என் மலர்
செய்திகள்

முத்தனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆய்வு செய்த போது எடுத்த படம்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா வார்டுகள் - அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகவல்
மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா வார்டுகள் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என்று அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கூறினார்.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள முத்தனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 150 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. அதை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.ெபரியகருப்பன் ஆய்வு செய்தார். பின்னர் கொரோனா நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். தூய்மை பணியாளர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த தடுப்பூசி போட அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது அமைச்சருடன் கலெக்டர் மதுசூதன்ரெட்டி, தாசில்தார் மாணிக்கவாசகம், வட்டார வளர்ச்சி அதிகாரி ரஜினிதேவி, பர்னாபாஸ், மாவட்ட துணை செயலாளர் சேங்கை மாறன், யூனியன் தலைவர் லதா அண்ணாத்துரை, யூனியன் துணை தலைவர் முத்துச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் அண்ணாத்துரை, ராஜமணி, நகர செயலாளர் பொன்னுச்சாமி, இடைக்காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகநாதன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் மூர்த்தி, மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் பாஸ்கரன், ஒன்றிய பிரதிநிதி ஜெயமூர்த்தி, ஒன்றிய மாணவரணி கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை 52 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இதில் 4 மையங்களை தவிர்த்து 48 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா வார்டுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை.
தூத்துக்குடி ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கி உள்ளதால் தென்மாவட்டங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாது. பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். தடுப்பூசி தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






