என் மலர்
சிவகங்கை
தேவகோட்டை:
கொரோனா ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு தளர்வுகளுடன் பிறப்பித்துள்ளது. இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வெளியே வரும் நபர்கள் இ-பதிவு எடுக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது.
இதன் காரணமாக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் சபாபதி, ராம்நகரில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஆய்வு செய்தார்.
இந்த சோதனையில் இ-பதிவு இல்லாமல் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த நபர்களுக்கு கொரோனா பரிசோதனை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒத்தக்கடை ஆரம்ப சுகாதார மருத்துவர் தலைமையில் நடந்தது. இதில் 30-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
கொரோனா தொற்று நோயின் தன்மை அறியாமல் வெளியில் சுற்றும் நபர்களுக்கு அறிவுரை வழங்கியும், பரிசோதனையும் நடைபெற்றது. மேலும் அவர்களது வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால் நகரில் இருசக்கர வாகனங்களில் வரும் நபர்கள் எண்ணிக்கை குறைந்தது.
பண்டைய காலம் முதலே தமிழர்கள் நாகரிகத்தில் முன்னோடியாக விளங்கியவர்கள் என்பதை கீழடி அகழ்வாராய்ச்சி தெளிவுப்படுத்தி வருகிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை மத்திய, மாநில அரசுகளின் தொல்லியல் துறை சார்பில் 5 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்தன. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. 2020-ம் ஆண்டு 6-ம் கட்ட அகழ்வாய்வில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன.
இந்த ஆண்டு 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து வந்தன. கீழடி மட்டுமின்றி அதன் அருகே உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளிலும் அகழாய்வு நடந்தன.
பாசி மணிகள், தாயக்கட்டை, காதில் அணியும் தங்க ஆபரணம், முதுமக்கள் தாழி, மனித மண்டை ஓடு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைத்தன.
இந்த நிலையில் கொரோனா 2-வது அலை தமிழகத்தில் வேகமாக பரவியதை தொடர்ந்து கடந்த மாதம் 10-ந்தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அகழாய்வு பணிகளும் கடந்த மாதம் 10-ந்தேதி முதல் நிறுத்தப்பட்டன.
இந்த நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் நேற்று முன்தினம் முதல் அமல்படுத்தப்பட்டன.
அதன்காரணமாக கீழடியில் நேற்று மீண்டும் அகழாய்வு பணிகள் தொடங்கின. வேலைக்கு வந்த தொழிலாளர்கள் முககவசம், சமூக இடைவெளியை பின்பற்றி அகழாய்வு பணியில் ஈடுபட்டனர். ஏற்கனவே பணி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த குழியில் மண் அள்ளும் பணி நேற்று நடந்தது.
திருச்சியில் ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டாக இருந்த செந்தில்குமார் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். ஏற்கனவே சிவகங்கையில் பணிபுரிந்த ராஜராஜன் திருநெல்வேலி நகர் துணை கமிஷனராக மாற்றப்பட்டார். இதை தொடர்ந்து செந்தில்குமார் நேற்று சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றார்.
புதிய போலீஸ் சூப்பிரண்டாக பதவியேற்ற செந்தில்குமாரை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் முரளிதரன், ராஜேந்திரன், வெற்றிசெல்வன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் உதயகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் தற்போது கொரோனா பரவலை தடுக்க அரசு அறிவித்த உத்தரவு முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் குற்றசெயல்களை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
ரவுடிகள், கட்டபஞ்சாயத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தங்களுடைய பிரச்சினைகளை எந்த நேரத்திலும் 8608600100 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். அனைத்து புகார்கள் மீதும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த போத்திரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.எல். பட்டம் பெற்றவர்.பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் சென்னை நகரம் உருவான கதையை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.2001-ம்ஆண்டு குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற இவர் உத்தமபாளையம், செங்கல்பட்டு, நன்னிலம், அரக்கோணம் ஆகிய இடங்களில் துணை போலீஸ் சூப்பிரண்டாகவும், பின்னர் அடையாறு சரக உதவி ஆணையாளராகவும், திருவள்ளூர் மாவட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாகவும் பணிபுரிந்துள்ளார்.
பின்னர் பதவி உயர்வு பெற்று சென்னை பூக்கடை உதவி ஆணையாளராகவும் தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும் மதுரை நகர் காவல்துணை ஆணையாளராகவும் திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டாகவும் பணிபுரிந்துள்ளார். தமிழ் இலக்கியத்தின் மீது மிகுந்த பற்றுள்ள இவர் எழுத்தாளராகவும் சாதித்து உள்ளார். இவர் பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது மனைவி சுதாமதி கண் மருத்துவரான இவர் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உதவி பேராசிரியராக பணிபுரிகிறார். இவருக்கு செம்மொழிபாரதி என்ற மகளும், திருவாசகம் என்ற மகனும் உள்ளனர்.
காளையார்கோவில் அருகே ஆலங்குடியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையை உடைத்து மர்ம நபர்கள் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை அள்ளிச் சென்றனர்.
இது குறித்து காளையார்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கொள்ளையர்களை பிடிக்க சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் உத்தரவின் பேரில் காளையார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுரேஷ்குமார் தலைமையில் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் ரஞ்சித், ராமச்சந்திரன், அன்சாரி உசேன், ராஜ்கமல் ஆகியோர் அடங்கிய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீசார் டாஸ்மாக் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஒருவரை அடையாளம் கண்டனர். அதனைத் தொடர்ந்து அவரை பிடித்து விசாரித்ததில் இந்த கொள்ளை சம்பவத்தில் 5 பேர் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (வயது 26), திருப்புவனம் அருகே மாங்குடியைச் சேர்ந்த பிரேம்குமார் (26), கோமாளிப்பட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி (32), அதே ஊரைச் சேர்ந்த கணேசன் (37) திருப்புவனம் சந்தை கடையை சேர்ந்த ராஜ்குமார் (32) ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.
கொள்ளையடித்த மதுபாட்டில்களை கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான கணேசனின் மனைவியின் சொந்த ஊரான கருங்குளம் கிராமத்தில் ஒரு கண்மாயில் புதருக்குள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளனர்.
தனிப்படை போலீசார் அந்த மதுபாட்டில்களையும், 3 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு பல்வேறு தரப்பினர் உதவி செய்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் போலீசாரும் தங்களால் இயன்ற உதவிகளை எளிய மக்களுக்கு செய்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் போலீஸ் டி.எஸ்.பி. பொன்ரகு. இவர் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உணவு, மளிகை பொருட்கள், நிதியுதவி உள்ளிட்டவைகளை செய்து வருகிறார்.
ஊரடங்கு காரணமாக தெரு விலங்களும் உணவின்றி பரிதவித்து வந்தன. இதையடுத்து டி.எஸ்.பி. ரகு அவைகளுக்கும் தன் முயற்சியில் உணவளித்து வருகிறார்.
அதன்படி திருப்பத்தூர் சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கோவில் யானை, வன பகுதிகளில் சுற்ற திரியும் குரங்ககள், தெரு நாய்களுக்கு பழங்கள், உணவு, பிஸ்கட் போன்றவைகளை வழங்கி வருகிறார்.
போலீஸ் டி.எஸ்.பி. இந்த செயலை அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.






