என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்களுக்கான புதிய சேவை மையத்தை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார்.
    X
    பெண்களுக்கான புதிய சேவை மையத்தை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார்.

    பெண்களுக்கான புதிய சேவை மையம் - அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார்

    பெண்களுக்கான புதிய சேவை மையத்தை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார்.
    சிவகங்கை:

    சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சமூக நலத்துறையின் மூலம் பெண்களுக்கு வன்முறையில் இருந்து பாதுகாப்பதற்கான ஆலோசனை வழங்கிட ரூ.48 லட்சம் செலவில் புதியதாக ஒருங்கிணைந்த சேவை மையக்கட்டிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி. தலைமையில் நடைபெற்றது.

    ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் புதிய சேவை மைய கட்டிடத்தை குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    பெண்கள் வன்முறையில் இருந்து பாதுகாத்து கொள்வதற்கும் மருத்துவம், சட்டம் மற்றும் ஆலோசனைகளை வழங்கி பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய இந்த மையத்தில் ஆலோசனை வழங்கப்படும். இங்கு முதல் தளத்தில் காவல் உதவி அலுவலர், சட்ட ஆலோசனைக்கான அலுவலர், மூத்த ஆலோசகர், மருத்துவர், தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் என பணி மேற்கொள்ளும் வகையில் அலுவலகம் அமைந்துள்ளது.

    மேல்தளத்தில் உள்ள அலுவலகத்தில் பெண்களுக்கான வன்முறை மற்றும் மருத்துவம், மனரீதியான ஆலோசனை வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த மையத்தில் பெண்கள் தகவல்பெறவோ, மற்றும் உதவிவேண்டினால் கட்டணமில்லா தொலைபேசி எண் 181-ஐ தொடர்பு கொண்டால் தேவையான உதவிகள் மற்றும் பாதுகாப்புகள் வழங்கப்படும்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சமூகநல அலுவலர் அன்புக்குளோரி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சங்கரலிங்கம், உதவி செயற்பொறியாளர் பாண்டியன், அரசு மருத்துவக்கல்லூரி கண்காணிப்பாளர் டாக்டர் பாலமுருகன், மருத்துவ அலுவலர் முகமதுரபீக், உதவி மருத்துவ அலுவலர்கள் மிதுன்குமார் செந்தில், வித்யாஸ்ரீ, முன்னாள் அமைச்சர் தென்னவன், மாவட்ட தி.மு.க. துணை செயலாளர்கள் சேங்கைமாறன், மணிமுத்து, நகர் செயலாளர் துரை ஆனந்த், ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×