search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செங்கல் சுவர்
    X
    செங்கல் சுவர்

    கீழடியில் அகழாய்வு பணி- செங்கல் சுவர் கண்டுபிடிப்பு

    கீழடியில் அகழாய்வு பணியின்போது புதிய குழி தோண்டியபோது சுமார் 5 அடி ஆழத்தில் புதிதாக ஒரு செங்கல் சுவர் இருப்பது தெரிய வந்தது.
    திருப்புவனம்:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடி, மணலூர், கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளில் 6-வது கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. கீழடியில் ஏற்கனவே 8-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு ஆராய்ச்சி பணிகள் நடைபெற்றபோது அதில் சிறிய, பெரிய பானைகள், விலங்கின எலும்புக் கூடு, பலவரிசைகள் கொண்ட செங்கல் சுவர், வாய்க்கால் பகுதி போன்ற அமைப்பு, கருங்கல்லினால் ஆன 4 எடைகற்கள், கண்ணாடி மூலப்பொருட்கள், இரும்பு உலை கண்டுபிடிக்கப்பட்டன.

    இந்நிலையில் மேலும் குழிகள் தோண்டி ஆராய்ச்சி பணிகள் நடைபெற்றபோது அதில் அகலமான செங்கல் சுவர் அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று புதிய குழி தோண்டி ஆராய்ச்சி நடைபெற்றபோது அதில் சுமார் 5 அடி ஆழத்தில் புதிதாக ஒரு செங்கல் சுவர் இருப்பது தெரிய வந்தது. மேலும் அதை தோண்டி ஆராய்ச்சி செய்தால் அதன் விரிவாக்கம் தெரிய வரும். இதுதவிர கூடுதல் குழிகள் தோண்டப்பட்டு வருகிறது. 
    Next Story
    ×