search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் ஒரு மாதத்தில் 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
    X

    பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குவித்து வைத்துள்ள காட்சி.

    சேலத்தில் ஒரு மாதத்தில் 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

    • தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முழுவதுமாக தடுக்கும் வகையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    • சுகாதார பிரிவு அலுவலர்கள் தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முழுவதுமாக தடுக்கும் வகையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கடந்த 1-ந்தேதி முதல் இன்று வரை ஒருமாத காலத்தில் மட்டும் சுகாதார பிரிவு அலுவலர்கள் தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கு அபராதமாக ரூ.2 லட்சத்து 25 ஆயிரத்து 500 விதிக்கப்பட்டுள்ளது, மேலும் குமரகிரி ஏரி சாலையில் இயங்கி வந்த பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் 83 கிலோ பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட அட்டைக்கப்புகள் பறிமுதல் செய்து அபராதமாக ரூ.25 ஆயிரம் விதிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மாநகர நல அலுவலர் யோகானந் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சுகாதார ஆய்வாளர் சித்தேஸ்வரன் உடன் இருந்தார்.

    Next Story
    ×