என் மலர்tooltip icon

    சேலம்

    • 300 ஆண்டுகளுக்கு முன் பேளூரை தலைமையிடமாகக் கொண்டு நாயக்கர் காலத்தில் பாளையக்காரர்கள் என குறிப்பிடப்படும் குறுநில மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர்
    • நினைவுக்கல்லில் இருக்கும் தம்பதி, சின்னமநாயக்கர் வம்சாவழியைச் சேர்ந்த பாளையக்காரர்களாக இருக்கலாம்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பேளூரை தலைமையிடமாகக் கொண்டு, 300 ஆண்டுகளுக்கு முன், நாயக்கர் காலத்தில் பாளையக்காரர்கள் என குறிப்பிடப்படும் குறுநில மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். வாழப்பாடி பகுதியிலுள்ள சின்னம் நாயக்கன்பாளையம், பெத்தநாயக்கன்பாளையம், ராமநாயக்கன்பாளையம், லட்சுமணசமுத்திரம், சின்னமசமுத்திரம் ஆகிய ஊரின் பெயர்களும், இப்பகுதியில் கண்டெக்கப்பட்ட நடுகற்கள், கல்வெட்டுகளும் இதனை உறுதிப்படுத்துகின்றன.

    பேளூரைச் சேர்ந்த ஊர் மணியக்காரர் திருமூர்த்தி கொடுத்த தகவலின் பேரில், சேலம் மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த குழுவினர், பேளூர் வசிஷ்ட நதிக்கரையோரத்தில், திருமூர்த்தி விவசாய நிலத்தில் 300 ஆண்டுகள் பழமையான நாயக்கர் கால நினைவுக்கல் ஒன்று இன்றளவும் வழிபாட்டில் இருந்து வருவதைக் கண்டறிந்து உள்ளனர். இதுகுறித்து சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினர் கூறியதாவது:-

    300 ஆண்டுகளுக்கு முன் பேளூரை தலைமையிடமாகக் கொண்டு நாயக்கர் காலத்தில் பாளையக்காரர்கள் என குறிப்பிடப்படும் குறுநில மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். இப்பகுதியில் சிவாலய திருப்பணிகள் செய்ததோடு, வசிஷ்ட நதியில் இருந்து வாய்க்கால்கள் வெட்டி, ஏரி, குளங்களும் அமைத்து நீர் மேலாண்மை செய்துள்ளனர்.

    இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டு, தற்போது சேலம் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள சின்னம நாயக்கர் மற்றும் லட்சுமண நாயக்கர் நடுகற்களும், இவர்களது பெயரிலுள்ள ஊர்கள் மற்றும் ஏரிகளும் இதனை உறுதி செய்கின்றன.

    தற்போது பேளூரில் வசிஷ்ட நதிக்கரையில் மணியக்காரர் திருமூர்த்தி விவசாய நிலத்தில் கண்டறியப்பட்டுள்ள இந்த நினைவுக்கல் நாயக்கர் காலத்தை சேர்ந்ததாகும். 300 ஆண்டு பழமையான இந்த நினைவுக்கல்லில் ஆணும், பெண்ணும் தம்பதியாய் இரு கைகூப்பி சிவலிங்கத்தை வணங்குவதைப்போல சிற்பங்கள் காணப்படுகின்றன. இந்த நினை வுக்கல்லில் இருக்கும் தம்பதி, சின்னமநாயக்கர் வம்சாவழியைச் சேர்ந்த பாளையக்காரர்களாக இருக்கலாம். சிவன் கோயிலுக்கு பொன், பொருள் தானம் கொடுத்ததையோ, கோயில் திருப்பணி மேற்கொண்டதையோ நினைவுகூர்ந்து இந்த நினைவுக்கல் வைக்கப்பட்டிருக்கலாம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து பேளூர் மணியக்காரர் திருமூர்த்தி கூறுகையில், பேளூர் பகுதியை ஆட்சி செய்த குறுநில மன்னர்களான பாளையக்காரர்களை எங்களது மூதாதையர்களாக கருதுகிறோம். எங்களது தோட்டத்திலுள்ள இந்த நினைவுக்கல்லை, முன்னோர்களின் வழியில் தொடர்ந்து 300 ஆண்டுகளுக்கு மேலாக குலதெய்வமாகக் கருதி வழிபட்டு வருகிறோம் என்றார். சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினர், 3 ஆண்டுகளுக்கு முன் பேளூரில் நாயக்கர் கால வரலாற்று சிறப்பு மிக்க மூக்கறுப்புப்போர் கல்வெட்டை கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து கடந்த 3 நாட்களாக, விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது.
    • , மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால், ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது.

    ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து கடந்த 3 நாட்களாக, விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 1,108 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1022 கனஅடியாக சரிந்துள்ளது.

    டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கான தண்ணீர் தேவை குறைந்ததால், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    அணைக்கு வரும் நீரின் அளவை விட, திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று 108.94 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 108.37 அடியாக சரிந்து உள்ளது.

    • முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தியது.
    • விசாரணை முடிவில் 608 பக்கம் கொண்ட இறுதி அறிக்கை முதல்வர் ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்பட்டது.

    சேலம்:

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், ஜெயலலிதாவின் பாதுகாவலர்கள், உறவினர்கள், சசிகலாவின் உறவினர்கள், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், காவல்துறை உயரதிகாரிகள், போயஸ் கார்டனில் பணி செய்தவர்கள் என்று விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பெற்றது.

    இதையடுத்து, 608 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்பட்டது. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில் வழக்கறிஞர் தமிழ்மணி, ஜெயலலிதாவின் மரணம் குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பியதற்கு, முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்ததாவது:

    நான் அறிக்கை கொடுத்து 4 மாதங்களுக்கு மேலாகிறது. முன்னாள் முதலமைச்சர் மற்றும் ஒரு கட்சியின் தலைவரின் மரணம் என்பதால், இதுபோன்ற கேள்விகள் எழுகிறது. எனது அறிக்கையில் என்னால் முடிந்தது என்னவோ, கிட்டத்தட்ட எந்த சந்தேகமும் இல்லாமல் வழங்கியதால்தான் எந்தவித சர்ச்சையும் எழவில்லை. இந்த அறிக்கை குறித்து எந்தெந்த, என்னென்ன சந்தேகம் எழுந்ததோ, அதற்கு ஏற்கனவே பதில் அளித்துவிட்டேன்.

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக அந்த அறிக்கையில் நான் நிறைய எழுதியுள்ளேன். என்னுடைய அறிக்கையில் மருத்துவர்கள் சாட்சியம் அளித்ததை வைத்துதான் சொன்னேன். இன்னும் சொல்ல போனால் நான் எதையுமே அதிகமாக எழுதவில்லை. காரணம் இது மருத்துவம் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. நான் எனது கருத்து என எதையும் சொல்லவில்லை.

    நீங்கள் கூறியதில் திருத்தம் உள்ளது. அதாவது ஜெயலலிதாவை சிபிஆர் செய்தது மருத்துவரோ நர்சோ இல்லை, அறுவை சிகிச்சை அறையில் பணியாற்றும் நபர்கள்தான். எம்பார்மிங் செய்ய கடிதம் கொடுத்தது இன்னொருவர். அவர் யார் என நான் சொல்ல முடியாது. எய்ம்ஸ் மருத்துவ ஆணையத்தை தவிர வேறு யாருக்குமே தனியாக கருத்து சொல்ல முடியாது என தெரிவித்தார்.

    • சேலம் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள வங்கி அருகே 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கடந்த 13-ந் தேதி மயங்கிய நிலையில் கிடந்தார். மூதாட்டியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
    • மூதாட்டி சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    சேலம்:

    சேலம் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள வங்கி அருகே 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கடந்த 13-ந் தேதி மயங்கிய நிலையில் கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அதிகாரி கார்த்திகேயன் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

    இது குறித்து செவ்வாய்பேட்டை போலீசிலும் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மூதாட்டி யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் ? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில், மூதாட்டி சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதேபோல் நேற்று காலை சேலம் கோட்டை மைதானம் அருகே உள்ள பகுதியில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அதிகாரி கார்த்திகேயன், செவ்வாய்ப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்து கிடந்த முதியவர் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்து போன மூதாட்டி மற்றும் முதியவர் இவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • 65 வயதுடைய முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார்.
    • இதுகுறித்து தகவல் கிடைத்ததும் செவ்வாய்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    சேலம்:

    சேலம் கோட்டை மெயின் ரோட்டில் உள்ள ஒரு பள்ளி அருகே நேற்று 65 வயதுடைய முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் செவ்வாய்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் முதியவரின் உடலை கைப்பற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத் தனர். மேலும் இறந்து கிடந்த முதியவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை கடந்த 4 நாட்களாக கொண்டாடப்பட்டது.
    • தற்போது பொங்கல் விடுமுறை முடிந்தது. இதையொட்டி சொந்த ஊருக்கு வந்தவர்கள் மீண்டும் தாங்கள் பணி செய்யும் இடத்திற்கு திரும்பி வருகின்றனர்.

    சேலம்:

    தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை கடந்த 4 நாட்களாக கொண்டாடப்பட்டது. தொடர் விடுமுறையை யொட்டி வெளியூர்களில் தங்கி பணி செய்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், உறவினர்கள் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.

    தற்போது பொங்கல் விடுமுறை முடிந்தது. இதையொட்டி சொந்த ஊருக்கு வந்தவர்கள் மீண்டும் தாங்கள் பணி செய்யும் இடத்திற்கு திரும்பி வருகின்றனர். இதன் காரணமாக நேற்று மாலை முதல் சேலம் புதிய பஸ் நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அதிகளவில் இருந்தது.

    வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதால் பஸ் நிலையத்தில் பஸ்களின் எண்ணிக்கை அதிகளவில் காணப்பட்டது. இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    குறிப்பாக சென்னை, வேலூர், விழுப்புரம், திருச்சி, கோவை, திருப்பூர், மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு மிக அதிகப்படியான மக்கள் பயணம் செய்தனர். நள்ளிரவு 1 மணி வரை பயணிகளின் கூட்டம் இருந்து கொண்டே இருந்தது. அதற்கு ஏற்ப பஸ்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது.

    இதேபோல் இன்று அதிகாலை வெளியூரில்களில் இருந்து வந்த பயணிகளின் கூட்டமும் அதிகளவில் காணப்பட்டது. விடுமுறைக்கு சென்றவர்கள் பணிக்கு திரும்பியதால், புதிய பஸ் நிலைய பகுதியில் உள்ள ஓட்டல்களில் விற்பனை களைக்கட்டியது. 

    • தாரமங்கலம் சுற்று வட்டார கிராமங்களில் தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எருதாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு காளைகளை கயிறு கட்டி இருபுறமும் பிடித்தபடி மைதானத்தில் பொம்மைகள் காட்டியப்படி ஆடினர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் சுற்று வட்டார கிராமங்களான அழகுசமுத்திரம், அமரகுந்தி, ஓலைப்பட்டி, மல்லியக்குட்டை, செலவடை ஆகிய பகுதிகளில் தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எருதாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அமரகுந்தி மாரியம்மன் கோவில் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 100-க்கும் அதிகமான காளைகள் பங்கேற்றன.

    இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு காளைகளை கயிறு கட்டி இருபுறமும் பிடித்தபடி மைதானத்தில் பொம்மைகள் காட்டியப்படி ஆடினர். இதனை ஆயிரக்கணக்கான பொது மக்கள் கண்டு களித்தனர்.

    • வீடியோ குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோதா உத்தரவின் பேரில், துணை கமிஷனர்கள் லாவண்யா, மாடசாமி ஆகியோர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர்.
    • தலைமை காவலர் கோவிந்தனை, ஆயுதப்படைக்கு அதிரடியாக பணியிட மாற்றம் செய்து சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

    சேலம்:

    சேலம் செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலைய தலைமை காவலர் கோவிந்தன், கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து அமைச்சர் ஆதரவோடு செயல்படுவதாக தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

    இந்த வீடியோ குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோதா உத்தரவின் பேரில், துணை கமிஷனர்கள் லாவண்யா, மாடசாமி ஆகியோர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர்.

    அதன் அடிப்படையில் தலைமை காவலர் கோவிந்தனை, ஆயுதப்படைக்கு அதிரடியாக பணியிட மாற்றம் செய்து சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

    • வீராணம் அருகே உள்ள மஞ்சவாடி கணவாய் அருகே வந்தபோது நிலைதடுமாறி தவறி கீழே விழுந்தார்.
    • இதில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே கிருஷ்ணன் பலியானார்.

    சேலம்:

    தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கோட்டம்கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சாமிக்கண்ணு. இவரது மகன் கிருஷ்ணன் (வயது 28) . இவர் அவருடைய மோட்டார்சைக்கிளில் சேலத்திற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது வீராணம் அருகே உள்ள மஞ்சவாடி கணவாய் அருகே வந்தபோது நிலைதடுமாறி தவறி கீழே விழுந்தார். இதில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே கிருஷ்ணன் பலியானார்.

    இது குறித்து தகவல் அறிந்த வீராணம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் குடிபோதையில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது.

    மற்றொரு சம்பவம்

    இமாச்சல பிரதேசம் மாநிலம் சம்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுபாஷ்சந்த் ( வயது 49). இவர் சேலத்தில் தங்கி இருந்து ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். நேற்று கொண்டலாம்பட்டி அருகே ரோட்டை கடக்கும்போது அதிவேகமாக வந்த வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் சுபாஷ்சந்த் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்து அன்னதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுபாஷ்சந்த் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரனை நடத்தி வருகின்றனர். இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்த அடையாளம் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமிராக்களில் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர்.

    • போலீஸ் நிலையம் அருகே வாடிவாசல் அமைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
    • இதில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் அங்கு கொண்டுவரப்பட்டது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் தம்மம்பட்டி செந்தாரப்பட்டி போலீஸ் நிலையம் அருகே வாடிவாசல் அமைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் அங்கு கொண்டுவரப்பட்டது. போட்டியில் மாடுபிடி வீரர்கள் பங்கேற்று காளைகளை அடக்கினர். இதில் பல காளைகள் வீரர்களில் பிடியில் சிக்காமல் எகிறி குதித்து ஓடியது. போட்டியில் 26 பேர் காயமடைந்து தம்மம்பட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் . இதில் 4 பேர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கல்லூரி மாணவர் சந்துரு உள்பட 2 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் எந்தவித அனுமதியும் அனுமதி வழங்காத நிலையில் அனுமதியை மீறி அந்தப் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது.

    செந்தாரப்பட்டி

    இதேபோல் செந்தாரப்பட்டி பகுதியில் அரசு தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் காயம் அடைந்த 28 பேர் செந்தாரப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 பேர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து தடையை மீறி இந்த பகுதிகளில் ஜல்லிக்கட்டு விழா நடைபெற்று வருவதால் உயிரிழப்பு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அனுமதியுடன் பாதுகாப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.
    • மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 108.94 அடியானது.

    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நேற்று விநாடிக்கு 1,100 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை விநாடிக்கு 1,108 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. தற்போது பாசன பகுதிகளில் தண்ணீர் தேவை குறைந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு இன்று காலை முதல் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட, அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    நேற்று 109.51 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று மேலும் சரிந்து 108.94 அடியானது.

    • சேலத்தில் உப்பு விற்பனை மும்முரமாக நடைபெற்றது.
    • பொங்கல் தினத்தன்று உப்பு வாங்கி சாமிக்கு வைத்து பூஜை செய்து வழிப்பட்டால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம் என்பதால் உப்பு விற்பனை ஜோராக நடைபெற்றது.

    அன்னதானப்பட்டி,

     தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகையையொட்டி சமையல் உப்பு, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பொருட்களை மளிகைக் கடையில் வாங்கி வந்து, அவற்றை கோவில்களில் சாமிக்கு வைத்து பூஜைகள் செய்து வழிபட வேண்டும்.

    தொடர்ந்து அவற்றை வீட்டில் வைத்து வழிபட்டால் செல்வங்கள், பணம் பெருகும் என்பது மரபு வழி ஐதீகம் ஆகும். இதனால் நேற்று முன்தினம் சூரியப் பொங்கல் , நேற்று மாட்டுப்பொங்கல், இன்று கரி நாள் ஆகிய தினங்களில் சேலம் மாவட்டம் மற்றும் மாநகரில் உள்ள மளிகைக் கடைகளில் உப்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

    மேலும் சாலையோரங்களிலும் தற்காலிக உப்பு கடைகள் அதிகளவில் முளைத்து இருந்தன. சேலம் கடைவீதி, செவ்வாய்ப்பேட்டை, குகை, தாதகாப்பட்டி உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெரும்பாலான மளிகைக் கடைகளில் உப்பு வாங்க பெண்கள் கூட்டம், கூட்டமாக அதிகளவில் குவித்தனர்.

    ×