என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை   கோப்புப்படம்
    X
    கொரோனா பரிசோதனை கோப்புப்படம்

    சிவகங்கை மாவட்டத்தில் 24 பேருக்கு கொரோனா தொற்று

    சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. அந்தந்த பகுதிகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு நோய் தொற்று உள்ளதா என்றும் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா சிகிச்சையில் இருந்த காரைக்குடியை சேர்ந்த 64 வயது ஆண்கள் 2 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    Next Story
    ×