என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் நாளை வசந்த நவராத்திரி விழாவையொட்டி பக்தர்களுக்கு செப்பு டாலர் விநியோகம்
- சுகவனேஸ்வரர் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. இந்த கோவிலுக்கு சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு நடத்தி செல்கிறார்கள்.
- ஸ்ரீ சுகப்பிரம்ம ரிஷியால் வழிபட பெற்ற ஒரே திருத்தலமாக விளங்குகிறது.
சேலம்:
சேலம் டவுன் பகுதியில் அமைந்துள்ள சுகவனேஸ்வரர் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. இந்த கோவிலுக்கு சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு நடத்தி செல்கிறார்கள்.
இந்த கோவிலானது ஸ்ரீ சுகப்பிரம்ம ரிஷியால் வழிபட பெற்ற ஒரே திருத்தலமாக விளங்குகிறது. 18 சித்தர்களின் தாய் என்று அழைக்கப்படும் சுதந்திர சக்தியாக அருள் பாலிக்கும் சொர்ணாம்பிகை அம்மனை பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.
இங்கு போரில் வெற்றி பெற அகத்தியரால் உபதேசிக்கப்பட்டு ஸ்ரீ ராமனால் அனுஷ்டிக்கப்பட்ட சிறப்பு வாய்ந்த வசந்த நவராத்திரி விழா கடந்த 22-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி தினமும் மாலை பக்தர்களுக்கு அபிராமி அந்தாதி பாராயணம் செய்யப்பட்டு வருகிறது.
இதன் நிறைவு விழாவான நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு கோமாதா மற்றும் நந்திகேஸ்வரர் பூஜை நடைபெறுகிறது.
மாலை 5.30 மணிக்கு சொர்ணாம்பிகை அம்மன் பாதத்தில் வைத்து பூஜிக் கப்பட்ட சொர்ணாம்பிகை அம்மனின் திரு உருவம் பதித்த செப்பு டாலர் பக்தர்களுக்கு இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.






