என் மலர்
சிவகங்கை
முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.
சிவகங்கை:
கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த இன்று(திங்கட்கிழமை) முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கை கடைபிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிப்பது குறித்து அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, ஏற்கனவே 25.3.2020 முதல், தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்து வந்த நிலையில் நோய்த்தொற்று அதிகளவில் பரவுவதை கருத்தில் கொண்டு தற்போது ஊரடங்கினை இன்று 24-ந்தேதி முதல் மேலும் ஒருவாரகாலத்திற்கு முழுமையாக எவ்விதத் தளர்வுகளுமின்றி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்கள், பால் வினியோகம், குடிநீர் வினியோகம் தடையின்றி நடைபெறும். மேலும் தினசரி பத்திரிகை வினியோகம் செய்ய எந்தவித தடை இல்லை.
பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள். பழங்கள் ஆகியவைகளை, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் தோட்டக்கலைத்துறையுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படும்.
உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
மேலும், உரிய மருத்துவக் காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவுடன் அனுமதிக்கப்படும். மருத்துவக் காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பதிவு தேவையில்லை. செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கலாம்.
முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து கொரோனா நோய்த்தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு)சிந்து, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முரளிதரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது)ரத்தினவேல், வருவாய் கோட்டாட்சியர்கள் முத்துக்கழுவன் (சிவகங்கை), சுரேந்திரன் (தேவகோட்டை), மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார். கொரோனா தடுப்பூசியை அதிகரிக்க வலியுறுத்தினர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட கொரோனா தடுப்பு பணிகள் கண்காணிப்பு அலுவலராக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசு முதன்மை செயலர் கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக அவர் வந்தார்.
பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் சென்று அவர் ஆய்வு செய்தார். அப்போது ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று பரிசோதனைக்கு எத்தனை நபர்கள் வருகிறார்கள் என்பதை கேட்டறிந்தார். கொரோனா தடுப்பூசி போடுவதற்கான எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
அப்போது மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் யசோதாமணி ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தார். அத்துடன் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை உடனுக்குடன் பரிசோதித்து வார்டுகளில் சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் 3-ம் தளத்தில் சிகிச்சை வழங்கும் பகுதியிலிருந்து தரைத்தளத்தில் உள்ள மருத்துவர்களிடம் தகவல் பரிமாறிக்கொள்ள ஏதுவாக தொலைபேசி மற்றும் ஒலிபெருக்கி வசதியை உடனடியாக அமைத்திட மருத்துவக்கல்லூரி முதல்வருக்கு உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதை பார்வையிட்டார்.
அவருடன் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி, மருத்துவமனை டீன் சங்குமணி, மருத்துவ அலுவலர் டாக்டர் மீனாள் மற்றும் டாக்டர்கள் உடன் சென்றனர்.பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டார்.
அமைச்சர் பெரிய கருப்பனை, முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்பு கொண்டு, தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், ஊரக வளர்ச்சி துறை அமைச்சருமான கே.ஆர். பெரிய கருப்பனின் தாயார் கரு. கருப்பாயி அம்மாள் இன்று அதிகாலை காலமானார்.
இதையொட்டி அவரது உடலுக்கு அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் சிவகங்கை மாவட்ட எம்.எல். ஏ.க்கள், தி.மு.க. நிர்வாகிகள், அனைத்து கட்சியினர், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
கரு.கருப்பாயி அம்மாள் இறுதி சடங்கு திருப்பத்தூர் அருகே உள்ள அரளிக்கோட்டை கிராமத்தில் இன்று மாலை நடக்கிறது.
அமைச்சர் பெரிய கருப்பனை, முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்பு கொண்டு, தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார்.
முழு ஊரடங்கு காலத்திலும் இளையான்குடி பகுதியில் தேவையின்றி மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்த 29 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இளையான்குடி:
முழு ஊரடங்கு காலத்திலும் இளையான்குடி பகுதியில் தேவையின்றி மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்த 29 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அவர்கள் சென்ற இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
தற்போது கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் அரசு விதிக்கும் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். தேவையின்றி வெளியே வாகனங்களில் சுற்றக்கூடாது. தேவையின்றி சுற்றி திரிந்தவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது. மீறி தொடர்ந்து சுற்றி திரிந்தால் அபராத தொகை விதிக்கப்படும்.
எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தினர்.
முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்ட அட்டைக்காக சிவகங்கை கலெக்டர் அலுவலகத்துக்கு ஆம்புலன்சில் கொரோனா நோயாளி வந்தார். இதை அறிந்ததும் அலுவலர்கள் ஓட்டம் பிடித்த நிலையில், கலெக்டர் அந்த நோயாளியிடம் விசாரணை நடத்தினார்.
சிவகங்கை:
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று பகலில் ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. அதில் நோயாளி ஒருவர் படுத்திருந்தார். ஆம்புலன்ஸ் டிரைவர் கலெக்டர் அலுவலக வாசலில் நின்று கொண்டிருந்தவர்களிடம், முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கு பதிவு செய்யும் இடம் எங்குள்ளது? என்று கேட்டார். அங்கிருந்தவர்கள் அந்த இடத்தை காட்டினார்கள்.
பின்னர் ஆம்புலன்சில் உள்ளவர் யார்? என்ற விசாரித்தனர். அப்போது, அதில் இருப்பது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளி என டிரைவர் தெரிவித்தார். இதை கேட்டதும் அங்கிருந்தவர்களும், அலுவலர்களும் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
இது குறித்து மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் அங்கு வந்து ஆம்புலன்ஸ் டிரைவரிடம், நோயாளியிடமும் விசாரித்தார்.

அப்போது, ஆம்புலன்சில் இருந்த நோயாளி திருப்புவனம் அருகேயுள்ள லாடனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் என்பதும், கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்புக்குள்ளான அவர், மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது.
அவர் முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பெற முடிவு செய்துள்ளார். ஆனால் காப்பீட்டு திட்டத்தில் அவர் பதிவு செய்யவில்லை.
இதை தொடர்ந்து அவரது உறவினர் ஒருவர், சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கான அலுவலகத்தை அணுகி, அங்குள்ள அலுவலரிடம் கேட்டதற்கு பாதிப்புக்குள்ளானவரை நேரில் அழைத்து வரும்படி தெரிவித்தார்களாம். இதனை தொடர்ந்து அவரை ஆக்சிஜன் வசதியுள்ள ஆம்புலன்ஸ் மூலம் சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் உள்ள சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள காப்பீடு திட்ட அலுவலகத்திற்கு அழைத்து வந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து பாதிப்புக்குள்ளானவரை உடனடியாக ஏற்கனவே சிகிச்சை பெற்ற ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும்படி கலெக்டர் தெரிவித்தார். மேலும் அங்கிருந்த காப்பீடு திட்ட அதிகாரிகளிடம் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு காப்பீடு அட்டை தேவைப்பட்டால் உரிய ஆதாரங்களை பெற்றுகொண்டு அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல் நோயாளிகளை அழைத்துவரச் சொல்லி அலைக்கழிக்கக்கூடாது என கண்டித்தார்.
மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா வார்டுகள் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என்று அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கூறினார்.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள முத்தனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 150 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. அதை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.ெபரியகருப்பன் ஆய்வு செய்தார். பின்னர் கொரோனா நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். தூய்மை பணியாளர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த தடுப்பூசி போட அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது அமைச்சருடன் கலெக்டர் மதுசூதன்ரெட்டி, தாசில்தார் மாணிக்கவாசகம், வட்டார வளர்ச்சி அதிகாரி ரஜினிதேவி, பர்னாபாஸ், மாவட்ட துணை செயலாளர் சேங்கை மாறன், யூனியன் தலைவர் லதா அண்ணாத்துரை, யூனியன் துணை தலைவர் முத்துச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் அண்ணாத்துரை, ராஜமணி, நகர செயலாளர் பொன்னுச்சாமி, இடைக்காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகநாதன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் மூர்த்தி, மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் பாஸ்கரன், ஒன்றிய பிரதிநிதி ஜெயமூர்த்தி, ஒன்றிய மாணவரணி கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை 52 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இதில் 4 மையங்களை தவிர்த்து 48 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா வார்டுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை.
தூத்துக்குடி ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கி உள்ளதால் தென்மாவட்டங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாது. பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். தடுப்பூசி தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நகர் பகுதியிலும், சந்தை பகுதியிலும் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் கொரோனா விதிமுறைகளை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.
இளையான்குடி:
இளையான்குடியில் தினசரி காய்கறி மற்றும் பழங்கள் விற்பதற்காக பஸ் நிலையம் அருகிலுள்ள பூங்காவில் மாற்றம் செய்யப்பட்டு இரண்டு நாட்களாக வியாபாரம் நடந்து வருகின்றது. இதில் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதால் கொரோனா பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக பேரூராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கருதுகின்றனர்.
இதனால் நேற்று தாலுகா அலுவலகம் வருகை தந்த எம்.எல்.ஏ. தமிழரசி மற்றும் அதிகாரிகள் ஆலோசனை செய்து வாரச் சந்தை நடைபெறும் இடத்திற்கு மாற்றம் செய்வதாக பொதுமக்கள் முன்னிலையில் முடிவு செய்யப்பட்டது.
இதனால் இன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்வதும் மீன் கடைகள் வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. முதல்நாள் வருபவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படும் என்றும், புதிய நபர்களுக்கு அடுத்த நாட்களில் அனுமதி இல்லை எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே முதல்நாளிலேயே வியாபாரிகள் தாங்கள் விற்பனை செய்யும் இடத்தை தேர்வு செய்து வியாபாரம் செய்து கொள்ள அனுமதிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்யை பயன்படுத்தி சந்தையில் கொரோனா கால சிறப்பு விற்பனைக்கு வருகை தரும்படி வியாபாரிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்படுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஊருக்குள் உள்ள கடைகள் ஆங்காங்கே அவர்களின் இடத்தில் கடைகள் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. மேலும் நகர் பகுதியிலும், சந்தை பகுதியிலும் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் கொரோனா விதிமுறைகளை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகின்றது.

வீட்டுக்குள் தாய், 2 மகள்கள் மர்மமான முறையில் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அழகாபுரி நகர் தெற்கு தெருவை சேர்ந்தவர் தர்மலிங்கம். முன்னாள் ராணுவ வீரர். இவருடைய மனைவி செல்வி ஷோபனா (வயது 50). இவர்களுக்கு அபிராமி(24), ஷிவானி(20) ஆகிய 2 மகள்கள்.
இதில் அபிராமி பி.எஸ்சி. பட்டம் பெற்றவர். ஷிவானி மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் தர்மலிங்கம் இறந்துவிட்டார்.
இதற்கிடையே மூத்த மகள் அபிராமி கீழே விழுந்து தலையில் அடிபட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன்பின்னர் அவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்ததாக தெரியவருகிறது.
இந்த நிலையில் நேற்று காலை அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த பக்கத்துவீட்டினர், சென்று பார்த்தனர். வீட்டு முன்புள்ள இரும்பு கேட் கதவு சாத்தப்பட்டு, மற்ற கதவுகள் திறந்து கிடந்தன.
பின்னர் இதுகுறித்து அதே தெருவில் வசிக்கும் செல்வி ஷோபனாவின் தங்கை ஷாலினியிடம் தகவல் தெரிவித்தனர். உடனே அவர் விரைந்து வந்து உள்ளே சென்று பார்த்தார்.
அங்கு ஹாலில் ஷிவானி தூக்கில் பிணமாக தொங்கினார். வீட்டின் பின்புறத்தில் செல்வி ஷோபனாவின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது. படுக்கை அறையில் அபிராமி பிணமாக கிடந்தார். அங்கு ரத்தம் சிதறி உறைந்து போய் இருந்தது. இந்த காட்சிகளை கண்ட ஷாலினி அதிர்ச்சி அடைந்து அலறினார்.
உடனே இதுகுறித்து தேவகோட்டை நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அபிராமி தனக்கு திருமணம் நடக்கவில்லை என்று தனது தாய், தங்கையுடன் அடிக்கடி வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு நடந்த தகராறில் கீழே விழுந்து அபிராமிக்கு மீண்டும் தலையில் காயம் ஏற்பட்டு, ரத்தம் வெளியேறி அவர் இறந்து இருக்கலாம் எனவும், போலீசாரின் விசாரணைக்கு பயந்து செல்வி ஷோபனாவும், அவருடைய இளைய மகளும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இருப்பினும் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால்தான் 3 பேரின் சாவுக்கான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். அதே நேரத்தில் அவர்களது சாவுக்கு வேறு பின்னணி எதுவும் உள்ளதா, கொலை செய்யப்பட்டார்களா? என்ற கண்ணோட்டத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லல் நகரில் கொரானா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் நடத்த வேண்டும்.
கல்லல்:
கல்லல் நகரில் கொரானா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் நடத்த வேண்டும். தடுப்பூசி போட வேண்டும் என தினத்தந்தியில் செய்தி வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று கல்லல் ஊராட்சி அலுவலகம் முன்பு கல்லல் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் டாக்டர் அகல்யா தலைமையில் 20-க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் கொண்ட முகாம் நடைபெற்றது. முதல் நாளே ஊராட்சியின் சார்பில் பொதுமக்களுக்கு ஆட்டோ மூலம் கொரோனா பரிசோதனை முகாம், தடுப்பூசி முகாம் குறித்து ஒலிப்பெருக்கி மூலம் எடுத்துரைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற முகாமிற்கு போதிய பொதுமக்கள் வரவில்லை. 10 பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டப்பட்டது. 20-க்கும் மேற்பட்டோருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.
இது தொடர்ந்து நேற்று நடைபெற்ற முகாமில் பொதுமக்களிடம் பெரிய அளவு வரவேற்பு இல்லை 10 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது 20க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. கல்லல் பகுதியில் தடுப்பூசி குறித்தும் பரிசோதனை குறித்தும் பொதுமக்களிடம் இங்குள்ள மக்கள் பிரதிநிதிகள் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
காய்ச்சல், சளி, இருமல் போன்றவை இருந்தால் தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டு டாக்டரை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சிங்கம்புணரி:
சிங்கம்புணரி பேரூராட்சி பகுதியில் நேற்று மட்டும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிங்கம்புணரி காசிப்பிள்ளை நகர், பண்டாரம் காலனி, பாரதி நகர், வடக்கு தெரு, அழகப்பா காலனி, என்பில்டு காலனி, மற்றும் வி.எஸ்.எஸ்.காலனி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் 6 வயது சிறுவன் ஒருவனும் பாதிக்கப்பட்டு உள்ளான். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கொரோனா பரவலை தடுக்க வருவாய்த்துறையினரும், போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஊரடங்கு விதிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அத்தியவசிய தேவைகள் இன்றி வெளியே வரக்கூடாது. வீட்டிற்குள்ளேயே தங்களை தாங்கள் பாதுகாத்து கொள்ள வேண்டும்.
காய்ச்சல், சளி, இருமல் போன்றவை இருந்தால் தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டு டாக்டரை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தேவகோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேவகோட்டை:
தேவகோட்டை அருகே உள்ள புலிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்தையா(வயது 58).விவசாயி. முத்தையா தனது மகன் வினோத்குமாருடன் தேவகோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். வரும் வழியில் மாவிடுதிகோட்டை அருகே உள்ள பெட்ரோல் பங்கில் மகன் வினோத்குமார் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட சென்று விட்டார். முத்தையா ரோட்டில் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது குமானி கிராமத்தைச் சேர்ந்த ரத்தினவேல் என்பவர் திருவாடானையில் இருந்து தேவகோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அவர் ரோட்டில் நடந்து சென்ற முத்தையா மீது மோட்டார் சைக்கிளோடு மோதினார். இதில் படுகாயம் அடைந்த அவர் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேவகோட்டை அருகே மின்னல் தாக்கி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேவகோட்டை:
தேவகோட்டையை அடுத்த திருவேகம்பத்தூர் அருகே உள்ள கிழவனி கிராமத்தைச் சேர்ந்தவர் அருளானந்து (வயது 55) விவசாயி. இவர் திருவேகம்பத்தூர் வந்து விட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது பயங்கர காற்றுடன் இடி மின்னல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மழை பெய்ய தொடங்கியது. இதனால் களத்தூர் அருகே உள்ள பனை மரத்தின் கீழ் மழைக்கு ஒதுங்கி நின்றார்.அப்போது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இதுகுறித்து திருவேகம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.