என் மலர்tooltip icon

    சிவகங்கை

    சிவகங்கையில் டாக்டருக்கு படிக்காமல் கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.

    திருப்புவனம்:

    சிவகங்கை மாவட்டம் பூவந்தி போலீஸ் சரகத்தை சேர்ந்தது திருமாஞ்சோலை பகுதி. இந்த பகுதியில் ராஜமாணிக்கம் (வயது34) என்பவர் கிளினிக் நடத்தி வருகிறார். இவர் முறையாக டாக்டருக்கு படிக்காமல் கிளினிக் நடத்தி வருவதாக மாவட்ட கலெக்டரிடம் புகார் கூறப்பட்டது.

    இதையடுத்து மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவின்பேரில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன் தலைமையில் மருத்துவ குழுவினர் கிளினிக் சென்று சோதனை நடத்தினர். இதில் டாக்டருக்கு படிக்காமல் இவர் கிளினிக் நடத்தியது தெரிய வந்துள்ளது. இதையடுத்து மருத்துவ குழுவினர், போலி டாக்டர் ராஜமாணிக்கத்தை பூவந்தி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரிதாபாலு வழக்குப்பதிவு செய்து ராஜமாணிக்கத்தை கைது செய்து விசாரித்து வருகிறார்.
    சிவகங்கையில் உள்ள பழைய மருத்துவமனை வளாகத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரத்தை அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார்.
    சிவகங்கை:

    சிவகங்கையில் உள்ள பழைய மருத்துவமனை வளாகம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் 252 படுக்கைகள் கொண்ட தனிமை மையமாக செயல்பட்டு வருகிறது. இங்கு மேலும் ரூ.1.62 லட்சம் செலவில் கூடுதலாக 25 படுக்கைகள் கொண்ட அறை மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரமும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. நாகராஜன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். அமைச்சர் பாஸ்கரன் கூடுதல் படுக்கைகள் கொண்ட அறை மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை திறந்து வைத்தார். இதில் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் ரத்தினவேல், இணை இயக்குனர்(மருத்துவம்) டாக்டர் இளங்கோ மகேஸ்வரன், மருத்துவ கல்லூரி கண்காணிப்பு மருத்துவர் மீனா, உதவி கண்காணிப்பு அலுவலர் ரபீக்முகமது, சித்த மருத்துவ அலுவலர் பிரபாகரன், நிலைய மருத்துவர் பிரகாஷ், சமூக ஆர்வலர் அயோத்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    சிவகங்கை தொகுதியில் உள்ள மானகிரி இல்லத்தில் நான் நலமாக இருக்கிறேன் என்று ப.சிதம்பரம் எம்.பி. தகவல் தெரிவித்துள்ளார்.
    சிவகங்கை:

    சீனாவில் உருவாகி பல்வேறு நாடுகளுக்கும் பரவிய உயிர்க்கொல்லி நோய்க்கிருமியான கொரோனா உலகையே அச்சுறுத்தி வருகிறது.

    அனைத்து தரப்பு மக்களும் கொரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகின்றனர். மக்கள் நல பணியில் ஈடுபட்டுள்ள மாவட்ட கலெக்டர்கள், எம்.எல்.ஏ.க்கள். எம்.பி.க்கள், அமைச்சர்களையும் கொரோனா விட்டுவைக்கவில்லை.

    இந்நிலையில் சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் இல்லை என்றும், வீட்டில் தனிமையில் இருப்பதாகவும் கார்த்தி சிதம்பரம் எம்.பி. தகவல் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து சிவகங்கை தொகுதியில் உள்ள மானகிரி இல்லத்தில் நான் நலமாக இருக்கிறேன் என்று ப.சிதம்பரம் எம்.பி. தகவல் தெரிவித்துள்ளார்.

    கொரோனா உறுதியான கார்த்தி சிதம்பரம் சென்னையில் நலமாக இருக்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



    கம்பி வேலியில் மின்சாரம் பாய்ந்ததால் அதில் சிக்கிய பசு மாட்டை காப்பாற்ற சென்று பலியான பெண்ணின் உடலில் உருண்டு புரண்டு நாய் பாசப்போராட்டம் நடத்தியது நெகிழ்ச்சி அடையச் செய்தது.
    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ராஜகம்பீரம் பகுதியை சேர்ந்தவர் ராசு. அவருடைய மனைவி வேட்டைக்காள் (வயது 70). இவர், 3 பசுமாடுகளை வளர்த்து வந்தார். நாள்தோறும் வயல்களில் மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவார். தனது வீட்டில் நாய் ஒன்றையும் வேட்டைக்காள் வளர்த்தார். அதற்கு செல்லம் என பெயரும் வைத்தார். இந்த நாயானது, வேட்டைக்காள் மாடு மேய்க்க செல்லும்போது அவருக்கு துணையாக உடன் செல்லும்.

    நேற்று முன்தினம் இரவில் மானாமதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது, மின்வயர் ஒன்று அறுந்து வயல்காட்டில், ஒரு கம்பிவேலி மீது விழுந்தது. இதையடுத்து அந்த கம்பிவேலி முழுவதும் மின்சாரம் பாய்ந்தது. நேற்று காலையில் வேட்டைக்காள் தனது 3 பசு மாடுகளையும் மேய்ச்சலுக்கு அந்த பகுதியில் விட்டு இருந்தார். அவருடன் அந்த நாயும் சென்றிருந்தது.

    இந்த நிலையில், கம்பி வேலி அருகில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு பசுமாட்டின் மீதும் மின்சாரம் பாய்ந்து துடித்தது. இதைக்கண்ட வேட்டைக்காள் அந்த மாட்டை மீட்க ஓடிச் சென்றபோது அவரும் மின்சாரம் பாய்ந்திருந்த மின்கம்பி வேலியில் சிக்கியதால் அவர் பரிதாபமாக இறந்தார். கம்பி வேலியில் சிக்கிய பசுமாடும் சற்று நேரத்தில் பலியானது. அது சினை மாடு ஆகும்.

    இந்தநிலையில் வேட்டைக்காள் எழுந்து வராததை கண்டு அவர் வளர்த்து வந்த நாய், அங்கும் இங்கும் சென்று பரிதவிப்புடன் குரைத்துக் கொண்டிருந்தது. மேலும் வேட்டைக்காளின் மற்ற 2 மாடுகளையும் மின்வேலி அருகே வரவிடாமல் விரட்டியபடி இருந்தது.

    இதற்கிடையே நாயின் இந்த செயலை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த சிலர் ஓடிவந்து பார்த்தனர். அப்போது, வேட்டைக்காளும், பசுமாடும் கம்பி வேலியில் மின்சாரம் பாய்ந்ததால், அதில் சிக்கி இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து மின்வாரியத்துக்கு தகவல் கொடுத்து, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் வேட்டைக்காள் உடல் மீட்கப்பட்டது. இறந்து கிடந்த பசுமாடும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

    அப்போது உறவினர்களோடு அந்த நாயும் வேட்டைக்காளின் உடல் மீது உருண்டு, புரண்டு குரைத்து பாசப்போராட்டம் நடத்தியது. இது அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது. அந்த நாயை மற்றவர்கள் பிடித்து அழைத்துச் சென்றாலும், அது செல்ல மறுத்து மீண்டும் வேட்டைக்காளின் உடலில் உருண்டு புரண்டு தனது துக்கத்தை வெளிப்படுத்தியது. மேலும் தன்னை பிள்ளை போல் வளர்த்த வேட்டைக்காள் மீது அந்த நாய் எந்த அளவுக்கு விசுவாசமாக இருந்தது என்பதை இந்த காட்சிகள் உணர்த்துவதாகவும் அமைந்தன.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மானாமதுரை போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பத்தூர் அருகே கொள்ளுக்குடிப்பட்டிக்கு ஆண்டுதோறும் பறவைகள் இங்கு வந்து முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்தால் அந்த ஆண்டு விவசாயம் நன்கு செழிக்கும் என்பது கிராம மக்களின் நம்பிக்கையாகும்.
    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள வேட்டங்குடிப்பட்டி பறவைகள் சரணாலய பகுதியில் கொள்ளுக்குடிப்பட்டி கிராமம் உள்ளது.

    இந்த கிராமத்தில் 38 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கண்மாயில் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் இலங்கை, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பறவைகள், இங்கு வந்து கூடுகட்டி இனப்பெருக்கம் செய்து செல்லும்.

    ஆண்டுதோறும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அதிக அளவில் வெளிநாட்டு பறவைகள் இந்த பகுதிக்கு வரும். பின்னர் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் குஞ்சுகளுடன் நாடு திரும்பும். இவ்வாறு ஆண்டுதோறும் பறவைகள் இங்கு வந்து முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்தால் அந்த ஆண்டு விவசாயம் நன்கு செழிக்கும் என்பது கிராம மக்களின் நம்பிக்கையாகும்.

    இந்த சரணாலயத்திற்கு உண்ணிகொக்கு, முக்குளிப்பான், நீர்ச்சிறவி, சாம்பல் நிற நாரை, பாம்புதாரா, கருநீல அரிவாள் மூக்கன், கரண்டிவாயன், நத்தை கொத்தி நாரை உள்ளிட்ட ஏராளமான வகை பறவைகள் இங்கு வந்து செல்கின்றன. இந்த பகுதியில் போதிய மழையில்லாததால் கடந்த சில ஆண்டுகளாக குறைந்த அளவில் வந்த பறவைகள் கூடு கட்டாமலேயே டிசம்பர் மாதம் தொடக்கத்திலேயே திரும்பி சென்றன.

    ஆனால், தற்போது சில நாட்களாக இந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த கண்மாயில் தண்ணீர் பெருகியதுடன் இந்த பகுதி பசுமையாக காட்சி அளிக்கிறது. எனவே இந்த ஆண்டு சீசனுக்கு முன்னதாகவே வெளிநாட்டு பறவைகள் கூட்டம், கூட்டமாக வந்துள்ளன.

    இதுகுறித்து இக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கூறியதாவது:-

    ஆண்டுதோறும் எங்கள் கிராமத்தில் உள்ள பறவைகள் சரணாலயத்திற்கு ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வந்து இனப்பெருக்கம் செய்வது வழக்கம். எங்கள் கிராமத்தில் உள்ள வீடுகளில் குழந்தைபோல் இந்த பறவைகளை பாவித்து வருகிறோம்.

    இந்த பறவைகளுக்காகவே எங்கள் கிராமத்தில் தீபாவளி தினத்தன்று அதிக சத்ததுடன் வெடிக்கும் பட்டாசுகள் மற்றும் இரவு நேர பட்டாசுகளை வெடிக்காமல் இன்று வரை கட்டுப்பாட்டை கடைபிடித்து வருகிறோம். பொதுவாக எங்கள் கிராமத்திற்கு வெளிநாட்டு பறவைகள் வந்தால் அந்த ஆண்டு நல்ல மழை பெய்து, விவசாயம் செழிக்கும் என்பது இன்றளவும் நம்பிக்கை. இந்த ஆண்டு சீசன் தொடங்குவதற்கு முன்னதாகவே வெளிநாட்டு பறவைகள் வரத்தொடங்கி உள்ளன. எனவே இந்த ஆண்டு நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    காரைக்குடி பகுதியில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க கோரி இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணி கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த பணியானது பெரும்பாலான இடங்களில் நிறைவு பெற்று ஒரு சில இடங்களில் நடைபெற்று வருகிறது. 

    இந்நிலையில் காரைக்குடி முதல் பீட் பகுதியில் இந்த பணிக்காக சாலையில் குழிகள் தோண்டப்பட்டு பணி நிறைவு பெற்றது. இதன் பின்னர் இந்த சாலையானது குண்டும், குழியுமாக காணப்பட்ட நிலையில் மழைக்காலங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. 
    இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில் இந்த சாலையை சீரமைக்ககோரி நேற்று இந்து முன்னணியினர் அக்னிபாலா தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் பூச்செடிகளுடன் அங்கு வந்து குண்டும், குழியுமான சாலையில் நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவாமல் தடுக்கும் வகையில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம் மூலம் 43 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட சுகாதாரப்பணிகளின் துணை இயக்குனர் யசோதாமணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள 12 வட்டாரங்களில், ஒரு வட்டாரத்திற்கு தலா 3 இடம் வீதம் சிறப்பு காய்ச்சல் தடுப்பு சிகிச்சை முகாம் நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில் இதுவரை 1,160 முகாம் நடத்தப்பட்டு அதில் 43 ஆயிரத்து 17 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த முகாம்கள் மூலம் தேவைபடுபவர்களுக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு சுமார் 700 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 29 ஆயிரத்து 364 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    பொதுமக்களில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் ஆகியோர் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஜிங் மற்றும் வைட்டமின் மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனையின்படி சாப்பிட வேண்டும். கபசுர குடிநீரை தொடர்ந்து 3 நாட்கள் வரை குடிக்க வேண்டும். அடிக்கடி சூடான குடி நீரையும் குடிக்க வேண்டும். பொதுமக்களுக்கு ஏதேனும் காய்ச்சல், சளி, இருமல் மற்றும் மூச்சுத்திணறல் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக ஆலோசனை மற்றும் புகார்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்ணை 1077 தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    சிங்கம்புணரி அருகே குளிக்கச்சென்ற இடத்தில் கல்குவாரி நீரில் மூழ்கி அண்ணன்- தங்கை பரிதாபமாக உயிரிழந்தனர்.
    சிங்கம்புணரி:

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள அரளிப்பட்டி முத்தரையர் காலனியை சேர்ந்தவர் பாண்டிமுருகன் (வயது 35). இவர் மலேசியாவில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி இந்திரா (31). இவர்களது மகன் சின்னப்பாண்டி (11), மகள் சுபிக்‌ஷா (8). சின்னப்பாண்டி அங்கு உள்ள அரசுப்பள்ளியில் 6-ம் வகுப்பும், சுபிக்‌ஷா 3-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று மாலை இந்திராவின் அக்காள் மகள் பாண்டிமீனா (23) அருகில் உள்ள வண்ணான்மலையடி என்ற பகுதியில் உள்ள கல்குவாரிக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது அவர் சின்னப்பாண்டி, சுபிக்‌ஷா ஆகிய 2 பேரையும் துணைக்கு அழைத்து சென்றார். சுமார் 30 அடி ஆழ கல்குவாரியில் தண்ணீர் நிரம்பி இருந்தது. அதில் பாண்டிமீனா குளித்துக்கொண்டு இருந்தார். குழந்தைகள் 2 பேரும் அருகில் விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர்.

    இந்தநிலையில் திடீரென அவர்களை காணவில்லை. இதையடுத்து பாண்டிமீனா வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கும் அவர்கள் இல்லை. இதையடுத்து அவர் உறவினர்களுடன் மீண்டும் கல்குவாரிக்கு சென்று தேடியபோது குழந்தைகள் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தனர்.

    இதையடுத்து அவர்களது உடல்களை மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர். அவர்களது உடலை கண்டு தாய் இந்திரா, உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதியை சேர்ந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த எஸ்.வி.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகர் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று குழந்தைகளின் உடல்களை கைப்பற்றி சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

    மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    கொரோனா நோய் தொற்றை தடுக்க சிக்ரி குழுமத்தோடு கூட்டு ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளதாக தொழில் நுட்ப குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள மத்திய மின் வேதியியல் ஆய்வகத்தில் (சிக்ரி) 73-வது நிறுவன நாள் விழா நடைபெற்றது. இணைய வழியில் நடைபெற்ற விழாவிற்கு புதுடெல்லியில் உள்ள மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி குழும செயலர் சேகர் சி மாண்டே தலைமை தாங்கினார். காரைக்குடி சிக்ரி இயக்குனர் டாக்டர் கலைச்செல்வி வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்ப குழுவின் தலைவர் அஜித்வி சாப்ரே கலந்துகொண்டு தற்சார்பு இந்தியாவில் கல்வி அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் பங்கு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:- வருங்காலத்தில் நமது தொழில் நுட்ப உத்திகளை பயன்படுத்தி வெளிநாட்டில் இருந்து தொழில் நுட்பங்களை இறக்குமதி செய்யாமல் உள்நாட்டு தொழில் நுட்பங்களுடன் தற்சார்பு உற்பத்தி மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும். இதற்கு உதாரணமாக அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி குழுமத்தின் ஆய்வகங்களான காரைக்குடியில் உள்ள மத்திய மின் வேதியியல் ஆய்வகம், டெராடூனில் உள்ள இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் பெட்ரோலியம், புனேயில் உள்ள தேசிய வேதியியல் ஆய்வகம் ஆகியவை கார்பன்டை ஆக்சைடை சேகரித்தல் மற்றும் அதனை எரிபொருளாக மாற்றம் செய்தல், மின்கலம் மற்றும் எரிபொருள் மின்கலத்துறை மூலம் பென்சீன் பிரித்தெடுத்தல், உயிரி எரிபொருள், மின்கலம் ஆகிய துறைகளில் நடத்தி வரும் ஆராய்ச்சிகளை மேற்கோளாக கொள்ளலாம்.

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்ப துறையில் கழிவில் இருந்து மறுசுழற்சி செய்வதன் மூலம் பயனுள்ள பொருட்களை பாசிகள் மூலம் லாபகரமாக உற்பத்தி செய்கிறது. தற்சார்பு பொருளாதாரத்தை அடைதலின் ஒரு பகுதியாக தற்போது உள்ள கொரோனா நோய் தொற்றுக்காக மருந்து பொருளை மிக குறைந்த விலையில் உற்பத்தி செய்ய சி.எஸ்.ஐ.ஆர்(சிக்ரி) குழுமங்களில் ஒன்றான புனேயில் உள்ள இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் இண்டெக்ரேடிவ் மெடிசின் ஆய்வகத்துடன் கூட்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.

    மேலும் வினையூக்கி விரிசல் வழியாக வாயுவாக்கம் தொழில் நுட்பத்தில் வாயுயிறக்கம் செய்து அந்த தொழில் நுட்பத்தின் மூலம் தற்சார்பு பொருளாதாரத்தை அடைய முடியும். மனித சக்தி டிஜிட்டல் மற்றும் உயிரியல் சக்தி மூலம் 4-வது தொழில் புரட்சியை இந்தியாவில் ஏற்படுத்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முனைப்பு காட்டி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். அதன் பின்னர் சிக்ரி வளாகத்தில் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட பி.டெக் மாணவிகள் விடுதியை திறந்து வைத்தார். தொழில் ஆராய்ச்சி குழுமத்தின் செயலர் சேகர் சி மாண்டே சிக்ரி வளாகத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட சமுதாய கூடத்தை திறந்து வைத்தார். விழாவில் கவுரவ விருந்தினர்களாக சென்னை பிராட்லைன் டெக்னாலஜீஸ் முதல்வர் ஆறுமுகம், ஐதராபாத் ஐ.ஐ.டி. பேராசிரியர் முனைவர் நிஷாந்த்டொங்கரி ஆகியோர் கலந்துகொண்டனர். முடிவில் முதன்மை விஞ்ஞானி வேலாயுதம் நன்றி கூறினார்.
    கொரோனா பரவாமல் தடுக்க பொதுமக்கள் முககவசம் அணிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் மருத்துவ கல்லூரி முதல்வர் ரெத்தினவேல், மருத்துவகல்லூரி மருத்துவ அலுவலர் மீனாள், சுகாதாரத்துறை இணைஇயக்குனர் இளங்கோ மகேசுவரன், ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், மகளிர் திட்ட அலுவலர் அருண்மணி, துணை இயக்குனர்கள் யசோதாமணி, யோகவதி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஜயநாதன், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ராஜா மற்றும் நகராட்சி ஆணையாளர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் ஒவ்வொரு அதிகாரியும் தங்கள் பகுதிகளில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும் கொரோனா சிகிச்சையில் எத்தனை பேர் உள்ளனர். எத்தனை பேர் குணமடைந்து வீடுதிரும்பி உள்ளனர் என்று தெரிவித்தனர்.

    பின்னர் கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேசியதாவது:-

    கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். அனைவரையும் குணப்படுத்த வேண்டும். மேலும் நோய் தாக்குதலால் இறந்தவர்களின் உடலை வழங்கும்போது மதசடங்குகளை பின்பற்ற உதவ வேண்டும். அத்துடன் அனைத்து பொதுமக்களும் முககவசம் அணிய உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் முககவசம் அணிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் மருத்துவ கல்லூரி முதல்வர் ரெத்தினவேல், மருத்துவகல்லூரி மருத்துவ அலுவலர் மீனாள், சுகாதாரத்துறை இணைஇயக்குனர் இளங்கோ மகேசுவரன், ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், மகளிர் திட்ட அலுவலர் அருண்மணி, துணை இயக்குனர்கள் யசோதாமணி, யோகவதி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஜயநாதன், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ராஜா மற்றும் நகராட்சி ஆணையாளர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் ஒவ்வொரு அதிகாரியும் தங்கள் பகுதிகளில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும் கொரோனா சிகிச்சையில் எத்தனை பேர் உள்ளனர். எத்தனை பேர் குணமடைந்து வீடுதிரும்பி உள்ளனர் என்று தெரிவித்தனர்.

    பின்னர் கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேசியதாவது:-

    கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். அனைவரையும் குணப்படுத்த வேண்டும். மேலும் நோய் தாக்குதலால் இறந்தவர்களின் உடலை வழங்கும்போது மதசடங்குகளை பின்பற்ற உதவ வேண்டும். அத்துடன் அனைத்து பொதுமக்களும் முககவசம் அணிய உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எஸ்.புதூர் பகுதியில் மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    எஸ்.புதூர்:

    சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் பகுதியில் உலகம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெள்ளைச்சாமி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எஸ்.புதூர் அரசு டாஸ்மாக் கடை அருகில் உள்ள புளியமரம் தோப்பில் கட்டுகுடிபட்டி கிராமத்தை சேர்ந்த அழகு மகன் மாமுனி (வயது 35) மது விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து 13 மதுபாட்டில்களுடன் மாமுனியை கைது செய்து உலகம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×