என் மலர்tooltip icon

    சேலம்

    • அதிவேக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களை மத்திய அரசு அறிமுகம் செய்து வருகிறது.
    • 9.15 மணிக்கு சேலம் ரெயில் நிலையத்திற்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் வந்த டைந்தது.

    சேலம்:

    நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் அதிவேக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களை மத்திய அரசு அறிமுகம் செய்து வருகிறது. ஏற்கனவே 10 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ள நிலையில் 11-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

    அதன்படி, சென்னையில் இருந்து கோவை வரை இயக்க முடிவு செய்யப் பட்டது. இதற்கான சோதனை ஓட்டம் இன்று காலை தொடங்கியது. அதி காலை 5.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் புறப்பட்டு 8 மணிக்கு ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தை சென்ற டைந்தது. பின்னர் 9.15 மணிக்கு சேலம் ரெயில் நிலை யத்திற்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் வந்த டைந்தது. அப்போது சேலம் கோட்ட ரெயில்வே மேலா ளர் பங்கஜ்குமார் சிங் ரெயிலில் உள்ள சிறப்பம்சங்களை பார்வையிட்டு இன்றைய பயணத்தில் தொழில்நுட்ப ரீதியில் பிரச்சினைகள் ஏதும் இருக்கிறதா? என ஆய்வு செய்தார்.

    பின்னர் சேலம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஈரோடு, திருப்பூர் வழியாக கோவை சென்ற டைகிறது. மறுமார்க்கத்தில் கோவையில் இருந்து நண்பகல் 12.40 மணிக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு மாலை 6.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடைகிறது.

    வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் மொத்தம் 16 பெட்டி களை கொண்டதாகும். இதில் உயர்தர குஷன் சீட்கள், 360 டிகிரியில் சுழலும் வகையில் இருக்கை கள், சி.சி.டி.வி கேமரா வசதி, ரெயில் ஓட்டுநரை நேரடியாக தொடர்பு கொள்ள மைக் வசதி, நவீன கழிவறை, ஏசி வசதி, வைபை, ஜி.பி.எஸ், எல்.சி.டி திரைகள், தனித்தனி விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.

    இந்த ரெயிலை மக்கள் பயன்பாட்டிற்கு வரும் ஏப்ரல் 8-ந் தேதி பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். 

    • தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முழுவதுமாக தடுக்கும் வகையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    • சுகாதார பிரிவு அலுவலர்கள் தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முழுவதுமாக தடுக்கும் வகையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கடந்த 1-ந்தேதி முதல் இன்று வரை ஒருமாத காலத்தில் மட்டும் சுகாதார பிரிவு அலுவலர்கள் தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கு அபராதமாக ரூ.2 லட்சத்து 25 ஆயிரத்து 500 விதிக்கப்பட்டுள்ளது, மேலும் குமரகிரி ஏரி சாலையில் இயங்கி வந்த பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் 83 கிலோ பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட அட்டைக்கப்புகள் பறிமுதல் செய்து அபராதமாக ரூ.25 ஆயிரம் விதிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மாநகர நல அலுவலர் யோகானந் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சுகாதார ஆய்வாளர் சித்தேஸ்வரன் உடன் இருந்தார்.

    • அருண்குமார் (வயது 31). இவர் நேற்று செவ்வாய்பேட்டை அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடை முன்பு நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • பிரபல ரவுடி கோழி பாஸ்கர் (54) என்பவர் அருண்குமாரிடமிருந்து ரூ.5400 மற்றும் செல்போனை பறித்ததாக தெரிகிறது.

    சேலம்:

    சேலம் அன்னதா னப்பட்டி வள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த சவுந்தர்ரா ஜன் மகன் அருண்குமார் (வயது 31). இவர் நேற்று செவ்வாய்பேட்டை அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடை முன்பு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது இவரை வழிமறித்த தாதகாப்பட்டி மூணாங்காடு போலீஸ்கா ரன் நகர் பொம்மன செட்டி காடு பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி கோழி பாஸ்கர் (54) என்பவர் அருண்குமாரிடமிருந்து ரூ.5400 மற்றும் செல்போனை பறித்ததாக தெரிகிறது. இதுபற்றி அருண்குமார் அன்னதா னப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா வழக்கு பதிவு செய்து கோழி பாஸ்கரை கைது செய்தனர். பின்பு அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    மேலும் சம்பவத்தன்று சேலம் இரும்பாலை அருகே உள்ள வட்ட முத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (25) என்ற வாலிபரிடம் ரூ.3000 வழிப்பறி செய்த வழக்கில் கோழி பாஸ்கரை இரும்பாலை போலீசார் தேடி வந்தனர்.

    கைதான கோழி பாஸ்கர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்பட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடர்ந்து வழிப்பறி மற்றும் குற்ற செயல்களில் ஈடுபட்ட வந்த அவரை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று அன்ன தானப்பட்டி போலீஸாரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் கோழி பாஸ்கரின் மனைவி உஷா, 2 மகள்கள், தாய் மகாலட்சுமி, சகோதரி லதா உள்பட 7 பெண்கள் இன்று சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். திடீரென அவர்கள் மண எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்ற னர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று அவர்களை தடுத்தனர்.

    கோழி பாஸ்கர் மீது போலீசார் பொய் வழக்கு போட்டதாகவும், எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோழி பாஸ்கரின் குடும்பத்தி னர் வலியுறுத்தினர். இதை தொடர்ந்து போலீசார் அவர்களை குண்டுகட்டாக தூக்கி ஆட்டோவில் ஏற்றி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    • கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் இருக்கும் நாய்குட்டிகளுக்கு தினம்தோறும் வீட்டிலிருந்து பால் சாதம் தயாரித்து எடுத்து வந்து அளித்து வருகிறார்.
    • இதனை கண்ட பலரும் இவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி கிழக்குக்காடு கணபதி கவுண்டர் தெருவை சேர்ந்தவர் ரவிகாந்த் (வயது 52). தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    விலங்குகள், பறவைகள் மீது அதீத பற்று கொண்ட இவர், தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து, வீட்டில் பானைகள், செயற்கை கூடுகள் அமைத்து, பல ஆண்டுகளாக சிட்டுக்குருவிகளுக்கு வாழிடம் அமைத்து கொடுத்து வருகிறார். கோடை காலங்களில் குருவிகளுக்கு, தண்ணீர் மற்றும் உணவு தானியங்கள் வைத்து வருகிறார்.

    வாழப்பாடி பகுதியில் ஏராளமாக சுற்றித்திரியும் நாய்க்குட்டிகளை, குறிப்பாக பெண் நாய்க்குட்டிகளை, வாழப்பாடி கிழக்குக்காடு மயானம் அருகே கொண்டு வந்து விட்டுச் செல்கின்றனர். இப்படி கைவிடப்பட்ட ஏராளமான நாய்க்குட்டிகள் இப்பகுதியிலேயே தங்கி உணவின்றி தவித்து வருகின்றன.

    இதனைக் கண்ட ரவிகாந்த் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் இருக்கும் நாய்குட்டிகளுக்கு தினம்தோறும் வீட்டிலிருந்து பால் சாதம் தயாரித்து எடுத்து வந்து அளித்து வருகிறார். இதனை கண்ட பலரும் இவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    இதுகுறித்து இவரிடம் கேட்டதற்கு, 'தெரு நாய்கள் குட்டி போடும்போது ஆண் குட்டிகளை எடுத்துச் செல்லும் பொதுமக்கள், பெண் குட்டிகளை கொண்டு வந்து மயானத்தில் விட்டு சென்று விடுகின்றனர். இந்த குட்டிகள் உணவின்றி தவித்து வருகின்றன.

    இதனால், இந்த நாய்க்குட்டிகளுக்கு உணவளிக்க வேண்டும் என மனதில் தோன்றியது. 2 ஆண்டுகளாக தொடர்ந்து உணவளித்து வருகிறேன். இது எனக்கு மன நிறைவைத் தருகிறது' என்றார்.

    • தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • 1993-ல் பணியில் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.

    மகுடஞ்சாவடி:

    சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 1993-ல் பணியில் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும், சிலிண்டர் தொகையை பில்லில் உள்ள முழு தொகையையும் வழங்க வேண்டும், தமிழக முழுவதும் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

    • சுகவனேஸ்வரர் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. இந்த கோவிலுக்கு சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு நடத்தி செல்கிறார்கள்.
    • ஸ்ரீ சுகப்பிரம்ம ரிஷியால் வழிபட பெற்ற ஒரே திருத்தலமாக விளங்குகிறது.

    சேலம்:

    சேலம் டவுன் பகுதியில் அமைந்துள்ள சுகவனேஸ்வரர் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. இந்த கோவிலுக்கு சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு நடத்தி செல்கிறார்கள்.

    இந்த கோவிலானது ஸ்ரீ சுகப்பிரம்ம ரிஷியால் வழிபட பெற்ற ஒரே திருத்தலமாக விளங்குகிறது. 18 சித்தர்களின் தாய் என்று அழைக்கப்படும் சுதந்திர சக்தியாக அருள் பாலிக்கும் சொர்ணாம்பிகை அம்மனை பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.

    இங்கு போரில் வெற்றி பெற அகத்தியரால் உபதேசிக்கப்பட்டு ஸ்ரீ ராமனால் அனுஷ்டிக்கப்பட்ட சிறப்பு வாய்ந்த வசந்த நவராத்திரி விழா கடந்த 22-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி தினமும் மாலை பக்தர்களுக்கு அபிராமி அந்தாதி பாராயணம் செய்யப்பட்டு வருகிறது.

    இதன் நிறைவு விழாவான நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு கோமாதா மற்றும் நந்திகேஸ்வரர் பூஜை நடைபெறுகிறது.

    மாலை 5.30 மணிக்கு சொர்ணாம்பிகை அம்மன் பாதத்தில் வைத்து பூஜிக் கப்பட்ட சொர்ணாம்பிகை அம்மனின் திரு உருவம் பதித்த செப்பு டாலர் பக்தர்களுக்கு இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • மணி கண்டன் (வயது 39). தொழி லாளியான இவர், நேற்று சேலம் கருங்கல்பட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • மோட்டார் சைக்கிள் நடு வழியில் நின்று விட்டது.

    சேலம்:

    சேலம் கொண்ட லாம்பட்டி திவ்யா தியேட்டர் பின்பகுதியில் வசித்து வருபவர் மணி கண்டன் (வயது 39). தொழிலாளியான இவர், நேற்று சேலம் கருங்கல்பட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மோட்டார் சைக்கிள் நடு வழியில் நின்று விட்டது. இதையடுத்து அதை மீண்டும் இயக்க பலமுறை முயற்சித்தும், மோட்டார் சைக்கிள் ஸ்டார்ட் ஆக வில்லை. இதனால் ஆத்திர மடைந்த மணிகண்டன், மோட்டார் சைக்கிளை நடு ரோட்டில் தீ வைத்து எரித்தார்.

    இதனால் மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து சாம்பல் ஆனது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது. இதனை பார்த்த அந்த பகுதியினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே அங்கு விரைந்து சென்ற செவ்வாய்ப்பேட்டை போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். பொது இடத்தில் மோட்டார் சைக்கிளை எரித்ததற்காக மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் கடத்தி செல்பவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
    • சேலம் மாவட்ட போலீசாரும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்ய தீவிர வாகன சோதனை, ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கருப்பூர்:

    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் கடத்தி செல்பவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். அதன்படி சேலம் மாவட்ட போலீசாரும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்ய தீவிர வாகன சோதனை, ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் பெங்க ளூருவில் இருந்து தேனி மாவட்டம் கம்பம் செல்லும் தனியார் சொகுசு பஸ்சில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வருவதாக நேற்று கருப்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சேலம் அருகே கருப்பூர் சுங்கச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்ட னர்.அப்போது சுங்கச்சா வடிக்கு வந்து நின்ற தனியார் சொகுசு பஸ்சில் ஏறி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதில் பஸ்சின் பின் வரிசையில் உள்ள சீட்டுக்கு அடியில் ஒரு மூட்டை யில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து குட்கா மூட்டையை போலீசார் பறி முதல் செய்தனர். கடத்தப்பட்ட குட்காவின் மதிப்பு ரூ.20 ஆயிரம் என தெரிவிக்கப்பட்டது. இதை யடுத்து பஸ் டிரைவர்கள் தேனி சின்னமனூர் நடுத்தெ ருவை சேர்ந்த முத்துகி ருஷ்ணன் (வயது 40), வெள்ளையன் தெருவை சேர்ந்த செந்தில் (46), கிளீனர் முருகன் ஆகியோரை போலீ சார் கைது செய்தனர்.

    அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பெங்க ளூரில் பெயர் தெரியாத ஒரு நபர் ஆயிரம் ரூபாய் கொடுத்து மூட்டையை ஏற்றி விட்டதாகவும், தேனியில் உள்ள ஆஷிக் என்பவரி டம் கொடுக்கும்படி தொலை பேசி எண்ணை மட்டும் கொடுத்துள்ளார் என்ற விபரத்தினை தெரிவித்தனர்.

    இதையடுத்து தேனிக்கு விரைந்த போலீசார் அங்கு பஸ்சில் போதைப்பொருட் களை வாங்க தயாராக நின்ற ஆஷிக்கை யும் கைது செய்த னர். கைதான 4 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசா ரணை நடத்தி னர். இதை யடுத்து 4 பேரும் கோர்ட்டில் அஜர்படுத்தப்பட்டு சேலம்சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • வளை யச்செட்டிபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் முன்பு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • பால் விலையை லிட்டருக்கு ரூ.7 உயர்த்தி தர வேண்டும்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வளை யச்செட்டிபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் முன்பு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் மாவட்ட தலைவர் மணி தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க சேலம் மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.

    இதில், பால் விலையை லிட்டருக்கு ரூ.7 உயர்த்தி தர வேண்டும். ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தை பாதுகாத்திட வேண்டும். பால் உற்பத்தி யாளர் சங்கத்தின் பணியா ளர்களுக்கு, பணி பாது காப்பு வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தில் கறவை மாடுகளுடன் பால் உற்பத்தியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சேலம்- விருத்தாசலம் இடையே இரு மார்க்கத்திலும் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
    • இந்த நிலையில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) முதல் இந்த ரெயிலின் வேகம் அதிகரிக்கப்படுகிறது. இதனால் பயண நேரம் 15 நிமிடம் குறையும்.

    சேலம்:

    சேலம் ரெயில்வே கோட்டம் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலம்- விருத்தாசலம் இடையே இரு மார்க்கத்திலும் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) முதல் இந்த ரெயிலின் வேகம் அதிகரிக்கப்படுகிறது. இதனால் பயண நேரம் 15 நிமிடம் குறையும்.

    அதன்படி விருத்தாசலம்- சேலம் பயணிகள் ரெயில் (06121) விருத்தாசலத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு காலை 9.05 மணிக்கு சேலம் வந்தடையும்.

    சேலம்- விருத்தாசலம் பயணிகள் ரெயில் (06122) சேலத்தில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு விருத்தாசலம் சென்றடையும். இதேபோல் சேலம்- விருத்தாசலம் பயணிகள் ரெயில் (06896) சேலத்தில் இருந்து காலை 10.10 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.10 மணிக்கு விருத்தாசலம் சென்றடையும்.

    விருத்தாசலம்- சேலம் பயணிகள் ரெயில் (06895) விருத்தாசலத்தில் இருந்து மதியம் 2.05 மணிக்கு புறப்பட்டு மாலை 5.05 மணிக்கு சேலம் வந்தடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது பிரகாசின் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது.
    • எடப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வெள்ளரிவெள்ளி ஊராட்சி, வேட்டுவப்பட்டி பகுதியைச் சேர்ந்த உத்தரசாமி மகன் பிரகாஷ் (வயது 25). வேன் டிரைவரான இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் எடப்பாடி நோக்கி வந்தார்.

    எடப்பாடி - கோனேரிப்பட்டி பிரதான சாலையில் நெசவாளர் காலனி பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்றபோது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது பிரகாசின் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது.

    இதில் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த சிலுவம்பாளையம் தம்பாகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த உத்தரசாமி, அவரது மகன் கவின் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

    அவர்களை, அருகில் இருந்தவர்கள் மீட்டு எடப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த எடப்பாடி போலீசார், பிரகாஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு கோடை காலம் தொடக்கத்திலேயே ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது.
    • ஏற்காடு கோடை விழாவில் மலர் கண்காட்சிக்கு தேவைப்படும் மலர்ச்செடிகளை இப்போதே நடவு செய்யத் தொடங்கியுள்ளோம்.

    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காட்டிற்கு கோடை காலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவில் இருக்கும். இதேபோல், பள்ளி விடுமுறை நாட்கள், அரசு விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களிலும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவது வழக்கம்.

    நடப்பு ஆண்டு பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நெருங்கி வருகிறது. இதையொட்டி, ஏற்காட்டு சுற்றுலா தலம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதையடுத்து படகு இல்லத்தில் உள்ள படகுகளுக்கு வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.

    கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு கோடை காலம் தொடக்கத்திலேயே ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. இதனால் இங்கு இதமான சூழல் நிலவுகிறது.

    எனவே இந்த இதமான சூழலை ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதேபோல் இங்குள்ள பூங்காக்களிலும் வண்ணமயமான மலர் செடிகள் வளர்க்கப்பட்டு, பூங்காக்களும் சுற்றுலா பயணிகள் ரசிக்கும் வண்ணம் தயார் செய்யப்பட்டு வருகிறது. ஏற்காடு சுற்றுலா தலத்தில், ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா மலர் கண்காட்சி நடத்தப்படும். கோடை விழாவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் மலர்க் கண்காட்சிக்காக முன்னேற்பாடு பணிகளில் தோட்டக்கலைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக தோட்டக் கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில்,

    ஏற்காடு கோடை விழாவில் மலர் கண்காட்சிக்கு தேவைப்படும் மலர்ச்செடிகளை இப்போதே நடவு செய்யத் தொடங்கியுள்ளோம். அண்ணா பூங்காவில் ஏராளமான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. ஏற்காடு ரோஜா என்று அழைக்கப்படும் டேலியா கட்டிங்ஸ் வகைகளும் நடவு செய்யப்பட்டு வருகிறது.

    ஏற்காட்டில் பருவமழை சீராக பெய்துள்ளதால் தற்போது, ஏற்காட்டில் தட்பவெப்ப நிலை சீராக உள்ளது. இதன் காரணமாக, தோட்டங்களில் வைத்துள்ள பூச்செடிகள் செழித்து வளரத் தொடங்கியுள்ளன. எனவே, கோடை விழா தொடங்கும்போது நடவு செய்யப்பட்டுள்ள பூச்செடிகள் முழுமையாக வளர்ச்சியடைந்து, பூத்துக்குலுங்கி, சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும் என்றனர்.

    ×