுவதற்கான பூமி பூஜையை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆவின் நிர்வாக பொது மேலாளர் காமராஜ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சந்திரன், மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை குழு தலைவர் சந்திரன், கூட்டுறவு விற்பனை பண்டகசாலை சங்க தலைவர் நாகராஜன், காரைக்குடி வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் போஸ், அ.தி.மு.க. நகர இளைஞரணி செயலாளர் இயல்தாகூர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கொந்தகை மற்றும் அதன் எதிரே உள்ள தனியார் நிலத்திலும் சேர்த்து இதுவரை 20 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருப்புவனம்:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியனை சேர்ந்தது கீழடி ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் 5 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் ஏற்கனவே நடைபெற்று நிறைவு பெற்றது. தற்போது 6-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களிலும் பணி நடைபெற்று வருகிறது.
கீழடியில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி பணியில் பெரிய பானைகள், விலங்கின் எலும்புக்கூடு, 12 வரிசை கொண்ட செங்கல் சுவர், சிறிய பானைகள், வடிகால் பகுதி, இரும்பு உலை, உருண்டை வடிவ எடை கற்கள் கிடைத்தது. கொந்தகை பகுதியில் சுமார் 13-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகளும், மனித கை, கால் எலும்புகள், சிறிய குவளைகள், மனித மண்டை ஓடு, சிறிய எலும்புகள், குழந்தைகளின் எலும்புக் கூடுகள் கிடைத்தது. அகரத்தில் சிறிய பானைகள், நத்தை ஓடுகள், பெரிய பானைகள், சங்கு வளையல்கள், அம்மியின் மேல் காணப்படும் அரவைக்கல், தங்க நாணயம், பாசி, மணிகள் கிடைத்துள்ளது. இதேபோல் மணலூரில் சுடுமண் உலை, பெரிய மனித எலும்பு, சிறிய எலும்பு, செங்கல் திட்டு ஆகியவைகளும் கண்டெடுக்கப்பட்டது.
நேற்று கொந்தகை பகுதியில் புதிய குழிகள் தோண்டி அகழ்வாராய்ச்சி நடைபெற்றபோது அதில் முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு ஒன்று காணப்பட்டது. மேலும் அதை அகலமான அளவில் தோண்டப்பட்டு ஆராய்ச்சி பணிகள் செய்தால் தான் அதன் முழு உருவமும் தெரியவரும். அதன் பின்னர் அந்த முதுமக்கள் தாழிக்குள் இருக்கும் பொருட்கள் குறித்து ஆராய்ச்சி நடைபெறும். கொந்தகை மற்றும் அதன் எதிரே உள்ள தனியார் நிலத்திலும் சேர்த்து இதுவரை 20 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சிவகங்கையில் 2 குழந்தைகளுடன் பெண் பிணமாக கிடந்த சம்பவத்தில் அவர்கள் வசித்த வீட்டு உரிமையாளரின் தாய், அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை:
பாலமுருகன் வெளிநாட்டில் வேலை செய்துவருகிறார். இதையடுத்து காளீஸ்வரி குழந்தைகளுடன் சிவகங்கை குறிஞ்சிநகரில் வசித்து வந்தார். இந்தநிலையில் பூட்டிய வீட்டுக்குள் காளீஸ்வரி தூக்கிலும், அருகில் அவருடைய மகள், மகனும் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தகவல் அறிந்த சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து 3 பேரின் உடல்களை கைப்பற்றி சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினார். விசாரணையில் காளீஸ்வரி அந்த வீட்டில் ஒத்திக்கு குடியிருந்ததாகவும், இந்நிலையில் வீட்டை காலி செய்ய வலியுறுத்தி வீட்டின் உரிமையாளரின் தாய் சுந்தரி (65), அண்ணன் கார்த்தி என்ற கார்த்திகேயன் (40) ஆகியோர் தகராறு செய்து சாதியை சொல்லி திட்டியதாகவும், இதனால் மனம் உடைந்த காளீஸ்வரி குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதன் அடிப்படையில் காளீஸ்வரியை தற்கொலைக்கு தூண்டியதாக கார்த்தி என்ற கார்த்திகேயன், அவருடைய தாய் சுந்தரி ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
காளீஸ்வரியின் கணவர் வெளிநாட்டில் இருந்து வந்துகொண்டு உள்ளார். அவர் வந்தபின்னரே பிரேத பரிசோதனை செய்து 3 பேரின் உடல்கள் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும், பிரேத பரிசோதனைக்கு பின்னரே குழந்தைகள் உள்பட 3 பேரும் எவ்வாறு இறந்தனர்? என்பது பற்றிய முழுவிவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
சிவகங்கை அருகே உள்ள அதப்படக்கி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன்(வயது40). இவரது மனைவி காளீஸ்வரி(35). இவர்களுடைய மகள் மங்கையர்திலகம்(12), மகன் அபிஷேக்(8).
இதுகுறித்து தகவல் அறிந்த சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து 3 பேரின் உடல்களை கைப்பற்றி சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினார். விசாரணையில் காளீஸ்வரி அந்த வீட்டில் ஒத்திக்கு குடியிருந்ததாகவும், இந்நிலையில் வீட்டை காலி செய்ய வலியுறுத்தி வீட்டின் உரிமையாளரின் தாய் சுந்தரி (65), அண்ணன் கார்த்தி என்ற கார்த்திகேயன் (40) ஆகியோர் தகராறு செய்து சாதியை சொல்லி திட்டியதாகவும், இதனால் மனம் உடைந்த காளீஸ்வரி குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதன் அடிப்படையில் காளீஸ்வரியை தற்கொலைக்கு தூண்டியதாக கார்த்தி என்ற கார்த்திகேயன், அவருடைய தாய் சுந்தரி ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
காளீஸ்வரியின் கணவர் வெளிநாட்டில் இருந்து வந்துகொண்டு உள்ளார். அவர் வந்தபின்னரே பிரேத பரிசோதனை செய்து 3 பேரின் உடல்கள் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும், பிரேத பரிசோதனைக்கு பின்னரே குழந்தைகள் உள்பட 3 பேரும் எவ்வாறு இறந்தனர்? என்பது பற்றிய முழுவிவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
கொரோனா தொற்று கிருமிகளை தடுக்க காரைக்குடியை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் ‘மூலிகை ஏர்கூலர்’ ஒன்றை கண்டுபிடித்து உள்ளார்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரி முத்துகுமரேசன். இவருடைய மகன் மதுரைசெல்வன். இவர் கனடா நாட்டில் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளராக இருந்து வந்தார். தற்போது காரைக்குடி சிக்ரியில் பணியாற்றி வரும் தனது மாமாவும், விஞ்ஞானியான பழனியப்பன் என்பவரின் ஆலோசனையின் பேரில் மூலிகை மூலம் இயங்கும் ஏர்கூலர் ஒன்றை கண்டுபிடித்து உள்ளார்.
இதுகுறித்து மதுரை செல்வன் கூறியதாவது:-
இந்த ஏர்கூலரானது வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்விசிறி, மண்பானையை கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது. மண்பானையின் பக்கவாட்டில் வட்ட அளவிலான துவாரத்தை ஏற்படுத்தி அதன் மேல் பகுதியில் சிறிய மண்சட்டியை உள்புறத்தில் சிறிய அளவிலான துவாரமிட்டு வைக்கவேண்டும்.
அதில் வெட்டிவேர் வைத்து துளசி, வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து மூலிகை சாற்றை ½ லிட்டர் அளவு எடுத்து 3 லிட்டர் அளவு தண்ணீரை சேர்த்து மண்பானையில் ஊற்ற வேண்டும். இதையடுத்து மின்விசிறியை இயக்கினால் சிறிய மழை தூறல் போன்று குளுமையான காற்றை பெறலாம்.
இந்த மூலிகை காற்றானது நமது உடலில் படும்போது கொரோனா மற்றும் தொற்று, கிருமிகள் பாதிப்பு தடுக்கப்படும். இதனால் கொரோனா உள்ளிட்ட பல்வேறு நோய்களை தடுக்கலாம். இவற்றை தயாரிப்பது மிகவும் சுலபம். தற்போதுள்ள சூழ்நிலையில் இந்த ஏர்கூலரை தினந்தோறும் 8 மணி நேரம் பயன்படுத்தலாம்.
மேலும் இந்த மண்சட்டியில் வைக்கப்படும் வெட்டிவேர் மற்றும் மூலிகை சாற்றை 2 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.