என் மலர்tooltip icon

    சேலம்

    • மத்திய கூட்டுறவு வங்கியில் 1984 முதல் 1991 வரையிலான ஆண்டுகளில் நடந்த கூட்டுறவு வாரவிழாவில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
    • இதுகுறித்து சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்யப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 1984 முதல் 1991 வரையிலான ஆண்டுகளில் நடந்த கூட்டுறவு வாரவிழாவில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. அப்போது வங்கியில் நடந்த கூட்டுறவு வாரவிழா பதிவேடுகளை தணிக்கை செய்தபோது, ரூ.5 லட்சத்து 24 ஆயிரத்து 713 முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுகுறித்து சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்யப்பட்டது.

    அதன்பேரில் வங்கி மேலாளர் ராமமூர்த்தி, வங்கி உதவி மேலாளர் ராமசாமி, முதுநிலை உதவியாளர் பெருமாள் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்தது.

    இந்த விசாரணையின் போது, கூட்டுறவு வங்கி மேலாளர் உள்பட 3 பேரையும் விடுவித்து 2013-ம் ஆண்டு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து போலீஸ் தரப்பில் 2014-ம் ஆண்டு மாவட்ட முதலாவது கூடுதல் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    5 ஆண்டுகள் சிறை

    இதனிடையே வழக்கு தொடர்புடைய ராமமூர்த்தி, ராமசாமி ஆகியோர் அடுத்தடுத்து திடீரென இறந்து விட்டனர். இந்த வழக்கில் கூடுதல் ஆவணங்களை மாஜிஸ்திரேட்டு கேட்டதால் அதனை இன்ஸ்பெக்டர் சித்ராதேவி கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த வழக்கில் இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. தீர்ப்பில் குற்றம்சாட்டப்பட்ட பெருமாளுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாஜிஸ்திரேட்டு ஜெகநாதன் உத்தரவிட்டார்.

    கூட்டுறவு வங்கியில் நடந்த மோசடி வழக்கில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • டிக்கெட் விற்பனை செய்யும் நபர்களை கண்காணிக்கும் பணியில் ரெயில்வே பாது காப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
    • இசேவை மையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் நேற்று முன்தினம் சோதனை செய்தனர்.

    சேலம்:

    சேலம் ரெயில்வே கோட்ட பகுதிகளில் முறை கேடாக முன்பதிவு டிக்கெட் விற்கும் நபர்கள், அனுமதி பெறாமல் டிக்கெட் விற்பனை செய்யும் நபர்களை கண்காணிக்கும் பணியில் ரெயில்வே பாது காப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலை யில் திருப்பூர், அனுப்பர்பா ளையம், திலகர் நகர் பஸ் நிலையம் அருகே உள்ள இசேவை மையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் நேற்று முன்தினம் சோதனை செய்தனர். அப்போது, 26 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 22 முன்பதிவு டிக்கெட்டுகள், 15ஆயிரம் ரூபாய் மதிப்பில் காலாவதி டிக்கெட் -9 கண்பிடிக்கப்பட்டது. இவர் அனுமதி பெறாமல் முன்ப திவு டிக்கெட்டுக்கள் எடுத்து கொடுத்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார், முன்பதிவு செய்ய பயன்படுத்திய கணினியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அதன் உரிமையாளரான திருப்பூரை சேர்ந்த சுரேஷ் (வயது 33) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    • கூட்டுறவு ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 5578 விற்பனையாளர்கள் 925 கட்டுநர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
    • நேர்காணல் மாவட்ட வாரியாக உள்ள மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையங்கள் மூலம் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது.

    சேலம்:

    கூட்டுறவு ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 5578 விற்பனையாளர்கள் 925 கட்டுநர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப் பட்டு, அவர்களுக்கான நேர்காணல் மாவட்ட வாரி யாக உள்ள மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையங்கள் மூலம் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது.

    அதன்படி, சேலம் மாவட்ட ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 236 விற்பனையாளர் பணியி டத்திற்கு 18000 பேரும், 40 கட்டுனர்கள் பணியிடத் துக்கு 3000 பேரும் விண்ணப்பித்தனர். தகுதி யான விண்ணப்பதாரர் களுக்கு விற்பனையாளர், கட்டுனர் பணி இடங்களுக் கான நேர்முகத் தேர்வு கடந்த டிசம்பரில் அழகா புரத்தில் உள்ள மத்திய கூட்டுறவு திருமண மண்டபத்தில் நடத்தப்பட்டது.

    அதன் அடிப்படையில் 236 விற்பனையாளர்கள் 40 கட்டுனர் பணிக்கு தேர்வா னவர்கள் பெயர் பட்டியல் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலை யத்தின் மூலம் இணையத ளத்தில் நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட் டுள்ளது. இதில் விண்ணப்ப எண், தேர்வர்கள் பெயர், பிறந்த தேதி இடம் பெற்றுள்ளது.

    ரேஷன் கடை விற்பனை யாளர், கட்டுனர் பணி இடத்துக்கு தேர்வானவர் களுக்கு விரைவில் பணி ஆணை வழங்கப்பட உள்ளது.

      சேலம்:

      சேலம் இரும்பாலை அருகே உள்ள வட்ட முத்தம் பட்டி சேர்ந்தவர் ஏழுமலை (வயது 70), தனியாக வசித்து வந்தார். மதுபோதையில் இருந்த அவர் கடந்த 4-ந் தேதி விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிக்சை அளிக்கப் பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதமாக ஏழுமலை இறந்தார். இதுகுறித்து இரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

      • சேலம் மாவட்டம் சங்ககிரி, மேட்டூர், ஆத்தூர், ஓமலூர் நீதி மன்றங்களில், நில எடுப்பு வழக்குகளுக்கு மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது.
      • 8 அமர்வுகளில், 290 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.

      சேலம்:

      சேலம் மாவட்டம் சங்ககிரி, மேட்டூர், ஆத்தூர், ஓமலூர் நீதி மன்றங்களில், நில எடுப்பு வழக்குகளுக்கு மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. 8 அமர்வுகளில், 290 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், 1986- ம் ஆண்டு சின்னகவுண்டர் என்பவரின் நிலத்தை, தமிழக வீட்டு வசதி வாரியம் எடுத்துக் கொண்ட வழக்கில் தீர்வு காணப்பட்டு, 37.64 லட்சம் ரூபாய் காசோலையை மாவட்ட நீதிபதி சுமதி வழங்கினார்.

      மேலும், 34 நில எடுப்பு வழக்குகளில் தீர்வு காணப்பட்டு, 5.01 கோடி ரூபாய் வழங்கப்பட் டது. கடந்த 2021-ல் மோட்டார் வாகன விபத்து வழக்கில், தாய், தந்தை, தங்கையை இழந்த ஷோபனா என்பவர் தொடுத்த வழக்கில் ரூ.1.80 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் 84 மோட் டார் வாகன விபத்து வழக்கு களுக்கு 6.43 கோடி ரூபாய் தீர்வு தொகை வழங்கப்பட்டது. மொத் தம் 149 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு 13.78 கோடி ரூபாய் தீர்வுத்தொகை வழங்கப்பட்டது.

      • மருத்துவ செலவுக்கு கொளத்தூரில் உள்ள வங்கியில் நகையை அடகு வைத்து, 2 லட்சம் ரூபாய் பெற்றார்.
      • சாலையில் சென்றபோது, ஹெல்மெட் தவறி விழுந்தது. அதை எடுத்துக் கொண்டு பார்த்தபோது, வண்டியில் இருந்த பணப் பையை காணவில்லை.

      மேட்டூர்:

      சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர், கத்திரிப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி ராஜா (வயது 55). இவர் நேற்று முன்தினம் மருத்துவ செலவுக்கு கொளத்தூரில் உள்ள வங்கியில் நகையை அடகு வைத்து, 2 லட்சம் ரூபாய் பெற்றார். அந்த பணத்தை, மொபட்டில் வைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

      கொளத்தூர் ஒன்றிய அலுவலகம் பின்புற சாலையில் சென்றபோது, ஹெல்மெட் தவறி விழுந்தது. அதை எடுத்துக் கொண்டு பார்த்தபோது, வண்டியில் இருந்த பணப் பையை காணவில்லை. இதுகுறித்து ராஜா அளித்த புகாரின்பேரில், கொளத் தூர் போலீசார் அப்பகுதி யில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரிக்கின்றனர்.

      • விவசாயி சேட்டு (எ) வெங்கடேஷ் (வயது 45). இவருக்கு அம்பிகா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.
      • மக்காச்சோளத்தை இறக்கு வதற்காக டிராக்டரில் இணைக்கப்பட்டிருந்த ட்ரெய்லரை உயரத்திய போது, எதிர்பாராத வித மாக மேலே சென்ற மின்கம்பி மீது ட்ரெய்லர் மோதியது.

      வாழப்பாடி:

      சேலம் மாவட்டம் வாழப் பாடி அடுத்த சிங்கிபுரம் மேலக்காடு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சேட்டு (எ) வெங்கடேஷ் (வயது 45). இவருக்கு அம்பிகா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

      இவர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தனது தோட்டத்தில் விளைந்த மக்காச்சோளத்தை ஏற்றிக் கொண்டு, வாழப்பாடி மங்கம்மா சாலையிலுள்ள வேளாண் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு டிராக்டரில் சென்றுள்ளார். மக்காச்சோளத்தை இறக்கு வதற்காக டிராக்டரில் இணைக்கப்பட்டிருந்த ட்ரெய்லரை உயரத்திய போது, எதிர்பாராத வித மாக மேலே சென்ற மின்கம்பி மீது ட்ரெய்லர் மோதியது. இந்த விபத்தில் மின்சாரம் பாய்ந்து விவ சாயி வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக பலியானார்.

      இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

      ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விளை பொருளை கொண்டு சென்ற போது மின்சாரம் பாய்ந்து பலி யான விவசாயி குடும்பத்திற்கு அரசு நிவா ரணம் வழங்க வேண்டுமென இவரது உறவினர்களி டையே கோரிக்கை எழுந்துள்ளது.

      • சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் புத்திரகவுண்டன் பாளையம் பகுதியில் ஸ்ரீ கூத்தாண்டவர் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
      • இந்த கோவிலில் கடந்த ஒரு வார காலமாக மாரியம்மன், ஸ்ரீ கூத்தாண்டவர் ஆகியோர் தோரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

      ஆத்தூர்:

      சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் புத்திரகவுண்டன் பாளையம் பகுதியில் ஸ்ரீ கூத்தாண்டவர் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த ஒரு வார காலமாக மாரியம்மன், ஸ்ரீ கூத்தாண்டவர் ஆகி யோர் தோரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற் றது. இதில் ஆயிரக்கணக்கா னோர் கலந்து கொண்டனர்.

      மேலும் நேற்று கூத்தாண் டவர் சாமி படுகளம் செய் யும் வழிபாடு நடைபெற்றது.இதில் ஆயிரக்கணக்கான பெண்களும், ஆண்களும் திரளாக கலந்து கொண்ட னர்.

      இதில் திருநங்கைகள் தாலி கட்டிக் கொண்டு அவர்கள் தங்கள் தாலியை அறுத்து வெள்ளை புடவை அணிந்தும் தலை விரி கோலத்தில் நடனம் ஆடி னார்கள். மேலும் சாமி ஆற்றங்கரைக்கு எடுத்துச் சென்று அங்கு படுகளம் செய்யப்பட்டது.

      பின்னர் குழந்தை வேண்டி நூற்றுக் கணக்கான பெண்கள் வெள்ளை புடவை அணிந்து, ஆற்றங்க ரைக்கு வந்து அக்னி தாண்டி பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டு தங்கள் வேண்டுதலை வைத்தனர். இதில் குழந்தை இல்லாத வர்களுக்கு இந்த வேண்டு தல் வைத்தால் குழந்தை பிறக்கும் என ஐதீகம், இவ்விழாவில் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

      • ஏற்காடு மலை கிராமங்கள் மற்றும் தனியார் காபி தோட்டங்களில் காபி செடியுடன் அத்திமரம் சாகுபடி செய்யப்படுகிறது.
      • மருத்துவ குணம் கொண்ட ருசி மிகுந்த இந்த பழத்தில் நார்ச்சத்துடன், இரும்புச்சத்து அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

      ஏற்காடு:

      தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக ஏற்காடு திகழ்கிறது. இதன் பரப்பளவு 382.67 ச.கிமீ ஆகும்.

      ஏற்காடு மலை கிராமங்கள் மற்றும் தனியார் காபி தோட்டங்களில் காபி செடியுடன் அத்திமரம் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது அத்தி மரங்களில் பழங்கள் கொத்து கொத்தாக பழுத்து தொங்குகிறது. நன்கு கனிந்த பழங்கள் தானாகவே கீழே விழுகின்றன. பழத்தில் இருந்து வெளிப்படக்கூடிய வாசனை கவர்ந்திழுப்பதாக உள்ளது. இதனை உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் கிலோ கணக்கில் வாங்கிச் செல்கின்றனர். ஒரு சில தோட்ட உரிமையாளர்கள் அத்திப்பழங்களை சேகரித்து உலரவைத்து பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்கின்றனர்.

      சேலம், கோவை, சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

      மருத்துவ குணம் கொண்ட ருசி மிகுந்த இந்த பழத்தில் நார்ச்சத்துடன், இரும்புச்சத்து அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் வைட்டமின் ஏ மற்றும் சி அடங்கியுள்ளன. மருத்துவ குணமிக்க அத்திப்பழங்கள் ஏற்காட்டில் உள்ள கடைகளில் கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

      • நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் அன்னதானப்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
      • கைதி தப்பி ஓடிய விவகாரத்தில், போலீஸ்காரர்கள் செல்வகுமார், கேசவன் ஆகியோரை சஸ்பெண்டு செய்து உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

      சேலம்:

      ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள பாப்பி செட்டிப்பள்ளி ராசன்னப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் இனோ ஆண்ட்ரூஸ் (வயது 41). இவர் மீது கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் ஈமு கோழி மோசடி வழக்கு தொடர்பாக நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

      இந்த வழக்கில் கோவை டான்பிட் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இனோ ஆண்ட்ரூஸ்-க்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 கோடியே 60 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது.

      இதையடுத்து இனோ ஆண்ட்ரூஸ் தலைமறைவானார். இந்த நிலையில் கடந்த வாரம் சேலம் அன்னதானப்பட்டி லாட்ஜ் ஒன்றில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு இனோ ஆண்ட்ரூஸ் பதுங்கி இருந்ததை கண்டு பிடித்தனர்.

      அவரை பிடித்து நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் அன்னதானப்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

      இதையடுத்து கடந்த கடந்த 30-ம் தேதி அவரை குற்றப்பிரிவு போலீசார் செல்வகுமார், கேசவன் ஆகியோர் கோவையில் உள்ள டான்பிட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அடுத்த நாள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி தெரிவித்தார். இதனால் இனோ ஆண்ட்ரூசை, 2 போலீசாரும் தனியார் லாட்ஜிற்கு அழைத்துச் சென்று இரவு அங்கு தங்கினர். அப்போது அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த போலீஸ்காரர்களை அறையில் விட்டு விட்டு, நைசாக வெளியே வந்த இனோ ஆண்ட்ரூஸ், கதவை வெளிபக்கமாக பூட்டி விட்டு தப்பி ஓடி விட்டார்.

      அதன் பிறகு போலீசார் எழுந்து பார்த்தபோது அறை கதவு வெளிப்பக்கமாக பூட்டி இருந்ததும், இனோ ஆண்ட்ரூஸ் தப்பிச் சென்று விட்டதும் தெரிந்தது.

      இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி.சிவகுமார் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையில் தனிப்படை போலீசார் தப்பி ஓடிய இனோ ஆண்ட்ரூசை தேடி வருகின்றனர்.

      இதனிடையே, கைதி தப்பி ஓடிய விவகாரத்தில், போலீஸ்காரர்கள் செல்வகுமார், கேசவன் ஆகியோரை சஸ்பெண்டு செய்து உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

      • மேட்டூர் அணைக்கு நேற்று காலை 174 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை விநாடிக்கு 104 கன அடியாக சரிந்துள்ளது.
      • நேற்று காலை 83.35 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை நீர்மட்டம் 82.34 அடியாக சரிந்தது.

      மேட்டூர்:

      காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.

      ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் விநாடிக்கு 1000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை நிலவரப்படி 700 அடியாக சரிந்துள்ளது.

      அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று காலை 174 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை விநாடிக்கு 104 கன அடியாக சரிந்துள்ளது.

      மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

      அணைக்கு வரும் நீரின் அளவை விட அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் அளவு அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

      நேற்று காலை 83.35 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை நீர்மட்டம் 82.34 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 44.32 டி.எம்.சி.யாக உள்ளது.

      • டாஸ் வென்ற மதுரை பந்துவீச்சை தேர்வு செய்தது.
      • 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்கியது.

      7-வது டிஎன்பிஎல் தொடர் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் இருந்து லைக்கா கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ் உள்ளிட்ட அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.

      நேற்று இரவு நடந்த முதல் குவாலிபையர் ஆட்டத்தில் கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின.

      இதில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி கோவை கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணி குவாலிபையர் 2வது ஆட்டத்துக்கு தகுதி பெற்றது.

      இந்நிலையில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மதுரை பந்துவீச்சை தேர்வு செய்தது.

      அதன்படி, முதலில் ஆடிய நெல்லை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 211 ரன்களை குவித்துள்ளது.

      அஜிதேஷ் குருசாமி, நிதிஷ் ராஜகோபால் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர்.

      3-வது விக்கெட்டுக்கு இணைந்த அஜிதேஷ் குருசாமி, நிதிஷ் ராஜகோபால் ஜோடி 51 ரன்கள் சேர்த்த நிலையில் அஜிதேஷ் குருசாமி 50 ரன்னில் ஆட்டமிழந்தார்.

      4-வது விக்கெட்டுக்கு இணைந்த நிதிஷ் ராஜகோபால், சோனு யாதவ் ஜோடி 78 ரன்கள் சேர்த்த நிலையில் சோனு யாதவ் 17 ரன்னில் ஆட்டமிழந்தார்.

      நிதிஷ் ராஜகோபால் 76 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் இறங்கிய ரித்தீஸ்வரன் 10 பந்தில் 29 ரன்கள் எடுத்தார்.

      இதையடுத்து, 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்கியது.

      இதில், அதிகபட்சமாக ஆதித்யா அரை சதம் அடித்து 73 ரன்களை குவித்தார். தொடர்ந்து, ஸ்வப்நில் சிங் 48 ரன்களும், சுரேஷ் லோகேஸ்வர் 40 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

      தொடர்ந்து, ஹரி நிஷாந்த் 4 ரன்களில் அவுட்டானார்.

      இறுதியாக, ஜகதீசன் கவுஷிக் 16 ரன்கள் மற்றும் சரவணன் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

      19.5 ஓவரில் ஒரு பந்துக்கு 6 ரன்கள் இருந்த நிலையில் களம் பரபரப்பாக இருந்தது.

      இந்நிலையில், கடைசி பந்தில் 2 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்த நிலையில் மதுரை பாந்தர்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

      இதன்மூலம் நெல்லை கிங்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குவாலிபையர் ச்சுற்றுக்கு முன்னேறியது.

      ×