search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தேவகோட்டையில் இருசக்கர வாகனங்களில் திரிந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் சபாபதி, ராம்நகரில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஆய்வு செய்தார்.

    தேவகோட்டை:

    கொரோனா ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு தளர்வுகளுடன் பிறப்பித்துள்ளது. இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வெளியே வரும் நபர்கள் இ-பதிவு எடுக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது.

    இதன் காரணமாக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் சபாபதி, ராம்நகரில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஆய்வு செய்தார்.

    இந்த சோதனையில் இ-பதிவு இல்லாமல் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த நபர்களுக்கு கொரோனா பரிசோதனை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒத்தக்கடை ஆரம்ப சுகாதார மருத்துவர் தலைமையில் நடந்தது. இதில் 30-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    கொரோனா தொற்று நோயின் தன்மை அறியாமல் வெளியில் சுற்றும் நபர்களுக்கு அறிவுரை வழங்கியும், பரிசோதனையும் நடைபெற்றது. மேலும் அவர்களது வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால் நகரில் இருசக்கர வாகனங்களில் வரும் நபர்கள் எண்ணிக்கை குறைந்தது.

    Next Story
    ×