என் மலர்tooltip icon

    சேலம்

    • சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே நாயக்கம்பட்டி கிராமத்தில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது.
    • இந்த முகாமில் உள்ள வாலிபர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக தம்மம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே நாயக்கம்பட்டி கிராமத்தில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் உள்ள வாலிபர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக தம்மம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அகதிகள் முகாமில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அதே முகாமை சேர்ந்த சிவராஜா என்பவரது மகன் செந்தூரன்(வயது 21) கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 250 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    • ரெயில்வே தண்டவாளம் அருகே ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
    • சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே போலீசார் பலியான நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என விசாரணை மேற்கொண்டனர்.

    ஆத்தூர்:

    ஆத்தூர் அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலியானார்.

    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள பட்டுத்துறை சேலம்- சென்னை-விருதாச்சலம் ரெயில்வே தண்டவாளம் அருகே ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே போலீசார் பலியான நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அந்த நபர் பட்டுத்துறை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுந்தர்ராஜ் (36) என்பதும் இவர் நேற்று முன்தினம் கூலி வேலைக்கு செல்வதாக சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என்பதும் தெரிய வந்தது.

    இதனை அடுத்து உயிரிழந்த சுந்தர்ராஜன் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வளிமண்டலத்தில் மேல் அடுக்கில் நிலவும் சுழற்சி மற்றும் வெப்ப சலனம் உள்ளிட்டவை காரணமாக சேலம் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது.
    • பகலில் வெப்பமாக இருந்தாலும் இரவில் குளிர்ந்த காற்றும், சாரல் மழையாகவும் இருக்கிறது.

    சேலம்:

    வளிமண்டலத்தில் மேல் அடுக்கில் நிலவும் சுழற்சி மற்றும் வெப்ப சலனம் உள்ளிட்டவை காரணமாக சேலம் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. பகலில் வெப்பமாக இருந்தாலும் இரவில் குளிர்ந்த காற்றும், சாரல் மழையாகவும் இருக்கிறது.

    நேற்று நள்ளிரவில் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக சேலம், ஏற்காடு, மேச்சேரி, மேட்டூர், கொளத்தூர், ஆத்தூர், அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, காடையாம்பட்டி, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை இடைவிடாமல் தூறிக்கொண்டே இருந்தது. சாலைகள், தாழ்வான இடங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    தொடர்ந்து இன்று பகலில் வானம் மேக மூட்டத்துடனே காணப்படு கிறது. தொடர் மழையால், சேலம் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மலை பகுதிகளில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள், கிணறுகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • ஒருங்கிணைந்த நீதிமன்றத்திலும் மற்றும் சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர் மற்றும் ஓமலூர் வட்டார நீதிமன்றங்களிலும், தேசிய மக்கள் நீதிமன்றம் வருகிற 13-ந்தேதி(சனிக்கிழமை) நடைபெற உள்ளது.
    • மக்கள் நீதிமன்றம் மூலமாக தீர்வு காணப்படும் வழக்குகளுக்கு, செலுத்தப்பட்ட நீதிமன்ற கட்டணம் முழுமையாகத் இருப்பி கொடுக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டசட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான எஸ்.சுமதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் வழிகாட்டுதல்படி சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்திலும் மற்றும் சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர் மற்றும் ஓமலூர் வட்டார நீதிமன்றங்களிலும், தேசிய மக்கள் நீதிமன்றம் வருகிற 13-ந்தேதி(சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

    மக்கள் நீதிமன்றத்தில் சமரசம் செய்துக் கொள்ள கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை தொடர்பான வழக்குகள், வங்கி கடன்கள், கல்வி கடன்கள் தொடர்பான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், விவாகரத்து தவிர்த்த மற்ற குடும்பப் பிரச்னைகள் தொடர்பான வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள், உரிமையியல் வழக்குகள் (நிலம், சொத்து, பாக பிரிவினை வாடகை விவகாரங்கள்), விற்பனைவரி, வருமான வரி, சொத்துவரி பிரச்சனைகள் பேச்சுவார்த்தை மூலம் சமரச முறையில் தீர்வு காணப்படும்.

    மக்கள் நீதிமன்றம் மூலமாக தீர்வு காணப்படும் வழக்குகளுக்கு, செலுத்தப்பட்ட நீதிமன்ற கட்டணம் முழுமையாகத் இருப்பி கொடுக்கப்படும் வாய்ப்பும் உள்ளது. எனவே, பொதுமக்கள் தேசிய மக்கள் நீதிமன்றத்தை பயன்படுத்தி தங்கள் வழக்குகளுக்கு விரைவாகவும், சமரச முறையிலும் தீர்வு காணலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

    • அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்து முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
    • மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களாக இருக்க வேண்டும். குழுவில் சேர்ந்து 3 ஆண்டுகள் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வரும் கல்வி ஆண்டு முதல் அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்து முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    சேலம் மாவட்டத்தில் இத்திட்டத்தினைச் செயல்படுத்தும் பொருட்டு காலை உணவு தயாரிக்க கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சி, அளவிலான முதன்மை குழு மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் பின்வரும் நிபந்தனைகள் மற்றும் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

    மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களாக இருக்க வேண்டும். குழுவில் சேர்ந்து 3 ஆண்டுகள் பூர்த்தி செய்திருக்க வேண்டும். கடந்த 3 ஆண்டுகளில் பெற்ற கடன்களை தவணை தவறாது நிலுவையின்றி செலுத்தியிருக்க வேண்டும். மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் அதே ஊராட்சியில், பேரூராட்சியில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

    மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினரின் குழந்தை அதே தொடக்கப் பள்ளியில் படிக்க வேண்டும். அக்குழந்தை அப்பள்ளியில் தொடக்கப் படிப்பு முடிந்து வேறு பள்ளிக்கு சென்று விட்டால் அச்சுய உதவிக்குழு உறுப்பினர் காலை உணவு தயாரிப்பு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு வேறு தகுதியான மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் தேர்வு செய்யப்படுவார்.

    மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் குறைந்த பட்சம் 10 -ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். உணவு சமைப்பதில் ஆர்வம் உள்ளவராக இருக்க வேண்டும். மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் தங்கள் பெயரில் இணைய வசதியுடன் கூடிய மொபைல் போன் வைத்திருக்க வேண்டும். அதனை இயக்கத் தெரிந்திருக்க வேண்டும். இப்பணி முற்றிலும் தற்காலிகமானதாகும்.

    இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    சமையல் செய்வதற்கு அனுபவம் தேவை என்பது இதில் இடம்பெறவில்லை. அதற்கு மாறாக ஆர்வம் மட்டுமே இருந்தால் போதும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுபோல் நிபந்தனையில் வயது வரம்பும் இடம்பெறவில்லை. இதனால் இப்பணியில் சேர மகளிர் சுய உதவி குழுவினர் மத்தியில் கடும் போட்டி ஏற்படும் என தெரிகிறது. 

    • சேலம்- சென்னை-விருதாச்சலம் ரெயில்வே தண்டவாளம் அருகே ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி கிடந்தது.
    • ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

    ஆத்தூர்:

    ஆத்தூர் அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலியானார்.

    வாலிபர்

    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள பட்டுத்துறை சேலம்- சென்னை-விருதாச்சலம் ரெயில்வே தண்டவாளம் அருகே ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே போலீசார் பலியான நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அந்த நபர் பட்டுத்துறை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுந்தர்ராஜ் (36) என்பதும் இவர் நேற்று முன்தினம் கூலி வேலைக்கு செல்வதாக சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என்பதும் தெரிய வந்தது.

    இதனை அடுத்து உயிரிழந்த சுந்தர்ராஜன் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • முல்லைநகர் சின்னப் பசெட்டி தெருவில் உள்ள ஒரு வீட்டில் மேல் மாடியில் வாடகைக்கு ரவி (வயது 60) என்பவர் குடியிருந்து வந்தார்.
    • நேற்று முன்தினம் வீடு உள்பக்கமாக பூட்டி யிருந்த நிலையில் இவர் வீட்டுக்குள் இறந்து கிடந்தார்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் முல்லைநகர் சின்னப் பசெட்டி தெருவில் உள்ள ஒரு வீட்டில் மேல் மாடியில் வாடகைக்கு ரவி (வயது 60) என்பவர் குடியிருந்து வந்தார். நேற்று முன்தினம் வீடு உள்பக்கமாக பூட்டி யிருந்த நிலையில் இவர் வீட்டுக்குள் இறந்து கிடந்தார். இது பற்றி வீட்டின் உரிமை யாளர், சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார், சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று ரவி உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து போலீசார், அக்கம் பக்கத்தில் உள்ளவர் களிடம் அவரை பற்றி விசாரணை செய்தபோது அவருடைய முகவரியோ, உறவினர்கள் பற்றிய விபரமோ தெரியவில்லை என்றனர். இறந்த நபரின் வலது காலில் கருப்பு மச்சம், இடது முட்டியின் கீழ் காயத்தழும்பு உள்ளது. எனவே அவரை பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் போலீஸ் நிலையத்தில் தெரிவிக்கும்படி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • நீர் திறப்பை விட வரத்து அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    மேட்டூர்:

    காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், அதன் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு உள்ளிட்ட பகுதிகளிலும் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.

    நேற்று இந்த பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் மேட்டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 3,992 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை சற்று அதிகரித்து விநாடிக்கு 4,605 கன அடி வீதம் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் திறப்பை விட வரத்து அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 102.88 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 8 மணி அளவில் 103.06 அடியாக உயர்ந்தது.

    • குழந்தையை வளர்ப்பது குறித்து, எனக்கும், மல்லேசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • தலைமறைவாக இருந்த எங்களை போலீசார் கண்டுபிடித்து கைது செய்துவிட்டனர்.

    தாரமங்கலம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை சேர்ந்தவர் மல்லேஷ் (வயது 32). இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர்.

    இவர் சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே சிக்கம்பட்டி ஊராட்சி புதூர் காடம்பட்டியில் தங்கி அங்குள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார்.

    அதே சூளையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புதுவடவள்ளி பகுதியை சேர்ந்த சக்திவேல், இவரது மனைவி கலைவாணி (27) ஆகியோர் தங்களது ஒரு வயது பெண் குழந்தையுடன் தங்கியிருந்து வேலை செய்து வந்தனர்.

    இந்நிலையில் கலைவாணியுடன் மல்லேசுக்கு பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதை அறிந்த கணவர் சக்திவேல், தனது மனைவியை கண்டித்தார்.

    ஆனால் கள்ளக்காதல் மோகத்தில் இருந்த கலைவாணி, கணவரை விட்டு விட்டு, தனது 1 வயது குழந்தையுடன் கள்ளக்காதலன் மல்லேஷ் வீட்டில் குடியேறினார்.

    இந்நிலையில் குழந்தையை வளர்ப்பது குறித்து இருவருக்கும் இடையே கடந்த வாரம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது குழந்தை அழுது கொண்டே இருந்ததால் குழந்தையை தூக்கி சுவற்றில் அடித்துள்ளனர்.

    இதில் மண்டை உடைந்து இரவு முழுவதும் உயிருக்கு போராடிய குழந்தையை மறுநாள் தூக்கிச் சென்று ஓமலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தை நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தது.

    இது பற்றி டாக்டர்கள் தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே கள்ளக்காதல் ஜோடி மல்லேஷ்-கலைவாணி தப்பி ஓடி கர்நாடகா மாநிலத்தில் பதுங்கியிருந்தனர். இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று தலைமறைவாக இருந்த இருவரையும் கைது செய்து தாரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது கலைவாணி போலீசாரிடம் அளித்த பகீர் வாக்குமூலம் வருமாறு:-

    எனக்கு ஏற்கனவே 3 கணவர்கள் உள்ளனர். இதில் 2 கணவர்களை பிரிந்து 3-வதாக சக்திவேலை திருமணம் செய்து கொண்டேன். போதிய வருமானம் இல்லாததால் நாங்கள் இருவரும் எங்களது ஒரு வயது குழந்தையுடன் சேலம் மாவட்டம் சிக்கம்பட்டி ஊராட்சி புதூர் காடம்பட்டியில் உள்ள செங்கல் சூளையில் வேலைக்கு வந்தோம். இங்கு வேலை பார்த்து வந்த மல்லேஷ் என்பவர் என்னிடம் ஆரம்பத்தில் நல்ல நண்பர் போல் பழகினார்.

    ஒரு கட்டத்தில் நெருங்கி பழக தொடங்கினார். நான் அவரை சத்தம் போட்டேன். ஆனால் மல்லேஷ் கேட்கவில்லை. தொடர்ந்து என்னை பின்தொடர்ந்து ஆசைவார்த்தைகளை அள்ளிவிட்டு மயக்கினார். அவரது காதல் வலையில் வீழ்ந்த நான், ஒரு கட்டத்தில் அதில் இருந்து என்னால் மீளமுடியவில்லை. இதனால் கடந்த மாதம் நான் எனது ஒரு வயது குழந்தையுடன் மல்லேஷ் வீட்டின் குடியேறினேன். இங்கு என்னை தொடர்ந்து மது பழக்கத்துக்கு ஆளாக்கினார்.

    இந்நிலையில் குழந்தையை வளர்ப்பது குறித்து, எனக்கும், மல்லேசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வேறு ஒருவருக்கு பிறந்த குழந்தையை தன்னால் வளர்க்க முடியாது என மல்லேஷ் தெரிவித்தார். இதையடுத்து கடந்த 1-ந்தேதி இருவரும் சேர்ந்து மது குடித்தோம்.

    பின்னர் உல்லாசமாக இருந்தோம். அந்த சமயத்தில் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் ஆத்திரம் அடைந்த நானும், மல்லேசும் சேர்ந்து குழந்தையை தூக்கி சுவற்றி அடித்தோம். இதில் படுகாயம் அடைந்த குழந்தை ஆஸ்பத்திரியில் பரிதாபமாக இறந்தது.

    கள்ளக்காதலன் மல்லேசை நம்பினேன். அவர் எனது குழந்தையை கொலை செய்ய வைத்து எனது வாழ்க்கையை சீரழித்து விட்டார். தலைமறைவாக இருந்த எங்களை போலீசார் கண்டுபிடித்து கைது செய்துவிட்டனர். இவ்வாறு கலைவாணி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

    இதையடுத்து போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து, மல்லேஷை ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையிலும், கலைவாணியை அஸ்தம்பட்டியில் உள்ள பெண்கள் சிறையிலும் அடைத்தனர்.

    கள்ளக்காதல் மோகத்தில் பிஞ்சு குழந்தையை தாயும், கள்ளக்காதலனும் சேர்ந்து அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 18 ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • கூட்டத்திற்கு எலவம்பட்டி ஊராட்சி செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 18 ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு எலவம்பட்டி ஊராட்சி செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சி செயலாளர்களுக்கு மாத ஊதியம் கருவூலம் மூலம் வழங்க வலியுறுத்தி வருகிற 15-ந் தேதி சென்னை பனகல் மாளிகை முன்பு நடைபெறும் மாநிலம் தழுவிய தொடர் காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

    • சேலம் தளவாய்பட்டி இரும்பாலை ரோட்டில் உள்ள வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை) குறைதீர்க்கும் முகாம் மண்டல ஆணையர் சிவகுமார் தலைமையில் நடக்கிறது.
    • அதன்படி அன்று காலை 11.30 மணிக்கு சந்தாதாரர்களுக்கும் நடக்கிறது.

    சேலம்:

    சேலம் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் விஜய் ஆனந்த் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலம் தளவாய்பட்டி இரும்பாலை ரோட்டில் உள்ள வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை) குறைதீர்க்கும் முகாம் மண்டல ஆணையர் சிவகுமார் தலைமையில் நடக்கிறது. அதன்படி அன்று காலை 11.30 மணிக்கு சந்தாதாரர்களுக்கும் நடக்கிறது.

    மதியம் 3 முதல் 4 மணி வரை தொழில் அதிபர்களுக்கும், மாலை 4 முதல் 5 மணி வரை விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுக்கும் முகாம் நடக்கிறது. எனவே முகாமில் கலந்து கொண்டு குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • சேலம் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சித்தேஸ்வரன். இவர் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டதாக தெரிகிறது.
    • இதனால் அவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சித்தேஸ்வரன். இவர் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஆணையாளர் கிறிஸ்துராஜ் பிறப்பித்துள்ளார்.

    இது குறித்து ஆணையாளர் கிறிஸ்துராஜிடம் கேட்ட போது சுகாதார ஆய்வாளர் மீது பல்வேறு புகார்கள் வந்தது. அதன்பேரில் அலுவலர்கள் மூலம் அவரை பற்றி முதல் கட்ட விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை அறிக்கையின்படி சுகாதார ஆய்வாளர் சித்தேஸ்வரன் பணி இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார் என்றார்.

    சஸ்பெண்டு செய்யப்பட்ட சித்தேஸ்வரன் மாநகராட்சி தூய்மைப்பாணியாளர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதனால் மனம் உடைந்த அந்த பெண் தற்கொலைக்கு முயன்ரதாகவும் தெரிகிறது, இதன் காரணமாகவே அவர் சஸ்பெண்டு செய்யப் பட்டதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    ×