என் மலர்
சிவகங்கை
வேனில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி:
சாக்கோட்டை போலீஸ் சரகம் பானாவயல்-பிரம்புவயல் கிராமங்களுக்கு இடையே உள்ள சறுக்கு பாலம் அருகே சிலர் சரக்கு வாகனம் ஒன்றில் ஆற்று மணலை ஏற்றிக்கொண்டு புறப்பட்டனர். அப்போது வேனின் பின் சக்கரம் கழன்று ஓடியது. இதனால் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் அப்படியே போட்டு விட்டு அங்கிருந்து தலைமறைவாயினர். இதுகுறித்த தகவல் கிடைத்த அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் நடந்த சம்பவம் குறித்து சாக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அண்ணாநகரை சேர்ந்த பிரகாஷ் (வயது 30) என்பவரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய வேனையும் மணலையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய சிலரை தேடி வருகின்றனர்.
சிங்கம்புணரி அருகே ஊரடங்கிலும் விவசாய பணிகள் களை கட்டி உள்ளன. தற்போது கடலை அறுவடை தீவிரம் அடைந்து உள்ளது.
சிங்கம்புணரி:
சிங்கம்புணரி அருகே பிரான்மலை மலை அடிவார பகுதியில் ஒடுவன்பட்டி, முட்டாகட்டி, பிரான்மலை, கோபாலச்சேரி, கிருங்கா கோட்டை, வேங்கைபட்டி, எஸ்.வி.மங்கலம், மேலவண்ணாரிருப்பு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு பெரும்பாலானோர் விவசாயம் செய்து வருகின்றனர். மழைநீரை நம்பி தான் விவசாயம் செய்யப்படுகிறது.
கோடை பயிரான மாசி பட்டத்தில் பயிரிட்ட கடலை பயிர் மூன்று மாத காலத்தில் முளைத்து தற்போது அறுவடைக்கு தயாராகி விட்டது. கொரோனா பரவலை தடுக்க அரசு வருகிற 7-ந்தேதி வரை தளர்வில்லா முழு ஊரடங்கை அறிவித்து உள்ளது. முழு ஊரடங்கில் விவசாய பணி உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் சிங்கம்புணரி பகுதியில் ஊரடங்கிலும் விவசாய பணிகள் களை கட்டி உள்ளது.
விவசாயிகளுக்காக காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை உரக்கடைகள் திறக்க அரசு அறிவுறுத்தி உள்ளது.விவசாயிகள் தாங்கள் பயிரிடப்பட்டு உள்ள பயிருக்கு ஏற்ற உரங்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பிரான்மலை பகுதியில் நிலக்கடலை அறுவடை தீவிரம் அடைந்து உள்ளது. விவசாய கூலி தொழிலாளர்கள் நிலக்கடலை அறுவடை செய்தனர். ஒரு ஏக்கருக்கு நாள் ஒன்றுக்கு 25 பேர் கடலை அறுவடை மேற்கொண்டால் 7 நாட்களுக்குள் அறுவடையை முடித்து விடலாம் என்று விவசாயி ஒருவர் கூறினார். தற்போது ஊரடங்கு காரணமாக வேலையாட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.
கொரோனா அச்சத்தால் பெரும்பாலான தொழிலாளர்கள் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. மேலும் கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதால் அறுவடை செய்த நிலக்கடலையை எப்படி விற்பது என தெரியாமல் தவித்து வருகிறோம். நிலக்கடலையை பதப்படுத்தி ஆயில் மில்நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்தால் தான் நஷ்டமின்றி தப்பிக்க முடியும். தற்போது ஊரடங்கு, கடையடைப்பு உள்ளிட்டவைகள் காரணமாக அறுவடை செய்த விவசாய விளை பொருட்களை எதிர்பார்த்த விலைக்கு விற்க முடியாத சூழ்நிலை தான் நிலவுகிறது என்று விவசாயி ஒருவர் வேதனையுடன் தெரிவித்தார்.

திருப்புவனம் அருகே கள் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்புவனம்:
திருப்புவனம் போலீஸ் சரகத்தைச் சேர்ந்தது முக்குடி கிராமம். இந்தப் பகுதியில் கள் விற்பதாக தனிப்பிரிவு போலீசார் கொடுத்த தகவலின் பேரில் திருப்புவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்பாபு மற்றும் போலீசார் முக்குடி பகுதிக்கு சென்று கள் விற்பனை செய்த மதுரை அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த கோவிந்தம்மாள்(வயது 65) என்பவரை பிடித்து விசாரித்தனர். மேலும் இவர் பதுக்கி வைத்திருநத் 10 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
ராமேசுவரம், காரைக்குடி ஆகிய ரெயில் நிலைங்களை சேர்ந்த போலீசார் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி தொகுப்பு உள்ளிட்டவைகளை வழங்கினர்.
மானாமதுரை:
காரைக்குடி தாலுகாவை சேர்ந்த மானாமதுரை, ராமேசுவரம், காரைக்குடி ஆகிய ரெயில் நிலைங்களை சேர்ந்த போலீசார் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி தொகுப்பு உள்ளிட்டவைகளை வழங்கினர். மானாமதுரை ஹோலிகிராஸ் முதியோர் இல்லம், சுந்தர நடப்பு கருணாலயா மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்துக்கு நிவாரண பொருட்களை வழங்கினர். இதில் இன்ஸ்பெக்டர் மீனாட்சி, சப்-இன்ஸ்பெக்டர்கள் நாச்சி, தனுஷ்கோடி, துரை, முத்து, முனியசாமி, சவுந்தரபாண்டி, ராஜ ராசன், ராஜேஷ் கண்ணன், தனிபிரிவு தலைமை ஏட்டு ராஜ்குமார் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
சிவகங்கை மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 2041 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 214 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதே போல் நேற்று கொரோனா தொற்று காரணமாக 61 வயதுள்ள முதியவர் ஒருவர் மதுரை தனியார் மருத்துவமனையில் இறந்தார். மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 2041 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.நேற்று ஒரே நாளில் 188 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
காரைக்குடி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி:
காரைக்குடி வைத்தியலிங்கபுரத்தை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 32).இவர் அப்பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் தெரு அருகே மாத்திரை வாங்குவதற்காக மருந்துக்கடை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி பார்த்திபன் சட்டைப்பையிலிருந்த ரூ.850-ஐ பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி கீழ வாணியங்குடி பகுதியைச் சேர்ந்த குட்டைசங்கர் (28) பூபதி (32) ஆகிய 2 பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
காரைக்குடியில் 300 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் திறந்து வைத்தார்.
காரைக்குடி:
காரைக்குடி அரசு மருத்துவமனையில் ரூ.10.5 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மகப்பேறு மையம், குழந்தைகள் நலப்பிரிவு கட்டிடம் மற்றும் 300 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சைக்கான சிறப்பு சிகிச்சை மையம் ஆகியவை திறந்து வைக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். கார்த்தி சிதம்பரம் எம்.பி. முன்னிலை வகித்தார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் புதிய கட்டிடம் மற்றும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
நாட்டையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் தமிழக முதல்-அமைச்சரின் சீரிய முயற்சியாலும், மக்கள் நல்வாழ்வு துறை, ஊரக வளர்ச்சி துறை, காவல் துறை, வருவாய் துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படுவதன் மூலமும் சற்று குறைய தொடங்கி உள்ளது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கு ஏதுவாக சிவகங்கை மாவட்டத்தில் 3 ஆயிரம் படுக்கை வசதிகள் தயார்படுத்தப்பட்டுள்ளன. அதில் 1250 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் கூடியவை. அதில் நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் போதிய அளவு இருப்பில் உள்ளது. தற்போது காரைக்குடி மாவட்ட தலைமை மருத்துவமனையில் திறக்கப்பட்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் உள்ள 300 படுக்கைகளில் 200 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் ஆகும்.
தற்போது சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சிவகங்கை பழைய அரசு தலைமை மருத்துவமனை, காரைக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, காரைக்குடி அரசு பழைய தலைமை மருத்துவமனை, சோமநாதபுரம் அரசு மருத்துவமனை இவற்றுடன் தாலுகா அளவில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைகளில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது. மேலும் சிகிச்சை நிலையினை விரிவுபடுத்தும் சூழல் வந்தால் ஆரம்ப சுகாதார நிலையங்கள் சிகிச்சை வழங்கும் வகையில் தயார்படுத்தப்பட்டு உள்ளன. இவற்றுடன் தனியார் மருத்துவமனைகளில் 250 ஆக்சிஜன் வசதியுடன் படுக்கை வசதிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே சிகிச்சை குறித்து அச்சம் வேண்டாம். அந்த அளவிற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் சிகிச்சைக்காக அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாங்குடி எம்.எல்.ஏ., மருத்துவத்துறை இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன், மாவட்ட தலைமை மருத்துவமனை டாக்டர் தர்மர், காரைக்குடி நகர்மன்ற முன்னாள் தலைவர் முத்துத்துரை, தி.மு.க. முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பள்ளத்தூர் ரவி, இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார், காரைக்குடி நகர செயலாளர் குணசேகரன், கோட்டையூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆனந்த், சாக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் சுப சின்னத்துரை, சூரக்குடி ஊராட்சி மன்றத்தலைவர் முருகப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் பலர் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டு கொண்டனர். நேற்று ஒரே நாளில் 183 பேர் தடுப்பூசி போட்டு கொண்டனர்.
மானாமதுரை:
மானாமதுரை பேரூராட்சி மற்றும் தனியார் திருமண மண்டபத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் 18 வயதுக்கு மேல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. முகாமை கலால்துறை உதவி ஆணையர் சிந்துஜா தொடங்கி வைத்தார். இதில் தாசில்தார் மாணிக்கவாசகம், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் தங்கதுரை ஆகியோர் உடன் இருந்தனர். 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் பலர் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டு கொண்டனர். நேற்று ஒரே நாளில் 183 பேர் தடுப்பூசி போட்டு கொண்டனர்.
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று தினசரி அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று தினசரி அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 325 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற பரிசோதனையில் இதுவரை இல்லாத அளவில் 163 பேருக்கு தொற்று இருப்பதை கண்டறிந்தனர். மற்றவர்கள் தனியார் பரிசோதனை நிலையங்களில் பரிசோதனை செய்து கொண்டவர்கள். சிவகங்கை மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 1,961 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 86 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
இளையான்குடி நகர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் தொடர் மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர்.
இளையான்குடி:
இளையான்குடி நகர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் தொடர் மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் டி.வி., பிரிட்ஜ், மின்விசிறி உள்ளிட்ட மின் சாதன பொருட்கள் சேதம் அடைந்து விடுகின்றன. இதனால் பொதுமக்கள் பொருட்கள் நஷ்டமும், மன உளைச்சலுக்கும் உள்ளாகின்றனர்.
இனிவரும் காலங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படாத வண்ணம் மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கானூர் கிராமத்தில் உள்ள சமுதாய நலக்கூடம் அருகே சமூக இடைவெளி விட்டு பொதுமக்களை நிற்க வைத்து கபசுரகுடிநீர், பல்வேறு வகையான சூப்களை வழங்கினார்கள்.
திருப்புவனம்:
திருப்புவனம் அருகே கானூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் தனியாக வாட்ஸ் அப் குழு தொடங்கி பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகின்றனர். தற்போது கொரோனா 2-வது அலை பரவி வருவதால் கிராம மக்கள் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை பெறுவதற்காக கபசுர குடிநீர், முட்டை, பயறு வகைகள், பல்வேறு வகையான சூப்கள் தயார் செய்து இலவசமாக வழங்கினர். கானூர் கிராமத்தில் உள்ள சமுதாய நலக்கூடம் அருகே சமூக இடைவெளி விட்டு பொதுமக்களை நிற்க வைத்து கபசுரகுடிநீர், பல்வேறு வகையான சூப்களை வழங்கினார்கள். இவர்களின் சமுதாய பணியை அப்பகுதி மக்கள் பாராட்டினார்கள்.
அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொண்டு 100 சதவிகிதம் தடுப்பூசி போடப்பட்டது என்ற நிலையை உருவாக்கிட வேண்டும்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட பொது சுகாதாரத்துறையின் மூலம் 18 வயது முதல் 45 வயதிற்குட்பட்டவர்களுக்கு கொரோனா நோய்த்தடுப்பிற்கான இலவச தடுப்பூசி போடப்படுகிறது. இதற்கான தடுப்பூசி தொடக்க முகாம் சிவகங்கை நகராட்சி நகர் நலமையத்தில் நடைபெற்றது. முகாமை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
கொரோனா நோய்த்தொற்று அதிகமாக பரவுவதையொட்டி பாதுகாப்பு நலன் கருதி பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் இலவசமாக முதற்கட்ட தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது.
சிவகங்கை மாவட்டத்திற்கு பொது சுகாதாரத்துறையின் மூலம் 12 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 3 நகர்நல மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு தலைமை மருத்துவமனைகள் ஆகியவற்றில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகின்றது.
இதில் முதற்கட்டமாக கட்டிட தொழிலாளர்கள், வெளிமாநிலத் தொழிலாளர்கள், அனைத்து மார்க்கெட் தொழிலாளர்கள், சில்லறை விற்பனை கடை வியாபாரிகள், அனைத்து கல்லூரி, பள்ளி ஆசிரியர்கள், மாநில போக்குவரத்துக்கழக பணியாளர்கள், அனைத்து அரசுப்பணியாளர்கள், அனைத்து ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்குவதற்கு ஏதுவாக சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன. அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொண்டு 100 சதவிகிதம் தடுப்பூசி போடப்பட்டது என்ற நிலையை உருவாக்கிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர்கள் பார்த்தசாரதி, கலாதேவி, சிவகங்கை நகராட்சிஆணையாளர் அய்யப்பன், பூச்சியியல் நிபுணர் ரமேஷ், சுகாதார ஆய்வாளார்கள் கோதண்டம், முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.