என் மலர்tooltip icon

    சிவகங்கை

    அனைத்து அரசு துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு கிராமப்பகுதிகளில் சுயதொழில் தொடங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் மதுசூதன் ரெட்டி கூறினார்.
    சிவகங்கை:

    தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் சிவகங்கையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது, தமிழ்நாடு ஊரகபுத்தாக்கத் திட்டத்தின் மூலம் கிராமப்பகுதிகளில் பின்தங்கிய வறுமையிலுள்ள மக்களை கண்டறிந்து, அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான வழிகாட்டுதலை வழங்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தபடுகிறது.

    எனவே ஊரக வளர்ச்சித்துறை, மகளிர் திட்டம், மாவட்ட தொழில் மையம், வேளாண்மைத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, மாவட்ட முன்னோடி வங்கி, கதர்கிராமத் தொழில்கள் வாரியம், கால்நடைத்துறை, வேளாண் விற்பனை மையம், தாட்கோ போன்ற துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு கிராம மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவிட வேண்டும். மேலும் கிராமப்பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி சுயதொழில் தொடங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

    ஒவ்வொரு நிதியாண்டிற்கும் ஏற்ப கிராமப்பகுதிகளில் தேர்வு செய்யப்பட்ட திட்டப்பணிகளை அந்தந்த ஆண்டிலேயே முடித்திட வேண்டும். நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு பணியும் வறுமையில் உள்ளவர்களின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக அமையும். எனவே, தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்துறை திட்டப்பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வீரபத்ரன், தொழில் மைய மேலாளர் கணேசன், முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன், குன்றக்குடி வேளாண் ஆராய்ச்சி மைய பேராசிரியர் செந்தூர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    சிவகங்கையில் நகர் அ.தி.மு.க. அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை, திருப்பத்தூர் ஆகிய சட்டமன்றத்திற்கு உட்பட்ட நகரம், ஒன்றியம், பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் நிர்வாகிகள் தங்கள் வீடுகளின் முன்னே பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர்.

    சிவகங்கையில் நகர் அ.தி.மு.க. அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.

    முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், மதுரை தகவல் தொழில் நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ராஜ்சத்தியன், நகர செயலாளர் ராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை செயலாளர் கருணகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ராஜ்சத்தியன் பேசுகையில், தி.மு.க. பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்துள்ளது. ஆனால் அவற்றில் ஒன்றைக்கூட இன்று வரை நிறைவேற்றவில்லை. உடனடியாக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். காழ்ப்புணர்ச்சியோடு அ.தி.மு.க. மீது செயல் படக்கூடாது என்றார்.

    முன்னாள் நகர்மன்ற தலைவர் அர்ச்சுனன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் இளங்கோவன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் கோபி, மண்டல செயலாளர் தமிழ்செல்வன், பாசறை பொருளாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    சிவகங்கை மருத்துவ மாணவர் கொலையில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை அண்ணாமலை நகரில் வசிப்பவர் இருதயராஜ், ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மகன்கள் ஜோசப் சேவியர் (வயது 25), கிறிஸ்டோபர் (22).

    இவர்கள் இருவரும் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவ படிப்பு படித்து வந்தனர். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக 2 பேரும் நாடு திரும்பி சிவகங்கையில் இருந்து வந்தனர்.

    இவர்களுக்கு சொந்தமான 20 ஏக்கர் விவசாய நிலம் அதே பகுதியில் உள்ளது. இங்கு சிலர் மது அருந்துவதாக கிடைத்த தகவலின்பேரில் இருதயராஜ் மற்றும் ஜோசப் சேவியர், கிறிஸ்டோபர் அங்கு சென்றுள்ளனர்.

    அப்போது அங்கு சிலர் மது அருந்தி விட்டு தோட்டத்து வீட்டை உடைத்து கொண்டிருந்தனர். இதை பார்த்த இருதயராஜ் மற்றும் அவரது மகன்கள் ஜோசப் சேவியர், கிறிஸ்டோபர் ஆகியோர் தடுத்தனர்.

    அப்போது ஏற்பட்ட மோதலில் கிறிஸ்டோபர் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் நகர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதில் கொலை நடந்தது எப்படி? என்பது குறித்து பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    இருதயராஜிக்கு சொந்தமான 20 ஏக்கர் விவசாய நிலத்தில் பழைய வீடும் உள்ளது. ஆனால் அங்கு இருதயராஜ் குடும்பத்தினர் செல்வது இல்லை. இதனால் வீடு பாழடைந்த நிலையில் இருந்து வந்தது.

    இதனை சமூக விரோதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த தொடங்கி உள்ளனர். அடிக்கடி அங்கு சிலர் மது அருந்துவதும், விரும்பதகாத செயல்களில் ஈடுபடுவதுமாக இருந்து வந்துள்ளனர்.

    நேற்றும் அங்கு ஒரு கும்பல் மது அருந்தி கொண்டிருந்தது. இதனை பார்த்த அந்த பகுதியில் ஆடு மேய்ப்பவர்கள் இருதயராஜ் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் இருதயராஜ், அவரது மகன்கள் ஜோசப் சேவியர், கிறிஸ்டோபர் ஆகியோர் மாலை 3 மணி அளவில் அங்கு விரைந்து வந்தனர்.

    அப்போது மது அருந்திய கும்பல் வீட்டின் கதவை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை பார்த்ததும் இருதயராஜ் தட்டிக் கேட்டார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இருதயராஜ் தனது மகன் கிறிஸ்டோபரிடம் மர்ம கும்பல் மது அருந்து வதை செல்போனில் படம் பிடிக்குமாறு கூறினார். அதன்பேரில் கிறிஸ்டோபரும் தனது செல்போனை எடுத்து மது அருந்திய கும்பலை படம் பிடித்தார். இது அந்த கும்பலுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    அவர்கள் தாங்கள் வைத்திருந்த கத்தி மற்றும் அரிவாளை எடுத்து கிறிஸ்டோபரை சரமாரியாக வெட்டினர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த இருதயராஜூம், ஜோசப் சேவியரும் தடுக்க முயன்றனர். இதில் அவர்களுக்கும் கத்திக்குத்து விழுந்துள்ளது. 3 பேரும் ரத்த வெள்ளத்தில் சாய்ந்ததும் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதில் கிறிஸ்டோபர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

    மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    கிறிஸ்டோபர் உடல் பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் காயம் அடைந்த இருதயராஜ், ஜோசப் சேவியர் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி தள்ளு வண்டியில் காய்கறி வியாபாரம் செய்யும் வாணியங்குடியைச் சேர்ந்த மருதுபாண்டி, சிவகங்கை நேரு பஜார் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் ஆகியோரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.

    இந்த கொலை சம்பவத்தில் 10-க்கும் மேற்பட்டோருக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். வழக்கமாக உள்ளூர்காரர்கள் மது அருந்த சென்றால் சாதாரணமாக லுங்கி, சட்டை அணிந்து தான் செல்வார்கள். ஆயுதங்கள் எதுவும் கொண்டு செல்லமாட்டார்கள். ஆனால் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஆயுதங்களை வைத்து இருந்ததோடு பேண்ட், சர்ட் அணிந்தும் இருந்துள்ளனர்.

    எனவே அவர்கள் வேறு ஏதும் சம்பவத்திற்காக வந்த கூலிப்படையாக இருக்கலாமா? மது அருந்துவதை கிறிஸ்டோபர் செல்போனில் படம் பிடித்ததால் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்ற ஆத்திரத்தில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டார்களா? என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தப்பி சென்றவர்கள் கிறிஸ்டோபரின் செல்போனையும் எடுத்து சென்று விட்டதால் இது கூலிப்படையினரின் கை வரிசையாக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    கொலையாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் அமைத்து போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    இந்த சம்பவம் சிவகங்கை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பெண்களுக்கான புதிய சேவை மையத்தை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார்.
    சிவகங்கை:

    சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சமூக நலத்துறையின் மூலம் பெண்களுக்கு வன்முறையில் இருந்து பாதுகாப்பதற்கான ஆலோசனை வழங்கிட ரூ.48 லட்சம் செலவில் புதியதாக ஒருங்கிணைந்த சேவை மையக்கட்டிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி. தலைமையில் நடைபெற்றது.

    ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் புதிய சேவை மைய கட்டிடத்தை குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    பெண்கள் வன்முறையில் இருந்து பாதுகாத்து கொள்வதற்கும் மருத்துவம், சட்டம் மற்றும் ஆலோசனைகளை வழங்கி பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய இந்த மையத்தில் ஆலோசனை வழங்கப்படும். இங்கு முதல் தளத்தில் காவல் உதவி அலுவலர், சட்ட ஆலோசனைக்கான அலுவலர், மூத்த ஆலோசகர், மருத்துவர், தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் என பணி மேற்கொள்ளும் வகையில் அலுவலகம் அமைந்துள்ளது.

    மேல்தளத்தில் உள்ள அலுவலகத்தில் பெண்களுக்கான வன்முறை மற்றும் மருத்துவம், மனரீதியான ஆலோசனை வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த மையத்தில் பெண்கள் தகவல்பெறவோ, மற்றும் உதவிவேண்டினால் கட்டணமில்லா தொலைபேசி எண் 181-ஐ தொடர்பு கொண்டால் தேவையான உதவிகள் மற்றும் பாதுகாப்புகள் வழங்கப்படும்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சமூகநல அலுவலர் அன்புக்குளோரி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சங்கரலிங்கம், உதவி செயற்பொறியாளர் பாண்டியன், அரசு மருத்துவக்கல்லூரி கண்காணிப்பாளர் டாக்டர் பாலமுருகன், மருத்துவ அலுவலர் முகமதுரபீக், உதவி மருத்துவ அலுவலர்கள் மிதுன்குமார் செந்தில், வித்யாஸ்ரீ, முன்னாள் அமைச்சர் தென்னவன், மாவட்ட தி.மு.க. துணை செயலாளர்கள் சேங்கைமாறன், மணிமுத்து, நகர் செயலாளர் துரை ஆனந்த், ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    இளையான்குடி:

    இளையான்குடி பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்க வைத்திருந்ததாக சாகுல் ஹமீது(வயது 68), லியாத் அலி(50) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனை தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 388 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 21 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
    சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 22 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 515ஆக உயர்ந்துள்ளது. நேற்று 31 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

    இம்மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 387ஆக உள்ளது.
    தற்போது தொடர் மழை காரணமாக கண்மாய் நிரம்பி உள்ளது. அதனால் மீன்களும் அதிக அளவில் உள்ளன. இந்த நிலையில் அங்கு மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சின்ன குன்றக்குடி கிராமத்தில் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் அடிக்கடி மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    தற்போது தொடர் மழை காரணமாக கண்மாய் நிரம்பி உள்ளது. அதனால் மீன்களும் அதிக அளவில் உள்ளன. இந்த நிலையில் அங்கு மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

    இந்த விழாவில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மீன்பிடிக்க அதிகாலையிலேயே கண்மாயில் திரண்டனர். அவர்கள் மீன்பிடி திருவிழா தொடங்கியதும் கண்மாயில் இறங்கி ஆர்வத்துடன் போட்டி போட்டு மீன்களை பிடித்தனர்.

    கீழச்சிவல்பட்டி அருகே உள்ள மான்கொம்பு பகுதியைச் சேர்ந்த இளையராஜா (வயது 30) என்பவரும் கண்மாயில் மீன் பிடித்தார்.

    அதிக மீன்கள் பிடிக்கும் ஆசையில் இருந்த இளையராஜா தனது கையில் சிக்கிய ஒரு மீனை வாயில் வைத்துக் கொண்டு மேலும் மீன்களை பிடிக்கும் பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். அப்போது அவரது வாயில் இருந்த மீன் நழுவியது. அதனை விடாமல் பிடிக்க இளையராஜா முயன்றபோது அந்த மீன் அவரது தொண்டைக்குள் சிக்கி கொண்டது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த இளையராஜா கையால் மீனை வாய்க்குள் இருந்து எடுக்க முயன்றார். ஆனால் அதற்குள் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

    மயக்க நிலைக்கு ஆளான இளையராஜாவை அங்கிருந்தவர்கள் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே இளையராஜா பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக குன்றக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 414 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.நேற்று ஒரே நாளில் 55 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
    இளையான்குடி அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    இளையான்குடி:

    இளையான்குடி அருகே உள்ள புதூர் பஸ் நிறுத்தம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்ற அதே பகுதியை சேர்ந்த ரியாஸ்கான்(வயது 43) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 21 மதுபாட்டில்களும், ரூ.4300-ம் பறிமுதல் செய்யப்பட்டது.
    காரைக்குடி அருகே கார் மோதியதில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி அருகே உள்ள இலுப்பைக்குடியை சேர்ந்தவர் மணிமுத்து (வயது 22). இவர் காரைக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று மணிமுத்து காரைக்குடி- திருச்சி பைபாஸ் சாலையில் மோட்டார் சைக்கிளில் காரைக்குடி நோக்கி வந்து கொண்டிருந்தார். உ.சிறுவயல் விலக்கு அருகே வந்த போது எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த மணிமுத்துவை அக்கம், பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகி்ச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    விசாரணையில் ஆதனக்கோட்டையை சேர்ந்த அரசு டாக்டர் விஜய் ராமநாதபுரத்தில் உள்ள கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு தஞ்சாவூருக்கு காரை ஓட்டி சென்ற போது மோட்டார் சைக்கிளில் மோதி விபத்து நடந்து இருப்பது தெரிய வந்தது. இது குறித்து குன்றக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது .
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது . இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனை தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 448 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 51 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
    ×