search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு

    சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து உள்ளது. எனவே பொதுமக்கள் முககவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்தது. பின்னர் இது படிப்படியாக குறைந்தது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த 6-ந்தேதி 33 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    கடந்த ஆண்டை விட தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதாக தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை, தொற்றை கட்டுப்படுத்துவதில் அடுத்த 4 வாரங்கள் முக்கியமானவை என்று எச்சரித்துள்ளது.

    இதனால் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி உத்தரவின் பேரில் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரியில் கொரோனா நோயாளிகளுக்காக கூடுதல் படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் தேவைக்கு ஏற்ப ஏற்கனவே இருந்த பழைய மருத்துவமனையையும் பயன்படுத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர காரைக்குடி மற்றும் தேவகோட்டை பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் சுகாதாரத்துறை மூலம் அமராவதிபுதூரில் சிறப்பு மருத்துவமனை திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அதோடு கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

    இந்த நிலையில் மாவட்டத்தில் நேற்று 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 50 பேர் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 5 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள்.
    Next Story
    ×