என் மலர்
சேலம்
- தனியார் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்து வழங்கும் அங்கீகார ஆணைகள் வழங்கும் விழா சேலத்தில் நடைபெற்றது.
- அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு 5 மாவட்டத்தை சேர்ந்த 408 தனியார் பள்ளிகளுக்கான அங்கீகார ஆணைகளை வழங்கினர்.
சேலம்:
தமிழ்நாடு கல்வித் துறை சார்பில், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்து வழங்கும் அங்கீகார ஆணைகள் வழங்கும் விழா சேலத்தில் நடைபெற்றது.
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு 5 மாவட்டத்தை சேர்ந்த 408 தனியார் பள்ளிகளுக்கான அங்கீகார ஆணைகளை வழங்கினர்.
போட்டி தேர்வுகள்
விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பேசியதாவது:-
மதுரையில் புதிதாக அமைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு 20 நாட்களில் 70 ஆயிரம் பேர் வந்து சென்றுள்ளனர். போட்டித் தேர்வுக்கு அரசு பள்ளி பாட புத்தகங்களை அதிக அளவில் நூலகத்தில் வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏனென்றால் போட்டித் தேர்வுகளுக்கு அரசு புத்தகத்தில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்படுகின்றன.
அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் படிப்பவர்கள் என அனைவரும் நமது பிள்ளைகள். மாணவர்களின் கல்வி தான் முக்கியம். தனியார் பள்ளி நிர்வாகிகளின் கோரிக்கைகள் முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு குறைகள் தீர்க்கப்படும்.
வரலாறு படைக்கலாம்
அனைவருக்கும் கல்வி கொடுக்க வேண்டும் என்பதில் கல்வித்துறை சிறப்பாக செயல்படுகிறது. திருச்சி, கோவை மண்டலத்தை தொடர்ந்து சேலம் மண்டலத்தில் தற்போது ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளை மேம்படுத்திட முதல்-அமைச்சர் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்.
தனியார் பள்ளிகள், அரசு பள்ளிகளோடு இணைந்து செயல்பட வேண்டும். அப்படி செயல்பட்டால் புதிய வரலாறு படைக்கலாம். கல்வி சேவையை தொடர்ந்து மாணவ, மாணவியர்களின் நலனிலும் அனைவரும் அக்கறை செலுத்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-
எந்த துறையும் அரசு மட்டும் செயல்படுத்துவது கடினம். பொதுமக்களின் பங்களிப்புடன் செயல்பட்டால் வெற்றி பெறலாம். அது போன்று தான் பள்ளி கல்வித்துறையிலும் தனியார் பங்களிப்பு முக்கியம். இதன் காரணமாகவே, இந்தியாவிலேயே 2-வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது.
ரூ.39 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
நகராட்சி துறைக்கு ரூ.24 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் பள்ளிக்கல்வி துறைக்கு ரூ.39 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளார். இந்த மாவட்டம் வீரபாண்டியாரால் வளர்க்கப்பட்ட மாவட்டம். சேலம் அரசு ஆஸ்பத்திரி, கலெக்டர் அலுவலகம், பெரியார் பல்கலைக்கழகம், கருப்பூர் என்ஜினீயரிங் காலேஜ் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்டன.
கலைஞர் ஆட்சியிலும், தற்போதைய முதல்-அமைச்சர் ஆட்சியிலும் வெளிப்படை தன்மையோடு செயல்பட்டு வருகிறோம் என்பதற்கு இந்த விழாவே சாட்சி.
கடந்த காலங்களில் இதுபோன்ற ஆணை பெறுவதற்கு பலரை சந்திக்க வேண்டிய நிலை இருந்து வந்ததை மாற்றி யாரையும் சந்திக்க வேண்டியதில்லை என்ற நிலைக்கு முதல்-அமைச்சர் மாற்றி உள்ளார்.
ஒத்துழைப்பு
அது மட்டுமல்ல ஆசிரியர் கவுன்சிலிங் முறையில் எந்த ஒரு சிறு தவறும் நடந்திடாத வகையில் செயல்பட்டு ஆட்சியை விமர்சிக்கும் சமூக வலைத்தளத்தினரும் எதிரானவர்களும் பாராட்டும் வகையில் தமிழ்நாடு கல்வித்துறை செயல்பட்டு வருகிறது.
இதே போன்று அனைத்து துறைகளிலும் செயல்பட்டு வருகிறோம். கல்வி துறையில் தமிழகம் சிறப்பாக செயல்பட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் தனியார் பள்ளிகள் இயக்குனர் நாகராஜ், சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருள், சேலம் மாநகராட்சி ஆணையர் பாலசந்தர், முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.சிவலிங்கம், துணை மேயர் சாரதாதேவி, மண்டல தலைவர் உமாராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- நீர் திறந்தால்தான் கூட்டத்தில் பங்கேற்பேன் என முதலமைச்சர் நிபந்தனை விதித்திருக்க வேண்டும்.
- மேட்டூர் அணையில் உள்ள தண்ணீர் இன்னும் 10 நாட்களுக்கு தான் பயன்படும்.
சேலம்:
சேலத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சினை தொடர்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் உரிய தண்ணீரை மாதந்தோறும் வழங்க வேண்டும்.
நீர் திறந்தால்தான் கூட்டத்தில் பங்கேற்பேன் என முதலமைச்சர் நிபந்தனை விதித்திருக்க வேண்டும். விவசாயிகள், மக்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அக்கறை இல்லை.
மேட்டூர் அணையில் உள்ள தண்ணீர் இன்னும் 10 நாட்களுக்கு தான் பயன்படும். குறிப்பிட்ட காலம் வரை அணையில் இருந்து சரியான முறையில் தண்ணீர் திறக்க வேண்டும்.
காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடக அரசு தொடர்ந்து தமிழக அரசை வஞ்சிக்கிறது.
நாங்குநேரி சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது. பள்ளி வளாகத்தில் மாணவர்கள் சாதி சண்டை போடுவது வருத்தம் அளிக்கிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பயணிகள் அதிர்ச்சியடைந்து அலறி சத்தம்போட்டனர். இதனால் சுதாரித்து கொண்ட டிரைவர் பஸ்சை நிறுத்தினார்.
- சரியான நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பஸ்சில் பயணம் செய்த 40 பயணிகள் உயிர்தப்பினர்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து இன்று மதியம் 12 மணி அளவில் சேலம் நோக்கி ஒரு தனியார் பஸ் புறப்பட்டது. பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ்சை டிரைவர் குமார் (40) என்பவர் ஓட்டி வந்தார். கண்டக்டராக திருநாவுக்கரசு (35) என்பவர் பணியாற்றினார். பஸ் எடப்பாடி அடுத்த கேட்டுக்கடை ரிங்-ரோடு என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென பஸ்சின் முன்பகுதியில் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இதைப்பார்த்த பயணிகள் அதிர்ச்சியடைந்து அலறி சத்தம்போட்டனர். இதனால் சுதாரித்து கொண்ட டிரைவர் பஸ்சை நிறுத்தினார். பின்னர் பயணிகள் பஸ்சில் இருந்து அவசர அவசரமாக வெளியேறினர். பின்னர் அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடங்களில் தண்ணீர் கொண்டு வந்து எரிந்து கொண்டிருந்த பஸ்சின் முன்பகுதியிவ் கொட்டி அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் இது குறித்து எடப்பாடி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதற்குள் பஸ்சில் எரிந்த தீயை பொதுமக்கள் அணைத்துவிட்டனர். சரியான நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பஸ்சில் பயணம் செய்த 40 பயணிகள் உயிர்தப்பினர். இந்த சம்பவம் காரணமாக அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- தமிழகத்தில் சில டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்குவதாக புகார் எழுந்தது.
- நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக வாங்கினால் சஸ்பெண்டு உள்பட நடவடிக்கைகள் பாயும் என டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சேலம்:
தமிழகத்தில் சில டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்குவதாக புகார் எழுந்தது. இதனால் டாஸ்மாக் ஊழியர்களுக்கும் மது வாங்குவோருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து மது பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக வாங்கினால் சஸ்பெண்டு உள்பட நடவடிக்கைகள் பாயும் என டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தொடர்ந்து டாஸ்மாக் கடைகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் மகுடஞ்சாவடி அருகே உள்ள கனககிரி டாஸ்மாக் கடை விற்பனையாளர் கந்தசாமி (45) என்பவர் மது பாட்டில் ஒன்றுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்குவதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து டாஸ்மாக் அதிகாரிகள் அந்த கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது அவர் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்கியது உறுதி செய்யப்பட்டதால் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
- தக்காளி விலை படிப்படியாக உயர்ந்து அதிக பட்சமாக கடந்த வாரம் ஒரு கிலோ 160 ரூபாய் வரை விற்பனையானது.
- தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தற்போது விலை படிப்படியாக சரிந்து வருகிறது. சேலம் உழவர் சந்தைகளில் இன்று தக்காளி ஒரு கிலோ 35 முதல் 55 ரூபாய் வரை விற்பனையானது.
சேலம்:
சேலம் உழவர் சந்தைகள் மற்றும் மார்க்கெட்களுக்கு வீரபாண்டி, ஆட்டையாம்பட்டி, ஆத்தூர், வாழப்பாடி மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த காய்கறிகளை சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் வாங்கி செல்கிறார்கள்.
இந்த நிலையில் கடந்த வாரம் வரை சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களிலும் தக்காளி விளைச்சல் குறைந்ததால் மார்க்கெட்க ளுக்கு தக்காளி வரத்து அடியோடு சரிந்தது. இதனால் தக்காளி விலை படிப்படியாக உயர்ந்து அதிக பட்சமாக கடந்த வாரம் ஒரு கிலோ 160 ரூபாய் வரை விற்பனையா னது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் குறைந்த அளவிலேயே தக்காளி வாங்கி சென்றனர்.
இந்த நிலையில் சேலம் மார்க்கெட்கள் மற்றும் உழவர் சந்தைகளுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தற்போது விலை படிப்படியாக சரிந்து வருகிறது. சேலம் உழவர் சந்தைகளில் இன்று தக்காளி ஒரு கிலோ 35 முதல் 55 ரூபாய் வரை விற்பனையானது. வெளி மார்க்கெட்க ளில் 40 முதல் 60 ரூபாய் வரை விற்பனையானது.
இதனால் பொதுமக்கள் தக்காளியை அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள். இனி வரும் நாட்களில் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால் விலை மேலும் குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
- 76-வது சுதந்திர தினவிழா வருகிற 15-ந் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு சுதந்திர தினவிழா கொண்டாட்டங்களுக்காக பல்வேறு முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன.
- இதற்காக மாவட்ட போலீசார் சார்பில் குமாரசாமிபட்டி ஆயுதப்படை மைதானத்தில் இன்று அணிவகுப்பு ஒத்திகை நடந்தது.
சேலம்:
76-வது சுதந்திர தினவிழா வருகிற 15-ந் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு சுதந்திர தினவிழா கொண்டாட்டங் களுக்காக பல்வேறு முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, மகாத்மா காந்தி ஸ்டேடியத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தினவிழா நடத்தப்படும். இதற்கான ஏற்பாடுகள் பல்வேறு துறை அதிகாரிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அன்றைய தினம் கலெக்டர் கார்மேகம், தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். இதற்காக மாவட்ட போலீசார் சார்பில் குமாரசாமிபட்டி ஆயுதப்படை மைதானத்தில் இன்று அணிவகுப்பு ஒத்திகை நடந்தது. மேலும் பள்ளி மாணவர் களின் கலை நிகழ்ச்சிகள் ஒத்திகை அந்தந்த பள்ளியில் நடந்து வருகிறது.
- தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் அடிச்சட்டம் மற்றும் என்ஜின் ஆகியவை நல்ல நிலையில் உள்ள 1000 பஸ்கள் ரூ.152.50 கோடியில் புதுப்பிக்கப்படும் என்று அரசு அறிவித்தது.
- முதல் கட்டமாக 100 பஸ்கள் புதுப்பிக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சேலம்:
தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் அடிச்சட்டம் மற்றும் என்ஜின் ஆகியவை நல்ல நிலையில் உள்ள 1000 பஸ்கள் ரூ.152.50 கோடியில் புதுப்பிக்கப்படும் என்று அரசு அறிவித்தது. முதல் கட்டமாக 100 பஸ்கள் புதுப்பிக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக சேலம் கோட்டத்தில் அடிச்சட்டம் என்ஜின் ஆகியவை நல்ல நிலையில் உள்ள 217 பஸ்கள் மறு சீரமைப்புக்கு உட்படுத்தப்படுகின்றன. முதற்கட்டமாக புதுப்பிக்கப்பட்ட 14 பஸ்கள் பயன்பாட் டிற்கு கொண்டு வரப்படுகின்றன. இதில் சேலம் மண்ட லத்திற்கு 4 பஸ்களும், தருமபுரி மண்டலத்திற்கு 10 பஸ்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
அந்த பேருந்துகள் புணரமைப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதனால் அந்த பஸ்களும் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஏற்காட்டில் கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
- மாவட்டத்தில் அதிக பட்சமாக ஆத்தூரில் 79 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
சேலம்:
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் 3-வது நாளாக நேற்றிரவு பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக ஆத்தூர், கெங்கவல்லி, வீரகனூர், காடையாம்பட்டி, தம்மம்பட்டி கரியகோவில், தலைவாசல் உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது.
இந்த பகுதிகளில் இரவு 9 மணிக்கு தொடங்கிய மழை அதிகாலை 2 மணி வரை கனமழையாக கொட்டியது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது.
ஆத்தூர் பெரியமாரியம்மன் கோவிலில் தற்போது ஆடிப்பண்டிகை நடந்து வருகிறது. நேற்று செண்டைமேளங்கள் முழங்க சத்தாபரண நிகழ்ச்சி நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. ஆனால் 9 மணிக்கு தொடங்கிய மழை அதிகாலை 2 மணி வரை நீடித்ததால் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. இதனால் பக்தர்கள் கவலை அடைந்தனர்.
ஏற்காட்டில் 3-வது நாளாக நேற்றிரவு சாரல் மழை பெய்தது. மேலும் பனி மூட்டமும் நிலவுவதால் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் கூட்டம் முற்றிலும் குறைந்து அனைத்து பகுதிகளிலும் மக்கள் நடமாட்டிமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
மேலும் ஏற்காட்டில் கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி, ஜங்சன் உள்பட பல பகுதிகளில் நேற்றிரவு 9 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சாரல் மழையாக விடிய விடிய நீடித்தது. இதனால் சேலம் மாநகரில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. இன்று காலையும் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்ததுடன் ரம்மியமான சூழல் நிலவி வருகிறது.
மாவட்டத்தில் அதிக பட்சமாக ஆத்தூரில் 79 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. கெங்கவல்லி 60, வீரகனூர் 58, காடையாம்பட்டி56, தம்மம்பட்டி 55, கரியகோவில் 38, தலைவாசல் 37, பெத்தநாயக்கன் பாளையம் 30, சங்ககிரி 23.2, சேலம் 22, ஆனைமடுவு 15, ஏற்காடு 13,2, ஓமலூர் 6, மேட்டூர் 5.8, எடப்பாடி 4 மி.மீ. என மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 502.20 மி.மீ. மழை பெய்துள்ளது.
இதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக இரவு நேரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.
நாமக்கல் நகரில் நேற்று பகல் நேரத்தில் வெயில் வாட்டிய நிலையில் மாலை மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதை தொடர்ந்து இரவில் கலெக்டர் அலுவகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.
கடந்த சில நாட்களாக காற்றின் வேகம் குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்த நிலையில் நேற்று பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், ஆனங்கூர், கபிலர்மலை, பாலப்பட்டி, மோகனூர், எஸ்.வாழவந்தி, ஜேடர்பாளையம், சோழசிராமணி, மணியனூர், கந்தம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று இரவு சுமார் 9.30 மணி அளவில் லேசான சாரல் மழை பெய்தது.
அதனைத் தொடர்ந்து மிதமான மழை பெய்தது. இரவு முழுவதும் மழை தொடர்ந்து பெய்தது.
இதேபோல் சேந்தமங்கலம் மற்றும் கொல்லிமலை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசியது.
பள்ளிபாளையத்தில் இரவு 10 மணிக்கு தொடங்கிய மழை சுமார் 1 மணி நேரம் இடைவிடாமல் சாரல்மழை பெய்தது.
இதேபோல் திருச்செங்கோடு, ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் சாரலுடன் தொடங்கி மிதமான மழை பெய்தது. தொடர்மழை காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சீதோஷ்ணம் ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் பெய்த மழையளவு வருமாறு (மில்லி மீட்டரில்): எருமபட்டி-8, குமாரபாளையம்-2.20, மங்களபுரம்-38.80, மோகனூர்-5, நாமக்கல்-7, பரமத்திவேலூர்-4, புதுச்சத்திரம்-12, ராசிபுரம்-32, சேந்தமங்கலம்-6, திருச்செங்கோடு-9, கலெக்டர் அலுவலகம்-31, கொல்லிமலை செம்மேடு-10 என மொத்தம் 165 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
- அணைக்கு தண்ணீர்வரத்து குறைந்து காணப்படுவதாலும் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
- நீர்வரத்தை விட தொடர்ந்து அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு இன்றுடன் 2 மாதம் ஆகிறது.
டெல்டா பாசனத்துக்கு தேவைக்கு ஏற்ப மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரித்தும், குறைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 மாதமாக தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருவதாலும், அணைக்கு தண்ணீர்வரத்து குறைந்து காணப்படுவதாலும் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
இந்த நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ததன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு இன்று காலை முதல் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55.54 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரத்து 140 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
நீர்வரத்தை விட தொடர்ந்து அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.எனவே கர்நாடகா காவிரியில் தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே குறுவை சாகுபடி முழுமை பெறும்.
- அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி சார்பில் சேலம் கலெக்டர் அலுவல கம் அருகே மணிப்பூர் சம்ப வத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- ஆர்ப்பாட்டத் தில் மணிப்பூரில் நடை பெறும் வன்முறை சம்ப வங்களை கண்டித்து மாநில அரசு பதவி விலக வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
சேலம்:
அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி சார்பில் சேலம் கலெக்டர் அலுவல கம் அருகே மணிப்பூர் சம்ப வத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கட்சியின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஐசக் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத் தில் மணிப்பூரில் நடை பெறும் வன்முறை சம்ப வங்களை கண்டித்து மாநில அரசு பதவி விலக வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து ஐசக் நிருபர்க ளிடம் கூறியதாவது:-
மணிப்பூரில் மிகப்பெரிய வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. பெண் கள் நிர்வாணப்ப டுத்தி கொடுமைப்ப டுத்தப்படு கிறார்கள். 500 க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் எடுக்கப்பட்டுள் ளன. பாதிரியார்கள் தாக்கப்பட் டுள்ளனர்.இதற்கு காரணமான வர்கள் மீது நடவடிக்கை எடுக்காத மாநில அரசை, மத்திய அரசு கலைக்க வேண்டும்.
இந்தியாவில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவ டிக்கை இல்லை. இதனால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் இந்திய அரசில் மாற்றம் தேவை. தமிழக அரசு சிறுபான்மை யினருக்கு பாதுகாப்பாக உள்ளது. தமிழ கத்தில் தி.மு.க.வுக்கும், தேசிய அளவில் காங்கிரசுக்கும் எப்போ தும் ஆதரவாக இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் மண்டல பேராயர் ஹெரால்டு டி.டேவிட், கிழக்கு மாவட்ட பேராயர் ஜோசப் மோகன்,மேற்கு மண்டல பேராயர் டேனியல், வடக்கு மண்டல பேராயர் டேவிட் குட்டி,கிழக்கு மண்டல பேராயர் பர்ண பாஸ், நாமக்கல் மாவட்ட பேராயர் சாமுவேல், முதன்மை பொது செயலா ளர் சரவணன், சேலம் மாவட்ட செயலாளர் ஜான் ஐசக் ,சேலம் மாவட்ட தலை வர் ராமு செல்வராஜ்,சேலம் மாவட்ட பொருளாளர் பீட்டர், மேற்கு தொகுதி செயலாளர் மார்டின் செந்தில் குமார் உள்பட பலர் கலந்துகொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.
- சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த சிவகுமார் சமீபத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாறுதல் செய்யப்பட்டார்.
- இதையடுத்து சென்னை டி.நகர் போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றிய அருண் கபிலன் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மாறுதல் செய்யப்பட்டார்.
சேலம்:
சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த சிவகுமார் சமீபத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாறுதல் செய்யப்பட்டார். இதையடுத்து சென்னை டி.நகர் போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றிய அருண் கபிலன் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மாறுதல் செய்யப்பட்டார்.
இவர் இன்று காலை சேலம் நெத்திமேட்டில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டார்.
2019-ம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர் திண்டுக்கல் ஏ.எஸ்.பி.யாகவும், சென்னை டி.நகர் போலீஸ் துணை கமிஷனராகவும் பணியாற்றியவர். தற்போது சேலம் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு சேலம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் செல்வம், கண்ணன், துணைக் காவல் கண்காணிப்பாளர் இளமுருகன், சின்னசாமி, தனிப்பிரிவு ஆய்வாளர் செந்தில்குமார், நிர்வாக அதிகாரிகள் மற்றும் போலீசார் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.
- சேலம் கிச்சிப்பாளையத்தில் தேசிய புனரமைப்பு காலனி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
- இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் முனியப்பன் கோவில் அருகே இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது.
சேலம் கிச்சிப்பாளையத்தில் தேசிய புனரமைப்பு காலனி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் முனியப்பன் கோவில் அருகே இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நள்ளிரவு 1 மணியளவில் முனியப்பன் கோவில் எதிரில் உள்ள காவல் தெய்வம் சிலை மற்றும் நாய் சிலைகள் உடைக்கப்பட்டன.மேலும் அந்த பகுதியில் நிறுத்தி இருந்த இரு சக்கர வாகனங்கள் மற்றும் குடிநீர் பைப்புகள் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும் இரவு நேரங்களில் கத்தி, பைப், ராடுகள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் சிலர் சுற்றி வருகிறார்கள்.இதனால் இந்த பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிச்சிபாளையம் போலீஸ் நிலையத்திலும் அந்த பகுதியினர் மனு கொடுத்துள்ளனர். கேமிரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






