என் மலர்
நீங்கள் தேடியது "Service center owner arrested"
- டிக்கெட் விற்பனை செய்யும் நபர்களை கண்காணிக்கும் பணியில் ரெயில்வே பாது காப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
- இசேவை மையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் நேற்று முன்தினம் சோதனை செய்தனர்.
சேலம்:
சேலம் ரெயில்வே கோட்ட பகுதிகளில் முறை கேடாக முன்பதிவு டிக்கெட் விற்கும் நபர்கள், அனுமதி பெறாமல் டிக்கெட் விற்பனை செய்யும் நபர்களை கண்காணிக்கும் பணியில் ரெயில்வே பாது காப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலை யில் திருப்பூர், அனுப்பர்பா ளையம், திலகர் நகர் பஸ் நிலையம் அருகே உள்ள இசேவை மையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் நேற்று முன்தினம் சோதனை செய்தனர். அப்போது, 26 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 22 முன்பதிவு டிக்கெட்டுகள், 15ஆயிரம் ரூபாய் மதிப்பில் காலாவதி டிக்கெட் -9 கண்பிடிக்கப்பட்டது. இவர் அனுமதி பெறாமல் முன்ப திவு டிக்கெட்டுக்கள் எடுத்து கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், முன்பதிவு செய்ய பயன்படுத்திய கணினியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அதன் உரிமையாளரான திருப்பூரை சேர்ந்த சுரேஷ் (வயது 33) என்பவரை போலீசார் கைது செய்தனர்.






