என் மலர்
சேலம்
- கல்வராயன் மலை பகுதியில் அனுமதி பெறாமல் வைத்திருந்த நாட்டு துப்பாக்கி தவறி விழுந்ததில் வெடித்தது.
- இதில் காயம் அடைந்த விவசாயிக்கு சிகிச்சையின்போது கால் அகற்றப்பட்டது.
சேலம்:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள கல்வராயன் மலை பகுதியில் உள்ள செம்பருக்கை கிராமத்தில் அண்ணாமலை மகன் ராஜா (வயது 26) என்பவர் அனுமதி பெறாமல் நாட்டு துப்பாக்கி வைத்திருந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நாட்டு துப்பாக்கி கையில் இருந்து கீழே தவறி விழுந்ததில், துப்பாக்கி வெடித்து காலில் காயம் ஏற்பட்டது.
வெளியில் தெரிந்தால் போலீசாரிடம் சிக்கி விடுவோம் என்ற அச்சத்தில், வீட்டிலேயே ஒரு மாதம் இருந்ததால் முழங்கால் வரை அழுகியுள்ளது. இது குறித்து தகவலின்பேரில் கரிய கோவில் போலீசார், அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
கால் அழுகியதால் மேலும் தொற்று பரவி விடாமல் இருக்க விவசாயி ராஜாவின் இடது முழங்கால் வரை அகற்றி, அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
- சேலம் மின்வாரிய ஊழியர் தவறி விழுந்து பலியானார்.
- மின் கம்பத்தில் ஏரி பழுதை சரி செய்துவிட்டு கீழே இறங்கியபோது விபத்து.
சேலம்:
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள தேவியாகுறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45). இவர் சேலம் அம்மாபேட்டை மின்சார வாரிய அலுவலகத்தில் லைன் மேன் ஆக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி பணியில் இருந்த போது அம்மாபேட்டை கவுண்டம்மன் கோயில் தெருவில் உள்ள ஒரு மின் கம்பத்தில் ஏரி பழுதை சரி செய்துவிட்டு கீழே இறங்கினார்.
அப்போது செந்தில்குமார் தவறி கீழே விழுந்தார்.
இதில் தலையில் அடிபட்டு மயங்கிய இவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த செந்தில்குமார் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.ர்
- மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.
- நீர் திறப்பை விட வரத்து அதிகமாக உள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், அதன் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு உள்ளிட்ட பகுதிகளிலும் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.
இந்த பகுதியில் தற்பொழுது விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 4,605 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 5,727 கன அடியாக அதிகரித்தது.
இன்று நீர்வரத்து சற்று குறைந்து விநாடிக்கு 5,253 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. நீர் திறப்பை விட வரத்து அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 103.31 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 8 மணி அளவில் 103.53 அடியாக உயர்ந்தது.
- அ.தி.மு.க. சார்பாக அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த 125 ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடைகள், மற்றும் பெண்களுக்கு சேலைகள், இனிப்புகள் வழங்கினார்.
- முன்னாள் எம்.எல்.ஏ. செல்வராஜ், முன்னாள் மேயர் சவுண்டப்பன், பகுதி செயலாளர்கள் சரவணன், யாதவ மூர்த்தி, முருகன், ஜெய்பிரகாஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
எடப்பாடி பழனிசாமி தனது பிறந்தநாளையொட்டி சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் சேலம் மாநகர் மாவட்டம் அ.தி.மு.க. சார்பாக அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த 125 ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடைகள், மற்றும் பெண்களுக்கு சேலைகள், இனிப்புகள் வழங்கினார்.
அப்போது மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம், எம்.எல்.ஏ. பாலசுப்பிரமணியம், முன்னாள் எம்.பி.பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ. செல்வராஜ், முன்னாள் மேயர் சவுண்டப்பன், பகுதி செயலாளர்கள் சரவணன், யாதவ மூர்த்தி, முருகன், ஜெய்பிரகாஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- சேலம், மாநகர் மாவட்டம் மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி பெயரில் கோவிலில் சிறப்பு பூஜை செய்து, பிரசாதம் வழங்கினார்கள்.
- சீர்வரிசை தட்டுக்களுடன் 1000-க்கும் மேற்பட்டோருடன் சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வெங்கடாஜலம் ஊர்வலமாக வந்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
சேலம்:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளையொட்டி அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்தில் அவரது பெற்றோர் உருவ படங்களுக்கு மலர்கள் தூவி வணங்கினார். தொடர்ந்து சாமி கும்பிட்டு விட்டு தொண்டர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டார்.
அப்போது வீட்டின் வெளியே தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்து இருந்தனர். அவர்கள் வீட்டுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் வரிசையாக நின்று பூங்கொத்து, சால்வை, பூச்செண்டு, சாமி போட்டோ உள்ளிட்டவை கொடுத்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறினார்கள்.
நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் ஆளுயுர ஆரம், பல்வேறு வகை மலர்கள் ஆன பூ மாலைகள் உள்ளிட்டவை எடப்பாடி பழனிசாமிக்கு அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
சேலம், மாநகர் மாவட்டம் மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி பெயரில் கோவிலில் சிறப்பு பூஜை செய்து, பிரசாதம் வழங்கினார்கள். மேலும் கோவில் பூசாரிகள் அவருக்கு மாலை அணிவித்து வாழ்த்து கூறினார்கள்.
முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, அவை தலைவர் தமிழ்மகன் உசேன் பூங்கொத்து கொடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து சீர்வரிசை தட்டுக்களுடன் 1000-க்கும் மேற்பட்டோருடன் சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வெங்கடாஜலம் ஊர்வலமாக வந்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
அ.தி.மு.க. மகளிரணி, எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி, மாணவர் அணி, வக்கீல் பிரிவு, மகளிர் அணி, விவசாய அணி, இளைஞர், இளம்பெண்கள் பாசறை, அ.தி.மு.க. தொழிற்சங்கம் உள்ளிட்ட சார்பு அணியினர் வாழ்த்துக்கள் கூறினர். அதுபோல் அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
- அதிகாரிகள் விடுதியில் தங்கி படிக்கிறாயா? என்று கேட்டபோது ஒப்புகொண்டு விடுதியில் தங்கி படிப்பதாக கூறினாள்.
- காலில் ஊனமுற்ற விமலுக்கு அரசு உதவி கிடைக்க சேலம் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுக்குமாறு வலியுறுத்தினார்.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே தும்பிப்பாடி ஊராட்சி முள்ளிசெட்டிப்பட்டி அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் விமல் (வயது 30). கூலி தொழிலாளி. இவரது மனைவி அஞ்சலை (28). இந்த தம்பதிக்கு 10 வயது மற்றும் 2 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர்.
விமல் கட்டிட வேலை செய்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காலில் அடிபட்டு வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் மனைவி அஞ்சலை, கரும்பாலையில் வேலைக்கு சென்று குடும்பம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இவர்களது மூத்த மகள் தனது தந்தையும், தாயும் தன்னை அடித்து கொடுமை செய்வதாக கூறி, 10 வயது சிறுமி, வீட்டை விட்டு வெளியேறி அழுது கொண்டே பாட்டி வீடான பொட்டியபுரம் கிராமத்திற்கு வந்தாள். இதையறிந்த அப்பகுதி மக்கள் சிறுமியிடம் விசாரித்தபோது என்னை வீட்டுக்கு அனுப்பி விடாதீர்கள், தந்தை குடித்து விட்டு வந்து கால்களை கட்டிபோட்டு அடித்து கொடுமைபடுத்துகிறார் என கண்ணீர் விட்டு கதறி அழுதாள். மேலும் தன்னை பள்ளிக்கு அனுப்பாமல் தந்தை அடிப்பதாகவும், தாய் வீட்டு வேலை செய்யக்கூறி அடித்து கொடுமை செய்வதாகவும், அதனால் தன்னை சேலத்தில் உள்ள பாட்டி வீட்டில் விடுமாறு கூறினாள்.
இதையடுத்து, அப்பகுதி மக்கள் சிறுமியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து, சிறுமியை தாயுடன் அனுப்பி வைத்தனர். அப்போது சிறுமி, தனது தாயை கட்டிபிடித்துக்கொண்டு அம்மா, நான் வீட்டுக்கு வரமாட்டேன் என கதறி அழுதார். அப்போது தாய் , மகளின் கைகளை பிடித்து வீட்டுக்கு அழைத்து செல்ல முற்பட்டபோது, சாலையில் உட்கார்ந்து சிறுமி அழுது புரண்டாள். இனிமேல் அடிக்கமாட்டேன் என தாய் அஞ்சலை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து சென்றார்.
இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதை தொடர்ந்து சேலம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செல்வன், ஓமலூர் டி.எஸ்.பி. சங்கீதா, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், சமூக நலத்துறை அதிகாரிகள் முள்ளி செட்டிப்பட்டி கிராமத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
அங்கு சிறுமியின் தந்தை விமல் நடக்க முடியாமல் படுக்கையில் இருந்தார். அவர், தன்னால் சுவற்றை பிடித்து எழுந்து நிற்க முடியும், தனியாக நடக்க முடியாது, எனது மகளை அடிக்கவில்லை, மகள் 5-ம் வகுப்பு படித்து வருகிறார், தற்போது பள்ளி விடுமுறை என்பதால் குழந்தையை பார்த்துக்கொண்டு, வீட்டில் சிறு சிறு வேலைகள் செய்து வந்ததாக அதிகாரிகளிடம் கூறினார். மேலும், மகள் அவ்வப்போது இப்படித்தான் ஏதாவது கூறிக்கொண்டு செல்வாள், பின்னர் வீட்டிற்கு வந்து விடுவாள் என தெரிவித்தார்.
இது பற்றி அதிகாரிகள், சிறுமியிடம் கேட்டபோது, அடிக்கடி என்னை அடிப்பார்கள், வீட்டு வேலை செய்வேன், தனது தாய்க்கு சாப்பாடு கொண்டு செல்வேன் என கூறினாள். அப்போது அதிகாரிகள் விடுதியில் தங்கி படிக்கிறாயா? என்று கேட்டபோது ஒப்புகொண்டு விடுதியில் தங்கி படிப்பதாக கூறினாள்.
இதையடுத்து பெற்றோரிடம் இனிமேல் சிறுமியை அடிக்க கூடாது, துன்புறுத்த கூடாது, சித்ரவதை செய்வதாக இனிமேல் புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்து, காலில் ஊனமுற்ற விமலுக்கு அரசு உதவி கிடைக்க சேலம் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுக்குமாறு வலியுறுத்தி சேலம் வந்து செல்ல ரூ.500 உதவியும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்.
தொடர்ந்து சிறுமியை ஓமலூர் நகரில் விடுதியுடன் கூடிய பள்ளியில் 6-ம் வகுப்பு சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- போலீசார் தாதகாப்பட்டி கேட் அம்மாள் ஏரி ரோடு பகுதியில் நேற்று ரோந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- கஞ்சா விற்பனை செய்த இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அன்னதானப்பட்டி:
சேலம் அன்னதானப்பட்டி போலீசார் தாதகாப்பட்டி கேட் அம்மாள் ஏரி ரோடு பகுதியில் நேற்று ரோந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த ஜலகண்டீஸ்வரன் (வயது 23), மணிரத்தினம்(21) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
- சேலம் முள்ளுவாடிகேட் பகுதியில் புதிதாக மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
- இதனால் ஒரு வழிபாதை மட்டுமே செயல்பட்டு வருவதால் எப்பொழுதும் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் காணப்படும்.
சேலம்:
சேலம் முள்ளுவாடிகேட் பகுதியில் புதிதாக மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் ஒரு வழிபாதை மட்டுமே செயல்பட்டு வருவதால் எப்பொழுதும் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் காணப்படும். குறிப்பாக ெரயில் வரும் நேரங்களில் வழக்கத்தை விட அதிகமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்படும்.
இந்த நிலையில் சேலம் பழைய பஸ் நிலையத்தி லிருந்து இன்று காலை அஸ்தம்பட்டி வழியாக ஜங்ஷனுக்கு செல்லும் அரசு டவுன் பஸ் முள்ளுவாடி கேட் அருகே வளைவில் திரும்பும்போது அங்குள்ள போக்குவரத்து காவல்துறையின் நிழற்குடை யின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் நிழற்குடை தலைகீழாக சாய்ந்தது.
இந்த விபத்து ஏற்பட்ட போது பஸ்சில் இருந்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு இறங்கினர். இதையடுத்து அங்கு பாதுகாப்பில் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசார் உடனடியாக விரைந்து வந்து சாய்ந்த நிழற்குடையை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் உதவியுடன் நிழற்குடை அப்புறப்படுத்திய பிறகு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ஏற்கனவே ஒரு வழி பாதையாக இருக்கக்கூடிய இந்த தடத்தில் போக்குவரத்து பாதிப்பு அதிக அளவில் உள்ளது. எனவே இதுபோன்று வேறு பெரிய விபத்து ஏதும் நேரிடுவதற்கு முன்பாக சேலம் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு மேம்பால பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தெரிவித்தனர்.
- ஊராட்சி செயலாளர்களுக்கு பணிவிதிகளை காலதாமதமின்றி வெளியிடுவதோடு விடுபட்ட உரிமைகளை உடனடியாக வழங்க வேண்டும்.
- ஊரக வேலை உறுதி திட்ட கணிணி உதவியாளர்களின் பணி வரன்முறை ஆணைகளை வெளியிட வேண்டும்.
சேலம்:
ஊராட்சி செயலாளர்க ளுக்கு பணிவிதிகளை காலதாமதமின்றி வெளியிடுவதோடு விடுபட்ட உரிமைகளை உடனடியாக வழங்க வேண்டும். ஊரக வேலை உறுதி திட்ட கணிணி உதவியாளர்களின் பணி வரன்முறை ஆணைகளை வெளியிட வேண்டும். அவர்கள் அனைவருக்கும் உயர்த்தப்பட்ட விகிதத்தில் ஊதியத்தை நிர்ணயம் செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் இன்று விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி சேலம் மாவட்டத்தில் ஊரக வளர்த்துறை அலுவலர்கள் இன்று பணிக்கு செல்லவில்லை. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, ஒன்றிய அலுவலகங்கள் உள்ளிட்ட ஊரக வளர்ச்சி அலுவலகங்களில் இளநிலை உதவியாளர்கள் முதல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரை அலுவலர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் அலுவலக பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
பொதுமக்களும் கடும் அவதி அடைந்தனர். இதன் காரணமாக கிராமப்பகுதி யில் உள்ள குடிநீர்பணிகள், துப்புரவுபணிகள், வளர்ச்சித்திட்டப்பணிகள், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் ஆகிய பணிகள் பாதிக்கப்பட்டது.
- 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நீண்டகால பலன்தரும் தென்னை பயிரிடப்பட்டுள்ளது.
- தண்ணீரில் ஊற வைத்து பதப்படுத்தும் கூலித்தொழிலாளர்கள், தென்னங்கீற்று முடைந்து விற்பனை செய்கின்றனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி, அயோத்தி யாப்பட்டணம், பெத்தநா யக்கன் பாளையம் பகுதியில் வசிஷ்டநதி, வெள்ளாற்றுப்ப டுகை கிராமங்கள், புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை, பாப்பநா யக்கன்பட்டி கரியக்கோயில் அணை பாசன கிராமங்கள் உள்பட 200-க்கும் அதிக மான கிராமங்களில், 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நீண்டகால பலன்தரும் தென்னை பயிரிடப்பட்டுள்ளது.
தென்னை மரங்களில் இருந்து உதிர்ந்து விழும் மட்டைகளை சேகரித்து, தண்ணீரில் ஊற வைத்து பதப்படுத்தும் கூலித்தொழி லாளர்கள், தென்னங்கீற்று முடைந்து விற்பனை செய்கின்றனர். வாழப்பாடி பகுதியில் இத்தொழில் பல நூறாண்டாக தொடர்ந்து வருவதால் பாரம்பரிய கைத்தொழில்களின் ஒன்றாக தொடர்ந்து வருகிறது.
சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து மட்டுமின்றி, ஈரோடு மாவட்டத்தில் இருந்தும் தென்னை மட்டைகளை எண்ணிக்கை அடிப்படை யில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் கீற்று வியாபாரிகள், கூலித் தொழிலாளர்களை கொண்டு கீற்று முடைந்து கடலோர மாவட்டங்களுக்கு அனுப்பி வருகின்றனர்.
சிதம்பரம், விழுப்புரம், பெரம்பலுார், அரியலுார், கடலுார், சென்னை, காஞ்சி புரம், புதுச்சேரி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு, வாழப்பாடி, பெத்தநா யக்கன்பாளையம், அயோத்தியாப்பட்டணம், பேளூர் பகுதியில் இருந்து தென்னங்கீற்றுகள் விற்பனைக்கு செல்கிறது. கடலோர கிராமங்களில் குடிசை வீடுகள் அமைக்க வும், கால்நடை வளர்ப்பு கொட்டகைகளின் மேற்கூரை வேய்வதற்கும், மாநாடு, விழாக்கால பந்தல்கள், கூடாரங்கள், சினிமா செட்டிங் அமைப்ப தற்கும் தென்னங்கீற்றுகள் பயன்படுத்தப்பட்டு வந்தன.
வாழப்பாடி பகுதியில் ஏராளமான கிராமங்களில், ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு கிடைத்து வந்ததால், தென்னங்கீற்று முடையும் தொழிலை நம்பி, பாரம் ஏற்றுவோர், கீற்று முடைவோர், வாகனம் ஓட்டுவோர் உள்பட 10, ஆயி ரம் கூலித்தொழிலாளர்கள் பிழைப்பு நடத்தி வந்தனர். நாளொன்றுக்கு 200 கீற்று முடையும் பெண் தொழிலா ளர்களுக்கு ரூ. 400, பாரமேற்றும் ஏற்றும் ஆண் தொழிலா ளர்களுக்கு ரூ.600 வரையும், தினக்கூலியாக கிடைத்து வந்தது.
புயல் மற்றும் மழையில் அடிக்கடி சேதமடைந்து போவதாலும், எளிதில் தீப்பற்றிக்கொள்வ தாலும், தென்னங்கீற்று கூரை வேய்வதற்கு போதிய தொழிலாளர்கள் கிடைக்கா ததாலும், உள்ளூரில் தென்னங்கீற்று பயன்பாடு குறைந்து போனது.
கடலோர மாவட்டங்க ளில் கொட்டகை, வீட்டுக் கூரை வேய்வதற்கும், பல்வேறு மாநாடு, பொதுக்கூட்டம், சினிமா செட்டிங் பந்தல் அமைப்ப தற்கும் பல்வேறு விதமான நவீன முறை தகடுகள், நெகிழி மற்றும் சிமெண்ட் அட்டைகளே தற்போது பயன்படுத்தப்படுகின்றன. இதனால், தற்போது முடைந்து வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான தென்னங்கீற்றுகளை விற்பனை செய்ய முடியா மல், விவசாயிகள், வியா பாரிகள் மற்றும் தொழிலா ளர்களும் தவித்து வருகின்றனர்.
இதனால், சேலம் மாவட்டம் வாழப்பாடி, அயோத்தி யாப்பட்டணம், பெத்தநா யக்கன்பாளையம் பகுதி கிராமப்புற மக்களின் பாரம்பரிய கைத்தொழில்க ளில் ஒன்றான கீற்று முடை யும் தொழில் நலிந்து வருகிறது. எனவே இத்தொ ழிலை கைவிட்டு வரும் தொழிலாளர்கள், பாக்கு உரித்தல், ஆடு, கறவைமாடு வளர்த்தல், கட்டடத்தொ ழிலுக்கு மாறி வருகின்றனர்.
இதுகுறித்து பொன்னா ரம்பட்டியைச் சேர்ந்த தென்னங்கீற்று வியாபாரி கலைச்செல்வி ஜீவா கூறியதாவது:-
தென்னங்கீற்று முடையும் தொழிலை கற்றுக்கொள்ள இளையத் தலைமுறை தொழிலாளர்கள் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலை யில், குறைந்த விலைக்கு நீடித்து உழைக்கும் நெகிழி, சிமெண்ட் மற்றும் கலாய் இரும்பு தகடுகள் விற்ப னைக்கு வந்து விட்டதால் தென்னங்கீற்று பயன்பாடு அறவே குறைந்து விட்டது.
எனவே, ஆர்டர் கிடைக்காததால், ஆயிரக்க ணக்கான தென்னங்கீற்று கள் கேட்பாரற்று தேங்கி கிடக்கிறது.
எனவே, வியா பாரிகளும், தொழிலாளர்க ளும் இத்தொழிலை கைவிட்டு மாற்றுத் தொழில் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- சேலம் மாவட்டம் வாழப்பாடி அக்ரஹாரத்தில் பழமையான திரவுபதியம்மன் கோவில் அமைந்துள்ளது. க்ஸ்
- சேலம் மாவட்டம் வாழப்பாடி அக்ரஹாரத்தில் பழமையான திரவுபதி யம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவி லில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தீமிதி திருவிழா நடத்தப்படுகிறது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அக்ரஹாரத்தில் பழமையான திரவுபதி யம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவி லில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தீமிதி திருவிழா நடத்தப்படுகிறது.
இக்கோவிலில் மகாபாரத கதாபாத்திர கடவுள்களுக்கு மரச்சிற்பங்கள் அமைத்து, பாதுகாத்து வழிபட்டு வருகின்றனர்.
மேலும் தீமிதித் திருவிழாவில், பாரம்பரிய முறைப்படி ஓதுவார்களை கொண்டு மகாபாரத சொற்பொழிவு நடத்தப்ப டுவதும் வழக்க மாக இருந்து வருகிறது.
இதன்படி, இக்கோவில் தீமிதி திருவிழா வருகிற 23-ந் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி அம்ம னுக்கு சக்தி அழைத்தல் மற்றும் பூச்சாட்டு விழா நடைபெற்றது. மேள வாத்தி யங்கள், வாண வேடிக்கை முழங்க நடைபெற்ற சக்தி அழைப்பு மற்றும் பூச்சாட்டு விழாவில், வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிரா மங்களை சேர்ந்த ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் விழாவை யொட்டி, மகாபாரத சொற்பொழிவு தொடங்கி யது. தீமிதி திருவிழாவில் நேர்த்திக்கடன் தீர்க்க, தீ மிதிக்க விரும்பும் பக்தர்கள் வரும் 17-ந் தேதி காப்பு கட்டி கொண்டு, விரதம் இருந்து, தீ மிதிக்கலாம் என கோவில் பெரியதனக்கா ரர்கள் தெரிவித் துள்ளனர்.
- அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.
- நீர் திறப்பை விட வரத்து அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், அதன் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு உள்ளிட்ட பகுதிகளிலும் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.
இந்த பகுதியில் தற்பொழுது விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 3,992 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 4,605 கன அடியாக அதிகரித்தது.
இன்று மேலும் நீர்வரத்து அதிகரித்து விநாடிக்கு 5,727 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. நீர் திறப்பை விட வரத்து அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 103.06 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 8 மணி அளவில் 103.31 அடியாக உயர்ந்தது.






