என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் அன்னதானப்பட்டியில் 30 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி கைது

    • அருண்குமார் (வயது 31). இவர் நேற்று செவ்வாய்பேட்டை அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடை முன்பு நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • பிரபல ரவுடி கோழி பாஸ்கர் (54) என்பவர் அருண்குமாரிடமிருந்து ரூ.5400 மற்றும் செல்போனை பறித்ததாக தெரிகிறது.

    சேலம்:

    சேலம் அன்னதா னப்பட்டி வள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த சவுந்தர்ரா ஜன் மகன் அருண்குமார் (வயது 31). இவர் நேற்று செவ்வாய்பேட்டை அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடை முன்பு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது இவரை வழிமறித்த தாதகாப்பட்டி மூணாங்காடு போலீஸ்கா ரன் நகர் பொம்மன செட்டி காடு பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி கோழி பாஸ்கர் (54) என்பவர் அருண்குமாரிடமிருந்து ரூ.5400 மற்றும் செல்போனை பறித்ததாக தெரிகிறது. இதுபற்றி அருண்குமார் அன்னதா னப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா வழக்கு பதிவு செய்து கோழி பாஸ்கரை கைது செய்தனர். பின்பு அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    மேலும் சம்பவத்தன்று சேலம் இரும்பாலை அருகே உள்ள வட்ட முத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (25) என்ற வாலிபரிடம் ரூ.3000 வழிப்பறி செய்த வழக்கில் கோழி பாஸ்கரை இரும்பாலை போலீசார் தேடி வந்தனர்.

    கைதான கோழி பாஸ்கர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்பட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடர்ந்து வழிப்பறி மற்றும் குற்ற செயல்களில் ஈடுபட்ட வந்த அவரை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று அன்ன தானப்பட்டி போலீஸாரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் கோழி பாஸ்கரின் மனைவி உஷா, 2 மகள்கள், தாய் மகாலட்சுமி, சகோதரி லதா உள்பட 7 பெண்கள் இன்று சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். திடீரென அவர்கள் மண எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்ற னர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று அவர்களை தடுத்தனர்.

    கோழி பாஸ்கர் மீது போலீசார் பொய் வழக்கு போட்டதாகவும், எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோழி பாஸ்கரின் குடும்பத்தி னர் வலியுறுத்தினர். இதை தொடர்ந்து போலீசார் அவர்களை குண்டுகட்டாக தூக்கி ஆட்டோவில் ஏற்றி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    Next Story
    ×