என் மலர்
நீங்கள் தேடியது "Take leave and struggle"
- ஊராட்சி செயலாளர்களுக்கு பணிவிதிகளை காலதாமதமின்றி வெளியிடுவதோடு விடுபட்ட உரிமைகளை உடனடியாக வழங்க வேண்டும்.
- ஊரக வேலை உறுதி திட்ட கணிணி உதவியாளர்களின் பணி வரன்முறை ஆணைகளை வெளியிட வேண்டும்.
சேலம்:
ஊராட்சி செயலாளர்க ளுக்கு பணிவிதிகளை காலதாமதமின்றி வெளியிடுவதோடு விடுபட்ட உரிமைகளை உடனடியாக வழங்க வேண்டும். ஊரக வேலை உறுதி திட்ட கணிணி உதவியாளர்களின் பணி வரன்முறை ஆணைகளை வெளியிட வேண்டும். அவர்கள் அனைவருக்கும் உயர்த்தப்பட்ட விகிதத்தில் ஊதியத்தை நிர்ணயம் செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் இன்று விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி சேலம் மாவட்டத்தில் ஊரக வளர்த்துறை அலுவலர்கள் இன்று பணிக்கு செல்லவில்லை. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, ஒன்றிய அலுவலகங்கள் உள்ளிட்ட ஊரக வளர்ச்சி அலுவலகங்களில் இளநிலை உதவியாளர்கள் முதல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரை அலுவலர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் அலுவலக பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
பொதுமக்களும் கடும் அவதி அடைந்தனர். இதன் காரணமாக கிராமப்பகுதி யில் உள்ள குடிநீர்பணிகள், துப்புரவுபணிகள், வளர்ச்சித்திட்டப்பணிகள், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் ஆகிய பணிகள் பாதிக்கப்பட்டது.






