என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலம் மாவட்டத்தில் நள்ளிரவில் பலத்த மழை
- வளிமண்டலத்தில் மேல் அடுக்கில் நிலவும் சுழற்சி மற்றும் வெப்ப சலனம் உள்ளிட்டவை காரணமாக சேலம் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது.
- பகலில் வெப்பமாக இருந்தாலும் இரவில் குளிர்ந்த காற்றும், சாரல் மழையாகவும் இருக்கிறது.
சேலம்:
வளிமண்டலத்தில் மேல் அடுக்கில் நிலவும் சுழற்சி மற்றும் வெப்ப சலனம் உள்ளிட்டவை காரணமாக சேலம் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. பகலில் வெப்பமாக இருந்தாலும் இரவில் குளிர்ந்த காற்றும், சாரல் மழையாகவும் இருக்கிறது.
நேற்று நள்ளிரவில் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக சேலம், ஏற்காடு, மேச்சேரி, மேட்டூர், கொளத்தூர், ஆத்தூர், அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, காடையாம்பட்டி, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை இடைவிடாமல் தூறிக்கொண்டே இருந்தது. சாலைகள், தாழ்வான இடங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
தொடர்ந்து இன்று பகலில் வானம் மேக மூட்டத்துடனே காணப்படு கிறது. தொடர் மழையால், சேலம் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மலை பகுதிகளில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள், கிணறுகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






