என் மலர்
சிவகங்கை
காளையார் கோவில் அருகே கோவிலுக்கு சென்றபோது நடந்த விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தேவகோட்டை:
மதுரை முல்லை நகரைச் சேர்ந்தவர் ராஜா (வயது 52). தத்தனேரியைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம் மனைவி அல்லிராணி (45), ஆறுமுகம் (65).
இவர்கள் உள்பட 11 பேர் சிவகங்கை மாவட்டம், திருவெற்றியூரில் உள்ள பாகம்பிரியாள் கோவிலுக்கு இன்று காலை காரில் புறப்பட்டனர்.
8 மணியளவில் சிவகங்கை மாவட்டம், காளையார் கோவிலை அடுத்துள்ள உழவூரணி மெயின் ரோட்டில் கார் வந்து கொண்டிருந்தது.
அப்போது அங்குள்ள வளைவில் கார் வேகமாக திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ரோட்டோரத்தில் கவிழ்ந்தது. காரில் இருந்தவர்கள் கூக்குரலிட்டனர். உடனே அந்தப்பகுதி மக்கள் காரில் சிக்கியவர்களை மீட்டனர்.
இந்த விபத்தில் அல்லி ராணி, ஆறுமுகம் ஆகியோர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதில் ஆறுமுகத்தின் சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி ஆகும்.
உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ராஜாவை மீட்ட பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜா பரிதாபமாக இறந்தார்.
காரில் பயணம் செய்த மற்ற 8 பேர் காயங்களுடன் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக காளையார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவிலுக்கு சென்றபோது நடந்த விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் கீழடியிலும் பிறகு கொந்தகை, அகரம் பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
திருப்புவனம்:
திருப்புவனம் யூனியனைச் சேர்ந்தது கீழடி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மத்திய-மாநில அரசுகளின் தொல்லியல்துறை சார்பில் ஏற்கனவே 5 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த வருடம் 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் மாநில தொல்லியல் துறை சார்பில் கீழடி மற்றும் கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் நடைபெற்றது. இதில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அந்த பொருட்களை ஆய்வு செய்யும்போது 2,600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பழங்கால தமிழர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி தெரிய வந்துள்ளது. தற்போது 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் கீழடியிலும் பிறகு கொந்தகை, அகரம் பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. கீழடியில் ஒரு குழியில் பாசி, மணிகள், சில்லுவட்டுக்கள் மற்றும் பானை ஓடுகள் கிடைத்துள்ளன. கொந்தகையில் வாய்ப்பகுதி மூடிய நிலையில் முழுமையான முதுமக்கள் தாழியும் மற்றும் சேதமடைந்த நிலையில் பல முதுமக்கள் தாழிகளும், மண் கிண்ணங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அகரத்தில் ஒரு குழியில் சேதமான பானையும் தொடர்ந்து அதே குழியில் ஆழமாக தோண்டும்போது தானியங்கள் சேகரித்து வைக்கும் தாழி (மண் குலுமை) கண்டறியப்பட்டு உள்ளது. இந்தநிலையில் கீழடியில் 2-வது குழி தோண்டப்பட்டு வந்தது. இந்த குழியில் சுமார் 9 அடி ஆழத்தில் தோண்டும்போது சேதமுற்ற நிலையில் சிறிய பானைகள், சிறிய மண் கிண்ணங்கள் மற்றும் பழங்கால வெள்ளை பாசிகள் ஆகியவை கிடைத்துள்ளன.
மேலும் குழியில் சேதமடைந்த நிலையில் அதிக மண்பாண்ட ஓடுகளும் கிடைத்துள்ளன. பழங்கால வெள்ளை பாசி கிடைத்ததால் மேலும் சிறிய பொருட்கள் அதிகம் கிடைக்கும் எனவும் தெரிய வருகிறது. இதனால் குழிக்குள் அள்ளிய மணலை சல்லடையில் போட்டு பணியாளர்கள் சலித்து வருகின்றனர்.தொடர்ந்து பணிகள் நடைபெறும் போது மேலும் பல பொருட்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து உள்ளது. எனவே பொதுமக்கள் முககவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்தது. பின்னர் இது படிப்படியாக குறைந்தது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த 6-ந்தேதி 33 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கடந்த ஆண்டை விட தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதாக தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை, தொற்றை கட்டுப்படுத்துவதில் அடுத்த 4 வாரங்கள் முக்கியமானவை என்று எச்சரித்துள்ளது.
இதனால் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி உத்தரவின் பேரில் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரியில் கொரோனா நோயாளிகளுக்காக கூடுதல் படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் தேவைக்கு ஏற்ப ஏற்கனவே இருந்த பழைய மருத்துவமனையையும் பயன்படுத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர காரைக்குடி மற்றும் தேவகோட்டை பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் சுகாதாரத்துறை மூலம் அமராவதிபுதூரில் சிறப்பு மருத்துவமனை திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதோடு கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில் மாவட்டத்தில் நேற்று 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 50 பேர் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 5 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள்.

திருப்பத்தூர் அருகே தேர்தல் பணிக்கு வந்த ஆசிரியர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர்:
சிவகங்கை மாவட்டம் கல்லல், திருவேகம்புத்தூர் அருகே பொன்னளிக்கோட்டையை சேர்ந்தவர் ரஜினிகாந்த் (வயது 40). இவர் திருப்பத்தூர் அருகே எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் புதூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தேர்தல் பணிக்காக நேற்று முன்தினம் காரையூருக்கு வந்தார்.அவருக்கு திடீரென்று உடல்நிலை சரி இல்லாததால் மாற்று அலுவலர் நியமிக்கப்பட்டார். காரையூரில் தங்கி இருந்த அவர் நேற்று சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கண்டவராயன்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குகன் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.
தமிழகத்தில் இன்று 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதில் சிவகங்கை மாவட்டத்தில் 65.66 சதவீத வாக்குப்பதிவு பதிவாகின.
சிவகங்கை :
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற தேர்தலில் 71.79 சதவீத வாக்குகள் பதிவாகின.
அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78 சதவீதம் வாக்குகளும், குறைந்தபட்சமாக சென்னை மாவட்டத்தில் 59.40 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
சிவகங்கை மாவட்டத்தில் 65.66 சதவீத வாக்குப்பதிவு பதிவாகின. தேர்தல் ஆணைய செயலியில் உள்ள தகவலின் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வாரியாக பதிவான வாக்குகள் விவரம்:-
காரைக்குடி - 66.22%
மானாமதுரை - 71.87%
சிவகங்கை - 65.66%
திருப்பத்தூர் - 72.01%

100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி வாக்குச்சாவடி மையம் திருமண வீடு போல வாழை மரம், தோரணங்கள் கட்டி அழகுபடுத்தப்பட்டிருந்தது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா, வெளியாத்தூர் ஊராட்சியில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி வாக்குச்சாவடி மையம் திருமண வீடு போல வாழை மரம், தோரணங்கள் கட்டி அழகுபடுத்தப்பட்டிருந்தது. அங்கு வாக்களிக்க வந்த வாக்காளர்களுக்கு பன்னீர் தெளிக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டன.
ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கலைவாணன், கிராம அலுவலர் பிரகாஷ் ஆகியோரது கூட்டு முயற்சியில் வாக்குச்சாவடி மையம் இவ்வாறு மாற்றப்பட்டிருந்தது. இதனை கண்ட கிராம மக்கள் ஆர்வத்துடன் வந்து சமூக இடைவெளியை கடைபிடித்து வாக்களித்தனர்.
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது சொந்த ஊரான காரைக்குடி அருகே உள்ள கண்டனூரில் தனது வாக்கை பதிவு செய்தார்.
காரைக்குடி:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

அதன்பின்னர் ப.சிதம்பரம் கூறியதாவது:-
நான் யாருக்கு வாக்களித்திருப்பேன் என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எங்களுடைய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மிகப்பெரிய வெற்றியை எங்களுக்கு தரும் என்ற நம்பிக்கை உள்ளது.
காரைக்குடி தொகுதியும் அந்த வழியிலே மிகப்பெரிய வெற்றியை பெறும். தமிழகத்தில் மக்களிடையே உள்ள ஆட்சி மாற்றம் தேவை என்ற ஆர்வம், வேகம் எங்களுக்கு புரிகிறது. அந்த ஆர்வமும், வேகமும், தேவையும் இந்த தேர்தலிலே பிரதிபலித்து மே மாதம் 2-ந்தேதி வாக்குகள் எண்ணப்படும்போது நாங்கள் சொன்னது உண்மை என மெய்ப்பிக்கப்படும் என்பதை நான் இங்கு அழுத்தமாக சொல்லிக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது சொந்த ஊரான காரைக்குடி அருகே உள்ள கண்டனூரில் தனது வாக்கை பதிவு செய்தார். அங்குள்ள சிட்டாள் ஆச்சி உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு சென்று அவர் வாக்களித்தார்.

நான் யாருக்கு வாக்களித்திருப்பேன் என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எங்களுடைய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மிகப்பெரிய வெற்றியை எங்களுக்கு தரும் என்ற நம்பிக்கை உள்ளது.
காரைக்குடி தொகுதியும் அந்த வழியிலே மிகப்பெரிய வெற்றியை பெறும். தமிழகத்தில் மக்களிடையே உள்ள ஆட்சி மாற்றம் தேவை என்ற ஆர்வம், வேகம் எங்களுக்கு புரிகிறது. அந்த ஆர்வமும், வேகமும், தேவையும் இந்த தேர்தலிலே பிரதிபலித்து மே மாதம் 2-ந்தேதி வாக்குகள் எண்ணப்படும்போது நாங்கள் சொன்னது உண்மை என மெய்ப்பிக்கப்படும் என்பதை நான் இங்கு அழுத்தமாக சொல்லிக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இளையான்குடி அருகே உள்ள ஆரிப் நகரைச் சேர்ந்தவர்கள் காவிரி கூட்டுக்குடிநீர் கேட்டு நேற்று முன்தினம் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இளையான்குடி:
இளையான்குடி அருகே உள்ள ஆரிப் நகரைச் சேர்ந்தவர்கள் காவிரி கூட்டுக்குடிநீர் கேட்டு நேற்று முன்தினம் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கியதாக சேகர், ஹாசி பெனடிக்தாஸ், சரவணன், குமார் உள்ளிட்ட 54 பேர் மீது இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அனுமதியின்றி கொரோனா கால விழிப்புணர்வு இல்லாமலும், பொதுமக்களுக்கு இடையூறாக போராட்டம் நடத்தியதாக அவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஓட்டுப்போடுவதற்கு மக்கள் பணத்தை பெற்றுக் கொள்வது அவர்களது மனநிலையை பொருத்தது. ஆனால் இந்திய மக்கள் மீதும், தமிழக மக்கள் மீதும் எனக்கு நம்பிக்கை உண்டு. மக்கள் ஜனநாயகத்தை எப்போதும் காப்பாற்றுவார்கள்.
காரைக்குடி:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் காரைக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் வந்துள்ளனர். அவர்கள் வரவர தமிழக மக்கள் பா.ஜனதாவின் உண்மை மனநிலை, உண்மை முகத்தை அறிந்து கொள்வார்கள்.
பிரதமர் மோடி தமிழகத்தில் இருந்த 2 நாட்களில் மு.க.ஸ்டாலின் மகள், மருமகன் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகிறார்கள். தேர்தல் நேரத்தில் யார் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தலாம் என்பது எல்லாம் பா.ஜனதாவுக்கு கை வந்த கலை.
பா.ஜனதா, அ.தி.மு.க. வேட்பாளர்களிடமும், அ.தி.மு.க. அமைச்சர்களிடமும் வருமானவரி சோதனை நடத்த மாட்டார்கள்.

நான் பார்த்த அனைத்து ஆய்வு முடிவுகளிலும் தி.மு.க., காங்கிரஸ் அமைத்துள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 175 அல்லது 180 இடங்களில் வெற்றிபெறும் என்பதை அறிய முடிகிறது. இது தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை வரவேற்பதை காட்டுகிறது.
பெரும்பான்மை கிடைக்காமல் போனால் பா.ஜனதா குறுக்கு வழியில் எம்.எல்.ஏ.க்களை மிரட்டி ஆட்சி அமைக்க முயற்சிப்பார்கள். ஆனால் அதற்கு தமிழக மக்கள் இடம் கொடுக்கமாட்டார்கள். தமிழகத்தில் அதற்கான வேலையும் இல்லை.
தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியைதர தமிழக மக்கள் தயாராகி விட்டனர். தமிழகத்தில் பா.ஜனதாவின் கால் நகம் கூட பதியவிடமாட்டோம்.
ஓட்டுப்போடுவதற்கு மக்கள் பணத்தை பெற்றுக் கொள்வது அவர்களது மனநிலையை பொருத்தது. ஆனால் இந்திய மக்கள் மீதும், தமிழக மக்கள் மீதும் எனக்கு நம்பிக்கை உண்டு. மக்கள் ஜனநாயகத்தை எப்போதும் காப்பாற்றுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் ஏற்கனவே பல வேட்பாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிவகங்கை:
சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளராக குணசேகரன் (வயது66) போட்டியிடுகிறார். இவர் கட்சி தொண்டர்களுடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

உடனே வேட்பாளர் குணசேகரன் அதே ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதைத்தொடர்ந்து அவருடன் பிரசாரத்தில் ஈடுபட்ட கட்சி நிர்வாகிகளுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் ஏற்கனவே பல வேட்பாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது அரசியல் கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் அவருக்கு சளி, இருமல் இருந்தது. இதையடுத்து அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதிபடுத்தப்பட்டது.

உடனே வேட்பாளர் குணசேகரன் அதே ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதைத்தொடர்ந்து அவருடன் பிரசாரத்தில் ஈடுபட்ட கட்சி நிர்வாகிகளுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் ஏற்கனவே பல வேட்பாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது அரசியல் கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
'காங்கிரஸ், திமுக ஊழலில் திளைத்த கட்சிகளை அப்புறப்படுத்தப்பட வேண்டும் என காரைக்குடியில் பாஜக தேசியச் செயலாளர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அத்தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜவை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது பாஜக தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது:
தமிழ் மொழி உலகின் பழமையான மொழி. அது முழுமையான இலக்கணத்தை உடையது. பிரதமர் மோடி ஐ.நா., சபையில் 'யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று பேசி தமிழின் பெருமையை உலகறியச் செய்தார்.
தமிழகத்தில் அதிமுக, பாஜக இணைந்து தமிழகத்தை தேசிய நீரோட்டத்தில் இணைக்க முயற்சிக்கிறது. ஆனால், எதிர்கட்சி குடும்ப அரசியல் செய்ய நினைக்கிறது. அக்கட்சி மூன்றாவது முறையும் தோற்கடிக்கப்பட வேண்டும்.
காங்கிரஸ் திமுக ஊழலில் ஊறித் திளைத்தவை. 2 ஜி என்றால் இரண்டு தலைமுறை மாறன் குடும்பம். 3 ஜி என்றால் 3 தலைமுறை கருணாநிதி குடும்பம். 4 ஜி என்றால் காங்கிரஸில் நேரு குடும்பம். கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லீம் லீக் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. இது மதவாத ரீதியான கூட்டணி. ஆனால் எங்களை மதவாத கட்சி என்கின்றனர். நாங்கள் மதவாத கட்சி கிடையாது.
திமுகவினர் பெண்களை இழிவாக பேசி வருகின்றனர். ஆட்சியில் இல்லாத போதே இப்படி என்றால் ஆட்சிக்கு வந்தபிறகு எப்படி பேசுவார்கள். திமுக - காங்கிரஸ் ஆகியவை அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டிய கட்சிகள்.
காங்கிரஸ் கட்சி உள்ளூர் மக்களின் உணர்வுகளை மதிக்கிற கட்சி இல்லை. அவர்கள் ஆட்சியில் தான் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதை தடுத்து நிறுத்தியது பிரதமர் மோடி தான். தமிழகர்கள் நலனில் மிகுந்த அக்கறைகொண்டது மோடி அரசு.
டிஎம்கே என்றால் 'டி பார் டைனஸ்டி' அதாவது வாரிசு அரசியல், 'எம் பார் மணி' 'சி பார்' கட்ட பஞ்சாயத்து. இந்த மூன்றையும் பிரதிபலிக்கும் திமுகவை புறக்கணிப்போம். நீண்ட கால பழக்கமுள்ள ஹெச்.ராஜாவை வெற்றி பெற வைப்போம், என்றார்.
தமிழக சட்டசபை தேர்தலில், 5 முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் சிவகங்கை மாவட்ட தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார், யார்? என்பதை பார்ப்போம்.
-