என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வருகிற 27-ந் தேதி முதல் சேலம் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில்
    X

    வருகிற 27-ந் தேதி முதல் சேலம் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில்

    • நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி ஆலயத்தில் ஆண்டு திரு விழா நடக்க உள்ளது.
    • இதையொட்டி சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி ஆலயத்தில் ஆண்டு திரு விழா நடக்க உள்ளது. இந்த திருவிழாவிற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருவார்கள். இதையொட்டி சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் வாஸ்கோடகாமா வேளாங்கண்ணி சிறப்பு ரயில் வருகிற 27-ந் தேதி, வருகிற செப்டம்பர் மாதம் 1 மற்றும் 6-ந் தேதிகளில் இயக்கப்படுகிறது.

    வாஸ்கோடகாமாவில் இரவு 9.51 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் பெங்களூரு வழியாக சேலத்திற்கு அடுத்த நாள் மாலை 5.20 மணிக்கு வந்து சேர்கிறது.

    பின்னர் 5 நிமிடத்தில் புறப்பட்டு ராசிபுரத்திற்கு மாலை 5. 52 மணிக்கும், நாமக்கல்லுக்கு 6.13க்கும், கரூருக்கு மாலை 6.58 செல்கிறது. பின்னர் தஞ்சா

    வூர், திருவாரூர் நாகப்பட்டி

    னம் வழியே வேளாங் கண்ணிக்கு 3-வது நாள் அதிகாலை 3 .50 மணிக்கு சென்றடைகிறது.

    மறு மார்க்கத்தில் வேளாங்கண்ணி வாஸ் கோடகாமா சிறப்பு ரெயில்

    வருகிற 30-ந் தேதி, செப் டம்பர் 4 மற்றும் 9-ந் தேதி களில் இயக்கப்படு கிறது.

    வேளாங்கண்ணியில் அதிகாலை 1.20 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் நாமக்கல்லுக்கு காலை 8 .23 மணிக்கும் ராசிபுரத்திற்கு காலை 8.50-க்கும் வந்து சேலத்திற்கு காலை 9.40 மணிக்கு வந்தடையும்.

    பின்னர் 5 நிமிடத்தில் புறப்பட்டு பங்காருபேட்டை பெங்களூர் வழியே வாஸ்கோடகாமாவுக்கு அடுத்த நாள் காலை 8 மணிக்கு சென்றடைகிறது. இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது .இதனை பயணி கள் பயன்படுத்திக் கொள்ளு மாறு சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

    Next Story
    ×